பேரரசர் சுலைமானின் கதை - tamil story
வெகு காலத்துக்கு முன்னர் டமாஸ்கஸ் நகரை காலிபா மல்லிக் என்பவர் ஆண்டு வந்தார். அவர் அந்நகர: மன்னராகவும் மதத் தலைவராகவும் இருந்து நல்லாட்சி நடத்திக்கொண்டிருந்தார். பார் முழுவதும் அந்தக் காலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த பேரரசர் மார்வான் அவர்களின் மூத்த மகன் மல்லிக் ஆவார். ஒருநாள் பிரமுகர்கள், மந்திரிப் பிரதானியர் சூழப் பேசிக் கொண்டிருந்தார் காலிபா மல்லிக்.
பழங்காலப் புகழ்பெற்ற மன்னர்களைப் பற்றியும், அவர்களின் வீரப் பிரதாபங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த - கேள்விப் பட்டிருந்த பேரரசர்களைப் பற்றியெல்லாம். சொல்லிக் கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களில் தாலிப் என்பவன். பேரரசர் சுலைமானைப் பற்றிக் கூறினார். மகா: சக்கரவர்த்தியாயித் இகழ்ந்த தாவூத் அவர்களின் மகனே: சுலைமான் என்றும், பேரரசர் சுலைமான் ஆண்டவனின்.
அருளைப் பூரணமாகப் பெற்றவர் என்றும், அவருடைய ஆணைக்குப் பூதகணங்கள் கூட ஆட்பட்டிருந்தன என்றும். கூறினார். கதை கேட்கும் ஆவலில் சுலைமான் பூத கணங்களை: அடக்கி ஆண்ட கதையைக் கூறுமாறு சொல்ல, தாலீப். தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான் : பல வருடங்களுக்கு முன் ஒரு கப்பல் சிரலித் இவிற்குப் புறப்பட்டது.
காற்று சாதகமாக வீசவே யாதொரு இடையூறுமின்றி கப்பல் குடலில் இரண்டு நாள். பயணத்தை முடித்தது. மூன்றாம் நாள் மாலையில் திடீரென வானம் சுறுத்தது. பெருமழை பெய்ய ஆரம்பித்தது. காற்று வேகமாக வீசிற்று. சற்று நேரத்தில் காற்று பெரும் புயலாக மாறி கப்பலை நிலை கொள்ளச் செய்யாமல் அலைக்கழித்தது. இடீரென்று வீசிய புயலின் வேகம் தாளாது பாய்மரங்கள் முறிந்து விழுந்தன. கப்பலில் இருந்த பிரயாணிகளும், மாலுமிகளும் உயிருக்குப் போராடினார்கள். பாய்மரம் முறிந்த காரணத்தால் கப்பல். கொந்தளிக்கும் கடலால் ஏதோ ஒரு பக்கம் தள்ளிக்கொண்டு போகப்பட்டது.
ஒரேயடியாக கப்பல். கடலில் மூழ்கிப் போகாமல் எங்கோ தாதுமாறாக மிதந்து:கொண்டு செல்கிறதே என்று பயணிகளும் மாலுமிகளும். ஆறுதல் அடைந்தனர். பெரும் புயல் சற்று ஓய்ந்தது. இரவும் வந்தது; ஆனால் மழை மட்டும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. சுடைசியில் கப்பல் ஒரு இனம் புரியாத இடத்தில் கரை தட்டி நின்றது. மழையாலும் புயலாலும் அவதிப்பட்டவர்கள் தரையைக் கண்டதும் பேரானந்தம். கொண்டனர்.
உயிர் தப்பியதற்காக எல்லாம் வல்ல. அல்லாவை வாயார வாழ்த்தினர். இரவு வேளையானதால் யாரும் கரையிறங்க. முயற்சிக்கவில்லை. இரவுப் பொழுதைக் கப்பலிலேயே அமைதியாகக் கழித்தனர். பொழுது விடிந்தது, கப்பலின் மேல் தளத்திலிருந்து தூரத்தில் தெரியும் கரையை உற்று நோக்கினர். மலைகளும், அடர்ந்த காடுகளும் தெரிந்தன. கப்பல் கரைதட்டியுள்ள. இடம் எது என்று புரியவில்லை. சற்று நேரத்தில் அத் இவுவாசிகள் தரை தட்டி நிற்கும் கப்பலைக் காண கும்பலாய்க் கரையில் சேர்ந்திருப்பதைக். கண்டனர் கப்பலில் இருந்தோர்.
கரையில் இருந்த மக்கள்: முழு நிர்வாணமாய் இருந்தனர். கப்பலில் இருந்தோர் உதவி செய்யுமாறு கைகளை: ஆட்டியும், துணிகளை வீசியும் உரக்கக் கூவினர். கரையில். இருந்த நிர்வாண மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் அவர்களின் மொழி புரியவில்லை. பின்னர். கரையிலிருந்த மக்கள் ஓடிச் சென்று தங்கள் மன்னனை: கடற்கரைக்கு அழைத்து வந்தனர். அந்தப் பிராந்திய மன்னருக்கு அரபு மொழி தெரியுமாதலால், கப்பலிலிருந்து போட்ட கூப்பாட்டைப்: புரிந்து கொண்டார். தன் மக்களை ஏவிக்.கப்பலில் இருந்தவர்களை மீட்டுக் கரைக்குக் கொண்டுவர: ஆணையிட்டார்.
கணநேரத்தில் நூற்றுக்கணக்கான கட்டுமரங்களில் நிர்வாண மக்கள் சுடலில் சென்று சுப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு. வந்தனர். கரைக்கு வந்த பயணிகளையும், மாலுமிகளையும் மன்னர் விசாரித்தார். தங்களின் அவலநிலையை அவர்கள். மன்னரிடம் கூறி, உதலி செய்யுமாறு முறையிட்டனர். மனமிரங்கிய மன்னர், அவர்களைத் தன்னுடன். அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.
சில. நாட்கள் அரண்மனை விருந்தினர்களாக அனைவரும் இருந்து மகிழ்ந்தனர். அரச விருந்தினராய் இருந்த மாலுமிகளில் சிலர், ஒரு நாள் கடற்கரையோரமாய் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு செம்படவன் கட்டுமரத்தின்மிது. நின்றுகொண்டு கடலில் லாவகமாக வலையை வீசுவதைக் கண்டனர். செம்படவனுக்கு இங்கு என்ன விதமான மீன். கிடைக்கிறது! என்பதைக் காண ஆவல் கொண்டு அங்கேயே நின்று வேடிக்கை பார்த்தனர். செம்படவன் கடலில் வீசிய வலையை இழுத்தான், வலையை அப்படியே சுருட்டி எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்து மணலில் வலையை உதறினான். வலையின் மீன் ஒன்றும் இருக்கவில்லை.
ஆனால் ஒரு. வெண்கலக் கூஜா ஒன்று தெறித்து வெளியே வீழ்ந்தது. அதன் வாய்ப்புரம் நன்றாக அடைக்கப்பட்டிருந்தது. மாலுமிகளோ ஆச்சரியப்பட்டனர். ஆனால் செம்படவனோ யாதொரு சலனமும் இன்றி வெண்கலக் கூஜாவை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அருகில் ஒரு பாறை இருந்தது. அதனருகே சென்ற 'செம்படவன் கூஜாவின் வாய்ப்புரத்தை மோதி பாறையில்: அடித்தான். கூஜாவின் மூடி உடைந்தது. கூஜாவின். உள்ளேயிருந்து 'புஸ்ஸென காற்று வெளியே போகும் சப்தம் மட்டுமே கேட்டது. இல வினாடிகளில் வெளியே கிளம்பிய காற்று. புகைபோல வெண்ணிறமாகக் கிளம்பியது. மேலும் சில. வினாடிகளில் வெண்புகை, சரும்புகையாக மாறி பூமிக்கும். வானத்துக்குமாகப் பரவி நின்றது. திகைத்து நின்ற மாலுமிகள் பெரும் புகையைக் கண்டு அஞ்சினர். ஆனால் கூஜாவின் மூடியை உடைத்த. செம்படவனோ ஒரு சலனமும் இன்றி நின்றிருந்தான்.
திடீரென்று யாரோ பெரும் குரலெடுத்துப் பயங்கரமாய் ஓலமிடுவது கேட்டது. அந்தக் குரல். பேரிடியைப் போல் எங்கும் பயங்கரமாய் எதிரொலித்தது. “பேரருள்மிக்க சுலைமான் அவர்களே! எங்களை மன்னித்து விடுதலை வழங்குங்கள். கண் காணாத இடத்துக்கு ஓடிப்போய் விடுகிறோம்” என்று அந்தப் பயங்கரச் சத்தம் புகை மூட்டத்தின் நடுவேயிருந்து வந்து. கொண்டேயிருந்தது. காற்றுக்கு எதிர்த்திசையாக அந்தப் புகை மண்டலம். அலறிக் கொண்டே நகர்ந்து, சற்று நேரத்தில் மறைந்து: போயிற்று: இதையெல்லாம் சட்டை செய்யாமல் நின்று. பார்த்துக் கொண்டிருந்த செம்படவன், ஒன்றுமே நிகழாத. போல உடைந்த வெண்கலக் கூஜாவை எடுத்துக் கொண்டு. நடக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட மாலுமிகள் நேராக அரண்மனைக்கு ஓடி தாங்கள் கண்ட அதிசயத்தை மன்னரிடம் கூறினர்.
மன்னர் புன்னகைத்தார். “மாலுமிகளே, எங்கள் தீவில் இதுசர்வசாதாரண: நித்ய நிகழ்ச்சி.
மாமன்னர் சுலைமான் அவர்களின் ஆட்சிக். காலத்தில் துஷ்ட பூதங்கள் அனைத்தையும் கைது செய்து, ஒவ்வொன்றையும் ஒரு வெண்கலக் கூஜாவில் அடைத்து கூஜாவின் வாயை மந்திர மூடியினால் அடைத்து எல்லாவற்றையும் கடலில் எறிந்து விட்டார். இப்படிப்பட்ட ஏராளமான வெண்கல ஜாடிகள், இறைப்பட்ட பூதங்களுடன் எங்கள் சுடல் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. செம்படவர்களுக்குக் கிடைக்கும் கூஜாக்களை அவர்கள் உடைத்து பூதத்தை வெளியேற்றி விடுகின்றனர். வெளியேறும் பூதங்கள் இன்னும் சுலைமான் மன்னரின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று எண்ணி “மன்னித்தருளுமாறு” வேண்டிக் கொண்டு ஓடி மறைகின்றன." இந்தக் கதையைக் கேட்ட மாலுமிகள் வாயடைத்துப் போயினர். மேலும் சில இனங்களில் கப்பல் பழுதுபார்க்கப். பட்டது; பிரயாணத்துக்குத் தயாராக நின்றது. மாலுமிகளும், பயணிகளும் மன்னரின் உதார: குணத்தைப் புகழ்ந்து அவரை வீழ்ந்து வணங்கினர். ஏராளமான பரிசுகள் மன்னர் வழங்கினார். மூடி உடைபட்டு, முன்பு பூதம் அடைத்து வைக்கப்பட்ட ஒரு வெண்கலக் கூஜாவை ஒரு மாலுமிக்குப் பரிசளித்தார். அனைவரும் கப்பலில் பத்திரமாகத் தாய்நாடு இரும்பினர்.
“பூத கணங்களைக்கூட அடக்கிச் சிறை பிடிக்கும். ஆற்றல் பேரரசர் சுலைமானுக்கு இருந்தது” என்று தாலிப் கூறி முடித்தார். “அந்த வெண்கலக் கூஜாவை நான் பார்க்க முடியுமா?” என்று காலிபா மல்லிக் தாலிப்பைக் கேட்டார். சிலநாள் முயன்று அந்த ஜாடியைப் பரிசாகப் பெற்று. வந்த மாலுமியைக் கண்டு பிடித்து, வெண்கலக் கூஜாவுடன். அவனை காலிபா மல்லிக்கின் அரசவையில் கொண்டு. வந்து நிறுத்தினார் தாலிப். மாலுமியிடமிருந்து மன்னர் அவலாய் மூடி உடைந்த வெண்கலக் கூஜாவை வாங்கிப் பார்த்தார் சித்திர வேலைப். பாடுகள் மிகுந்த உடைந்த, சுலைமான் பேரரசர் காலத்து. கூஜா, காலிப் மல்லிக்கின் மனதைக் கவர்ந்தது.
மாலுமியைப் பார்த்து காலிபா மல்லிக் கேட்டார். “மாலுமியே! மூடி உடையாத, பூதம் அடைக்கப் பட்ட வேறொரு கூஜாவை நீ கொண்டு வரமுடியுமா?” “முடியும்” என்றான் மாலுமி. அந்த மாலுமி வழிகாட்ட மறுநாள் தாலீப்பின் தலைமையில் வெண்கல கூஜாவைத் தேட ஒரு கப்பல். புறப்பட்டது. காலிபா மல்லிக் நினைத்தால் எதுதான். நடைபெறாது! மேற்குக் கடல் பக்கம் இருக்கும் காலிபா மல்லிக்கின் தம்பி அஜீஸுக்கு ஒரு கடிதம் தரப்பட்டது.
தன் தமையனார் காலிபா மல்லிக்கின் கடிதத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்ட அஜீஸ் கடற் பயணத்தில், வல்லவனான மூஸா என்பவனைத் துணையாகவும், வழிகாட்டியாகவும் அனுப்பி வைத்தான். எல்லோரையும். சுமந்து கொண்டு கப்பல் கடலில் கம்பீரமாய் மிதந்து. போய்க்கொண்டிருந்தது. நாற்பத்தைந்து நாட்கள் கடற்பயணம் தொடர்ந்தது. இறுதியில் எகிப்தில் சென்று கரையிறங்கினர். மாமன்னர்.
காலிபா மல்லிக்கின் தூதுவர் தாலீப், எகிப்துக்கு விஜயம் செய்திருக்கிறார். என்றறிந்த எகிப்தின் மன்னர், தக்க. மரியாதையோடு அவரை வரவேற்றார். தாலீப்பை: கெய்ரோவிற்கு அழைத்துச். சென்று விருந்து, கேளிக்கைகள் நடத்தி உபசரித்தார். இரண்டொரு நாட்கள் கழிந்ததும் தாலீப், மன்னர் காலிப் மல்லிக்கின் ஆசையை எகிப்து மன்னரிடம் தெரிவித்தார். மேற்குக் கடற்கரை ஓரங்களில்தான். சுலைமான் காலத்துப் பூதங்கள் அடைபட்டுள்ள வெண்கலக் கூஜாக்கள் கிடைப்பதாக அறிந்திருந்த. எகிப்திய மன்னர். கடற் பயணத்தில் நன்கு தேர்ந்த. வழிகாட்டியான சாமத் என்பவனைத் துணைக்கு அனுப்பி வைத்தார். சாமத் என்பவன் ஒரு கிழவன். அவன் ஏற்கெனவே. மேற்குக் கடலில் நெடுகப் பயணம் செய்தவன். தவிர பூதங்கள் அடங்கிய வெண்கலக் கூஜாக்களையும் கண்டவன். “வெண்கலக் கூஜாக்கள் கடலில் கிடைக்கும்.
இடத்தை அடையவே இரண்டு ஆண்டுகள் ஆகும். வழியில் பேராபத்துக்கள் காத்திருக்கின்றன. திரும்பிவர. மேலும் இரண்டாண்டு காலமாகும்” என்று சாமத் சொன்னான். எப்படியும் காலிப் மல்லிக்கின் எண்ணத்தைப்: பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், எவ்வித. இடையூறு வந்தாலும் வரட்டும்' என்ற வைராக்கிய சித்தத்துடன் தாலீப் அனைவருடனும் கடற்பயணத்தைத் தொடர்ந்தான். தாலீப்பின் சப்பல் யாதொரு இடையூறுமின்றி கடலில் சென்று கொண்டிருந்தது அனுபவசாலியான சாமத் என்ற கிழவன் வழிகாட்டிக் கொண்டு சென்றான்.
பல மாதங்கள் ஆயின. ஏராளமான தீவுகளைக் கண்டனர். அங்கங்கே தங்கி பயணத்தைத் தொடர்ந்தனர். “பின்னர் ஒரு நாள் ஒரு நிலப்பரப்பை அடைந்தனர். அங்கே கூடகோபுரங்களும், மாட மாளிகைகளும் ஏராளமாய் இருந்தன. எனினும் ஆள் நடமாட்டமே இல்லை. சாமத் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒரு பெரிய மாளிகையில் நுழைந்தான். மனித சஞ்சாரமே. இல்லாது வெறிச்சோடிக் கிடந்தது அம் மாளிகை.
அந்த மாளிகையின் சுவரெங்கும் பொன்மொழி களாக எழுதப்பட்டிருந்தன. யாருக்கும் புரியாத மொழியில் எழுதப்பட்டிருந்தது. எனினும் சாமத் அந்த. மொழியை அறிந்திருந்தான். அவன் அனைவருக்கும். அதைப் படித்து விளக்கினான். “ஏ, மூட மனிதனே! உயிர் வாழும்போது எத்தனை: சுகானுபவங்களில் மூழ்கி மகிழ்கிறாய்.
சாவு வரும்போது அலறித் துடிப்பதேன். நிச்சயமில்லாத உயிர் வாழ்வுக்காக ஏன் பொராடுகிறாய்; மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்து கொள்.” மேற்கூறிய வாசகங்கள் சுவரெங்கும் பொன்: எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தன. சாமத் படித்துச் சொல்லக் கேட்ட அனைவரும், உண்மை வாசகங்களைக் கேட்டு மெய் மறந்திருந்தனர். இந்த அரண்மனையில் வாழ்ந்த மன்னாதி. மன்னரெல்லாம் மடிந்து போனாரென்றால் நாம் ஏம்மாத்திரம்' என்று எண்ணினர். மாளிகையின். கம்பீரமான அழகை எல்லோரும் கண்டு களித்து வெளியே வந்தனர்.
சாமத் வழிகாட்ட மாளிகையின் எதிரே இருந்த ஒரு ஒற்றையடிப் பாதையில் அனைவரும் சென்றனர். கொஞ்ச. தூரத்தில் பெரிய வெண்கலச் சிலை ஒன்றைக் கண்டனர். ஒரு குதிரையின் மீது வீரன் அமர்ந்து, கையிலே ஒரு பெரிய வாளை ஏந்தி இருப்பதைப் போன்ற சிலை அது. அந்த வெண்சலச் சிலை வெயிலில் தகதகத்தது. குதிரை: வீரனின் கையில் இருந்த வாள் ஜெகஜோதியாய் மின்னியது. அந்த வாளாயுதத்தின் கைப்பிடியில் என்னமோ: எழுதி இருப்பதை அனைவரும் பார்த்து சாமத்திடம். கூறினர். இழவன் சாமத், அதைப் படித்து அனைவருக்கும். விளக்கினான். “வெண்கல் நகருக்குச் செல்லும் பயணிகளே! உங்களுக்குச் சரியான பாதை தெரியவில்லையா? குதிரைமேல் அமர்ந்திருக்கும் வீரனின் கையைத் தடவி. விடுங்கள்.
வெண்கலக் குதிரை வீரன் பிடத்தோடு மெல்ல அசைவான். ஏதாவது ஒரு பக்கம் திரும்பி நிற்பான். வெண்கல வீரன் திரும்பி நின்று காட்டும் திசையில். சென்றால் சுலபமாக வெண்கல நகரை அடையலாம். இதுவே குதிரை வீரனின் வாளாயுதத்தில். பொறித்திருந்த வாசகம். குதிரை வீரனின் கையைத் தடவிவிடுமாறு மூஸா சொல்ல, கிழவன் சாமத் தடவி விட்டான். கடுகிடுவென்ற சத்தத்துடன் வெண்கலக் குதிரை: வீரச் சிலை கிழக்குப் பக்கமாகத் திரும்பி நின்றது. சிலை காட்டிய வழியே அனைவரும் நடந்து சென்றனர். பல நாட்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர்.
ஒருநாள் அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்த போது ஒரு பயங்கர அலறலைக் கேட்டனர். அருகே சென்று பார்த்தனர். ஒரு பெரிய கல்தூண் நின்றிருந்தது. அதன் உச்சியில் மார்பளவு மட்டும் உள்ள ஒரு மனிதன். நெற்றியில் மூன்று கண்களும், இருபுறமும் இறக்கைகளும். கொண்டிருந்தான். அவன்தான் "ஆண்டவனே! என்னைக் காப்பாற்றுங்கள். என்னை மன்னியுங்கள்” என்று பெரிய குரலெடுத்து ஒலமிட்டுக் கொண்டிருந்தான். மார்பளவு. மட்டும் விசித்திரமனித உருவிலும் மீதி பாகம் கற்றூரணாகவும் இருந்ததைச் கண்டு வியந்தனர்.
ஆகாயத்தை நோக்கியவாறு ஒலமிட்டுக் கொண்டிருந்த அந்த மனிதனைப் பற்றித் தெரிந்து கொள்ள. மஸா விரும்பினார். கிழவன் சாமத்தை நோக்கி சிலை: மனிதனைப் பற்றி விசாரிக்கச் சொன்னான். சாமத் உரக்கக். கூவி சிலை மனிதனை யாரென்று கேட்டான். சாமத் உரக்கக் கூவி கேட்டதும் சிலை மனிதன் தன் வரலாற்றைக் கூற ஆரம்பித்தான். “நண்பர்களே, என் துயரக் கதையைக் கேளுங்கள். நான் ஒரு பூதம். வெகு காலத்துக்கு முன்னர் ஒரு பூத மன்னன் இருந்தான். அவன் பெயர் இல்லீஸ் என்பதாகும். அவனுக்கு ஒரு குமாரன் இருந்தான். அவன் ஒரு சிவப்பு: நிறமான சிலையை வணங்கி வந்தான். அந்த சிவப்பு: சிலையை மற்றொரு மன்னனும் வணங்கி வந்தான். இந்த. இருவரும் சேர்ந்து ஒருமுறை பேரரசர் சுலைமான். அவர்களுக்கு எதிராகக் கிளம்பினர். எங்கள் பூதமன்னருக்கு அழகிய ஒரு மகள்: இருந்தாள். அவள் அழகைக் கேள்விப்பட்ட சுலைமான் அவர்கள் தனக்குத் திருமணம் செய்து தர எங்கள் மன்னரைக் கேட்டுத் தூது அனுப்பியிருந்தார்.
சிலை வணக்கத்தை ஒழித்து, உருவமற்ற எல்லாம் வல்ல ஒரே ஆண்டவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றும் அத்தூதுவன் சொன்னான். இல்லையேல் சுலைமான் படையோடு வந்து அழித்து விடுவார் என்றும். எச்சரித்தான் தூதுவன். குழம்பிப்போன எங்கள் அரசர், தன் சிவப்புச் சலையிடம் ஓடினார். சிலையிடம் முறையிட்டுக் கொண்டு, 'என்ன உத்தரவு தருகிறாய்? என்று: வேண்டினார். அந்த நேரத்தில் நான் மாய உருவில் சிலையில்: புகுந்து கொண்டு, குரலை மாற்றிக் கொண்டு சிலை பேசுவதுபோல, "மன்னனே! கலங்காதே. சுலைமானை நீ வெற்றி கொள்ளுவாய்" என்று கூறினேன். சிலைதான். தனக்கு உத்தரவு கொடுத்தது என்றெண்ணிய மன்னன், சுலைமானின் தூதுவனை சித்திரவதை செய்து அவமானப்படுத்தி அனுப்பி வைத்தான். பூத மன்னன் தூதுவனை அவமானப்படுத்தி அனுப்பியதைக் கண்ட சுலைமான் கோபாவேசங் கொண்டார்.
அவருக்குக் கட்டுப்பட்ட பல பெரும். பூதங்களோடு போர்த் தொடுக்க வந்தார். அவர் படையில். காட்டு மிருசுங்களும் பறவைகளும், மனிதர்களும் இருந்தனர். அந்த படை எப்படி எங்கள் நாட்டில் வந்து இறங்கியது தெரியுமா? அதுவே பெரிய அதிசயம். பெரிய பெரிய ஜமக்காளங்களில் சேனைகள் அமர்ந்திருக்க ஏராளமான பறவைகள் ஜமுக்காளங்களின் ஓரங்களை: அலகால் கெளவிக்கொண்டு வானமார்க்கமாய் வந்து தரையிறங்கின. அப்படி ஒரு ஜமுக்காளத்தில் அமர்ந்தே பறவைகள் சுமந்துவர மாமன்னர் சுலைமான் எங்கள். நாட்டில் வந்து இறங்கினார். வந்ததும் போர் தொடங்கிவிடவில்லை. அப்போதும் எங்கள் மன்னருக்கு அவகாசம். கொடுத்து தீர யோசித்து முடிவெடுக்க வேண்டுகோன். விடுத்தார்.
எங்கள் பூத மன்னன் இருமாப்புடன் பணிய மறுத் தான். பயங்கர யுத்தம் தொடங்கியது. எங்கள் தரப்பினரை: பறவைகளும், காட்டு மிருகங்களும் கோரமாகத் தாக்கி அழித்தன. சுலைமானோடு வந்திருந்த பூதங்கள் மாயா: உருவில் எங்களைச் சின்னாபின்னப்படுத்தின. அந்தக். கொடிய போரில் நானே எங்கள் பூதமன்னனின் சார்பில். சேனாதிபதியாய் இருந்து போரை நடத்தினேன். என்: படைகள் முற்றும் அழிந்தன. நான் மட்டும் உயிர் தப்ப ஆகாயத்தில் தாவிப் பறந்தேன். என்னை விடாது வானமார்க்கத்தில் சுலைமானின் சேனாதிபதி துரத்தி வந்தான். வானத்திலேயே. இருவரும் மூன்று மாதங்கள் கடும் யுத்தம் செய்தோம். இறுதியில் படு காயமுற்ற நான் சோர்ந்து தரையில். விழுந்தேன். விழுந்த என்னைக் கைது செய்து, மாமன்னர்.
சுலைமான் அவர்கள் எதிரிலே சொண்டு போய் நிறுத்தினான் சேனாதிபதி. சுலைமான் அவர்கள் என்னைக் கண்டதும் "கொடிய பூதமே! உன்னால்தானே இந்த யுத்தம் மூண்டது. நீதானே. செப்புச் சிலையில் மாயமாய்ப் புகுந்து என்னை எதிர்க்கச் சொன்னாய். உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கூறி என்னைப் பாதி பூதமாயும், பாதி கல் தூணாகவும் இருக்க சபித்து விட்டார்.
எனக்கு விமோசனம் வேண்டியே, ஆண்டவனை _ நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவே என்னுடைய துர்பாக்கயமான வரலாறு" என்று கல்தூண் மனிதன். கூறினான். மூஸாவும், தாலீப்பும் இந்தப் பூதத்தின் கதையைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர். கிழவன் சாமத்தைக்கூப்பிட்டு, பூதங்கள் அடங்கிய வெண்கல கூஜாக்கள் எங்கே கிடைக்கும் என்பதை கல் பூதத்தைக் கேட்கச் சொல்லினர். சாமத் அதுபற்றி கல்தூணால் சிறைவைக்கப்பட். டிருந்த பூதத்திடம் கேட்டான். “மேற்கே வெகு தொலைவில் கார்கர் என்றொரு கடல் இருக்கிறது. அங்கு மாமன்னர் சுலைமான் போட்ட வெண்கல கூஜாக்கள் ஏராளமாய். இருக்கின்றன.
வெண்கலக் கூஜாக்களில் பூதங்கள் சிறைபட்டுக். கடக்கின்றன" என்று கூறிற்று கல்தூண் பூதம். ஒரு திசையைக் காட்டி, அந்தத் திசையிலே சென்றால்தான் சொன்ன கடலை அடையலாம் என்றும், அதற்குமேல் சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கல்தூண் பூதம் சொல்லிற்று. மூஸாவும், தாலீப்பும், கிழவன் சாமத்தும் அப் பூகத்திற்கு நன்றி செலுத்திவிட்டு, அது காட்டிய வழியே நடந்தனர். பல காத தூரம் நடந்தனர். தூரத்தில் இரண்டு கோபுரங்கள் சூரிய ஒளியில். மின்னிக் கொண்டிருந்தன. அதை நோக்கி நடந்தனர். அருகே சென்றதும் மிகப் பெரிய கோட்டை ஒன்றினைக்: கண்டனர். கோட்டையின் மதிற்சுவர்கள் மிக உயரமாய். கருங்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. அந்தக் கோட்டைக்கு இருபத்து நான்கு வாயில்கள் இருந்தன. அந்த வாயிற் சுதவுகள் எல்லாம் வெண்கலத்தால்: செய்யப்பட்டு மூடப்பட்டிருந்தன.
சாதாரண மனித சக்தி: கொண்டு யாரும் கோட்டைக்குள் சென்று விட முடியாது: கோட்டையின் உள்ளே செல்ல ஏதேனும் வேறு: வழிகள் உள்ளனவா என்று பார்த்துவர தங்களில்: ஒருவனை ஒரு ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினர்.
அவன் இடைவிடாது மூன்று நாட்கள் பயணம் செய்து, பின்னர் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தான் தற்போது இருக்கும் இடமே கோட்டையினுள் பிரவேசிக்கச் சிறந்த இடம் என்றும் கூறினான். மூஸா, தாலிப், சாமத் மூவரும் கூடி ஆலோசித்தனர். ஒரு வழியும் புலப்படவில்லை. பின்னர் அனைவரும். அருகில் உள்ள ஒரு குன்றின் உச்சியில் ஏறி நின்று: கோட்டையை நோக்கினர். கோட்டையின் உள்ளே அழகிய கட்டிடங்களும், மலர்ச் சோலைகளும், அழகிய வீதிகளும் இருக்கக். கண்டனர்.
ஆனால் மனித சஞ்சாரமே காணவில்லை. அதன் எழில் தோற்றம் அனைவரையும் பிரமிப்பில். ஆழ்த்தியது. குன்றின் உச்சியில் சற்று தூரத்தில் ஏழு சலவைக்: கற்களில் ஏதோ எழுதப்பட்டுச் சிதறிக் கிடக்கக் கண்டனர். கோட்டைக் கதவுகளைத் திறக்க அக்கற்களில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை அறிய முற்பட்டனர். அந்தக் சுற்களிலே கீழ்க்கண்ட வாசகங்கள். பொறிக்கப்பட்டிருந்தன. “ஏ, மனித குமாரனே! நீங்கள் எவ்வளவு அசிரத்தையாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால். வாழ்ந்தவர்கள் எல்லாம் எங்கே? அவர்கள் எல்லாம் புதைகுழியில் புதைக்கப்பட்டனர். உனக்கும் ஒரு புதை குழி தயாராக. இருக்கிறது. உனக்குப் பின்னால் உள்ளவன். உன்னைப் புதைக்கப் போகிறான். மன்னாதி மன்னர்களாய் மணிமுடி தரித்தவர்கள். வாள் வீரர்கள், சேனாவீரர்கள், கடவுளை அவமதித்தோர்.
அவர்கள் எல்லாம் எங்கே! மண்ணில் புதைந்து போயினர். நீயும் மண்ணிலே புதைக்கப்படப் போகிறவன்தான். நீ செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப மரணதேவனின். தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். உலகத்தின். எந்த மூலைக்குத் தப்பி ஓடினாலும் மரணதேவன்: உங்களைப் பின் தொடருவான். உங்களை எப்படியும். வீழ்த்தி மண்ணில் புதைத்துவிடுவான் மரணதேவன். பல கற்களில் உள்ள வாசகங்கள் அனைத்தும். இவ்வாறே அமைந்திருந்தன. மூஸா அவர்கள் இந்த வாசகங்களையெல்லாம் காலீப் மல்லிக் அவர்களுக்கு வாசித்துக் காட்ட எழுதிக் கொண்டார். கோட்டைக்குள் செல்ல வழியொன்றும் புலப்படாமல் அனைவரும் குன்றிலிருந்து 8ழிறங்கினர். கோட்டை வாயிலுக்கருகில் ஒன்றுகூடி ஆலோசித்தனர். மிகப் பெரிய ஏணி ஒன்று செய்வதென்றும், அதன் மூலம்.
கோட்டைச் சுவரைத் தாண்டி உள்ளே நுழைவதென்றும். முடிவு செய்தனர். உடனே ஏணி செய்ய முற்பட்டனர். மிகப் பெரிய ஏணி செய்து முடிக்கவே ஒருமாத காலமாயிற்று. அதை ஒழுங்காக கோட்டைச் சுவரின் மீது சாய்த்து நிறுத்த மேலும் பல நாட்கள் ஆயின. இப்போது ஏணி தயாராகிவிட்டது. யார்: தைரியமாய்க் கோட்டைச் சுவரின் மீது ஏறி, உள்ளே. இறங்கி கதவுகளைத் திறப்பது? அவர்களில் ஒரு தைரியசாலி முன் வந்தான். அவன் ஏணி மீதேறி கோட்டைச் சுவரின் மீது ஏறிச் சென்றான். மேலேறியவன்' கோட்டையின் உள்ளே பார்த்தான். பார்த்தவன் உடனே. பைத்தியக்காரன்போலச் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். பைத்தியம் பிடித்து தாறுமாறாக கோட்டைச் சுவரின் மீது: ஓடி இறுதியில் தடுமாறி உள்ளே விழுந்துவிட்டான்.
மீண்டும் ஒருவன் அனுப்பப்பட்டான். அவனுக்கும். அதேசதிதான் ஏற்பட்டது. ஒருவன் பின் ஒருவராகச்சென்று இறுதியில் பைத்தியம் பிடித்து மதிற்சுவரின். மேலிருந்து கோட்டையினுள் வீழ்ந்தனர். இதே முறையில். பன்னிரண்டு பேர் மறைந்து போயினர். மூஸா மிகவும். வருத்தமுற்றான். 'எல்லாம் வல்ல அல்லாவே! இதுதான். உன் சித்தமா?” என்று மனமுருகிப் பிரார்த்தித்தான். இதைக் கேட்ட சாமத், “அன்புமிக்க மூஸா அவர்களே, தாலீத் அவர்களே! எனக்கு விடையளியுங்கள்' நான் வயதானவன். மேலும் திடசித்தம் மிக்கவன். நான். ஏணி வழியாக மதிற்சுவரின் மீது ஏறி, கோட்டையினுள்.
சென்று, கோட்டைக் கதவைத் திறப்பேன்!" என்றான். மிகுந்த திறமைசாலியும், வழிகாட்டியுமான சாமத்: இவ்வாறு கூறக் கேட்டதும் அனைவரும் திடுக்கிட்டனர். உங்களையும் இழக்க நாங்கள் சம்மதிக்கமாட்டோம்' என்றனர். சாமத் கூறுகிறான்: “நான் வயதானவன். திடசித்த முடையவன். எந்த ஒரு நிகழ்ச்சியாலும் உணர்ச்சிவசப் படாதவன். ஆகவே முன்பு சென்றவர்கள் சித்தம் தடுமாறியதைப்போல் நான் சித்தம் தடுமாற விட மாட்டேன்.
அல்லா எனக்குப் பூரண ஆசி வழங்குவார். ஆகவே நண்பர்களே, தைரியமாய் என்னை அனுப்பி. வையுங்கள். நிச்சயமாக நான் சென்று கோட்டைக் கதவைத் திறப்பேன்" அனைவரும் என்ன ஆகுமோ என்ற கவலையோடு சாமத்தை அனுப்பி வைத்தனர். அல்லாவின் இருநாமங்களை ஜெபித்தவாறே. கிழவன் சாமத் ஏணி மீது ஏறினான். கோட்டை மதிலின் மேலும் போய்விட்டான். கோட்டை மதிலின்மேல். போனவன், மற்றவர்களைப் போலவே கோட்டையின் உள்ளே பார்த்தான். என்ன இனிய காட்சிகள்! அவனும். கைகொட்டி, வாய்திறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான். எனினும் கிழவன் சாமத் சமாளித்துக் கொண்டு. மந்திரங்களை ஜெபித்துக் கொண்டான் இடைவிடாமல்: இறைவனின் திருநாமங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது பாடவே ஆரம்பித்து விட்டான். சற்று நேரத்தில் அமைதியாகி விட்டான். கோட்டை மதிலின் மீதிருந்தவாறே மூஸாவை நோக்கி, “அன்பரே! எனக்கொன்றும் ஆகிவிடவில்லை. வெற்றி நமதே, நான் கோட்டைக்குள் இறங்கி கதவைத் இறக்க வழிபார்க்கிறேன்” என்று கூவினான். கோட்டைக்கு வெளியே இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். மதிலின் மீதிருந்த சாமத் நெடுக நடந்து போனான். திடசத்தத்துடன் கோட்டையினுள் என்னதான் இருக்கிறது. என்று குனிந்து பார்த்தான். அலைவீசும் சமுத்திரம் தென்பட்டது.
அலைகளின் மீது தேவமங்கையர்போல் ஏழு: சுன்னியர் நிர்வானமாக நின்றிருந்தனர். சாமத்தை “இங்கே. வா, இங்கேவா?” என்று அழைத்தனர். திடசித்தனான சாமத் அதற்கெல்லாம் மசியவில்லை. முன்பு சென்று மதிலிலிருந்து பைத்தியம் பிடித்து உள்ளே விழுந்து மறைந்து போனவர்கள் அங்கே கடலில் பிணமாய் மிதக்கக். சுண்டான்.
இவையெல்லாம் சாத்தானின் மாய வேலைகள். என்பதை அறிந்தான். இடைவிடாமல் அல்லாவின் திருநாமங்களை: ஜெபித்தவாறே இருந்ததால் சாத்தானின் கைவரிசை: சாமத்திடம் பலிக்கவில்லை. இந்தத் தகவல்களையெல்லாம். கீழிருந்த தாலித்திடமும், மூஸாவிடமும் கூறினான் சாமத். மதிலின் மீது சிறிது தூரம் சென்றதும் இரண்டு காவற் கோபுரங்கள் இருப்பதை சாமத் கண்டான். அவை இரண்டும். வெண்கலத்தாலானவை.
இரண்டு நுழைவாயில்கள் இருக்கக் கண்டான்! நுழைவாயிலின் கதவுகள் மிகுந்த வேலைப்பாட்டுடன் தங்கத்தால். ஆனதாக இருந்தது. எனினும் நுழைவாயிலின் சுதவுகளைத் இறக்க ஒரு உபாயமும் தெரியவில்லை. இகைத்து நின்ற சாமத் ஒரு வழியும் புலப்படாமல்: சில அடிதூரம் நடந்தான். வெண்கலத்தாலான ஒரு குதிரை வீரனின் சிலையைக் கண்டான் சாமத். அந்தச் சிலையின் கைகள். ஏதோ ஒரு திசையைச் சுட்டிக் காட்டுவது போன்று: இருந்தது. நின்று நிதானித்து அந்தச் சிலையை ஆராய்ந்தான் கிழவன் சாமத். அந்த சிலையின் பீடத்தில் எழுத்துக்கள் பொறித்திருப்பதைக் கண்டு ஆவலுடன் படித்தான். “இந்தச் சிலையின் வயிற்றுப் பாகத்தில். உள்ள திருகாணியை பன்னிரண்டுமுறை இருப்பினால் கோட்டைக்கு உள்ளே போகும்.
வழியின் சுதவுகள் திறக்கும்” இதைப் படித்த சாமத் அவ்வாறே விசைத் திருகாணி, யைக் கண்டுபிடித்துத் திருகினான். சிலைக்கு எதிரே இருந்த சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த வெண்கலக் கதவுகள். இரண்டும் பெரும் சப்தத்துடன் திறந்து கொண்டன. இறந்த கதவுகளின் வழியே உள்ளே எட்டிப் பார்த்தான். படிகட்டுகள் கீழ்நோக்கிச் செல்வதைக் கண்டான்.
தைரியமாய் அதில் இறங்கி நடந்து தரைமட்டத்திற்கு வந்து சேர்ந்தான். நிலவறைபோல் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் சாமத். அந்த அறையின் சுவரெங்கும் வாட்களும் வேல்களும், வில்லும் அம்புகளுமாய் தொங்கவிடப்பட்டிருந்தன. மேலும் சுவரோரங்களில்: ஏழெட்டுப் பிணங்கள் கிடந்தன. ஒரு மரப் பலகையின் மேல் ஆடம்பரமான வீரனின். உடல் கிடத்தப்பட்டிருந்தது. இறந்து கடக்கும் அவனே காவல் தலைவனாய் இருப்பான் என்பதை பூகித்தறிந்தான். சாமத். ஒருகால் கோட்டைக் கதவுகளின் சாவி அவனிட மிருந்தாலும் இருக்கலாம் என்றெண்ணி அந்தச் சடலத்தைச் சோதனையிட்டான். அவன் நினைத்தவாறே சாவிக் கொத்தை அவன் இடுப்புக் சச்சையிலிருந்து. எடுத்தான். சாமத்துக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 'வெற்றி, வெற்றி என்று தனக்குத்தானே முனகிக் கொண்டான். கிடைத்த சாவிகளைக் கொண்டு கோட்டைக் கதவுகளைத் திறந்தான்.
பேரொலி எழுப்பியவாறு அந்த. விசைக் கதவுகள் திறந்து கொண்டன. கோட்டைக்கு வெளியே காத்திருந்த தாலீத்தும். மூஸாவும் அவர்கள் பரிவாரங்களும் மகிழ்ச்சியுடன். கோட்டையினுள் பிரவேசித்தனர். தைரியத்துடனும், இடசத்தத்துடனும் செயலாற்றி, கோட்டைக் கதவுகளைத். இறந்துவிட்ட சாமத்தை மார்புறத் தழுவிக் கொண்டான். மூஸா. அனைவரும் கிழவன் சாமத்தின் தைரியத்தை: மெச்சிப் பாராட்டினர். அனைவரும் கோட்டையினுள் நுழைந்தனர் வழியிலேயே பாதி பேரை நிறுத்திவிட்டான் மூஸா. ஏனெனில் முன்னால் செல்லும் கோஷ்டிக்கு உயிர். அபாயம் நேர்ந்தால் மற்றவர்களது உயிர் தப்பி. வெளியுலகத்துக்குச் சென்று உதவி கொண்டுவரட்டுமே: என்ற எண்ணம்தான். தாவீத்தும் மற்றும் சிலரும். கோட்டை வாயிலருகேயே நின்றுவிட்டனர்.
மூஸாவும், சாமத்தும் வேறு பலரை அழைத்துக்
கொண்டு கோட்டையினுள் நுழைந்தனர்.
கோட்டையின் உள்ளே எங்கும் மனிதர்கள் இறந்து
கடந்தனர். எல்லாம் போட்டது போட்டபடியே கிடந்தன.
அருகில் ஒரு பெரிய கடைத் தெருவைக் கண்டனர்.
கடைகள் எல்லாம் திறந்தேயிருந்தன. ஆனால் கடையில்:
இருந்தவர்கள் இருந்த நிலையிலேயே மடிந்து
போயிருந்தனர்.
பெரியதொரு மாளிகையை அடைந்தனர். அந்த
மாளிகையின் வாயிலிலே சலவைக் கல்லில் 8ழ்க் கண்ட
வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
“ஓ மூட மனிதனே! உலகத்தில் உன்ன பொருள்
அனைத்தும் உனதென்று நினையாதே, வழியில்
பார்த்திருப்பாயே! இங்குள்ள மனிதர்கள்
எவ்வளவு பொன்னும் பொருளும் வைத்திருந்தும்.
மடிந்து கிடக்கிறார்கள் அல்லவா? உன்னையும்.
மரண தேவன் துரத்திக்கொண்டு வருகிறான்
என்பதை மறந்துவிடாதே! பொன்னும் போகமும்
சதமல்ல என்பதை உணர்ந்துகொள்!”
இதைப் படித்த மூஸாவின் கண்களில் தாரையாகக்
கண்ணீர் பெருகிற்று.
வெண்கலக் கோட்டையெங்கும் முத்தும், மணியும்
நவரத்தினங்களும் குவிந்து கிடந்தன. மேலும் உள்ளே
சென்றனர். மிகப் பெரிய கூடம் ஒன்றினைக் கண்டனர்.
அதன் முடிவில் மிகவும் சித்திர வேலைப்பாடமைந்த ஒரு.
வாயிலையும் அதன் மூடிய சுதவுகளையும் கண்டனர்.
அந்தக் கதவுகள் மூடியிருந்தன. திறப்பதற்கு
யாதொரு உபாயமும் புலப்படவில்லை. சாதுர்ய
புத்திபடைத்த கிழவன் சாமத், தன் யுக்தியினால் தந்திர
விசையமைந்த அக் கதவுகளைத் திறந்துவிட்டான்.
அங்கே உள்ளே வெள்ளியாலான ஆசனங்கள் பல இருந்தன. அவற்றுக்கு மத்தியில் பொன்னில், நவரத்தினங்கள் இழக்கப்பட்ட அதி அற்புதமான ஒரு ஆசனத்தைக் கண்டனர். அந்த ஆசனத்தில் பேரழகி ஒருத்தி அமர்ந்திருக்கக் கண்டு அதிசயித்தனர். அருகில். சென்று பார்க்க, அவளும் இருந்தது இருந்தபடியே இறந்து கிடந்தான். அந்தப் பிணத்தின் அருகே தங்கத் தகடு ஒன்று. இருக்கக் கண்டனர். அதில் ஐழ்க்கண்டவாறு: பொறித்திருந்தது.
அதிலே அப்பேரழகியின் வரலாறு: எழுதப்பட்டி ருந்தது. “நான் பேரரசர் ஹாசனின் மகள். என் பெயர் தெட்மூர். நான் இந்நாட்டின் அரசி, தர்மநீதி தவறாமல்தான் அரசாண்டேன். ஒரு காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தானியங்கள் கிடைக்காமல் மக்கள் ஆட்டையும். மாட்டையும் வெட்டித் தின்றனர். அவையும் தீர்ந்தன. வேறு வழியில்லாது அனைவரும் உள்ளது உள்ளபடியே இருக்கப்பட்டினியினால் மரண தேவனின் பிடியில் சிக்கினோம். சந்தர்ப்ப வசத்தால் யாரேனும் மனிதர்கள் உள்ளே வந்தால். கடக்கும் பொருள்கள் அனைத்தையும் கொண்டு போகலாம். ஆனால் இறந்து கிடக்கும் சடலங்களின் மேல் உள்ள நகைகளை மட்டும் தொடாதீர்கள்!” இந்த வாசகங்களை மூஸா படித்தார். 'உடலும். உயிரும் சதமல்ல.
பொன்னும் பொருளும் சாகும் போது கூட வராது' என்று கூறியவாறு எல்லாம் வல்ல அல்லாவை நினைத்து ஜெபிக்க ஆரம்பித்துவிட்டார். சற்று நேரத்தில் தெளிந்த மூஸா ஏராளமான பொருள்களைச் சேர்த்து மூட்டை கட்டினார். கோட்டை வாயிலில் காத்திருந்த தாலீத்தையும் அவர்: பரிவாரங்களையும் உள்ளே அழைத்து வந்தார். மூட்டை: மூட்டையாய் கட்டிய செல்வங்களோடு அனைவரும். வெண்கலக் கோட்டைக்கு வெளியே வந்தனர். அண்டை அலலிலிருந்து முந்நூறு ஒட்டகங்கள். கொண்டு வரப்பட்டு, மூட்டைகளாகக் கட்டிய செல்வமனைத்தையும் பொதிகளாக ஏற்றப்பட்டன. சமுத்திரக் கரையோரமாக அனைவரும் ஒட்டகங்களுடன் வந்து கொண்டிருந்தனர். வழியிலே ஒரு சிறிய குன்றினைக் கண்டனர். ஆணும். பெண்ணும் குழந்தைகளுமாய் மனிதர்கள் காணப் பட்டனர். ஆனால் அனைவரும் முழு நிர்வாணம். கூட்டமாய் வருவதைக் கண்ட குன்றுவாசிகள். பயந்து ஓடி புதர்களில் ஒளிய ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்களில் ஒரு யெளவனப் பெண் மட்டும் சிறிதும். அஞ்சாமலும் கூச்சமில்லாமலும் முழு நிர்வாணமாய். அவர்கள் எதிரே வந்து நின்று “நீங்கள் யார்? இங்கு ஏன்: வந்தீர்கள்” என்று கொச்சை மொழியில் கேட்டாள். ஆச்சரியப்பட்ட கிழவன் சாமத் “பெண்ணே, எங்கள். மொழி உனக்கு எப்படித் தெரியும். ஆடை உடுத்தவே. அறியாத நீ எப்படி. எங்கள் மொழியைக் கற்றாய்?” என்று. கேட்டார். அதற்கு அந்தப் பெண் பதில் சொன்னாள். "இந்தக் கடலில் ஒரு தனிப் படகில் மாதந்தோறும் ஒரு போதகர். வருகிறார்.
அவர் இறைவன் ஒருவனே என்றும், அவனுக்கு. உருவே கிடையாதென்றும் போதிக்கிறார். அவர்தான் எங்களுக்குப் பேசும் இந்த மொழியைக் கற்றுத் தந்தார்" என்று கூறினாள்.
பின்னர். “நீங்கள் ஏன் இங்கு கூட்டமாய் வந்திருக்கிறீர்கள்” என்றான். மூஸா பதில் சொன்னாள்: “பொண்ணே, மன்னருக்கெல்லாம் மன்னராய் விளங்கிய சுலைமான். காலத்தில் பூதங்களைச் சிறைப்படுத்தி, வெண்கலக்: கூஜாக்களில் அடைத்து மூடியிட்டு இந்தக் கடலில்: எறிந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம். அந்த வெண்கலக் கூஜாக்களைத் தேடியே இங்கே வந்தோம்" பயம் தெளிந்த அந்த நிர்வாணப் பெண், தன். கூட்டத்தாரைக் கூலி அழைத்தாள். அனைவரும் ஓடிவந்தனர். “கடலில் கண்டெடுத்த வெண்கலக் கூஜாக்களைக் கொண்டு வாருங்கள்" என்று ஆணையிட்டாள். அவளே அக்கூட்டத்தின் தலைவி போலும். சற்று நேரத்தில் பன்னிரண்டு புராதன வெண்கலக். கூஜாக்களைக் கொண்டு வந்தனர்.
அவைகளை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள் தலைவி. தாலீத், மூஸா, சாமத் மூவரும் மிகவும் நன்றி. தெரிவித்து அந்த வெண்கலக் கூஜாக்களைப் பெற்றுக் கொண்டனர். பதிலுக்குத் தங்கள் ஒட்டகங்களின் மீது. ஏற்றிக் கொண்டு வந்திருந்த மூட்டைகளில், உடைகள். அடங்கிய மூட்டைகளைக் கொண்டு வரச் செய்து, அவிழ்த்து ஆடைகளை அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்து, அவைகளை உடுத்துக். கொள்ளும் முறைகளையும் சற்றுத் தந்தனர். பின்னர் குன்றுவாசிகள் அளித்த விருந்தை உண்டு. மகிழ்ந்து அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நாடு. இரும்பின். ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்து தங்கள். நாட்டை அடைந்தனர்.
பேரரசர் காலிபா மல்லிக் அவர்கள் ஆணையின்படி கொண்டு வந்த பூதங்கள் அடைக்கப்பட்ட வெண்கலக். கூஜாக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பேரரசர் மனமகிழ்ந்தார். ஒவ்வொரு கூஜாவாகக் கழுத்தினை உடைத்தார். உள்ளிருந்து வெளிவந்த பூதங்கள், “மன்னிக்க வேண்டும். எங்களை விடுதலை செய்யுங்கள்” என்று கூறியவாறு வெளிப்பட்டு ஓடின. காலிபா மல்லிக் அவர்கள், பல வருடங்கள் பயணம் செய்து பூதங்கள் அடைக்கப்பட்ட வெண்கலக் கூஜாக்களைக் கொண்டு வந்த தாலீத், மூஸா, கிழவன். சாமத் ஆகியோருக்கு பெரும் அளவில் பரிசளித்தார். பொழுது விடியும் நேரம் நெருங்கவே கதையைக் கூறி முடித்த பேரழகி ஷாரஜாத் எழுந்து, தன் கணவர் ஷாரியர்' அவர்களை மும்முறை முடிதாழ்ந்து, தரையளவு குனிந்து வணங்கி "அன்பரே உத்தரவிட்டால் நாளைய தினம்: புதியதொரு கதையைச் கூறுகிறேன்" என்றான். கம்பீரமே உருவமாய் அமைந்த பேரரசன் ஷாரியர், “அப்படியே ஆகட்டும்' என்று உத்தரவிட்டு அந்தப்புரம். விட்டு, அரண்மனை நோக்கி நடந்தார். இப்படியே கதை சொல்லிச் சொல்லி பல நூற்றுக்கணக்கான இரவுகளைக் குழித்துவிட்டாள். ஷாரஜாத் அதற்குள் அவளுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன.