What is meant by nanneri kathaigal in Tamil?
puthisali kathaigal |
நன்னெறி கதையின் மெய் அர்த்தம் என்பது வாழ்க்கையின் தத்துவத்தையும் அதின் மெய் அர்த்தத்தையும்
நன்மை மற்றும் தீமை ஆகியவைகளை அறிந்து கொள்ள சிறு வயது முதல் சொல்லி தரும் சிறு கதைகள் ஆகும்
அவைகளில் ஒன்று ராஜ்ய சூழ்ச்சி என்னும் கதை .
ராஜ்ய சூழ்ச்சி - puthisali kathaigal
முன்னொரு காலத்தில் நேர்மையான
அரசன் வாழ்ந்து வந்தான்.
அவனது பேரும் புகழும் எல்லை கடந்தது.
அவனுக்கு மிகவும் சிறப்பான
நம்பகத்தன்மையான ஒரு மந்திரி இருந்தான்
அவன் பெயர் மேக லகா.
மேக லகா அரசனிடம் சென்று
அரசே ஒரு இரகசியம் சொல்ல வேண்டும் என்றான்.
அவையில் உள்ளவர்கள் எல்லாரும்
வெளியே சென்றார்கள்.
அரசனும் மேக லகா மட்டும் இருந்தார்கள்.
மேக லகா சொன்ன வார்த்தை என்னவென்றால்.
அரசே பக்கத்து நாட்டின் எல்லையில்
மிக பெரிய அளவில் என்ன முடியா வண்ணம்
புதையல் உள்ளது என்றான்.
உடனே அரசன் ஆ ஆ நல்லது.
உடனே நம் படை வீரர்களை அழைத்து
கொண்டு போய் புதையலை கொண்டு வா.
உடனே மேக லகா சொன்னது.
அரசே பக்கத்துக்கு நாட்டின் அரசன்
மிகவும் பலசாலி அவனது படை வீரர்களின்
எண்ணிக்கை அதிகம் அதனால் ஒரு ராஜ்ய சூழ்ச்சி செய்வோம்.
நாம் இருவர் மட்டும் சென்று இரவோடு இரவாக
அந்த புதையலை கொண்டு வந்து விடுவோம் என்றான்.
இதை கேட்ட அரசன் அருமையான ஆலோசனை.
நாம் செல்வோம் என்று இருவரும் சென்றார்கள்.
பக்கத்து நாட்டின் எல்லையில் வந்து
ராஜா புதையலை தேடி குழி அழமாக தோண்டினான்.
ஆனால் புதையல் இல்லை.
உடனே அரசன் மேக லகாவை அழைத்து
இன்னும் எவ்வளவு குழி தோண்ட வேண்டும் என்றான் .
உடனே மேக லகா போதும் என் அரசனே என்று சொல்லி.
தனது வாலினால் மேக லகா அரசனை குத்தி
கொன்று உடலை அந்த குழில் புதைத்து
ராஜ்யத்தை கைப்பற்றி கொண்டு அரசனாக வாழ்ந்தான்.
நீதி கருத்து:-
சூழ்ச்சி என்பது தூரத்தில் உள்ள எதிரி செய்வது அல்ல.
நம் பக்கத்தில் உள்ளவர்கள் செய்வதுதான் சூழ்ச்சி.
சூழ்ச்சி என்பது ஒருவனுடையை கையின் விரலை கொண்டு
அவன் கண்ணை குத்துவது போல் இருக்கும்-ஆனால்
அது அவனுக்கே தெரியாது.
மேக லகாவின் சூழ்ச்சி அருமையானது.
அரசனை குழி வெட்ட செய்து அந்த குழியில்
அவனை புததைத்து அவனது ராஜ்யத்தை
பெற்று அரசனாக மாறினான்.
சூழ்ச்சி செய்வதில் வல்லவனாக அவன் திகழ்ந்தான்.
அயர்லாந்தின் இளவரசி- puthisali kathaigal
அயர்லாந்தின் இளவரசி- puthisali kathaigal