திங்கள், 18 மே, 2020

பறக்கும் பச்சை தேவதை -1001 அரேபியன் கதை


செம்பை தங்கமாக மற்றும் வித்தை.



ஹாசனின்‌ கதை

அன்று இரவு சர்வ அலங்காரமும்‌ செய்து

கொண்டு மாமன்னர்‌ ஷாரியர்‌ வருகைக்காகக்‌ காத்து

நின்றாள்‌ பேரழகி ஷகர்ஜாத்‌.


கம்பமீரியமமே உருவெடுத்தாற்போல மாமன்னர்‌
ஷாரியார்‌ அந்தப்புரம்‌ வந்தார்‌. வந்த மன்னரை வரவேற்று
இருக்கையில்‌ அமர்த்தி உபசரித்தாள்‌ ஷகர்ஜாத்‌.

“இன்று ஹாசன்‌ கதையைக்‌ கூறுவதாகச்‌
சொன்னாயே” என்றார்‌ மாமன்னர்‌.

பேரழகி ஷகர்ஜாத்‌ மன்னரை வணங்கி கதை கூறத்‌
தொடங்கினாள்‌.

“மன்னாதி மன்னரே! முன்னொரு காலத்தில்‌ பாஸ்ரா
நகரில்‌ ஒரு பிரபல வணிகன்‌ வாழ்ந்து வந்தான்‌. அவனுக்கு
இரு புதல்வர்கள்‌ இருந்தனர்‌. செல்வச்‌ செழிப்போடு
வாழ்ந்த அவன்‌ திடீரென ஒரு நாள்‌ யாரும்‌ எதிர்பாராத
வகையில்‌ மாரடைப்பால்‌ இறந்து போனான்‌.



வணிகனின்‌ புதல்வர்கள்‌ இருவரும்‌ உள்ள
சொத்தினைத்‌ தனித்தனியே பிரித்துக்‌ கொண்டனர்‌.
அவர்களில்‌. மூத்தவன்‌ தங்க அபரணங்கள்‌ செய்து விற்கும்‌
தொழிலை ஆரம்பித்து நடத்தி வந்தான்‌. இளையவன்‌
உலோக வியாபாரம்‌ செய்ய ஆரம்பித்தான்‌. முக்கியமாக
செம்பு உலோகத்தை உருக்கி வார்க்கும்‌ தொழிற்கூடம்‌
அமைத்து நல்ல முறையில்‌ நடத்தி வந்தான்‌.

ஒரு நாள்‌ மதியம்‌ மூத்தவன்‌ தங்க நகைக்‌ கடைக்கு
வந்தான்‌. அங்கே பொற்கொல்லர்‌ பலர்‌ தங்கத்தை உருக்கிக்‌
காண்டும்‌, விதவிதமான அபரணங்களைச்‌
செய்துகொண்டும்‌ இருந்தனர்‌.

மூத்த சகோதரனான இளைஞன்‌ வேலை
செய்வோரை மேற்பார்வையிட்டுக்‌ கொண்டிருந்தான்‌.
அட்போது ஒரு பெர்சியன்‌ கடைக்கு வந்தான்‌. விதவிதமான
நகைகள்‌ விற்பனைக்காக அழகாக அடுக்கி வைக்கப்‌
பட்டுள்ளதைக்‌ கண்டு வியந்தான்‌. முதலாளியான மூத்த
சகோதரனை, நகைக்கடையின்‌ அலங்கார அமைப்புக்காக
மெத்தவும்‌ புகழ்ந்தான்‌.

மாலையில்‌ தொழுகை நேரம்‌ வந்தது.
மசூதியிலிருந்து தொழுகைக்கான அழைப்புக்‌ குரல்‌
கம்பீரமாக ஒலித்தது. கடையில்‌ வேலை செய்திருந்த
அனைவரும்‌ தொழுகைக்காக வெளியேறினர்‌. முதலாளியும்‌
தொழுகைக்கு செல்ல ஆயத்தமானான்‌.

தொழுகைக்குக்‌ கிளம்பும்‌ நகைக்கடைக்காரனை
பொ்சியன்‌ மெல்ல அனுகினான்‌.

“தம்பி! நீ எவ்வளவு அழகாய்‌ இருக்கிறாய்‌. உன்னைப்‌
போல்‌ அழகன்‌ உலைத்‌ தீய்க்கு அருகில்‌ அமர்ந்து கொண்டு




வியர்வை சிந்தி ஏன்‌ இப்படி, உழைக்கவேண்டும்‌. எனக்கு
அண்‌ மகனே இல்லை. உன்னைப்‌ பார்த்ததும்‌ என்னுள்‌
இனம்‌ காணமூடியாத ஒரு பாச உணர்வு ஏற்படுகிறது.
எனக்கு உலகோர்‌ அதிசயிக்கத்தக்கதோர்‌ வித்தை தெரியும்‌.
செம்பு உலோகத்தைப்‌ பத்தரை மாற்றுத்‌ தங்கமாக
மாற்றிவிடுவேன்‌. பலபேர்‌ இவ்வரிய வித்தையைக்‌ கற்றுத்‌
தருமாறு வேண்டினார்கள்‌. நான்‌ யாருக்கும்‌ இந்த
வித்தையைக்‌ கற்றுத்‌ தரவில்லை. உன்மேல்‌ எனக்கேற்பட்ட
பாச உணர்வினால்‌ உனக்கு இந்த வித்தையைச்‌
சொல்லித்தர விரும்புகிறேன்‌.”

ஹாசன்‌ அதிசயித்துப்‌ போனான்‌.

“ஐயா, நான்‌ என்ன பாக்கியம்‌ செய்தேன்‌. செம்பைப்‌
பொன்னாக்கும்‌ வித்தையை எனக்குச்‌ சொல்லித்‌ தாருங்கள்‌.
முதலில்‌ நான்‌ தரும்‌ ஒரு செம்புத்‌ துண்டை பொன்னாக்கித்‌
தாருங்கள்‌.”

உடனே ஒரு பெரிய செம்புக்‌ கட்டியை எடுத்துக்‌
கொடுத்து, 'இதைப்‌ பொன்னாக்க முடியுமா?” என்றான்‌.

பெர்சியன்‌, “இது என்ன பிரமாத காரியம்‌. இதைப்‌
பொன்னாக மாற்ற சற்று நேரம்‌ அகும்‌. மேலும்‌
தொழுகைக்குப்‌ போயிருக்கும்‌ உன்‌ ஆட்கள்‌ திரும்பி வரும்‌
நேரம்‌ அகிவிட்டது. எனவே நாளைக்‌ காலையில்‌ நான்‌
வருகிறேன்‌. தனி அறையில்‌ வைத்து உனக்குப்‌
பொன்னாக்கித்‌ தருகிறேன்‌” என்று கூறிவிட்டுச்‌ சென்றான்‌.

இரவு வீடு திரும்பியதும்‌ ஹாசன்‌ ஓடோடிச்‌
சென்று தன்‌ தாயாரிடம்‌ இந்த விவரத்தைக்‌ கூறினான்‌.
“மகனே! இதெல்லாம்‌ ஏமாற்று வித்தை, நீ கைப்பொருளை
இழந்து விடாதே. மேலும்‌ பெொர்சியக்காரர்கள்‌
பெரும்பாலோர்‌ மந்திரவாதிகள்‌, மோசடிச்காரர்கள்‌.
எதற்கும்‌ நீ முன்னெச்சரிக்கையாய்‌ இருக்க வேண்டும்‌”
என்றாள்‌.



அனால்‌ அவனோ, தாய்ச்‌ சொல்லைத்‌ துச்சமாக
நினைத்தான்‌. தான்‌ சில நாட்களிலேயே இந்த பாஸ்ரா
நகரிலேயே பெபரும்‌ பணக்காரனாக விளங்கப்‌
போவதாகவும்‌, கலிபா அவர்களுக்கு ஈடாகத்‌ தன்னை
பாஸ்ரா நகர மக்கள்‌ மதிக்கப்‌ போகிறார்கள்‌ என்றும்‌
தானே கற்பனைக்‌ கோட்டை கட்டிக்‌ கொண்டு
அகாயத்தில்‌ மிதக்க அரம்பித்தான்‌.

மறுநான்‌ வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே
கடைக்குச்‌ சென்றான்‌. பெர்சியனின்‌ வரவுக்காக வழிமேல்‌
விழிவைத்துக்‌ காத்துக்‌ கொண்டி ருந்தான்‌.

பெர்சியனும்‌ தான்‌ சொல்லியபடியே கடைக்கு வந்து
சேர்ந்தான்‌. அவனை மிகவும்‌ மரியாதையோடு
வரவேற்றான்‌ ஹாசன்‌.

“மகனே! இப்போதே நேரமாகிவிட்டது. சட்டென்று
உலையைப்‌ பற்றவை. வேலையைத்‌ துவங்கலாம்‌. நீ நேற்று
காட்டிய அந்த பெரிய செம்புக்‌ கட்டியைக்‌ கொண்டு வா”
என்றான்‌ பெர்சியன்‌.

பேராசை கொண்ட ஹாசன்‌ நேற்றைய தினம்‌
பபெொரர்சியனிடம்‌ காட்டிய செம்புக்‌ கட்டியைவிட
பெரியதொருகட்டியைக்‌ கொண்டு வந்தான்‌. உடனே
அந்தச்‌ செம்புக்கட்டியை பொர்சியன்‌ வாங்கி உலையில்‌
வைத்துக்‌ காய்ச்சினான்‌. அபரிமிதமான சூட்டினால்‌
செம்புக்‌ கட்டி உருகியது!

முபார்சியன்‌ தன்‌ தலைப்பாகையில்‌ மறைத்து
வைத்திருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப்‌ பிரித்தான்‌.
அதில்‌ ஏதோ மஞ்சளாக ஒருவகைப்‌ பொடி. இருந்தது.
மேலே கூரையைப்‌ பார்த்தவாறே பொடியிவிருந்து ஒரு
சுட்டிகையளவு மஞ்சள்‌ நிறப்‌ பொடியை உருகியிருந்த



செம்புக்‌ குழம்பின்‌ மேல்‌ துரவினான்‌. தூவியதும்‌ உருகிக்‌
கொதித்துக்‌ கொண்டிருந்த செம்புக்குழம்பின்‌ மீது
மஞ்சளாக புகைகிளம்பிற்று. கூரை உயரம்‌ குப்பென்று
கிளம்பியபுகை கொஞ்சம்‌ கொஞ்சமாகத்‌ தணிந்தது.
உருகிய உலோகம்‌ மஞ்சளாக மாறியிருந்தது. அதை
உலையிலிருந்து எடுத்து அச்சுக்களில்‌ ஊற்றினான்‌
பெர்சியன்‌. ஆறியதும்‌ கட்டிக்‌ கட்டியாகப்‌ பெயர்த்து ஓர்‌
புறம்‌ அடுக்கினான்‌ அவன்‌.

ஹாசன்‌ உடனே ஓடி உரைகல்லை எடுத்தான்‌. ஒரு
கட்டியை எடுத்துக்‌ கல்லில்‌ உரசிப்‌ பார்த்தான்‌. “ஹ:
அத்தனையும்‌ பத்தரைமாற்றுப்‌ பசும்பொன்‌.
இவ்வளவையும்‌ விற்றால்‌ எத்தனை அயிரம்‌ தினார்கள்‌
கிடைக்கும்‌” என்று அவன்‌ மனம்‌ கற்பனை செய்து
பார்த்தது.

அன்றே அத்தனை பெொற்கட்டி களையும்‌ விற்றான்‌.
பாஸ்ரா நகரத்‌ தங்க வியாபாரிகள்‌ இவ்வளவு
தங்கத்தையும்‌ விலை கொடுத்து வாங்கத்‌ திணறினார்கள்‌.
செம்பைத்‌ தங்கமாக்கி விற்றதில்‌ அன்றைய தினம்‌
மட்டுமே எழுபதினாயிரம்‌ தினார்கள்‌ அவனுக்குக்‌
கிடைத்தன.

மறுநாளும்‌ வந்து அம்மாதிரியே தங்கம்‌ செய்து
தருவதாகச்‌ சொல்லிவிட்டு பெர்சியன்‌ சென்றுவிட்டான்‌.

கடை மூடியதும்‌ பெரும்‌ பொருளோடு வீடு போய்ச்‌
சேர்ந்தான்‌. நடந்தவற்றை தன்‌ தாயிடம்‌ சொன்னான்‌.
அப்போதும்‌ அவன்‌ தாய்‌ சொல்லலானாள்‌: “மகனே! இதை
நம்பாதே. இதன்‌ பின்னணியில்‌ ஏதோ ஒரு பெரிய சூது
இருக்கிறது. உன்னை அசைகாட்டி மோசம்‌ செய்ய அந்தப்‌
இபர்சியன்‌ எண்ணிருக்கிறான்‌. எதற்கும்‌ நீ மிகுந்த

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌ ” என்று கூறினாள்‌.


மறுநாளும்‌ பெர்சியன்‌ ஹாசனின்‌ கடைக்கு வந்தான்‌.
முந்தைய நாளைவிட பெரியதொரு செம்புக்கட்டியைத்‌
தங்கமாக மாற்றிக்‌ கொடுத்தான்‌. அன்றைய தினம்‌ அந்தத்‌

தங்கத்தை விற்றதில்‌ ஒரு லட்சத்து இருபதினாயிரம்‌
தினார்கள்‌ கிடைத்தன.

மேராசை பிடித்த ஹாசன்‌ அன்றைய தினம்‌
இபர்சியனை மிகவும்‌ உபசரித்தான்‌. தனக்கு அந்த
மாயப்பொடியையும்‌, மந்திரத்தையும்‌ கற்றுத்‌ தருமாறு
நச்சரித்தான்‌.

“மகனே! உனக்கு எப்படியும்‌ கற்றுத்தரத்தான்‌
போகிறேன்‌. அனால்‌ அடிக்கடி இப்படி செய்யக்‌ கூடாது
இவனிடம்‌ ஏது இவ்வளவு தங்கம்‌' என்று மக்கள்‌
சந்தேதகிக்க அரம்பித்து விடுவார்கள்‌. எனவே,
பொறுமையாய்‌ இரு” என்றான்‌.

ஹாசன்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நச்சரிக்க அரம்பித்தான்‌.
“சரி, நீ இவ்வளவு அர்வமாய்‌ கேட்கிறாய்‌. இத்தனை
உயர்ந்த சக்திவாய்ந்த இந்த ரகசியத்தை கடையில்‌ வைத்தா
உனக்குச்‌ சொல்லித்‌ தரமுடியும்‌? நீ என்னுடன்‌ என்‌

ஜாகைக்கு வா. அங்கு நேம நிஷ்டைகளோரடு இருந்து இந்த
அரிய வித்தையைக்‌ கற்றுக்‌ கொள்‌.”

மனமகிழ்ச்சியோடு பெொர்சியனுடன்‌ புறப்பட்டு
விட்டான்‌ ஹாசன்‌. வழியில்‌ அவனோடு சென்று
கொண்டிருந்தபோது தன்‌ தாயார்‌ சொல்லியவை
நினைவுக்கு வந்தன. அதலால்‌ கால்கள்‌ பின்ன சற்றுத்‌
தயங்கித்‌ தயங்கி நடந்தான்‌.

மனம்‌ பேதலித்து, தன்னோடு வருவதற்குத்‌



தயங்குவதைப்‌ பெர்சியன்‌ தெரிந்து கொண்டான்‌.
தொடரும்.........

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing