உருமாற்றும் மந்திரவித்தை | மாயாஜால கதைகள் | manthira kathaigal | magic story in tamil
![]() |
manthira kathaigal | magic story in tamil |
கழுதைதான் என் மனைவி. இவள் ஒருநாள். என் கறுப்பு அடிமைகளில் ஒருவனிடம் சல்லாபித்துக் கொண்டிருந்தான். அதை நான் பார்த்துவிட்டேன். பயந்த. அவள் உடனே ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து மந்திரித்து என் மேல் தெளித்தான். நான் நாயாக உருமாறினேன். நாயாக மாறிய என்னை நையப் புடைத்து: வீட்டைவிட்டுத் துரத்தியடித்தாள். (manthira kathaigal | magic story in tamil)
நாயாக மாறிய நான் தெருத்தெருவாய் சுற்றியலைந்து முடிவில் ஒரு கடைவாயிலைத் தஞ்சமடைந்தேன். அந்தக் கடைக்காரன் மிகவும் நல்லவன். எனக்கு வேளா வேளைக்கு உணவு கொடுத்து ஆதரித்தான். நானும் நாயுக்குரிய நன்றி, விசுவாசத்துடன் நடந்து கொண்டேன். ஒரு நான் நான் அந்த வியாபாரியுடன் அவன் வீட்டுக்குச் சென்றேன். அவன் மகள் என்னை யாரென்று. கண்டு கொண்டாள். அவளும் மந்திரவித்தை கற்றறிந்தவள். கண்ணீரை மந்திரித்து என்மேல் தெளித்து என்னை
மீண்டும் மனிதனாக்கினாள். பின்னர் உருமாற்றும் மந்திரத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தாள். நான் என்: துஷ்ட மனைவியைக் கோவேறு கழுதையாக மாற்றிவிட்டேன். அதுதான் இந்தக் கழுதை.