அழகிய இளம் அடிமைப் பெண் - puthisali kathaigal
வெகு காலத்துக்கு முன்னர் கூராஸான் நாட்டில் மஜ்ஜுத்தீன் எனும் பெயருடன் ஒரு வியாபாரி இருந்தான். அவனுக்கு அறுபது வயதாகும்போதுதான் ஒரு மகன் பிறந்தான். தன் கடைசி காலத்தில் பிறந்த குழந்தை யாதலால் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்தான். குழந்தைக்கு அலிஷேத் என்று பெயர் வைத்தான் வியாபாரி மஜ்ஜுத்தீன். (puthisali kathaigal)
குழந்தை வளர்ந்து பெரியவனானான். வாலிபப் பருவமடைந்த அவன் பேரழகனாகத் திகழ்ந்தான். அந்த நேரத்தில் மஜ்ஜுத்தீன் நோய்வாய்ப்பட்டான். தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்பதையறிந்து தன் மகனை அருகழைத்து, “மகனே! நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொள். நான் சொல்கிறபடி நீ நடந்தால் வாழ்க்கையில் மேன்மையடைவாய்” என்று சொன்னான்.
“நீங்கள் சொல்கிறபடி நடக்கிறேன்'' என்று ஆணையிட்டுக் கூறினான் மஜ்ஜுத்தீனின் மகன் அலிஷேர்.
“மகனே! என்றும் ஆண்டவனைத் தொழு. அவருக்கு மிஞ்சிய சக்தி உலகில் இல்லை. பிறருக்கு உதவி செய்; கெட்டவர்களுடன் சேராதே; குடிக்காதே; பெரியோரிடம் மரியாதையாக நடந்து கொள்: இதுவே நான் உனக்கு இறுதியாகச் சொல்வது” என்று கூறினார் மஜ்ஜுத்தீன். சற்று நேரத்தில் மஜ்ஜுத்தீன் இறந்து போனார்.
அலிவஷேர் முறைப்படி தகப்பனை அடக்கம் செய்தான். மாதங்கள் உருண்டோடின சாகும் தருவாயில் தன் தந்தை போதித்தபடியே நடந்து வந்தான். நாளடைவில் தீயோர் நட்பு அலிஷேருக்கு ஏற்பட்டது. மதுவிலும், காமசேஷ்டைகளிலுமாக தன் செல்வத்தைச் செலவழிக்க ஆரம்பித்தான். ஒன்றிரண்டு வருடங்களில் எல்லா செல்வங்களையும் இழந்தான். கட்டிய துணி தவிர வேறொன்றும் இல்லாத நிலைக்கு வந்துவிட்டான். அந்த நிலையில் அலிஷேர் தன் பழைய நண்பர்களை அணுகி உதவி வேண்டினான். ஒருவரும் உதவி செய்யவில்லை. மனம் சொர்ந்த நிலையில் ஒருவித நோக்கமுமின்றி நடந்து போய்க் கொண்டிருந்தான். கடைசியில் அடிமைகள் சந்தைக்குப் போய்ச் சேர்ந்தான். அச் சந்தையில் ஓரிடத்தில் ஜனங்கள் கும்பலாய்க் கூடியிருந்தனர்.
என்னவாயிருக்கும் என்று அலிஷேரும் அங்குச் சென்று வேடிக்கை பார்த்தான். அங்கு ஓர் அடிமை வியாபாரி ஓர் அழகிய இளம் அடிமைப் பெண்ணை ஏலம் கூறிக் கொண்டிருந்தான். ஏலத்தின் முக்கிய நிபந்தனை என்னவென்றால் அந்த அடிமைப்பெண் யாரை விரும்புகிறாளோ அவர்களுக்கு மட்டுமே அவளை விற்க முடியும் என்பதாகும். அப் பெண்ணின் விலை தொள்ளாயிரம் தினார்கள் என்றும் கூறினான். பலர் கூறிய தொகையைக் கொடுக்க முன் வந்தும் அடிமைப் பெண் அவர்களை ஏற்க மறுத்தாள் கடைசியாக அவள் அலிஷேர் சோகத்துடன் கூட்டத்தில் நிற்பதைக் கண்டாள் அவள் உடனே அவனைக் கூப்பிட்டுத் தன்னை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டாள்.
அலிஷேர் திருதிருவென்று விழித்தான். தன்னிடம் பணம் இல்லையே என்று கூறினான். மேடை மேலிருந்த அடிமைப் பெண் கீழிறங்கி வந்து தன் கையில் மறைத்து வைத்திருந்த ஆயிரம் தினார்களை அவன் சட்டை ஜோபியில் போட்டாள். பின்னர் கூட்டத்தினர் அறியுமாறு அலிஷேரைப் பார்த்து உன் சட்டைப் பையைச்சோதனையிடுகிறேன்.
பணம் எப்படியும் இருக்கும். நீ வாங்கியே தீர வேண்டும் என்று சொல்லியவாறே அவன் சட்டைப் பையில் கையை விட்டு அயிரம் தினார்களை வெளியே எடுத்தாள். திகைத்தான் அலிஷேர் பணத்தை அவன் கையில் கொடுத்து, இதை அடிமைத் தரகரிடம் கொடுத்து விட்டு என்னை வீட்டிற்கு அழைத்துச் செல் என்றாள். அவனும் அவ்வாறே ஆயிரம் தினார்களைத் தரகரிடம் கொடுத்துவிட்டு அடிமைப் பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குச் சென்ற அவன் மேலும் தன்னிடமிருந்து பொற்காசுகளைக் கொடுத்து குடும்பம் நடத்துவதற்குத் தேவையான எல்லாச் சாமான்களையும் வாங்கிவரச் செய்தாள்.
அமைதியாகக் குடும்ப வாழ்க்கையை இருவரும் நடத்தினர். அவிஷேர் மெல்லிய மஸ்ஸின் துணிகளை வாங்கிவருவான். அதிலே அவள் மனைவி வண்ண நூல்களால் பின்னல் வேலைகள் செய்து கொடுப்பாள். மாலையில் அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று விற்று வருவான். இதுவே அவர்கள் ஜீவனத்திற்கு வழியாக அமைந்தது. ஒரு நாள் மாலை பின்னல் வேலை செய்த மஸ்ஸின் துணிகளை எடுத்துக்கொண்டு கடைத் தெருவிற்குச் சென்றான்.
அங்கு ஒருவன் பின்னல் வேலையின் நேர்த்தியைக் கண்டு அதை விலைக்கு வாங்கினான். பணத்தை வாங்கிக்கொண்ட அவலவிஷேர் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான். அந்த வேலைப்பாடுமிக்க துணியை வாங்கியவனும் அவனைப் பின் தொடர்ந்து வந்தான். அலிவேர் வீட்டை அடைந்ததும், பின்தொடர்ந்து வந்த முதியவனும் அங்கு வந்து “அன்பரே எனக்குத் தாகமாக இருக்கிறது” என்றான்.
அலிவேர் குளிர்ந்த நீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீர் குடித்து முடித்ததும் தனக்குப் பசியாய் இருப்பதாகவும் கூறினார். “நண்பரே, தற்போது சாப்பிடுவதற்கு என் வீட்டில் உணவு ஏதுமில்லை” என்று கூறினான். புதியவன் உடனே நூறு தினார்களை எடுத்து அவன் கையில் கொடுத்து, கடைத் தெருவிற்குச் சென்று சாப்பிட ஏதாவது வாங்கி வாருங்கள்” என்று கூறினான். அலிஷேர் நெஞ்சில் கள்ளம் புகுந்தது. உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நூறு தினார்களை கொடுக்கும் அவன் அறியாமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினான்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு நேரே கடைத் தெருவிற்குச் சென்று சிறிது தின்பண்டங்களும் பழங்களும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான். தின்பண்டங்கள் வாங்கியது போக மீதி உள்ள பணத்தைத் திருப்பித் தரவில்லை. வாங்கியவற்றை அவன்முன் பரப்பிவைத்து சாப்பிடச் சொன்னான். புதியவன் அலிஷேரையும் தன்னுடன் அமர்ந்து உண்ணச் சொல்லி வற்புறுத்தினான். இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இடையில் ஒரு பழத்தில் மயக்க மருந்தைத் தூவி அலிஷேரிடம் முதியவன் உண்ணக் கொடுத்து விட்டான். சூதறியாத அலிஷேரும் அப் பழத்தை உண்டான்.
சற்று நேரத்தில் மயங்கித் தரையில் சாய்ந்தான். அலிஷேர் மயங்கி விழுந்ததும் வீட்டின் கதவை இழுத்துப் பூட்டினான். சாவியை எடுத்துக் கொண்டு சென்று தன் சகோதரனிடம் கொண்டு போய்க் கொடுத்தான்.
அலிஷேரின் மனைவியான அந்த அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்க நினைத்த அவன் சகோதரன், என்ன விலை கொடுத்தாலும் தன்னை அவனுக்கு விற்கக் கூடாது அடிமை வியாபாரியிடம் கூறிவிட்டாள். அதனால் அவள் மேல் அவன் கடுங்கோபங் கொண்டிருந்தான். எனவே தன் தம்பியின் மூலமாக அவர்களைப்பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான்.
சாவியைக் கொண்டு வந்து கொடுத்த தன் தம்பியை மிகவும் பாராட்டினான். தன்னுடன் மற்றும் சிலரை அழைத்துக் கொண்டு பூட்டியிருந்த அலிவஷேரின் வீட்டிற்குச் சென்றான். கதவு திறக்கப்பட்டது. அங்கு அலிஷேர் மயக்கம் தெளியாமல் விழுந்து கிடந்தான். உள்ளே சென்றவர்கள் அடிமைப் பெண்ணாகிய அவலிஷேரின் மனைவியை அடித்து அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டனர். சில நாழிகைப் பொழுதில் அலிஷேர் மயக்கம் தெளிந்து எழுந்தான். வீட்டினுள் ஓடிச் சென்று பார்த்தான்.
அங்கு அவன் ஆசை மனைவி காணவில்லை. துயரத்தால் நெஞ்சு வெடித்துவிடுவது போலக் கதறினான். பித்தம்பிடித்த நிலை, “என் மனைவியைப் பார்த்தீர்களா. என் மனைவியைப் பார்த்தீர்களா” என்று கூவிக்கொண்டே நகரெங்கும் அலைந்தான். கண்டவர்கள் எல்லாம் அவனைப் பைத்தியம் என்று நையாண்டி செய்தனர்.
அழகிய இளம் அடிமைப் பெண் - puthisali kathaigal
அந்த அவல நிலையைக் கண்ட கிழவி அவன் மேல் இரக்கங் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவனுக்கு ஆறுதல் கூறி மெல்ல மெல்ல அவன் வரலாற்றை அறிந்தாள். “எப்படியும் உன் மனைவியை மீட்டுத் தருகிறேன்” என்று அலிவஷேருக்கு உறுதி கூறினாள்.
சோகம் கவிந்த நிலையில் கிடந்தான் அவிஷேர். ஒருநாள் அக்கிழவி சில சாமான்களை அடுக்கித் தன் தலையில் சுமந்து கொண்டு அவற்றை தெருத்தெருவாக கூவி விற்று வந்தாள். அப்போது அலிஷேரின் மனைவி அடைபட்டுக் கிடந்த வீட்டைக் கிழவி கண்டு பிடித்துவிட்டாள். அங்குக் காவலாய் இருந்த அடிமையிடம் கிழவி அன்பொமழுகப் பேசி அவளை தன்வயப்படுத்தினாள்.
மெல்ல மெல்ல அலிஷேரின் துயரக் கதையைக் கூறி அடைப்பட்டிருக்கும் அவன் மனைவியை அலிஷேரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினாள். மனமிளகிப் போன அந்த அடிமை தம்பதிகள் இருவரையும் ஒன்று சேர்ப்பதாகக் கூறினாள். மறுநாள்... இரவு தன் தலையில் ஒரு புதுவகைத் தொப்பி அணிந்து அந்த வீட்டின் பக்கம் அவிஷேர் வரவேண்டும். அந்தத் தொப்பியைக் கண்டதும் அவன் பின்னாலேயே அடைபட்டுக் கிடக்கும் அவன் மனைவி இருட்டில் சென்றுவிட வேண்டும். இதுவே அந்தக் கிழவியும், அடிமையும் அவர்களை ஓன்று சேர்க்கத் தீர்மானித்த திட்டம் ஆகும்.
பகலும் கழிந்து இரவு வந்தது. இரவு மூன்றாம் ஜாமத்தில் அலிஷேர் கிழவி கொடுத்த புது வகைத் தொப்பியை அணிந்து கொண்டு கிழவி காட்டிய வீட்டின் பக்கம் சென்றான்.
இருட்டில் அவனுக்கு யாதொன்றும் புலப்படவில்லை. இதுவரை கண் விழித்திருந்த அவன் சோர்வு மிகுதியால் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி பக்கத்தில் வைத்து விட்டு அந்த வீட்டுத் திண்ணையில் படுத்தான். சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.
அந்த நேரத்தில் அந்த வழியில் ஒரு திருடன் வந்து கொண்டிருந்தான். வீட்டுத் திண்ணையில் ஒருவன் தூங்குவதையும் அவனுக்கருகில் ஒரு புத்தம் புதிய தொப்பி இருப்பதையும் கண்டான். தூங்குபவன் அறியாவண்ணம் புதிய தொப்பியைத் தான் அணிந்துகொண்டான். நடையைக் கட்டினான். கண் விழித்துக் காத்திருந்த அலிஷேரின் மனைவி இருளில் புதுத் தொப்பியுடன் செல்பவனைக் கண்டாள். கிழவியும் அடிமையும் செய்த ஏற்பாட்டின்படியே தன் கணவன் செல்கிறான் என்று நினைத்தாள். தன் கணவன் அவனே என்று ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு அவன் பின்னே அவள் நடந்து சென்றாள். வெகு தூரம் இருவரும் நடந்து சென்றனர்.
வெகுதூரம் கடந்ததும் கணவன் தன்னுடன் பேசவில்லையே என்று கருதிய அவள் “அன்பே அன்பே! திரும்பிப் பாருங்கள்” என்றாள். தொப்பி அணிந்தவன் திரும்பிப் பார்த்தான். அவள் திடுக்கிட்டாள் தொப்பி அணிந்து செல்பவன் தன் கணவன் அல்லன் என்பது தெரிந்து கதறி அமுதாள். அழகிய பெண்ணை விட்டுவிட திருடனுக்கு மனம் வரவில்லை. அவளை வலிய இழுத்துக் கொண்டு சென்று காட்டில் தான் வசிக்கும் குகையில் அடைத்து வைத்தான்.
உள்ளே அடைந்து கிடந்த அவள் குகையினுள் கிடந்த ஆணுடைகளை எடுத்து அணிந்து கொண்டு மாறுவேடம் பூண்டு காவலாய் இருந்தவர்களை ஏமாற்றி குகையிலிருந்து தப்பி வெளியே வந்தாள். கால் போனப் போக்கில் நடந்துசென்றாள் இறுதியில் தூரத்தே ஒரு நகரத்தைக் கண்டு அங்குச் செல்லக் கருதி போய்க் கொண்டிருந்தாள். நகரவாயிலை அடைந்தாள்.
அங்கே நகர மக்கள் அனைவரும் திரண்டிருந்தனர். அவர்கள் ஆணுடையிலிருந்த அவளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த களர் அரசன் சந்ததியின்றி இறந்து போனான். அந்த கள் வழக்கப்படி அந்த நகரத்திற்குள் முதல் முதலாக நுழையும் அந்நியரிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்பது நியதி.
அதன்படியே அவளை வரவேற்றுக் கோலாகலத்துடன் அவளை அழைத்துச்சென்றனர். அவளை அரசராக்கி மகிழ்ந்தனர். அனைவரும் ஆண் என்றே கருதினர். அவளும் ஆணுடையிலேயே அரியாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆண்டுவந்தாள். இதற்கிடையில் ஓராண்டு கழிந்தது. தன் கணவன் என்ன ஆனான் என்று தேட முற்பட்டாள். நாலா திக்குகளுக்கும் ஓத்துக்கன் சன்றனர். அரசர் சொல்லி அனுப்பியவாறு, --அங்க அலிஉஙவளங்களைக் கொண்டவன் அவர்களால் பிடிக்க முஜுவில்லை. இறுதியில் ஒரு த்ந்திரம் செய்தனர்.
நகர மக்கள் அனைவருக்கும் ஒருநாள் விருந்து வைத்தனர். ஆணுடைத் தரித்து அரசராயிருத்த அவள் விருந்து உண்ண வந்த பல்லாயிரக் க்ணை க்கரனவர்களைக் . கண்டாள். ஒவ்வொருவரையும் ந்து தொஃகுியனாறே சென்று கொண்டிருந்தாள். தன் கணவன் அலிஷேரை மயக்கமுறச் செய்த முதியவன் அங்கே விருந்து உண்பதைக் கவனித்து விட்டாள். யாரும் அறியாவண்ணம் அவனைக் கைது செய்து தன்னிடம் அழைத்து வருமாறு கூறினாள். அவ்வாறே சென்றதும் அந்த நயவஞ்சனைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டாள்.
சற்று நேரத்தில் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் ஒரு நாள் கோகு விருந்து நகர மக்களுக்கு அளிக்கப்பட்டது. அன்றைய விருந்தில் அவளைத் தூக்கிச் சென்று குகையில் அடைத்த திருடன் விருந்துண்பதைக் கண்டாள். அவனையும் கைது செய்யும்படி சொல்லி அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தாள். திருடன் தூக்கிலிடப்பட்டான்.puthisali kathaigal
மாதங்கள் உருண்டோடின. மனைவியை அடைய விடாமல் தடுத்த விதியை நொந்து புலம்பியவாறே பித்தனாய்க் காலத்தைக் கழித்திருந்தான் அலிஷேர். கிழவி எவ்வனவோ உபசரித்தும் மனைவிமேல் கொண்ட காதலால் நெஞ்சமுறுகி உடல் நோய்வாய்ப்பட்டான் அலிஷேர். மீண்டும் ஒரு நாள் அந்தப் புதிய நகரத்தில் விருந்து நடைபெற்றது. சற்று ஆறுதலாய் இருக்கட்டும் என்று அலிஷேரை மெல்ல நடத்தி கிழவி விருந்திற்கு அழைத்துச் சென்றாள். அடையாளம் கண்டு கொண்டாள். சேவகரை ஆணுடை தரித்த அவன் மனைவி அவிஷேரை அடையாளம் கண்டு கொண்டாள்.
சேவகரை ரகசியமாக அனுப்பி அவனை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தாள். ஏற்கெனவே இரண்டு விருந்துகளில் இருவர் அகப்பட்டு மரண தண்டனை அடைந்தனர். மூன்றாவது விருந்து பலிகடா இவன் தான் போலும்,” என்று எண்ணிய சேவகர் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். மன்னர் உத்தரவுப்படி அலிஷேருக்கு ராஜ உபசாரம் நடந்தது. அவன் காரணம் அறியாது திகைத்துப் போய் இருந்தான். எனினும் தான் யார் என்பதை அவிவஷேருக்குக் கூறவில்லை. அந்தக் கிழவியையும் அரச உத்தரவுப்படி கைது செய்து கொண்டு வரப்பட்டாள். அவளுக்கும் அரண்மனையில் பெருமளவு உபசாரங்கள் நடந்தன.
இரவும் வந்தது. மன்னரின் சயன அறைக்குள் ஆலிஷேர் கொண்டுவரப்பட்டான். அந்தப்புரத்தில் பஞ்சணையில் அரசராய் ஆணுடையில் அமர்ந்திருந்த அவள் தன்னை இன்னார் என்று காட்டிக்கொள்ளவில்லை. நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். அலிஷேரைத் தன் வரலாற்றை கூறும்படி கேட்க, அவனும் தான் மனைவியை இழந்த கதையையும் அவள் மேல்கொண்ட காதலால் உடல் தளர்ந்து நாடு நகர மெல்லாம் தேடி அலைவதையும் நெஞ்சுருகக் கூறினான்.
தன் மேல் கொண்ட காதவினால் தன் கணவன் பட்ட துயரங்களைக் கேட்ட அவள் தான் அணிந்திருந்த உடைகளை களைந்தெறிந்தது நானே உங்கள் ஆசை மனைவி என்று கூறி அவனை ஆரத் தழுவிக் கண்ணீர் விட்டாள்.
பித்தனாய்த் திரிந்த போது தன் கணவனை ஆதரித்துக் காப்பாற்றிய கிழவிக்கு நிறையப் பரிசுகள் வழங்கினாள். மறுநாள் பிரிந்த காதலை நொந்து கொண்டனர். விடிந்ததும் அரசவையைக் கூட்டி நடந்த வரலாறுகளைக் கூறி மற்றொருவரை அரசராக்கிவிட்டுத் தன் அன்புக்கணவனுடன் தன் நகரத்திற்குப் புறப்பட்டாள். நகர மக்கள் வாழ்த்துக் கூறி இளம் தம்பதிகளை அனுப்பிவைத்தனர்.
kadhal kathaigal |