ஞாயிறு, 23 மே, 2021

True love in tamil-part-2


நேசகுமாரனின் ஏக்கம்(மெய் காதல்)


நேசகுமாரன் தன் காதலியை நினைத்து மிகவும் சோர்ந்து போனான்(மெய் காதல்) தனக்குள் யாரும் அறியாமல் கண்ணிர்விட்டு அழுதான்.சாப்பிடாமல் தன் சரிரம் மெலிந்து போனது.அப்பொழுது அவன் புறாவை அழைத்து என் காதலிக்கு தூது எடுத்து செல்லும் என் புறவே நான் என் காதலியை பார்க்காமல் சோர்ந்துவிட்டேன்.
"என் காதலியை பார்க்காமல் இருக்க முடியவில்லை
அவளை நினைத்து என் உள்ளம் தினமும் துடிக்கின்றது
அவள் முகத்தை பார்க்க என் விழிகள் ஏக்கம் கொள்கின்றது.
காலையில் உதிக்கும் சூரியன் என்னக்கு இருளாக மாறினது .
இரவில் உதிக்கும் நிலவே இருண்டு போனதே.
திரச்சரசம் மதுபானம் என் கவலைய மாற்ற முடியவில்லை.
சங்கிதகாரர்களின் பாட்டும் என்னை தேற்றமுடியல.
அழகான மங்கையரின் நடனம் என்னை மகிழ்விக்க முடியல.
என் வெற்றி என்னக்கு மகிழ்ச் சி தரவில்லை என் அரியணை இப்போ கசப்பாக மாறினது.
என் வாழ்கை முழுவதும் இருண்டு போனது. "
என்று தன் காதலியை நினைத்து புலம்பி பாடினான்.
நேசகுமாரனின் தகப்பன் தன் மகனை பற்றி நேசகுமாரனின் தோழனிடம் கேட்டார்.அதற்கு நேசகுமாரனின் தோழன் உம் மகன் லீலி என்னும் அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்து விட்டான்.நேசகுமாரன் லீலி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றார்கள்.லீலி இப்போ சிறையாக கொண்டுசெல்லபட்டால்.அதை நினைத்து உம் மகன் தினமுன் துக்க படுகின்றார் என்று சொன்னான்.நேசகுமாரன் தன் தகப்பனிடம் விடை பெற்று லீலிய காப்பாற்ற தனியாக சென்றான்.

அடிமையின் நட்பு (மெய் காதல்)


"என் அன்பே என் உயிரே.
உன்னை மீட்க என் உயிரையும் தருவேன்.
என் மேன்மையை இழந்தேன் உன்னை நான் நேசித்தேன்.
நீ இல்லாத அரண்மனை வேண்டாம்.நீ மட்டும் என்னக்கு போதும்."


என்று பாட்டு பாடிக்கொண்டு தன் காதலியை மீட்க சென்றான்.வழியில் ஒருவன் மயங்கி விழுந்தவன் எழும்பவே இல்லை அந்த வழியில் வந்த நேசகுமாரன் அந்த மயங்கி விழுந்தவரை பார்த்து பரிதாபம் கொண்டு.அவரை தூக்கி தம்மீது சாய்த்து தண்ணிர் குடிக்க கொடுத்து தனது திராச்சரசத்தை அவனுக்கு தந்து அத்திபழம் அவனுக்கு சாப்பிட கொடுத்தான் .இவைகளை உண்ட அவன் உயிர் அவனுக்கு திரும்ப வந்தது.அவன் கண்ணை திறந்து நேசகுமாரனை பார்த்தான்.நேசகுமாரன் உடனே வாலிபனே உன் பெயர் என்ன நீ எப்படி இங்க வந்தாய் என்று கேட்க.அந்த வாலிபன் பதில் இப்படி உரைத்தான்.ஐயா நான் ஒரு அடிமை இந்த இருள் இராட்சியத்தில் அடிமையாக நான் வாழ்கின்றேன் மூன்று நாட்களுக்கு முன் தென்பகுதியை கொள்ளைஅடித்து அங்கு உள்ளவர்களை சிறைபிடித்து சென்றுகொண்டு இருந்தோம் அப்பொழுது நான் நோய்வாய் பட்டு கிடந்தேன் என் ஆண்டவன் நான் பிழைக்க மாட்டேன் என்று இந்த இடத்தில் என்னை தூக்கிவீசி விட்டார் என்று சொன்னான். அதற்கு நேசகுமாரன் தென்பகுதின் இளவரசன் நான்.என் காதலியை சிறைபிடித்து சென்று விட்டார்கள் அவளை மீட்க செல்கின்றான் போகும் பாதைய காட்டு நான் உன்னக்கு நல்ல சன்மானத்தை தருவேன் நான் உன்னை ஒரு அடிமைபோல நடத்த மாட்டேன் என் தோழனாக உன்னை காண்கின்றேன் என்று சொல்லி இருவரும் நடந்து சென்றார்கள்.மாலை நேரம் வந்தது இருவரும் ஒரு சத்திரத்தில் தங்கினார்கள்.அந்த அடிமை நேசகுமாரனை பார்த்து இளவரசே உம் நாட்டில் எத்தனையோ அழகான பெண் இருக்க உம் காதலி மட்டும் சிறப்பு வாய்ந்தவள் என்று நீர் எப்படி நினைகின்றிர் என்று கேட்க நேசகுமாரன் பாடல் பாட தொடக்கினான் .
"என் காதலி ஒருத்திதான் அவளை காணமல் நான் இல்லையே.
என் புறாவே ஒருத்தி அவள் உத்தமியே.
அவள் கண்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரம்.
அவள் பேசும் வார்த்தை தேனை போல உள்ளதே.
நான் அவளை பார்க்க என்னை கவற என்ன என்னவோ செய்வாள்.
நான் அவளை பார்க்கும்போது என்னை பார்க்காமல் நடிப்பால்.
நான் அவளோட பேச அவள் என்னைபார்த்து வெட்கப்பட்டு முகத்தை மூட
அதை கண்டு சூரியன் வெளிச்சம் இருளாக
என் காதலியின் முகம் பிரகாசமாக மாற
நான் அதை கண்டு மகிழ என்ன வென்று சொல்ல அந்த அழகே.
அவள் முகம் காணமல் நான் இல்லை
என் காதலியே என் அன்பே என் மணவாட்டியே என் லீலியே உன்னை மீட்க
வருவேன் என் உயிரையும் உன்னக்கு தருவேன் என்று பாடினான்."

இந்த பாடலை கேட்ட அடிமை மெய்மறந்து போனான்.பின்பு இருவரும் படுத்து உறங்கிவிட்டார்கள்.மறுநாள் காலையில் இருவரும் எழுந்து பிரயாணமாக நடந்து சென்றார்கள்.அப்பொழுது அடிமை என் இளவரசே உம்மக்கு ஒரு கதை சொல்லுகின்றேன் கேளுங்கள் உம் மனம் வருதபடாமல் இருக்கட்டும். ஒரு விறகு வெட்டுபவனின் காதல் கதையை சொல்லுகின்றேன் கேளு.


விறகு வெட்டுபவனின் காதல்(மெய் காதல்)



True love in tamil-part-2
True love in tamil-part-2
ஒரு ஏழை விறகு வெட்டுபவன் இன்னைக்கு வேலை செய்தால்தான் மறுநாள் சாப்பாடு. அவன் ஊரில் ஏழையான அழகான பெண் இருந்தால் இருவரும் நேசித்தார்கள். விறகு வெட்டுபவன் மெய் காதல் அவள் மீது கொண்டு இருந்தான் உம்மைப்போலவே அப்பொழுது அவள் என்னக்கு பக்கத்து கிராமத்தில் ஒரு செல்வந்தரின் மனைவி கட்டி இருந்த பட்டுசேலை வேண்டும் என்று கேட்டால் உடனே இவன் தன் காதலி கேட்டுவிட்டால் என்று சொல்லி இரவும் பகலும் கடினமாக விறகு வெட்டி பணம் சம்பாதித்து பட்டு சேலை வாங்கிட்டு வந்து தந்தான் ஆனால் அவளோ அதை வாங்க மறுத்து விட்டால். உடனே விறகு வெட்டுபவன் என் காதலியே ஏன் வாங்க மறுத்துவிட்டாய் என்று கேட்டான். அதற்கு அவள் அந்த செல்வந்தரின் மனைவி கட்டின சேலை தான் வேணும் என்று சொன்னாள் காதலின் ஆசை விபரிதமானது என்று அறிந்த அவன் தன் காதலின் ஆசைய நிறைவேற்ற நினைத்து இரவில் திருட சென்றான். ஆனால் செல்வந்தரின் வேலைகாரர்கள் அவனை பிடித்து அடித்து உதைத்தார்கள் சத்தம் கேட்டு வெளிய வந்த செல்வந்தர் அவனை விசாரிக்க தன் காதலிக்காக அப்படி செய்தேன் என்று நடந்த உண்மைய ஒன்னு விடாமல் சொன்னான் இதை கேட்ட அவன் தன் மனைவின் பட்டு சேலைய அவனுக்கு தந்து இனி இந்த தப்பு செய்யாதே என்று சொல்லி அவனை அனுபிவிட்டான். அவன் பட்டு சேலைய பெற்று தன் காதலிடம் தந்தான் இதை போல இன்னும் சில சம்பவம் நடந்தது அதை உம்மக்கு சொல்ல வில்லை இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். விறகு வெட்டுபவனின் பக்கத்துக்கு விட்டுகாரன் விறகு வெட்டுபவன் மனைவி மீது காமம் கொண்டு அவளை அடைய முயற்ச்சி செய்தான் அப்பொழுது விறகு வெட்டுபவன் மனைவின் பிறந்த நாள் வந்தது. விறகு வெட்டுபவன் விறகு வெட்ட காட்டுக்கு சென்று விட்டான். இந்த சமையத்தை பயன்படுதின பக்கத்து வீட்டுக்காரன் ஒரு அழகான புடவை வாங்கிகொண்டு விறகு வெட்டுபவனின் மனைவிடம் கொடுத்தான். அந்த சேலைய வாங்கின அவள் மிகவும் சந்தோசப்பட்டாள். அவள் இதை போல் ஒரு சேலைய என் கணவர் இதுவரை என்னக்கு வாங்கி தந்தது இல்லை என்று சொன்னால் .உடனே அவன் உன் கணவர் உன்னை நேசிக்கவில்லை என்று சொல்லி நான் உன்னை நேசிக்கின்றேன் என்று சொல்லி அவள் கைய பிடித்து கிட்ட இழுத்து முத்தம் ஒன்றை கொடுத்தான். என்ன செய்வது என்று நினைத்த அவள் அங்கு இருந்து போய்விட்டால். மறுநாள் விறகு வெட்டுபவன் விறகு வெட்ட சென்றவுடன் அவன் திரும்ப வந்து அவளை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான் இந்த முறை அவளும் அவனுக்கு முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டார்கள் அப்பொழுது அவன் என் அன்பே இந்த விஷத்தை உன் புருஷன் குடிக்கும் பாணத்தில் கலந்து விடு பின்பு நீயும் நானும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை வார்த்தைய சொன்னான். அதன் படி விஷத்தை கலந்து தன் கணவனுக்கு குடிக்க கொடுத்து அவனும் குடித்து மாண்டுபோனான் என்று தன் கதையை முடித்தான். அதற்கு நேசகுமாரன் அடிமையே அவள் கொண்டது காதல் இல்லை காமம். அதனால் அந்த விறகு வெட்டுபவனை கொன்றுவிட்டால். காதல் என்பது புனிதமானது அது எந்த தப்பும் செய்ய ஏவிவிடாது. அவள் திருட சொன்ன போது அவள் அவனை நேசிக்கவில்லை என்று அவன் அறிந்துகொள்ளவேண்டும் அவனும் அறிந்து கொள்ள தவறிவிட்டால் என்று சொன்னான். உடனே அடிமை என் இளவரசே காதலும் காமும் என்ன இரண்டும் ஒன்றுதானே என்று கேட்க நேசகுமாரன் தன் பதிலை சொல்ல ஆரமித்தான்.




tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing