முட்டாள்களும் சூரியனும் ( புத்திசாலி கதைகள் )
puthisali kathaigal
puthisali kathaigal |
ஒரு கிராமத்தில் குருவிடம் பாடம் கற்றுக்கொள்ள
மூன்று முட்டாள்கள் வந்தார்கள்.
அவர்கள் பெயர் கால் முட்டாள்
அரை முட்டாள் மற்றும் முக்காள் முட்டாள்.
குரு அவர்களுக்கு எந்த ஒரு பாடத்தையும்
கற்று கொள்வதற்கு முன் கிழக்கு திசை நோக்கி
இறைவனை வழிபட வேண்டும் என்றார்.
உடனே முக்காள் முட்டாள், குருவே
கிழக்கு திசை எங்கு உள்ளது என்றான்.
உடனே குரு சூரியன் உதிக்கும் திசையே
கிழக்கு திசை என்று பதில் சொன்னார்.
சூரியனின் உதயம் - puthisali kathaigal
சூரியன் ஒரு நாள் அஸ்தமனம் ஆனா உடன்
தனது இரகசிய அறைக்குள் சென்று நடனம் மாடிக்கொண்டு
நன்கு உறங்கி விட்டான். அவன் தூக்கத்தில் இருந்து
எழும்பின உடன் வேக வேகமாக பூமி-மீது உதிக்க
வேகத்தில் சூரியன் திசை மாறி மேற்கு பக்கம்
உதித்து விட்டது.
அதை பார்த்த கால் முட்டாள் ஆஆஆஅ
இது தான் கிழக்கு திசை என்று
இறைவனை வழிபட ஆரமித்தான்.
அரை முட்டாள் நேற்று இந்த பக்கம் தான்னே
இறைவனை வழிபட்டோம், இப்போ என்ன
சூரியன் இந்த பக்கம் இறுக்கு என்று சந்தேகம்
மனதுடன் இறைவனை வழிபட ஆரமித்தான்.
முக்கால் முட்டாள் சூரியனை பார்த்து
இது சூரியனே இல்லை சூரியன் இந்த
பக்கம் தான் உதிக்கும் என்று
கிழக்கு திசை நோக்கி பார்த்துகொண்டு இருந்தான்
அப்போ ஒரு சிகப்பு வண்ணம் காகம் பறந்து
செல்வதை பார்த்து ஆ ஆஅ இது தான் சூரியன்
என்று இறைவனை வழிபட ஆரமித்தான்.
நீதி கருத்து :
நமக்கு முன் வழிகாட்டியாக இருபவர்கள் வழி தவறலாம்.