முட்டாள்களின் தலைவன்-7 puthisali kathaigal
puthisali kathaigal |
இலவசமோ இலவசம்
மளிகை கடையில் பாஸ்தான் கடையில் இருந்து கணக்கு வழக்கை பார்த்து கொண்டு இருப்பான். அந்த மளிகை கடையில் தினமும் மாலையில் முப்பது பால் பாகட் ஓடும். தினமும் உசார்த்தான் பால் கடைக்கி சென்று முப்பது பால் பாகட் வாங்கி கொண்டு வருவான்.
ஒரு மாலை வேலையில் பால் கடைக்கி சென்ற உசார் அப்போழுது பால் கடைக்காரன் பத்து பால் பாகட் வாங்கினால் ஒரு பால் பாகட் இலவசம் என்று சொன்னான். முப்பது பால் பாகட்டுக்கு மூன்று பால் பாகட் இலவசமாக கிடைத்தது. சந்தோசமாக வாங்கி கொண்டு சென்ற உசார்ரை பால்காரன் அழைத்து டேய் இந்த சலுகை இன்று முடிகின்றது நாளை இலவசம் கிடையாது இன்னும் வேணும் என்றால் வாங்கிக்கோ என்று சொல்லி அழைத்தான். நம்ப முட்டாள் தான் பேருக்கு ஏற்றார்போல் உசார் ஆயிட்சே தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து ஐம்பது பால் பாகட் மற்றும் ஐந்து இலவச பால் பாகட் வாங்கி கடைக்கி வந்தான்.
ஆனால் என்ன முப்பது பால் பாகட் மட்டும் வியாபாரம் ஆனது மீதமுள்ள பால் பாகட் கெட்டு நஷ்டம் ஆனது.
நீதி கருத்து
இலவசம் இலவசம் என்று இருந்தால் புலைப்புதான் கெட்டு போகும்.
இலவசமாக கொடுத்த பால் வியாபாரிக்கு லாபம் கிடைத்தது. இலவசம் என்று வாங்கின உசாருக்கு நஷ்டம்தான் கிடைத்தது அதோட இலவசமாக மன வேதனையும் நிந்தையும் கிடைக்கும்.