புதன், 20 ஜனவரி, 2021

இளவரசனும் பெண்பூதமும் - Tamil Stories

 இளவரசனும் பெண்பூதமும் - Tamil Stories

இளவரசனும் பெண்பூதமும் - Tamil Stories
Tamil Stories

    முன்னொரு காலத்தில்‌ சிந்துபாத்‌ என்றொரு மன்னன்‌ இருந்தான்‌. அவனுக்குயெனவன வயதில்‌ ஒரு மகனிருந்தான்‌. அவன்‌ குதிரைச்‌ சவாரியிலும்‌ வேட்டையாடுவதிலும்‌ சிறந்து விளங்கினான்‌. மன்னன்‌ சிந்துபாத்துக்குத்‌ தன்‌ மகன்‌ மேல்‌ அளவிட முடியாத பாசம்‌. ஒரு நாள்‌ சிந்துபாதின்‌ மகன்‌ வேட்டைக்குக்‌ கிளம்பினான்‌. அவனுக்குத்‌ துணையாக மந்திரி ஒருவனையும்‌ அனுப்பி வைத்தான்‌ மன்னன்‌. அரசகுமாரனும்‌, மந்திரியும்‌, வேட்டைப்‌ பரிவாரங்‌களும்‌ கானகம்‌ சென்று வேட்டையாடினர்‌. (Tamil Stories)

    மாலைப்‌ பொழுதில்‌ அரசகுமாரன்‌ ஒரு பெரிய மிருகத்தைக்‌ கண்டான்‌. குதிரையை விரட்டிக்‌ கொண்டு அம்‌ மிருகத்தைத்‌ துரத்தினான்‌. அரசகுமாரனுடன்‌ தொடர்ந்தே சென்று கொண்டிருந்த மந்திரியால்‌ அரச குமாரனின்‌ அசுரவேகப்‌ பாய்ச்சலுடன்‌ தன்னால்‌ ஈடு கொடுக்க முடியாமல்‌ பின்‌ தங்கிவிட்டான்‌. 

    கானகத்தில்‌ நெடுந்தூரம்‌ சென்றதும்‌ அம்‌ மிருகம்‌ மறைந்து போயிற்று. தனியே இருந்த அரசகுமாரன்‌ வேட்டை கிடைக்காமல்‌ போனதால்‌, வருத்தமுடன்‌ தனியே திரும்பிக்‌ கொண்டிருந்தான்‌. வழியிலே அழகிய இளம்‌ பெண்ணொருத்தியைக்‌ கண்டான்‌. காட்டில்‌ ஏன்‌ தனித்திருக்கிறாய்‌ என்று கேட்டான்‌. தன்னையும்‌ ஓர்‌: ராஜகுமாரன்‌ என்று அறிமுகப்படுத்திக்‌ கொண்டான்‌.

    அவள்‌ “அரசகுமாரனே! நான்‌ இந்திய நாட்டைச்‌ சேர்ந்தவள்‌. நானும்‌ என்‌ தந்தையும்‌ பரிவாரங்களுடன்‌. இந்த வழியாக வந்து கொண்டிருந்தோம்‌. நான்‌ தூக்கக்‌ கலக்கத்தில்‌ குதிரை மேலிருந்து இவ்விடத்தில்‌. விழுந்துவிட்டேன்‌. பரிவாரத்தார்‌ என்னைக்‌ கவனிக்காமல்‌ போய்விட்டனர்‌. நான்‌ இந்தக்‌ கானகத்தில்‌ தனியே விடப்பட்டேன்‌" என்று கூறி, தன்‌ விதியை நினைத்து. அழுதாள்‌. 

    இதைக்‌ கேட்ட அரசகுமாரன்‌, அவள்‌ பேரில்‌, இரக்கம்‌ கொண்டு தன்‌ குதிரை மேலேற்றிக்‌ கொண்டு தன்‌ நகரத்தை நோக்கிச்‌ சென்று கொண்டிருந்தான்‌. வழியில்‌ ஒரு பாழடைந்த மண்டபத்தைச்‌ கண்டதும்‌. குதிரைமேலிருந்த பெண்‌ இங்குச்‌ சற்று இளைப்பாறிச்‌ செல்லலாம்‌ என்று அரசகுமாரனிடம்‌ சொன்னாள்‌. அரசகுமாரனும்‌ பாழ்‌ மண்டபத்தினருகே சென்று அவளைச்‌ கீழிறக்கி விட்டுத்‌ தானும்‌ கிழிறங்கினான்‌. அந்தப்‌ பெண்‌ அரசகுமாரனிடம்‌ “இதோ வந்து. விடுகிறேன்‌" என்று கூறி மண்டபத்தினுள்‌ சென்றான்‌. அவளறியாவண்ணம்‌ அரசகுமாரனும்‌ பின்‌, தொடர்ந்தான்‌. 

    உள்ளே! தன்னுடன்‌ வந்த பெண்‌ பூதமாக மாறியிருந்தாள்‌. அங்கு மேலும்‌ மூன்று குட்டிப்‌ பூதங்கள்‌ இருந்தன. அந்தப்‌ பெண்‌ பூதம்‌ குட்டிப்‌ பூதங்களை அழைத்து, “இன்று உங்களுக்கு நல்ல ,விருந்து சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்‌. ஒரு கொழுத்த ராஜகுமாரனை ஏமாற்றி அழைத்து வந்திருக்கிறேன்‌. அவனைக்‌ கொன்று நன்றாகச்‌ சாப்பிடுங்கள்‌" என்றான்‌. குட்டிப்‌ பூதங்களும்‌ “ஐயோ! பசிக்கிறதே! நாவில்‌ நீர்‌ வருகிறதே, சீக்கிரம்‌ அவனை: உள்ளே அழைத்துவா” என்று கூக்குரலிட்டு மகிழ்ச்சியால்‌. ஆரவாரம்‌ செய்தன. 

    இதைக்‌ கண்டதும்‌ அரசகுமாரன்‌, ஒரு பெண்‌ பூதமே தன்னை ஏமாற்றி, தன்னைக்‌ கொன்று தின்ன இவ்விடம்‌ கொண்டு வந்திருக்கிறது. என்பதை உணர்ந்தான்‌. சந்தடி செய்யாமல்‌ வெளியே சென்றான்‌. சற்று நேரத்தில்‌ பெண்‌ பூதம்‌ , மனித உருவுடன்‌. வெளியே வந்தது. அவளைக்‌ கண்டதும்‌ அவன்‌ பயத்தால்‌. நடுநடுங்கினான்‌. அரசகுமாரன்‌ பயத்தால்‌ உடல்‌ நடுங்குவதைக்‌ சுண்ட அவன்‌ 'ஏன்‌ இப்படி நடுங்குகிறீர்கள்‌' என்றாள்‌. 

    “என்னுடைய பரம விரோதி ஒருவன்‌ இங்கே வந்திருக்கிறான்‌. அவன்‌ என்னைக்‌ கொல்லாமல்‌ விட மாட்டான்‌. ஆகவே தான்‌ நடுங்குகிறேன்‌” என்றான்‌. அவன்‌ "நீயோ ராஜகுமாரன்‌! அந்த விரோதிக்குப்‌  பணம்‌ கொடுத்து சமாதானம்‌ செய்துவிட்டால்‌ போகிறது. அதற்காகவா இப்படி பயப்பட வேண்டும்‌" என்றாள்‌. “பெண்ணே! என்‌ விரோதி பணம்‌ கொடுத்தாலும்‌. வாங்க மாட்டான்‌. என்‌ உயிர்‌ ஒன்றே தான்‌ அவன்‌. குறிக்கோள்‌. 

    மேலும்‌ எனது இடது கால்‌ வேறு ஊனம்‌, ஓடித்‌ தப்பிக்கவோ அல்லது அவனுடன்‌ சண்டையிட்டு. வெற்றிபெறவோ முடியாது” என்றான்‌. “நீர்‌ அங்கஹீனரா! அப்படியானால்‌ மனிதா! ஆண்டவனிடம்‌ முறையிடு. அவர்‌ உன்னை எப்படியும்‌. காப்பாற்றுவார்‌.” என்று புத்திமதி கூறினாள்‌. அரசகுமாரன்‌ தனக்கேற்பட்டிருக்கும்‌ ஆபத்தை: உணர்ந்து எல்லாம்‌ வல்ல ஆண்டவனைத்‌ தொழுது: தன்னைக்‌ காப்பாற்றுமாறு வேண்டினான்‌. அரசகுமாரன்‌ "அல்லா, அல்லா” என்று கூறித்‌ தரையில்‌ மண்டியிட்டு வணங்கிக்‌ கொண்டிருந்தான்‌.

    அப்போது அப்‌ பெண்‌ மீண்டும்‌ மண்டபத்தினுள்‌. சென்றாள்‌. இதுவே தக்க தருணம்‌ என நினைத்த அரச குமாரன்‌ குதிரை மேலேறி காற்றினும்‌ கடுகி தன்‌ நகரையடைந்தான்‌. காட்டிலே நடந்தவற்றைத்‌ தன்‌ தகப்பன்‌ சிந்துபாதிடம்‌ சொன்னான்‌ அரசகுமாரன்‌. தான்‌ துணைக்காக மந்திரியை உடன்‌ அனுப்பியும்‌ தன்‌ மகனுக்கு உயிரபாயம்‌. ஏற்படும்படியாக அந்த மந்திரி விட்டுவிட்டானே என்று: கோபத்தால்‌ அந்த மந்திரியை வெட்டி வீழ்த்தி விட்டான்‌ சிந்துபாத்‌.(tamil story)

tamil stories | பேரழகியும் உண்மை பேசும் கிளி 

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing