வாலிபர்கள் அரசாங்கம் தேர்வுக்கு படித்து கொண்டு அரட்டையடித்துகொண்டு இருந்தார்கள். அந்த வழியாக வந்த விஸ் தாத்தா அவர்களை பார்த்து பார்க்காத மாதிரி சென்றார். அப்பொழுது சாம் என்கின்ற வாலிபன் விஸ் தாத்தாவை அழைத்து நாங்கள் அரசாங்க தேர்வுக்கு எங்களை தயார்படுத்திக்கொள்கின்றோம். நீங்கள் எங்களுக்கு சிறிது ஆலோசனை சொல்லுவிர்களாக. அப்பொழுது இன்னொருவன் aptitude மிகவும் கஷ்டமாக உள்ளது விஸ் தாத்தா என்றான். அதற்கு தாத்தா எது கஷ்டம் என்று கேட்க (aptitude in tamil)(time and work) வேலை மற்றும் சம்பளம் என்றான். நான் ஒரு கதை சொல்லுகின்றேன் கேளுங்கள் என்றார்.
Time and Work(aptitude in tamil)
ஒரு கிராமத்தில் ஏழை வாலிபன் இருந்தான் அவன் ஒரு செல்வந்தன் வீட்டில் வேலை செய்தான். செங்கலை எடுத்து வீட்டை கட்டுவதுதான் அந்த வேலை. பத்து நாளைக்கு பத்துஆயிரம்(Rs.10000). அவன் வேலை கடினம் என்று நினைத்து தனக்கு உதவி செய்ய ஒரு சிறு பிள்ளைய வேலைக்கு சேர்த்துகொண்டான். அவன் அந்த சின்ன பையன் கிட்ட நீ என்னக்கு உதவி செய் "உன் வேலைக்கு ஏற்ற சம்பளதை நான் உன்னக்கு தருகின்றேன்" என்று சொன்னான். அவர்கள் இருவரும் சேர்ந்து பத்து நாள் முடிக்க வேண்டிய வேலை ஏழு நாளில் முடித்து விட்டார்கள். சம்பளம் பத்துஆயிரம்(Rs.10000) வந்தது அந்த சிறுவன் என்னக்கு அதில் பாதி ஐந்துஆயிரம்(Rs.5000). வேண்டும் என்று சொன்னான். அவன் ஐந்துஆயிரம் உன்னக்கு தரமாட்டேன். என்று இருவரும் வாக்குவாதம் முட்டி சண்டைபன்னிகொன்டார்கள். அவர்கள் இருவரின் வழக்கும் அங்கு உள்ள நாட்டாமையிடம் சென்றது. என்ன செய்வது என்று யோசித்த நாட்டாமை. ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார் அது என்ன வென்றால். பத்து நாளைக்கு பத்துஆயிரம் என்றாள் ஒரு நாளைக்கு ஒரு ஆயிரம். ஏழு நாளைக்கு ஏழு ஆயிரம். பத்து நாள் முடிக்க வேண்டிய வேலை ஏழுநாள் முடித்து விட்டீர். அதனால் உம்மக்கு ஏழு ஆயிரம். மீதமுள்ள மூன்றுஆயிரம் அந்த சிறு பிள்ளைக்கு தந்துவிடு என்று புத்திசாலிதனமாக தீர்ப்பு சொன்னார் அதனால் இருவரும் சமதானதோட சென்றார்கள். என்று தன் கதையை முடித்தார் விஸ் தாத்தா.
doubt in time work
அதற்கு சாம் தாத்தாவை பார்த்து இருவரும் சேர்ந்து வேலை செய்தார்கள் அப்போ இருவர்க்கும் சரிபங்குதான் வர வேண்டும். என்று கேட்டான் . அதற்கு விஸ் தாத்தா சரியான கேள்வி . அவர்கள் இருவரும் சேர்ந்து ஐந்து நாள் முடித்துவிட்டார்கள் என்றால் சரிபங்குதான் ஆனால் அவர்கள் வேலை முடித்தது ஏழு நாளில். அவன் ஒருவன் மட்டும் செய்து இருந்தால் பத்துநாள் முடித்துஇருப்பான். அவன் சொல்லும்போது உன் வேலைக்கு ஏற்ற சம்பளதை நான் உன்னக்கு தருகின்றேன் என்று சொன்னான். ஒரு வேலை அவர்கள் அந்த வேலையை நான்குநாளில் முடித்துவிட்டார்கள் என்றால். எவ்வளவு அந்த சிறு பையனுக்கு வரும் என்றார். அதற்கு வாலிபர்கள் இப்போ சரிபங்கு வருமா தாத்தா என்றான் . அதற்கு சாம் என்கின்ற வாலிபன் அந்த சிறு பையனுக்கு ஆறு ஆயிரம்(6000 ) வந்து இருக்கும் என்று சொன்னான். அதற்கு தாத்தா ஆமாம். சரியாக சொன்னான். ஒரு மந்திரத்தை சொல்லுகின்றேன் கேளுங்கள் மொத்த சம்பளத்தை நாளினால் வகுத்து முடித்த நாட்களைஅதனோட கூட்டி மீதமுல்லத்தை அந்த பையனிடம் தரவேண்டும் என்றார்.
one day=wages/days
Main person=one day * comp.days
share person= Main person-total wages