tamil tale story
அயிக்கர்ரின் வாழ்க்கை நகர்ந்தது அவன் தேவனை போற்றி துதித்துகொண்டு இருந்தான்.அயிக்கர் மறித்து விட்டான் என்று கேள்வி பட்ட எகிப்து மன்னன் பார்வோன் சனகெரிப் அரசனுக்கு கடிதம் ஒன்றை எழுதினான்.
பார்வோனின் கடிதம்(tamil story)
சமாதானமும் செல்வமும் நிறைந்த என் சகோதரன் சனகெரிப் ஆசிரிய நினைவே நாட்டின் அரசனுக்கு எகிப்து நாட்டின் மன்னன் பார்வோன் எழுதுவது என்னவென்றால்.
நான் என்னக்கென்று ஒரு அரண்மனை வேண்டும் அது பூமிக்கும் வானத்துக்கும் நடுவாக இருக்க வேண்ட்டும் நீர் என்னக்கொரு அரண்மனை கட்டி ஒரு ஞானம் நிறைந்த ஒரு மனிதனை என்னிடம் அனுப்பு நான்கேட்கும் கேள்விக்கு அவன் சரியாக பதில் சொல்ல வேண்ட்டும் அவன் அப்படி சொல்லிவிட்டால் நான் மூன்று வருடம் அசிரிய நாட்டின் சட்டத்தின் படி வரி செலுத்துகின்றேன் என்று எழுதி அனுப்பினான்.
இதை படித்த சனகெரிப் அரசன் தனது மந்திரிமார்கள் மற்றும் ஞானிகளிடம் கடிதம் கொடுக்கபட்டது. அவைகள் படித்து பதில் ஏதும் சொல்ல முடியாமல் இருந்தார்கள். அரசர் மிகவும் கலங்கினார் யார் இந்த கடிதத்தின் மறைபொருளை வெளிப்படுத்துவார் என்று கேட்க அங்கு கூடிஇருந்தோர் அரசே இந்த கடிதத்தின் இரகசியத்தை வெளிபடுத்த ஒருவன் தான் உண்டு அவன் தான் அயிக்கர் ஆனால் அவன் மறித்து விட்டான். அவன் மறிக்கும் முன் அவனது ஞானத்தை நாடனுக்கு போதித்தான் நீர் நாடானிடம் கடிதத்தை காட்டி அவனிடம் கேள் அவன் உம்மக்கு சொல்லுவான் என்றார்கள். உடனே நாடனும் அங்கு வந்தான்.
ராஜாவின் கவலை(tamil story)
நாடானிடம் கடிதம் காட்டப்பட்டது அதை படித்த நாடான். என் அரசே யார் வானத்துக்கும் பூம்மிக்கும் நடுவாக அரண்மனை கட்ட முடியும் என்று சொன்னான். இந்த வார்த்தையை கேட்ட அரசர் மிகவும் கலங்கி துக்க பட்டு சாம்பலில் உட்கார்ந்தார்.
அவர் மிகவும் துக்க பட்டு என் அயிக்கர் நான் உன்னை கொன்று விட்டேன் உன்னை போல ஒரு ஞானமுள்ளவன் யார்
அவனை எங்கு தேடி கண்டுபிடிப்பேன். என்னக்கு நல் ஆலோசனை தந்த அயிக்கர்ரே இப்போ நீ எங்க உள்ளாய் என் தேசத்திற்கு நல்ல ஆசிரியராக இருந்த அயிக்கர் என்று ராஜா மிகவும் அயிக்கர்ரை நினைத்து கவலை பட்டார் அப்போ அரசர் யாராவது அயிக்கர் உயிருடன் இருகின்றான் என்று சொன்னால் அவனுக்கு என் இராட்சியத்தில் பாதியை தந்து விடுவேன் என்று சொன்னான்.
ராஜா மிகவும் அயிக்கர்ரை நினைத்து கவலை படுகின்றார் என்று பார்த்த அபு ச்மின்க் ராஜாவிடம் வந்து என் அரசே என்னை மன்னித்து விடுங்கள் நான் அயிக்கர்ரை கொல்ல வில்லை அவன் உயிருடன் தான் இருகின்றார் என்று சொன்னான். அரசனால் அதை நம்ப முடியவில்லை நீ என்ன சொல்லுகின்ராய் என்று கேட்க அவன் முன் நடந்த எல்லா சம்பவத்தையும் சொன்னான். உடனே அரசர் மிகவும் சந்தோஷப்பட்டு அயிக்கர்ரை உடனை என்னை பார்க்க அழைத்துக்கொண்டு வா என்று கட்டளை கொடுத்தார். நீ சொல்வது உண்மையானால் நான் என் செல்வதை உன்னக்கு தந்து உன்னை மிகப்பெரிய செல்வந்தனாக மாற்றுவேன் என்றான். இதை கேட்ட அபு ச்மின்க் மகிழ்ச்சியுடன் அயிக்கர்ரை பார்க்க சென்றான்.
அயிக்கர் மீண்டும் வருதல்(tamil story)
அபு ச்மின்க் அயிக்கர்ரின் வீட்டுக்கு வந்து அந்த இரகசிய இடத்துக்கு வந்து கதவை திறந்து உள்ள சென்றான் அப்போ அயிக்கர் தேவனை புகழ்ந்து துதித்து கொண்டு இருந்தான். அவன் சத்தமாக அயிக்கர்றே நான் உம்மக்கு மகிச்சியாக சந்தோசமான செய்தி ஒன்றை கொண்டு வந்தேன். உடனே அயிக்கர் அது என்ன அபு ச்மின்க் அந்த செய்தியை என்னிடம் சொல் என்று கேட்டான். அவன் எகிப்து மன்னன் கடிதம் அனுப்பின ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லி அயிக்கர்ரை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றான்.
ராஜா அயிக்கர்ரை பார்த்த பொழுது அவன் முடி நீலமாக வளர்ந்து இருந்தது காட்டில் இருக்கும் விலங்கைபோல்
அவன் நகம் கழுகின் நகம் போல் வளர்ந்து இருந்தது அவன் சரிரம் அழுக்கு படிந்து அவன் முகம் மாறி சாம்பலை போல் இருந்தது. ராஜா அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து நீ போய் உன்னை கழுவி நல்ல உடைகளை உடுத்தி நாற்பது நாள் கழித்து என்னிடம் திரும்பி வா என்று மகிச்சியுடன் அனுப்பி வைத்தான்.
அயிக்கர் உயிருடன் இருகின்றான் என்று எல்லாரும் கேள்வி பட்டு மகிழ்ந்து சந்தோஷம் அடைந்தார்கள்.
அந்தரங்கத்தில் அரண்மனை(tamil story)
நாற்பது நாள் கழித்து வந்த அயிக்கர்ரிடம் அரசர் பார்வோனின் கடிதத்தை காட்டினார். அதை படித்த அயிக்கர் இவ்வளவு தானே அரசர் நான் அந்தரங்கத்தில் அரண்மனை கட்டி பார்வோன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி என் அரசரின் எதிரிகளுக்கு வெட்கத்தை உடுத்துவேன் அதற்கு என்னக்கு நாற்பது நாள் அவகாசம் வேண்டும் நான் என்தேவனின் உதவியுடன் பார்வோன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வேன் என்று சொல்லி அங்கு இருந்து சென்றான்.
பின்பு அயிக்கர் வேட்டைகாரனை அழைத்து இரு பலமுள்ள கழுகை என்னிடம் கொண்டுவா என்று சொன்னான். அவனும் அப்படி செய்தான். இரண்டு கழுகையும் நீளமான அறுபடாத கயிற்றில் கட்டி அதன் மேல் ஒரு சிறு பயனை அமரவைத்து அந்த கயிற்றில் மேல் ஒரு அட்டபெட்டியை வைத்து கழுகை மேல பறக்க வைத்தார்கள் . கழுகும் அந்த சிறு பையனுக்கும் உணவு கிழ இருந்து தினமும் தர பட்டது இதை பார்த்த அயிக்கர் செங்கலையும் சிமேண்டயும் கொண்டு வர சொல்லி அந்த கையிற்றின் மேல் செங்கலை வைத்து அரண்மனையை கட்ட அரமிதார்கல் இந்த ஞானம் தேவனிடம் இருந்து வந்தது கழுகு தடுமாற ஆரமித்தது அப்போ அந்த சிறு பையன் அந்த வேயிட்டை துக்கி பிடிப்பான் இப்படியே நாற்பது நாள் பயிற்சி கொடுக்கபட்டது.
நாற்பது நாள் முடிந்த நாளில் அயிக்கர் ராஜாவிடம் சென்று என் அரசே நீர் என்றும் வாழ்க அந்தரங்கத்தில் அரண்மனை கட்டின வேலை முடிந்து விட்டது என்று சொன்னான். அதை பார்க்க அரசர் வெளிய வந்தார். உடனே அயிக்கர் அந்த இரு கழுகை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று கட்டளை கொடுத்தான்.
கழுகு ராஜாவிற்கு முன் வரப்பட்டது இதோ ராஜா அந்த அரண்மனையை பார்த்து மெய்மறந்து போனார் அது உண்மையில் ஒரு அரண்மனை போல் ஜொலித்தது இதை பார்த்த அரசர் அயிக்கர்ரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து எகிப்து தேசத்திற்கு அனுப்பி வைத்தார்.
எகிப்து வந்த அயிக்கர்(tamil story)
எகிப்து நாட்டின் மக்கள் சனகெரிப் அரசர் ஒரு ஞானம் நிறைந்த ஒருவனை மன்னன் பார்வோனிடம் அனுபினறாம். அவன் பார்வோன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வானம். அதுமட்டும் அல்லாமல் அந்தரங்கத்தில் தொங்கும் ஒரு அரண்மனை கட்டினான். என்று எகிப்து முழுக்க ஒரே பறபறப்பாக பேசப்பட்டது.
அயிக்கர் பார்வோனிடம் வந்து நான் சனகெரிப் அரசரிடம் இருந்து வந்தேன் நீர் எழுதின கடிதத்தின் படி அந்தரங்கத்தில் ஒரு அரண்மனை கட்டி நீர் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொல்ல வந்தேன். நீர் சொன்ன படி மூன்று ஆண்டு வரியை வாங்கிகொண்டு செல்ல வந்தேன் என்று சொன்னான்.
அவன் பேசுவதை கேட்ட பார்வோன் மிகவும் திகைத்து உன் பெயர் என்னவென்று கேட்டான். அதற்கு அயிக்கர் என்னுடிய பெயர் அபிகுயம் நான் ஒரு சிறு எறும்பு அசிரிய நாட்டில் வசிப்பவன் என்று சொன்னான். இதை கேட்ட பார்வோன் நான் எகிப்து நாடு முழுக்க அரசன் என் கேள்விக்கு பதில் சொல்ல உன் அரசர் ஒரு எறும்பை என்னிடம் அனுப்பினார் என்று சொன்னான். அதற்கு அபிகுயம் நான் சர்வ வல்லமை நிறைந்த தேவனின் உதவியுடன் நீர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வேன் என்று சொன்னான். உடனே பார்வோன் நீ மூன்று நாள் கழித்து என்னை சந்திக்க வரும் படி கட்டளை கொடுத்து அனுபிவைத்தான்.
பார்வோனின் கேள்வியும் அயிக்கர்ரின் பதிலும்
மூன்று நாள் கழித்து பார்வோன் கத்திருப்பு கலர் மற்றும் ரெட் கலர் அணிந்து தனது சிங்காசனத்தில் அமர்ந்தான் தனது மந்திரிமார்கள் அவன் வலப்புறம் இடப்புறம் அவனுக்கு முன் தரைமட்டும் பணிந்தார்கள். ராஜா அபிகுயம் தன்னிடம் வர கட்டளையிட்டான். அபிகுயம் அங்கு வந்து ராஜாவிற்கு முன்பாக தரயில் முத்தம் தந்து ராஜா என்றும் வாழ்க என்று வாழ்த்தினான். அதற்கு பார்வோன் நான் யாரை மாதிரி உள்ளேன் என் மந்திரிமார்கள் யாரை மாதிரி உள்ளார்கள் சொல் என்றான்.
அதற்கு அபிகுயம் என் அரசே நீர் பாகால் விக்கிரம் மாதிரியும் உம் மந்திர்மார்கள் அதன் வேலைகாரர்கள் மாதிரிஇருகின்றர்கள் என்று பதில் தந்தான் . இதை கேட்ட பார்வோன் நீ போய் நாளை வா என்று அனுப்பி வைத்தான்.
மறுநாள் அபிகுயம் வந்த பொழுது இதோ பார்வோன் ரெட் கலர் வஸ்திரம் அணிந்து உட்கார்ந்து இருந்தான். அவன் மந்திரிமார்கள்வெள்ளை கலர் வஸ்திரம் அணிந்து அவனை சுற்றி அமர்ந்து இருந்தார்கள். பார்வோன் அபிகுயம் பார்த்து நான் யாரை மாதிரி உள்ளேன் என் மந்திரிமார்கள் யாரை மாதிரி உள்ளார்கள் சொல் என்று கேள்வி கேட்டான்.
அதற்கு அயிக்கர் நீர் சூரியனை போல் உள்ளீர் உம் மந்திரிமார்கள் அதின் கதிர்கள் மாதிரி உள்ளார்கள் என்று பதில் தந்தான். இதை கேட்ட பார்வோன் நீ போய் நாளை வா என்று அனுப்பி வைத்தான். பின்பு பார்வோன் தனது மந்திர்மார்கள் எல்லாரும் வெள்ளை கலர் வஸ்திரம் அணிந்து வரும்படி கட்டளை தந்தான். பார்வோனும் வெள்ளை வஸ்திரம் அணிந்து அமர்ந்துகொண்டான்.
மறுநாள் அபிகுயம் வந்த பொழுது இதோ பார்வோன் வெள்ளை கலர் வஸ்திரம் அணிந்து உட்கார்ந்து இருந்தான். அவன் மந்திரிமார்கள் வெள்ளை கலர் வஸ்திரம் அணிந்து அவனை சுற்றி அமர்ந்து இருந்தார்கள். பார்வோன் அபிகுயம் பார்த்து நான் யாரை மாதிரி உள்ளேன் என் மந்திரிமார்கள் யாரை மாதிரி உள்ளார்கள் சொல் என்று கேள்வி கேட்டான்.
அதற்கு அபிகுயம் என் அரசே நீர் நீலாவை போல் உள்ளீர் உம் மந்திர்மார்கள் அதை சுற்றும் கோலை போல் உள்ளார்கள் என்று பதில் தந்தான் . இதை கேட்ட பார்வோன் நீ போய் நாளை வா என்று அனுப்பி வைத்தான்.
பார்வோன் தனது மந்திரி மார்களை பார்த்து நீங்கள் வேற பல வண்ணம் தரித்த வஸ்திரம் தறித்து வாருங்கள் என்று கட்டளை கொடுத்து, பார்வோன் ரெட் மற்றும் வெல்வெட் வஸ்திரம் அணிந்து அமர்ந்துகொண்டான். பின்பு பார்வோன்
அபிகுயம் அழைத்து வர கட்டளையிட்டான்.அபிகுயம் வந்த பொழுது பார்வோன் அபிகுயம் பார்த்து நான் யாரை மாதிரி உள்ளேன் என் மந்திரிமார்கள் யாரை மாதிரி உள்ளார்கள் சொல் என்று கேள்வி கேட்டான்.
அதற்கு அபிகுயம் என் அரசே நீர் ஏப்ரல் மாதம் போல் உள்ளீர் உம் மந்திர்மார்கள் போல் ஏப்ரல் மாததில் பூக்கும் பூக்களை போல்உள்ளார்கள் என்று பதில் தந்தான் . இதை கேட்ட பார்வோன் மிகவும் மகிழ்ந்து ஒ அபிகுயம் நீ முதல் முறை என்னை பாகால் போல் உள்ளேன் என்றும் என் மந்திரிமார்கள் அதன் வேலைகாரர்கள் போல் உள்ளார்கள் என்று சொன்னாய். இரண்டம் முறை என்னை சூரியனுக்கு ஒப்பிடு என் மந்திர்மார்கள் அதன் கதிற்கும்,மூன்றாம் முறை என்னை நிலவுகும் என் மந்திர்மார்கள் கோளுக்கும் நட்ச்சதிரதுக்கும் ஒப்பிட்டாய். நாங்கம் முறை ஏப்ரல் மாதமும் அதன் பூக்களுக்கும் ஒப்பிட்டு பேசினாய். நீ சொல் உன் அரசர்ரும் உன் மந்திர்மர்களும் எதற்கு ஒப்பனையாக உள்ளார்கள் என்று கேட்டான்.
அதற்கு அபிகுயம் என் அரசரும் என் மந்திர்மார்களும் எதற்கு ஒப்பாக இருகின்றார்கள் என்று சொல்லுகின்றேன் கேள் என்று சொல்லி என் அரசர் சனகெரிப் வானத்தில் உள்ள தேவனை போலவும் அவர் மந்திர்மார்கள் இடிமுழக்கம் மற்றும் மின்னலை போலவும் இருகின்றார்கள். அவர் கட்டளையிட மின்னலும் இடியும் கூடிய மழை பெய்யும் அதனால் சூரியன் மறைந்து ஒளி கொடாமல் மறைந்து போகும் ,நிலவும் அதை சுற்றும் கோலும் மறைந்து சுற்றாமல் இருக்கும் மழை வானத்தில் இருந்து பூமிக்கு பெய்ய அது ஏப்ரல் மாதம் பூக்களை அழித்துவிடும் என்று பதில் தந்தான்.
இதை கேட்ட பார்வோன் மிகவும் கோபமடைந்து ஏ ஏ நீ யார் என்று உண்மையை சொல் என்று கேட்க . அதற்கு அபிகுயம் நான் தான் அயிக்கர் என்று பதில் சொன்னான். பார்வோன் அயிக்கர் உயிரோடன் இருபதையும் நோய் நொடி இல்லாமல் இருந்ததையும் அறிந்து மிகவும் சந்தோசப்பட்டு பரிசு பொருட்களை தந்து சமாதானத்துடன் அனுப்பிவைத்தான். (பார்வோன் மீண்டும் கேட்ட கேள்வி மற்றும் அந்தரங்க அரண்மனையின் இரகசியம் நாடானின் முடிவு அயிக்கர்ரின் பழமொழி எல்லாம் மூன்றாம் கதையில் தெரிவிக்கப்படும் )பரிசு பொருட்களை பெற்று தனது தேசத்திற்கு திரும்பிவந்தான். தேசத்தில் உள்ள மக்கள் மற்றும் அரசன் எல்லாரும் மகிழ்ச்சியுடன் அயிக்கர்ரை வரவேற்றார்கள். அயிக்கர்ரின் வாழ்கை சந்தோசமாக முடிந்தது.
-------- அயிக்கர்ரின் மூன்றாம் கதை தொடரும் ------