காதல் பித்தன் - புத்திசாலி கதைகள்
காதல் பித்தன் கதை - puthisali kathaigal
puthisali kathaigal |
அரசருக்கெல்லாம் அரசராய் விளங்கிய ஹருன் ரஷீத் மன்னர் தூக்கம் வராமல் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தார். அந்தப்புரமும், அழகிய பெண்களும் அவருக்குக் கசந்தன. பொழுது போக்குக்காக மந்திரியை அழைத்து ஏதேனும் புதிய கதை கூறுமாறு மன்னர் கேட்டார். (puthisali kathaigal)
அந்த நேரத்தில் அரசரைக் காண அலிமன்சூர் என்பவன் வந்திருப்பதாகச் சேவகன் அறிவித்தான். அதைக் கேட்ட மன்னர் மகிழ்ச்சியுடன் அவிமன்குரை அழைத்து வர உத்தர விட்டான். அலிமன்சூர் கதைகள் சொல்வதில் தேர்ந்தவன். இதை அறிந்திருந்த மந்திரி “மன்னரே! அலிமன்சூர் என்னை விடக் கதை சொல்வதில் வல்லவன் அவனையே கதை சொல்லக் கேட்போம் என்றார்.
உள்ளே வந்த மன்சூர் அரசரை மும்முறை தரையளவு தாழ்ந்து வணங்கி நின்றான். அரசர் அவனை ஓர் ஆசனத்தில் அமரச் சொன்னார். “அவலிமன்சூர், இவ்விரீவு எமக்குத் தூக்கம் வரவில்லை, பொழுது கழிய அற்புதமான கதை ஒன்று சொல்லவேண்டும்” என்று ஆணையிட்டார் மன்னர். மன்னர் உத்தரவுக்கிணங்க அலிமன்சூர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றையே கதையாகக் கூறினான். பாஸ்ரா நகரத்து மன்னர் முகமதுவை நான் வருடத்திற்கு ஒருமுறை சென்று காண்பது வழக்கம்.
அதன்படி ஒரு வருடம் நான் பாஸ்ரா நகர் அடைந்தேன். நான் சென்ற சமயம் அரசர் முகமது பரிவாரங்களுடன் வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். என்னைக் கண்ட அவர் மகிழ்ந்து என்னையும் வேட்டைக்குத் தன்னுடன் வருமாறு அழைத்தார். நீண்ட வழிப்பயண அலுப்பால் சோர்வுற்றிருந்த நான் வேட்டைக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. அதைக்கேட்ட மன்னர் “அப்படியானால் வேட்டையிலிந்து திரும்பி வரும் வரை அரண்மனையிலேயே தங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்”. என்று கூறி என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்படி அரண்மனை சேவர்களிடம் உத்தரவிட்டு வேட்டைக்குச் சென்றுவிட்டார்.
நான் எத்தனையோ முறை பாஸ்ரா நகரம் சென்றிருக்கிறேன். அரண்மனையையும் நந்தவனத்தையும் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை. அழகிய பாஸ்ரா நகரை சுற்றிப் பார்க்க ஆவல் கொண்டு கிளம்பினேன். பாஸ்ரா நகரம் அகன்ற எழுபது வீதிகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு வீதியும் இருபுறமும் மாட மாளிகைகள் நிறைந்து அந்த நகருக்கு எழிலூட்டின.
நான் ஒவ்வொரு வீதியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன் வீதியும் ஒன்றைப் போலவே மற்றொன்றும் இருந்ததால் வந்தவழி அறியாது திகைத்துக் கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தேன். வழியில் களைத்திருந்த நான் ஒரு மாளிகையின் முன் நின்றேன். அந்த மாளிகையிலிருந்து நெஞ்சை உலுக்கும் சோக கீதம் ஒரு பெண்ணால் இசைக்கப்பெற்று காற்றில் தவழ்ந்து வந்துகொண்டிருந் தது. கேட்போர் நெஞ்சை உருக வைக்கும் சோகப் பாடல் அது. யாரோ ஒருத்தி உள்ளே பாடிக்கொண்டிருந்தாள். இசையால் ஈர்க்கப்பட்ட நான் அந்த மாளிகையினுள் நுழைந்தேன். அழகிய ஓர் இளம் பெண் பாடிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் திடுக்கிட்ட அப்பெண் பாடும் பாட்டை நிறுத்திவிட்டு, “யாரய்யா நீ? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள்.
நானும் மழுப்பியவாறே எனக்குத் தாகமாக இருக்கிறது சிறிது தண்ணீர் தாருங்கள் என்றேன். அவள் அருகிலிருந்த அடிமைப் பெண்ணை அழைத்துத் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்குமாறு கூறினாள். அந்த அடிமைப் பெண் தங்கக் கூஜாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். நானும் அதைப் பருகிய வண்ணம் அங்கேயே நின்றிருந்தேன்.
காதல் பித்தன் கதை - puthisali kathaigal
என்னை பார்த்த அப் பெண் ஏன் நிற்கிறீர்கள். தங்களுக்கு மேலும் என்ன வேண்டும் என்று கேட்டாள். நீ இவ்வளவு நேரம் மனமுருகிச் சோக கீதம் பாடிக்கொண்டிருந்தாயே அதன் காரணத்தை அறிய நினைக்கிறேன் என்றேன். அவள் தலை தாழ்த்திக்கொண்டு
என் கதையைக் கேட்டு உங்களால் என்ன செய்ய முடியும் என்று வினவினாள். “மகளே! என்னால் ஆன எல்லா உதவியையும் செய்வேன். தயக்கமின்றிக் கூறு” என்றேன்.
அவள் பாஸ்ரா நகரத்து பிரபல நகை வியாபாரியின் ஒரே மகள் என்றும் அந் நகரத்து அழகுமிக்க ஜீபேர் என்பவனைக் காதலித்ததாகவும் கூறினாள். ஒருநாள் தன்னைத் தன் வீட்டு வயது முதிர்ந்த வேலைக்காரி ஒருத்தி அன்புடன் முத்தமிடுவதை அவன் பார்த்ததாகவும் அன்றுமுதல் தன் காதலன் ஜிபேர் தன்னைச் சந்திக்க வருவதில்லை என்றும் கூறி கண்ணீர் உதிர்த்தாள் பின்னர் தான் ஒரு கடிதம் தருவதாகவும் அதைத் தன் காதலர் ஜீபேரிடம் கொடுக்கும்படியும் அப்படி கொடுத்துப் பதில் வாங்கி வந்தால் 500 தினார்கள் எனக்குக் கொடுப்பதாகவும் கூறினாள்.
அவளிடம் கடிதம் எழுதிவாங்கிக்கொண்டு ஜீபேரின் வீட்டைத் தேடிச் சென்றேன். அவன் வீடு சென்றிருந்த போதுதான் வேட்டையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தான். வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்ததும் உபசரித்து உள்ளே அழைத்துச் சென்றான். என்னை உணவருந்தச் செய்து பின்னர் வந்த காரியத்தைப் பற்றி கேட்டான். நானும் கூறினேன்.
கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்தான். படித்ததும் அதைக் கிழித்தெறிந்து விட்டான். இந்தக் கடிதத்தைக் கொடுத்து என்னிடமிருந்து பதில் வாங்கிவந்தால் உங்களுக்கு 500 தினார்கள் பரிசு அளிப்பதாக அவள் கூறியிருப்பாள் என்பதை நான் அறிவேன். நான் உங்களுக்கு 500 தினார்கள் பரிசாகத் தருகிறேன். இந்தக் கடிதத்திற்கு நான் பதிலெழுதித் தரமாட்டேன். நான் தரும் பணத்தோடு நீங்கள் வந்தவழியே சென்றுவிடுங்கள் என்று கூறினான். சற்று நேரத்தில் என்னிடம் 500 தினார்களைக் கொடுத்து என்னை அனுப்பி விட்டான்.
நான் மனம்பொறாது அந்த பூதூர் என்ற நகை வியாபாரியின் மகளிடம் சென்றேன். அவள் என்னைப் பார்த்து நகைத்து, “நீங்கள் பதில் வாங்கி வந்திருக்க முடியாது. அதற்குப் பதிலாக உங்களுக்கு 300 தினார்கள் அவரே பரிசு அளித்து உங்களை வெளியே அனுப்பி யிருப்பாரே என்று கூறினார். நானும் ஆச்சரியத்துடன் ஆமாம்” என்றேன்.
இந்த விஷயம் உனக்கெப்படி தெரியும் என்று அந்தப் பெண்ணைக் கேட்டேன். அவள் “என் காதலனைப் பற்றி எனக்குத்தான் தெரியும்' என்று கூறினாள். நானும் வழி விசாரித்துக் கொண்டு அரண்மனையை அடைந்தேன். மன்னரும் வேட்டையி லிருந்து திரும்பி வந்திருந்தார். சிலநாள்கள் தங்கியிருந்த பின் ஊர் திரும்பிவிட்டேன்.
மீண்டும் அடுத்த வருடம் பாஸ்ரா நகருக்குச் சென்றேன். அந்தப் பெண் என்ன ஆனாள் என்று பார்க்கலாம் என்ற ஆவலில் அரண்மனையை விட்டு வெளியே கிளம்பி அவள் வசித்த வீட்டை நோக்கி நடந்தேன். அவள் இருந்த வீடு, நிலைக் கதவு பிடுங்கப் பட்டு அலங்கோலமாய்க் கிடந்தது. ஒருகால் அந்தப் பெண் செத்துப் போய் இருக்கவேண்டும் என்று நினைத்து அவள் காதலன் வீட்டை அடைந்தேன். அந்த வீடும் அலங்கோல நிலையில் காட்சி அளித்தது.
என்னுடைய மனம் அவர்கள் இருவருக்குமாக இரங்கிக் கலங்கியது. என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன். அந்தப் பாழடைந்த வீட்டினுள் இருந்து அடிமை ஒருவன் வெளியே வந்தான். அவனை விசாரித்தேன். ஜீபேோர் காதல் பித்தனாகி ஊளண் உறக்கமின்றி இந்தப் பாழடைந்த வீட்டினுள்ளே அடைந்து கிடப்பதாகக் கூறினான். அந்த பாழடைந்த வீட்டினுள் சென்று பார்த்தேன். ஜீபேர் நினைவு தப்பி விழுந்து கிடந்தான். அவன் முகத்தில் குளிர்ந்த நீர் தெளித்து.
அவனைச் சுயநினைவு பெறச்செய்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டான். என் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான். தான் ஒரு கடிதம் எழுதித் தருவதாகவும் அதைத் தன் காதலி பூதூரிடம் சேர்க்கும்படியும் மன்றாடினான். நானும் சம்மதித்தேன்.
தான் முன்னர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்கு எல்லாம் மன்னிப்புக் கூறி, கண்ணால் பார்ப்பதற்கேனும் ஒருமுறை அனுமதி அளிக்குமாறும் காதற் கடிதம் ஒன்று எழுதித் தன் அன்புக் காதலியிடம் கொடுக்குமாறு கெஞ்சினான். நானும் சம்மதித்துக் கடிதத்துடன் அவளைத் தேடிச் சென்றேன். நிலைக் கதவு பிடுங்கப்பட்டு பாழடைந்து போயிருந்த அவளது மாளிகையினுள் நுழைந்து பார்த்தேன்.
உள்ளே ஓர் அறையில் முகம் சோர்ந்து படுத்துக்கிடந்த அவளைக் கண்டு அக்கடிதத்தைக் கொடுத்து அவள் காதலனின் நிலைமையை எடுத்துச் சொன்னேன். கடிதத்தைப் படித்ததும் அவள் கண்ணீர் உதிர்த்தாள். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய என் காதலனை நான் பார்க்க விரும்பவில்லை. அவனுடைய பேராசையும், கோழைத் தனமும் இன்னும் எத்தனை நாள்கள் நீடித்திருக்கும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் எடுத்துக்கூறி என்னைத் திருத்தியிருக்கலாமே. கல்நெஞ்சக்காரனான என் காதலனை நான் காண விரும்பவில்லை. அவனும் அப்படியே செத்துப்போகட்டும். நானும் இறந்து போகிறேன் என்று கூறித் துக்கம் தாளாது விம்மிவிம்மி அழுதாள்.
நான் பலவாறாக அவளுக்கு ஆறுதல் கூறி அவள் மனத்தைத் தேற்றி அவளைச் சந்திக்க ஒப்புதல் கடிதம் அவள் கையாலேயே எழுதி வாங்கிக் கொண்டு ஜீபேரைக் காண ஓடோடிச் சென்றேன்.
கடிதத்தைக் கண்ட ஜிபோர் நோய்வாய்ப் பட்டிருந்தும் துள்ளி எழுந்தோடி வந்து எனக்கு நன்றி கூறினான். கடிதத்தை வாங்கிக் கொண்டு இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டு படிக்க ஆரம்பித்தான். அவன் பாதி படித்துக் கொண்டிருக்கும் போதே அவன் காதலி பூதூர் அவ்விடம் பாய்ந்தோடி வந்தாள்.
காதலர் இருவரும் ஆனந்த மிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துச் கொண்டனர். நான் அங்கிருந்து மெல்ல நலுவினேன். அரண்மனை சென்ற நான் பாஸ்ரா மன்னரிடம் உண்மைக் காதலரின் வரலாற்றை எடுத்துச் சொன்னேன். மன்னரும் மனம் மகிழ்ந்து காதலர் இருவரையும் அழைத்து வந்து அரண்மனையிலேயே கோலாகலமாய்த் திருமணம் நடத்தி வைத்தார். (puthisali kathaigal)
தம்பதிகளுக்கு ஏராளமான பரிசுகளும் வழங்கினார். அவர்கள் இன்ப வாழ்க்கை நடத்தினர். இவ்வாறு அலிமன்சூர் கதையை மன்னர் ஹருன் ரஷித்திடம் கூறி முடித்தாள்.