ஞாயிறு, 24 மே, 2020

tamil story - யந்திரக்‌ குதிரை ஒன்றின்‌ கதை - 1001 ஆயிரத்து ஒரு இரவு கதைகள்


யந்திரக்‌ குதிரை ஒன்றின்‌ கதை - puthisali kathaigal


    பெர்ஷிய நாட்டு மன்னர்‌ ஒருவருக்கு மூன்று பெண்களும்‌ ஒரு பையனும்‌ இருந்தனர்‌. அந்த மன்னர்‌ ஆண்டுக்கு இருமுறை நாட்டு மக்கள்‌ அனைவருக்கும்‌ கோலாகலமாக விருந்து வைப்பது வழக்கம்‌.

    நகரத்து மக்கள்‌ அனைவரும்‌ அரண்மனையில்‌ கூடி விருந்‌ துண்ணுவது வழக்கம்‌. ஒரு வருடம்‌ விருந்து கோலாகலமாக நடந்தது. அப்போது மன்னரைக்‌ காண மூன்று பக்கீர்கள்‌ வந்தனர்‌. அவர்களில்‌ ஒருவனிடம்‌ பசும்‌ பொன்னால்‌ செய்த மயில்‌ ஒன்று இருந்தது. அந்த மயில்‌, காலத்தை அறிவிக்க ஒரு நாழிகைக்கு ஒரு முறை பெரும்‌ குரல்‌ எடுத்து அகவும்‌. இரண்டாவது பக்கீரியிடம்‌ ஒரு முரசு இருந்தது. அதை நகர வாசலில்‌ கட்டி வைத்தால்‌ எதிரிகள்‌ வரும்போது தானே முழங்கும்‌. மூன்றாவது பக்கீரியிடம்‌ ஒரு யந்திர குதிரை இருந்தது. 

   அதன்‌ மேல்‌ ஏறிக்‌ கொண்டால்‌ நினைத்த இடமெல்லாம்‌ வான மார்க்கமாய்ச்‌ சென்றடையலாம்‌. பொன்‌ மயிலையும்‌ முரசையும்‌ அரசர்‌ பரிசோதித்து மகிழ்ந்தார்‌. மயிலையும்‌ முரசையும்‌ தனக்கு கொடுக்கும்படி வேண்டினார்‌. முதல்‌ இரு பக்கர்களும்‌ அரசகுமாரிகளைத்‌ தங்களுக்கு மண முடித்து வைத்தால்‌ தருவதாகக்‌ கூறினர்‌. அரசனும்‌ மனம்‌ மகிழ்ந்து தன்‌ இரு பெண்களையும்‌ . அவர்களுக்கு மண முடித்து வைத்தான்‌. இறுதியில்‌ யந்திரக்‌ குதிரையை மன்னன்‌ பரிசோதிக்க விரும்பினான்‌. அப்போது இளவரசன்‌ தானே குதிரை மீதேறி பரிசோதிப்பதாகக்‌ கூறினான்‌. மன்னர்‌ அனுமதிக்கவே அரசிளங்குமாரன்‌ குதிரை மீது ஏறி உட்கார்ந்தான்‌. 

   ஆனால்‌ குதிரை பறக்கவில்லை. மூன்றாவது பக்கீர்‌ யந்திரக்‌ குதிரையின்‌ அருகில்‌ சென்று விசைகளை முடுக்க வேண்டிய வித்தைகளை இளவரசனுக்குச்‌ சொல்லிக்‌ கொடுத்தான்‌. சொல்லிக்‌ கொடுத்தப்படி வரிசையை முடுக்கியதும்‌ யந்திரக்‌ குதிரை விர்ரென மேல்‌ எழும்பி ஆகாய வீதியில்‌ பறக்க ஆரம்பித்தது. இளவரசன்‌ ஆனந்தமாய்ப்‌ பகலெல்லாம்‌ பறந்தான்‌. பொழுது சாயும்‌ நேரம்‌ வரையில்‌ பறந்த அவன்‌ அருகே தெரிந்த ஒரு நகரத்தை நோக்கி மாயக்‌ குதிரையைப்‌ பறக்க விட்டான்‌. அந்நகரத்தை அடைந்தது. 

   அரண்மனையின்‌ மேல்‌ மாடியில்‌ மாயக்‌ குதிரையை இறக்கினான்‌. இருள்‌ குழ்ந்தது. பகலெல்லாம்‌ குதிரையின்‌ மேலேறி அலைந்ததால்‌ இளவரசனுக்குப்‌ பசியாய்‌ இருந்தது. உண்ண உணவு கிடைக்குமா என்று அறிய மாடியிலிருந்து கீழிறங்கி நந்தவனத்தை அடைந்தான்‌. அப்போது அந்‌ நகரத்து அரசகுமாரி அடிமைப்‌ பெண்கள்‌ புடை சூழ நந்தவனத்தில்‌ உலவி வருவதைக்‌ கண்டான்‌. அரசகுமாரிக்குக்‌ காவலாக ஒருவன்‌ உருவிய வாளுடன்‌ முன்னே சென்று கொண்டிருந்தான்‌. அரச குமாரியின்‌ அழகை கண்டு மயங்கிய இளவரசன்‌ வாளேந்தி காவலாய்‌ சென்றவனின்‌ மேல்‌ திடீரெனப்‌ பாய்ந்து வாளைப்‌ பிடுங்கிக்‌ கொண்டான்‌. அடிமைப்‌ பெண்கள்‌ பயத்தால்‌ நாலாதிசையிலும்‌ பயந்து ஓடினர்‌. 

   வாளைப்‌ பறிகொடுத்த வீரன்‌ அரண்மனைக்கு ஓடினான்‌. நடந்த விபரிதங்களை மன்னனிடம்‌ தெரிவித்தான்‌. அதிர்ச்சியால்‌ தன்‌ மேல்‌ விழுந்து வாளைப்‌ பிடுங்கியவன்‌ ஓர்‌ அரசகுமாரன்‌ என்பதை அறியாமல்‌ அது ஒரு பூதம்‌ என்றும்‌, அரசகுமாரியை நந்தவனத்திலுள்ள மண்டபத்துக்கு அந்தப்‌ பூதம்‌ இழுத்துச்‌ சென்று விட்டது என்றும்‌ மன்னனிடம்‌ கூறினான்‌. மன்னர்‌ தக்கக்‌ காவலர்களோடு நந்தவனத்துக்கு ஓடோடி வந்தார்‌. நந்தவன மண்டபத்தில்‌ ஒரு ராஜ குமாரன்‌ தன்‌ மகளோடு பேசிக்‌ கொண்டிருப்பதைக்‌கண்டான்‌. 

   நேரே அவர்கள்‌ எதிரில்சென்று ராஜ குமாரனைக்‌ கண்டவாறு திட்டினான்‌. காவலர்களை ஏவி அவனைச்‌ சிறை பிடிக்க உத்தரவிட்டார்‌. சிங்கம்‌ போல்‌ சீறியெழுந்த பெர்ஷிய இளவரசன்‌ தன்னை கைது செய்ய வந்தவர்களை நொடியில்‌ வெட்டிச்‌ சாய்த்தான்‌. பின்னர்‌ அரசனையே தன்னோடு போருக்கு அழைத்துச்‌ சிங்கநாதம்‌ செய்தான்‌. பின்னர்‌ சிறிது நேரத்தில்‌ சமாதானம்‌ அடைந்து “மன்னரே! உம்‌ படையனைத்தையும்‌ ஒருசேரத்‌ தனி யொருவனாகத்‌ துவம்சம்‌ செய்வேன்‌. உங்களுக்குத்‌ தைரிய மிருந்தால்‌ உம்‌ படையனைத்தையும்‌ அரண்மனைக்‌ கடுத்த மைதானத்தில்‌ கூட்டுங்கள்‌. என்‌ வல்லமையைக்‌ காட்டு கிறேன்‌” என்று கர்ஜித்தான்‌. உடனே மன்னர்தம்‌ படையனைத்தையும்‌ திரட்டி மைதானத்தில்‌ அணிவகுக்கச்‌ செய்தார்‌.

    சிலநாழிகை நேரத்தில்‌ மன்னரின்‌ பெரும்படை மைதானத்தில்‌ அணிவகுத்து நின்றது. போர்த்திறன்‌ பெற்ற பெருவீரர்கள்‌ போரிடச்‌ சகல ஆயுதங்களுடன்‌ தயாராக நின்றனர்‌. பெர்ஷிய நாட்டு இளவசரன்‌ அங்கு வந்து சேர்ந்தான்‌. மன்னரும்‌ பரிவாரங்கள்‌ சூழ அங்கு வந்திருந்தார்‌. போர்ப்பறை முழங்கியது. பெர்ஷிய இளவரசன்‌ மன்னரை வணங்கினான்‌. “மன்னரே! என்னுடைய குதிரை அரண்மனையின்‌ மேல்‌ மாடத்தில்‌ இருக்கிறது. அதை உடனே கொண்டுவரச்‌ சொல்லுங்கள்‌” என்றான்‌. மன்னர்‌ வியந்து போனார்‌. 'குதிரையாவது மேல்‌ மாடத்தில்‌ இருப்பதாவது” என்றார்‌.

   ஆம்‌! மேல்‌ மாடத்தில்‌ என்னுடைய குதிரை இருக்கிறது. கொண்டுவரச்‌ சொல்லுங்கள்‌” என்றான்‌ பெர்ஷிய இளவரசன்‌. அரசனுடைய உத்தரவின்‌ பேரில்‌ சேவகர்கள்‌ அரண்மனை மேல்‌ மாடத்துக்குப்‌ போனார்கள்‌. அங்கிருந்த மரக்‌ குதிரையை தூக்கிக்‌ கொண்டு வந்து மன்னர்‌ எதிரில்‌ வைத்தனர்‌. “இந்த மரக்குதிரையின்‌ மேலேறிக்‌ கொண்டா என்‌ சேனை முழுவதையும்‌ தோற்கடிக்கப்‌ போகிறாய்‌?” என்று ஏளனத்துடன்‌ கேட்டார்‌ மன்னர்‌. பெர்ஷிய இளவரசன்‌ மரக்குதிரையின்‌ மேல்‌ தாவி ஏறினான்‌. விசைகளைத்‌ திருகினான்‌. 

   மாயக்குதிரை விர்ரென ஆகாயத்தில்‌ பறந்தது. சேனாவீரர்கள்‌ அணியைச்‌ சுற்றித்‌ தாழப்பறந்து வந்தான்‌. மேலும்‌ உயரமும்‌ தாழ்வாகவும்‌ அந்த மைதானத்தைச்‌ சுற்றி ஆகாயத்தில்‌ மந்திரக்‌ குதிரை மேலேறி பெர்ஷிய இளவரசன்‌ வந்தான்‌. சேனாவீரர்கள்‌ திகைத்தனர்‌. படையணியில்‌ கம்பீரமாய்‌ நின்றிருந்த குதிரைகள்‌ மிரண்டு நாலா பக்கமும்‌ ஓட ஆரம்பித்தன. ஏதோ என்ன நேரிடுமோ என்ற அச்சத்தினால்‌ படை வீரர்களும்‌ அணியிலிருந்து அலைந்து நாலா திக்கிலும்‌ சிதறி ஓடினர்‌. 

   இந்த அமளிகளுக்கிடையில்‌ பெர்ஷிய இளவரசன்‌, ஆகாயத்தில்‌ குதிரையில்‌ இருந்தவாறே மன்னருக்கும்‌, அரச குமாரிக்கும்‌ போய்‌ வருவதாக கையாட்டிவிட்டு, வான வீதியில்‌ பறந்து போய்விட்டான்‌. மன்னரின்‌ மகன்‌ தன்னைவிட்டு அவன்‌ போய்‌ விட்டதற்காக வருந்தினாள்‌. 

   அரசன்‌ எவ்வளவு சொல்லியும்‌ அவள்‌ சமாதானம்‌ அடையவில்லை. பறந்து சென்ற இளவரசன்‌ தன்‌ நாட்டிற்குச்‌ சென்றான்‌. தன்‌ மகன்‌ மாயக்‌ குதிரையேறி மறைந்து போய்‌ இது நாள்வரை வராததால்‌, கோபமடைந்த பெர்ஷிய மன்னர்‌, அக்குதிரையைக்‌ கொண்டு வந்த மூன்றாவது பக்கீரைச்‌ சிறையிலடைத்தான்‌. மகன்‌ பத்திரமாகத்‌ திரும்பி வந்ததைக்‌ கண்ட மன்னர்‌ பெருமகிழ்ச்சி கொண்டார்‌. மூன்றாவது பக்கீர்‌ உடனே விடுதலை செய்யப்பட்டான்‌. அவனுக்கு நிறைய வெகுமதிகள்‌ கொடுத்து அனுப்பி வைத்தான்‌ அரசன்‌. 

   இளவரசன்‌ தான்‌ போனது முதல்‌ நடந்த அனைத்தையும்‌ தந்தையிடம்‌ விவரித்தான்‌. வழக்கப்படி பெர்ஷிய மன்னர்‌, மகன்‌ திரும்பி வந்த மகிழ்ச்சியைக்‌ கொண்டாட ஒரு கோலாகல விருந்து வைத்தார்‌. அந்த விருந்திலே ஓர்‌ அடிமைப்‌ பெண்‌ இனிய கீதமிசைத்தாள்‌. இறுதியில்‌ காதலி, காதலனை நினைத்து வாடும்‌ ஒரு சோக கீதத்தை இசைத்தாள்‌. 
   அந்தப்‌ பாடலை இளவரசன்‌ கேட்டான்‌. இதுகாறும்‌ அவன்‌ மனத்திலேயே கிடந்த காதல்‌ உணர்வு கிளர்ந்தெழுந்தது. முதல்‌ நாள்‌ தான்‌ கண்டு பேசிய அயல்‌ நாட்டு இளவரசியை நினைத்துக்‌ கொண்டான்‌. அவள்‌ எழில்‌ முகமே எப்போதும்‌ அவன்‌ மனக்‌ கண்ணின்‌ .முன்‌ நிழலாடியது. விருந்து முடிந்து எல்லோரும்‌ கலைந்தனர்‌. படுக்கப்‌ போன இளவரசலனுக்குத்‌ தூக்கம்‌ வரவில்லை. உடனே யாரும்‌ அறியாமல்‌ தன்‌ மாயக்குதிரை மேலேறி, வான்‌ வழியே பறந்து அடுத்த நாட்டுக்குச்‌ சென்றான்‌. முன்‌ சென்றிறங்கிய அரண்மனையின்‌ மேல்‌மாடத்திலேயே இறங்கினான்‌. 

   கீழே சென்று இளவரசியைத்‌ தேடினான்‌. ஓர்‌ அறையில்‌ இளவரசி தூங்காமல்‌ அமுது கொண்டிருப்பதைக்‌ கண்டான்‌. தாதியர்‌ புடைகுழ்ந்து அவளுக்குச்‌ சமாதானம்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தனர்‌. திடுமென அங்குச்‌ சென்ற இளவரசனைக்‌ கண்ட இளவரசி ஓடோடிச்‌ சென்று அவனை இறுகத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌. குழ்ந்திருந்த தாதியர்‌ மன்னரிடம்‌ சொல்ல ஓடினர்‌. 

   அணைத்த இளவரசியைத்‌ தன்‌ மாயக்‌ குதிரை மேலெற்றிக்‌ கொண்டு ஆகாயத்தில்‌ பறந்தான்‌. நேரே தன்‌ நகரத்துக்குச்‌ சென்றான்‌. அரண்மனைக்கு இளவரசியை அழைத்துச்‌ செல்லாமல்‌ ஒரு தனி மாளிகையில்‌ அவளையும்‌, மாயக்‌ குதிரையையும்‌ விட்டுவிட்டுத்‌ தான்‌ மட்டும்‌ அரண்மனைக்குச்‌ சென்றான்‌. பொழுது விடிந்ததும்தான்‌, தன்‌ தகப்பனாருடன்‌ சகல அரச மரியாதைகளுடன்‌ வந்து திருமணம்‌ செய்து கொள்வதாக அரச குமாரியிடம்‌ சொல்லிச்‌ சென்றான்‌. 

   அவளும்‌ இளவரசனுக்கு மகிழ்ச்சியுடன்‌ விடை கொடுத்தனுப்பினாள்‌. இளவரசன்‌ அரண்மனைக்குச்‌ சென்று தன்‌ தந்தையிடம்‌ நடந்த விவரங்களைக்‌ கூறினான்‌. மகனின்‌ விருப்பமே தன்‌ விருப்பம்‌ என்ற பெர்ஷிய மன்னர்‌ சகல ராஜ பரிவாரங்களோடும்‌, வரிசைப்‌ பொருள்களோடும்‌ திரண்டு மறுநாள்‌ காலையில்‌ மகனுடன்‌ அவன்‌ மாளிகைக்குப்‌ போனார்‌. அடுத்த நாட்டு இளவரசியை வரவேற்றுப்‌ பல்லக்கிலேற்றி அரண்மனைக்குக்‌ கொண்டுபோய்‌ உடனே தன்‌ மகனுக்குத்‌ திருமணம்‌ செய்து விடுவது என்பது மன்னரின்‌ ஏற்பாடு.

   தனியாக மாளிகையில்‌ விடப்பட்ட இளவரசி அங்கிருக்கும்‌ போது, மாயக்குதிரையைச்‌ செய்த மூன்றாவது பக்கீர்‌ விடுதலையாகி அந்தப்‌ பக்கம்‌ வந்தான்‌. அங்கே தன்‌ குதிரை இருப்பதைக்‌ கண்டான்‌. தன்னைச்‌ சிறையில்‌ மன்னர்‌ அடைத்து வைத்ததனால்‌ கோபமுற்றிருந்த பக்கீர்‌ அந்த மாளிகையினுள்‌ சென்று பார்த்தான்‌. 

   அங்கு அழகிய ராஜகுமாரி ஒருத்தி தனியாய்‌ இருப்பதைக்‌ கண்டவன்‌ அவளைப்‌ பலவந்தமாகத்‌ தூக்கி, தன்‌ மாயக்குதிரை மேலேற்றிக்‌ கொண்டு வான வழியே எங்கோ பறந்து போய்‌ விட்டான்‌. வரிசைப்‌ பொருள்கள்‌, பரிவாரங்களோடு வந்த மன்னர்‌ மகனின்‌ மாளிகையில்‌, அவன்‌ கொண்டு வந்திருப்‌ பதாகச்‌ சொன்ன அரசகுமாரி இல்லாதிருப்பதைக்‌ கண்டு திகைத்தர்‌. அரச குமாரன்‌ மயங்கி விழுந்தான்‌. மாயக்குதிரைமேல்‌ பலவந்தமாக ஏற்றிக்‌ கடத்திச்‌ சென்ற பக்கீர்‌ கிரேக்க நாட்டையடைந்து ஒரு நந்தவனத்தில்‌ இறங்கினான்‌. 

   அங்குக்‌ காவலிருந்த கிரேக்க வீரர்கள்‌ பக்கீரின்‌ தோற்றத்தையும்‌, அவனுடன்‌ வந்திருக்கும்‌ பெண்ணையும்‌ பார்த்துச்‌ சந்தேகப்பட்டனர்‌. சந்தேகப்பட்டு அவனை அணுகி விசாரித்தனர்‌. பக்கீர்‌ அரச குமாரியைத்‌ தன்‌ மனைவி என்றான்‌. இதைக்‌ கேட்ட அரசகுமாரி, “இந்த மோசக்கார பக்கீர்‌ பொய்‌ சொல்லுகிறான்‌. நான்‌ இவன்‌ மனைவியில்லை. இவன்‌ என்னைக்‌ கடத்திக்‌ கொண்டு வந்திருக்கிறான்‌. என்னைக்‌ காப்பாற்றுங்கள்‌” என்று கதறினாள்‌. 

   உடனே கிரேக்க வீரர்கள்‌ பக்கீரைக்‌ கைது செய்து சிறையிலிட்டனர்‌. அரச குமாரியையும்‌, மாயக்‌ குதிரை யையும்‌ மன்னரிடம்‌ ஒப்புவித்தனர்‌.அரச குமாரியைக்‌ காணாத பெர்ஷிய இளவரசன்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தினான்‌. 

   அவளை எப்படியும்‌ கண்டு பிடித்து அழைத்துக்கொண்டே நாடு திரும்புவேன்‌ என்று சபதமிட்டு, தன்‌ தந்தையின்‌ அனுமதியுடன்‌ புறப்பட்டு விட்டான்‌. நாடு நாடாய்‌ தேடிக்‌ கொண்டே வந்தான்‌. அந்தப்‌ பிராந்தியம்‌ முழுவதுமுள்ள நகரங்களில்‌ எங்கும்‌ தேடினான்‌. கண்டவர்களையெல்லாம்‌ அடையாளம்‌ சொல்லி பார்த்தீர்களா? என்று கேட்டுக்‌ கொண்டே கால்‌ போன போக்கில்‌ நடந்து கொண்டிருந்தான்‌. தாடியும்‌, மீசையிம்‌, சோகம்‌ நிறைந்த கண்களுடனும்‌. உடல்‌ நலிந்த இளவரசன்‌, தன்‌ காதலியைத்‌ தேடி தேசதேசாந்திரங்கள்‌ எல்லாம்‌ திரிந்தான்‌. 

   தேடும்‌ வழியில்‌ கிரேக்க நாட்டை அடைந்தான்‌. நடந்து வந்த களைப்பாலும்‌, பசியாலும்‌ சோர்ந்து போய்‌ ஒரு சத்திரத்தில்‌ போய்ப்‌ படுத்தான்‌. அந்த சத்திரத்தில்‌ ஏற்கெனவே தங்கியிருந்த இரண்டு வழிப்போக்கர்கள்‌ தங்களுக்குள்ளே மாயக்‌ குதிரை என்றும்‌ அழகிய இளம்‌ பெண்‌ என்றும்‌, மோசக்கார பக்கீர்‌ என்றும்‌ கதை கதையாய்ப பேசிக்‌ கொண்டனர்‌. 

   இதைக்‌ கேட்ட இளவரசன்‌ மனம்‌ மகிழ்ச்சியால்‌ துள்ளியது. தன்‌ காதலி கிரேக்க மன்னரின்‌ பாதுகாப்பில்தான்‌ இருக்கிறாள்‌ என்பதை யூகித்துக்‌ கொண்டான்‌. அவளுக்குப்‌ பைத்தியம்‌ பிடித்திருக்கிறது என்பதையும்‌ பேசிக்‌ கெண்டிருந்தவனின்‌ வாயைக்‌ கிளறியே கேட்டு அறிந்து கொண்டான்‌. மறுநாள்‌ கிரேக்க மன்னரைக்‌ காணச்‌ சென்றான்‌. மன்னரிடம்‌ தன்னை பெர்ஷிய நாட்டைச்‌ சேர்ந்த தலை சிறந்த வைத்தியன்‌ என்று அறிமுகப்படுத்திக்‌ கொண்டான்‌.

   பைத்தியம்‌ பிடித்தவர்களைக்‌ குணமாக்குவதில்‌ விசேஷ அனுபவம்‌ பெற்றவன்‌ என்றும்‌ கூறினான்‌. அதைக்‌ கேட்ட கிரேக்க மன்னர்‌ “அரண்மனையில்‌ இருக்கும்‌ ஒரு பெண்ணின்‌ பைத்தியத்தை உன்னால்‌ குணப்படுத்த முடியுமா? தவறினால்‌ உனக்கு மரண தண்டனை தரப்படும்‌. சம்மதமா? என்றார்‌. 

   பெர்ஷிய வைத்தியனாக நடித்த இளவரசன்‌ அந்தச்‌ சவாலை ஏற்றுக்‌ கொண்டான்‌. பைத்தியம்‌ பிடித்தவளைப்‌ பற்றி விவரங்களைத்‌ தனக்கு கூறுமாறு கேட்டான்‌. மாயக்‌ குதிரையின்‌ மேல்‌ ஏற்றி ஒரு பக்கர்‌ அவளைக்‌ கடத்தி வந்ததாகவும்‌, அவனைக்‌ கைது செய்து சிறையில்‌ அடைத்ததாகவும்‌, அவன்‌ கடத்தி வந்த அழகிய இளம்‌ பெண்ணுக்கோ பைத்தியம்‌ பிடித்திருப்பதாகவும்‌ மன்னர்‌ கூறினார்‌. அவளுக்குப்‌ பைத்தியம்‌ தெளிந்தால்‌, அந்த அழகியைத்‌ தானே மணந்துகொள்ளப்‌ போவதாகவும்‌ கிரேக்க மன்னர்‌ கூறினார்‌. தன்மேல்‌ மன்னர்‌ ஆசைப்படுகிறார்‌ என்பதாலேயே அரசகுமாரி பைத்தியமாய்‌ நடித்தாள்‌. 

   இதை மன்னரின்‌ பேச்சாலேயே பெர்ஷிய இளவரசன்‌ யூகித்து அறிந்து கொண்டான்‌... கிரேக்க மன்னரிடம்‌ தான்‌ பைத்தியத்தைப்‌ பார்ப்பதற்கு முன்‌ மந்திரக்‌ குதிரையைப்‌ பார்க்க வேண்டும்‌ என்றான்‌. மன்னரின்‌ உத்தரவுக்கிணங்க ஒரு பெரிய அறையில்‌ பூட்டி வைத்திருந்த மாயக்‌ குதிரையை அவனுக்குக்‌ காட்டினர்‌. அருகில்‌ சென்று குதிரையைத்‌ தடவிப்‌ பார்த்தான்‌. மந்திர மாயக்குதிரையின்‌ விசைகள்‌ நல்லபடியே இருந்தன.

    குதிரை பறக்கக்‌ கூடிய நிலையிலேயே இருந்தது மனத்திற்குள்ளாகவே மகிழ்ந்தான்‌. பின்னர்‌ பெர்ஷிய வைத்தியனை அரண்மனை அந்தப்புரத்துக்கு அழைத்துச்‌ சென்றனர்‌. அவன்‌ காதலி அலங்கோல நிலையில்‌ விழுந்துக்‌ கிடக்கக்‌ கண்டான்‌. அவளைச்‌ சுற்றி அடிமைப்‌ பெண்கள்‌ காவலாய்‌ இருந்தனர்‌. சப்தம்‌ கேட்டு எழுந்த அவள்‌ கிரேக்க மன்னர்‌ தான்‌ தம்மைப்‌ பார்க்க வந்திருக்கிறார்‌ என்று எண்ணி பயங்கரக்‌ கூச்சலிட்டவாறு எழுந்தாள்‌.

    எதிரே நின்றிருந்தவன்‌ தம்‌ காதலனே என்பதைக்‌ கண்டதும்‌ தன்னை மீட்கவே அவன்‌ வந்திருக்கிறான்‌ என உணர்ந்து அமைதியாய்‌ நின்றாள்‌. பெர்ஷிய இளவரசனும்‌ தம்‌ காதலியை நன்றாக அடையாளம்‌ புரிந்து கொண்டான்‌. பின்னர்‌ பெர்ஷிய வைத்தியன்‌ கிரேக்க மன்னரைக்‌ கண்டான்‌. “எல்லாம்‌ வல்ல அல்லாவின்‌ புகழ்‌ ஓங்கட்டும்‌! அவருக்கு மிஞ்சிய சக்தி இப்‌ பூவுலகில்‌ எங்குமில்லை. அல்லா நமக்குத்‌ துணைபுரிவார்‌. அவர்‌ திரு நாமத்தை உச்சரித்தவாறே இளவரசிக்குப்‌ பிடித்திருக்கும்‌ பைத்தியத்தை நான்‌ நிச்சயமாக நீக்குவேன்‌” என்று கூறினான்‌. 

   மேலும்‌ தான்‌ அவளைத்‌ தனிமையில்‌ சந்திக்க அனுமதி வேண்டும்‌ என்று கேட்டான்‌ மன்னரும்‌ அவனுடைய: திட சித்தத்திற்கு இணங்கி இளவரசியைத்‌ தனியே சந்திக்க அனுமதி வழங்கினார்‌. மீண்டும்‌ அரண்மனை அந்தப்புரம்‌ சென்ற பெர்ஷிய வைத்தியன்‌ தன்‌ காதலியைத்‌ தனியே சந்தித்தான்‌. அவளுக்கு ஆறுதல்‌ சொன்னான்‌. அவளை மீட்டுக்கொண்டு போவதாகவே உறுதி கூறினான்‌. அதற்கு அவளுக்கு ஓர்‌ உபாயமும்‌ சொல்லிக்‌ கொடுத்தான்‌. 

   “நாளைய தினம்‌ உன்னைக்‌ கிரேக்கமன்னர்‌ சந்திக்க வருவார்‌. அவர்‌ வந்ததும்‌ உனக்கு ஓர்‌ அளவு பைத்தியம்‌ தெளிந்த மாதிரி நடந்துகொண்டு அவருடன்‌ சந்தோஷமாகப்‌ பேசு, மற்ற விஷயங்களை நான்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌” என்று கூறினான்‌. உடனே பெர்ஷிய வைத்தியன்‌ அரசரிடம்‌ சென்று அவளுக்கு மனோவசிய முறையில்‌ வைத்தியம்‌ செய்திருப்பதாகவும்‌ நாளை நீங்கள்‌ சென்று சந்தித்தால்‌ அறிந்து. கொள்வீர்கள்‌ என்றும்‌ கூறினான்‌. 

   மறுநாள்‌ கிரேக்க மன்னர்‌ உண்மையை அறிய அந்தப்புரம்‌ சென்றார்‌. பைத்தியமாய்‌ நடித்துக்கொண்டு இருந்த இளவரசி மன்னரை மகிழ்வுடன்‌ வரவேற்றாள்‌. அடிமைப்‌ பெண்களை திராட்சை மதுகொண்டுவர ஏவினான்‌. அடிமைப்‌ பெண்கள்‌ திராட்சை மது கொண்டு வந்ததும்‌ அதை ஒரு தங்கக்‌ கிண்ணத்தில்‌ ஊற்றி மன்னரிடம்‌ கொடுத்துப்‌ பருக வேண்டுமாறு உபசரித்தாள்‌. மன்னர்‌ மனம்‌ மகிழ்ந்தார்‌. 

   அவளோடு பேசிக்கொண்டிருந்தபோதே அவள்‌ திடீரென ஓலமிட்டுப்‌ பயந்து நடுநடுங்கி மயக்க முற்றுக்‌ கீழே சாய்ந்தாள்‌. தரையில்‌ விழும்‌ முன்னே அடிமைப்‌ பெண்கள்‌ ஓடிவந்து அவளைத்‌ தாங்கிப்‌ பிடித்துப்‌ படுக்கையில்‌ கிடத்தினர்‌. இன்னும்‌ முற்றும்‌ பைத்தியம்‌ தீரவில்லை என்று நினைத்துக்‌ கொண்டே மன்னர்‌ எழுந்து அரண்மனைக்குச்‌ சென்றார்‌. 

   மறுநாள்‌ காலையில்‌ பெர்ஷிய வைத்தியன்‌ அரசரைக்‌ கண்டான்‌. கிரேக்க மன்னர்‌ மகிழ்ச்சியுடன்‌ “அவளுக்குப்‌ பைத்தியம்‌ ஓரளவு நீங்கித்தான்‌ இருக்கிறது: பேசிக்‌ கொண்டிருக்கும்போதே அலறி ஓவெனக்‌ கத்தி மயக்க முற்றாள்‌” என்றார்‌. அதை கேட்ட பெர்ஷிய வைத்தியன்‌, “அந்தப்‌ பெண்ணை ஒரு பயங்கரப்பூதம்‌ பிடித்துக்‌ கொண்டிருக்கிறது.

    அவளிடமிருந்து அந்த பூதத்தைத்‌ துரத்த வேண்டுமானால்‌ நான்‌ சொல்கிறபடி செய்ய வேண்டும்‌. இன்று மாலையில்‌ எங்கிருந்து கண்டு பிடித்தார்களோ அந்த நந்தவனத்திலேயே கொண்டுபோய்ச்‌ சேர்க்க வேண்டும்‌; அந்த மாயக்‌ குதிரையையும்‌ நந்தவனத்திற்குக்‌ கொண்டுவர வேண்டும்‌. அங்கே நான்‌ மந்திரம்‌ ஓதிப்‌ பூதத்தை விரட்டுவேன்‌. அப்போது தாங்களும்‌ தங்கள்‌ பரிவாரங்களும்‌ தூரத்தில்‌ நின்றே அதைப்‌ பார்க்க வேண்டும்‌. அருகில்‌ வந்தால்‌ என்னால்‌ விரட்டப்படும்‌ அந்த பூதத்தினால்‌ உங்களுக்கும்‌ துன்பம்‌ உண்டாகும்‌. 

   நான்‌ பூதத்தை விரட்டி முடித்ததும்‌ அந்த மாயக்‌ குதிரையின்‌ மேல்‌ அவளை உட்காரவைத்துக்‌ கொள்வேன்‌. அந்த மாயக்‌ குதிரை தானே சிறிது சிறிதாக நகர்ந்து உங்களை வந்தடையும்‌. முற்றும்‌ பைத்தியம்‌ நீங்கிய நிலையில்‌ அந்தப்‌ பெண்ணை நான்‌ உங்களிடம்‌ ஓப்படைப்பேன்‌” என்று கூறினான்‌. அன்று மாலை தடபுடலான ஏற்பாடுகளுடன்‌ நந்தவனத்தில்‌ குதிரையையும்‌, பைத்தியம்‌ பிடித்த பெண்ணையும்‌ கொண்டு சேர்த்தனர்‌. மன்னரும்‌ பரிவாரங்களும்‌ அந்நகரத்தின்‌ மக்கள்‌ அனைவரும்‌ பூதத்தை விரட்டும்‌ காட்சியைக்‌ காண வந்தனர்‌. 

   நந்தவனத்தின்‌ மத்தியில்‌ மாயக்குதிரையும்‌, பைத்தியக்‌ காரப்‌ பெண்ணும்‌ பெர்ஷிய வைத்தியனும்‌ நின்றிருந்தனர்‌. பெர்ஷிய வைத்தியன்‌ ஆரவாரத்துடன்‌ பெருத்தக்‌ குரலில்‌ ஏதோ ஒரு புரியாத பாஷையை மந்திர உச்சாடனங்களை முழங்கினான்‌. ஒவ்வொரு திக்கிலும்‌ மண்ணை வாரித்‌ தூவினான்‌. பைத்தியமாய்‌ நடித்த இளவரசி அவன்‌ சொல்லிக்‌ கொடுத்தவாறே மாயக்‌ குதிரையின்‌ மேலேறி அமர்ந்து கொண்டாள்‌. 

   மீண்டும்‌ பயங்கரமான குரவில்‌ பெர்ஷிய வைத்தியன்‌ ஏதேதோ மந்திரங்களை சொன்னான்‌. பின்னர்‌, அனைவரும்‌ பார்த்திருக்க அவன்‌ மாயக்‌ குதிரையின்‌ மேல்‌ ஏறிக்கொண்டான்‌. பின்னர்‌ உரத்த குரலில்‌ மன்னரைப்‌ பார்த்து “மாமன்னரே! முற்றிலும்‌ தெளிந்த நிலையில்‌ இளவரசியை உங்களிடம்‌ இதோ ஓப்படைக்கின்றேன்‌. என்னுடைய மந்திரத்திற்கு அஞ்சி இவளைப்‌ பிடித்திருந்த மாய பூதம்‌ நான்‌ வாரி இறைத்த புழுதியில்‌ கலந்து காற்றோடு காற்றாய்‌ ஓடிப்போயிற்று.

    இதோ உங்களிடம்‌ வருகிறேன்‌” என்று கூறியவாறு மாயக்‌ குதிரையின்‌ விசையை முடுக்கினான்‌. மாயக்‌ குதிரை விர்ரென வானில்‌ ஏறிப்‌ பறந்தது. கிரேக்க மன்னரையும்‌, பரிவாரங்களையும்‌ வேடிக்கைப்‌ பார்க்கக்‌ கூடி நின்ற மக்களையும்‌ குதிரை மேல்‌ இருந்தவாறே ஆகாயத்தில்‌ ஒரு சுற்று சுற்றி வந்தான்‌. கிரேக்க மன்னர்‌ தன்னிடம்‌ அவளை ஒப்படைக்கவே பெர்ஷிய வைத்தியன்‌ மாயக்‌ குதிரையில்‌ ஏறிவருகிறான்‌ என்று வானைப்‌ பார்த்து வாயைப்‌ பிளந்து கொண்டு நின்றிருந்தார்‌. அவனுக்கு நேரே வந்த பெர்ஷிய வைத்தியன்‌ “மாமன்னரே உங்களுக்கு நன்றி! நாங்கள்‌ வருகிறோம்‌” வானத்தில்‌ கண்ணுக்கு எட்டாத தொலைவில்‌ பறந்து சென்றான்‌. தன்‌ காதலியுடன்‌ நேரே தன்‌ நாட்டிற்குச்‌ சென்றான்‌. 

   அரண்மனை சென்று தன்‌ தந்தையைக்‌ கண்டு தங்களுக்கு ஆசி கூறவேண்டினான்‌. நடந்த சம்பவங்களை அனைத்தையும்‌ தந்தையிடம்‌ கூறினான்‌. பெர்ஷிய மாமன்னர்‌ மகன்‌ தன்‌ மனத்திற்கு வேண்டிவளுடன்‌ திரும்பி வந்தது கண்டு மகிழ்ந்து அன்றே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்‌. கோலாகலமாகத்‌ திருமணம்‌ நடந்தேறியது. 

   பக்கத்து நாட்டரசரான தன்‌ மருமகளின்‌ தாய்‌ தந்தையரையும்‌ அழைத்துக்‌ கொண்டு வந்து மிகப்‌ பெரிய விருந்து நடத்தினார்‌. நகரத்து மக்கள்‌ அனைவரும்‌ இளம்‌ தம்பதியர்களை வாழ்த்தினர்‌. அந்த விருந்து வைபவத்தில்‌ இடையிலேயே எல்லோர்‌ முன்னிலையிலும்‌ அம்‌ மாயக்குதிரையைக்‌ கொண்டு வரச்சொல்லி அதைச்‌ சுக்குநூறாக உடைத்தெறிந்தான்‌. இந்த பொல்லாத மாயக்குதிரையினால்தானே இத்தனைச்‌ சம்பவங்களும்‌ ஏற்பட்டன! என்றான்.

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing