நான்கு திருடர்கள் வளர்த்த ஒரு பூனை - Tamil story
puthisali kathaigal |
அவர்கள் பெயர் கால் திருடன், அறை திருடன்
முக்கா திருடன் மற்றும் முழு திருடன்.
நான்கு திருடர்கள்ளும் சேர்ந்து ஒன்றாய் திருடுவார்கள்.
அவர்கள் வசிக்க ஒரு சிறு வீடு உண்டு.
ஒரு நாள் அந்த நான்கு திருடர்களும் இனி நாம்
திருடகூடாது நேர்மையாக வாழ்வோம் என்று சொல்லி
ஒரு பஞ்சு வியாபாரம் செய்தார்கள்.
அவர்கள் நாலுபேருக்கும் செல்லமாக ஒரு பூனை இருந்தது.
முழு திருடன் பேச ஆரமித்து நாம் எல்லாரும்
இந்த ஒரு பூனையை வளர்கின்றோம்.
நாம் நான்கு பேரும் பூனையின் நான்கு காலில்
ஒன்றை நாம் எடுத்து கொள்வோம் என்று சொல்லி
முன் இடது காலை கால் திருடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முன் வலது காலை அறை திருடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின் இடது காலை முக்கா திருடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின் வலது காலை முழு திருடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
என்று சொல்லி அந்த பூனையை அன்பாக வளர்த்தார்கள்.
பஞ்சு எல்லாம் நெருப்பு - puthisali kathaigal
ஒரு நாள் பூனையின் முன் இடது காலில் அடிபட்டுவிட்டது.
உடனே அந்த காலுக்கு சொந்தக்காரன் கால் திருடன்
உடனே அந்த காலுக்கு சொந்தக்காரன் கால் திருடன்
வந்து அந்த காலின் காயத்தை ஒரு துணியினால் கட்டிவிட்டான்.
பூனை அங்கும் இங்கும் ஓடையில் அங்கு உள்ள
விளக்கில் பூனையின் காலில் காயத்தில் கட்டிவிட்ட
துணியில் தீ பற்றிக்கொண்டது.
பூனை பயந்து பஞ்சு இருக்கும் இடத்தில் தாவினது
உடனே நெருப்பு அந்த பஞ்சு மேல் பட்டு எரிந்து
எல்லாம் சாம்பலாக மாறினது.
மூன்று திருடர்களும் ஓன்று கூடி கால்
திருடனிடம் நஷ்டம் கேட்டு அவனிடம் சண்டை போட்டார்கள்.
கால் திருடன் என்ன செய்வது என்று தெரியாமல்
அங்கு உள்ள நேர்மையான நீதிபதியிடம் சென்றான்.
நீதிபதி எல்லாவற்றையும் கேட்டு
அவர் சொன்ன தீர்ப்பு நீங்கள் மூன்று
பேரும் சேர்ந்து கால் திருடனுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றான்.
இதை கேட்ட மூன்று பேரும் ஐயா அவனுடைய பூனையின் முன் இடது காலில் அடிபட்டு
துணி கட்டிவிட்டத்தினால் அல்லவா இந்த பிரச்சனை
அதனால் அவன் தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றான்.
உடனே நீதிபதி அடிபட்ட காலில் பூனை நடந்து செல்லாது
மீதமுள்ள மூன்று காலில் நடந்து தாவி
பஞ்சு இருக்கும் இடத்தில் பூனை சென்றது.
அதனால் நீங்கள் தான் கால் திருடனுக்கு
நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றான்.
இந்த வார்த்தையை கேட்ட நான்கு பேரும்
சமாதானத்துடன் அங்கு இருந்து கலைந்து சென்றார்கள்.