சனி, 23 மே, 2020

tamil story - சோம்பேறியின்‌ கதை - 1001 Arabian story


சோம்பேறியின்‌ கதை -puthisali kathaigal


பேரும்‌ புகழும்‌ பெருமையும்‌ கொண்ட பேரரசே!
கேளுங்கள்‌! மதுர மொழியால்‌ கதை கூறத்‌ தொடங்கினாள்‌
ஷகார்ஜாத்‌.

ஒரு நாள்‌ கலீபா அல்‌ ஹருண்‌ ரஷித்‌ அவர்கள்‌
அரியாசனத்தில்‌ அமர்ந்திருந்தார்‌. அவருக்காகப்‌ புதிய
மணிமுடி ஒன்றை செய்து கொண்டிருந்தார்கள்‌.
பொன்னாலும்‌, மணியாலும்‌, நவரத்தினங்களாலும்‌
அம்மணிமூடி தயாராகிக்‌ கொண்டி ருந்தது. அனால்‌ அதன்‌
நடுவில்‌ பதிக்கத்‌ தக்க ஒரு வைரக்கல்‌ பெபாருத்‌தமாக கிடைக்கவில்லை. 

அப்போது பொற்கொல்லன்‌ வந்து இத்‌ தகவலைத்‌ தெரிவித்தான்‌. கலீபா அவர்கள்‌ சிறந்த வைரக்கல்‌ யாரிடம்‌ கிடைக்கும்‌ என்று மந்திரிகளைக்‌ கேட்டார்‌. மந்திரிகளும்‌ தேடிப்‌ பார்த்துக்‌ தக்க வைரக்கல்லைக்‌ கண்டு பிடிப்பதாகச்‌ சொன்னார்கள்‌. நகரெங்கும்‌ வைர வியாபாரிகளிடம்‌ தேடினார்கள்‌.

 மணி முடியில்‌ பதிப்பிக்கத்‌ தக்க அளவில்‌ அவர்களிடம்‌ மதிப்பு மிக்க வைரம்‌ இல்லை. வைர வியாபாரிகளில்‌ வயது முதிர்ந்த ஒருவர்‌, “பாஸ்ரா நகரில்‌ அபூ அகமது என்ற வைர வியாபாரி ஒருவன்‌ இருக்கிறான்‌. அவன்‌ மகா சோம்பேறி. அவனிடம்‌ நீங்கள்‌ கேட்கும்‌ அளவில்‌ பெருமதிப்புடைய வைரங்களையும்‌ ரத்தினங்களையும்‌ நான்‌ பார்த்திருக்கிறேன்‌” என்றார்‌. உடனே அபூ அகமதை அரசவைக்கு அழைத்து வர ஆணையிடப்பட்டது. 

அதன்படியே பாஸ்ரா நகருக்குச்‌ சேவகர்கள்‌ சென்று அபூ அகமதை அழைத்து வந்தனர்‌. தன்னிடமிருந்த ரத்தினக்‌ கற்களையெல்லாம்‌ கலீபா அவர்களிடம்‌ காட்டினான்‌. அபூ அகமதைச்‌ சோம்பேறி என்கிறார்கள்‌. இவனிடம்‌ விலைமதிக்க முடியாத அளவுக்கு இவ்வளவு ரத்தினக்‌ கற்கள்‌ எப்படி வந்தன? என்று மன்னர்‌ அதிசயித்தார்‌. 

கலீபா அல்ஹரூன்‌ ரஷீத்‌ அவர்கள்‌ அபூ அகமதைப்‌ பார்த்து, “உன்‌ தகப்பனார்‌ இறந்த பொழுது உனக்கு எந்த விதமான சொத்தும்‌ வைத்துவிட்டுப்‌ போகவில்லை என்பதைக்‌ கேள்விப்பட்டேன்‌. நீயும்‌ ஒரு வேளையும்‌ செய்யாமல்‌ சோம்பேறித்தனமாக காலங்கழித்தாகவும்‌ சொல்கிறார்கள்‌. அப்படியிருக்க இவ்வளவு அஸ்தியும்‌ உனக்கு எப்படிச்‌ சேர்ந்தது” என்று கேட்டார்‌. அரசரின்‌

 உத்தரவுக்‌ கிணங்க அபூ அகமது தன்‌ வரலாற்றைக்‌ கூறத்‌ தொடங்கினான்‌. “மன்னருக்கெல்லாம்‌ மன்னரே! இஸ்லாமியர்களின்‌ தலைவரே! கேளுங்கள்‌! நான்‌ சிறுவனாக இருந்தபோதே என்‌ தந்தை இறந்து போனார்‌. அவர்‌ பரம ஏழையாக இருந்தார்‌. சொத்து எதுவும்‌ வைக்கவில்லை. என்‌ தாயார்‌ பல வீடுகளில்‌ வேலை செய்து என்னைக்‌ காப்பாற்றினாள்‌. நான்‌ பதினாறு வயது வரையில்‌ ஒரு வேலையும்‌ தேடிக்‌ கொள்ளாமல்‌ 'சோம்பேறியாக களர்‌ சுற்றி வந்தேன்‌. 

அதனால்‌ தான்‌ சோம்பேறி அபூ அகமது' என்ற பெயர்‌ எனக்கு ஏற்பட்டது. அதே அடைமொழியோடு இப்போது என்‌ பெயர்‌ வழங்குகிறது. ஒருநாள்‌ நான்‌ ஊர்‌ சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கிக்‌ கொண்டிருந்தேன்‌. என்‌ தாயார்‌ என்னிடம்‌ வந்து, “மகனே இப்படியே காலத்தைக்‌ கழித்தால்‌ எப்படி? நான்‌ இறந்து போனால்‌ நீ எப்படி வாழ்வாய்‌? ஆகவே நான்‌ தரும்‌ ஐந்து வெள்ளிக்‌ காசுகளைக்‌ கொண்டு போய்‌, வியாபாரத்துக்காக சீனாவுக்குப்‌ போகும்‌ முஸாபர்‌ அவர்களிடம்‌ கொடுத்து, ஊர்‌ திரும்பும்‌ போது அந்தப்‌ பணத்திற்கு ஏதேனும்‌ பொருள்‌ வாங்கி வரச்‌ சொல்‌. வந்ததும்‌ அதை வைத்துக்‌ கொண்டு வியாபாரம்‌ செய்து பிழைத்துக்கொள்‌” என்றாள்‌. 

காசுகளை வாங்கிக்‌ கொண்ட எனக்கு முஸாபர்‌ அவர்களிடம்‌ சென்று கொடுக்கக்‌ கூட சோம்பேறித்‌ தனமாய்‌ இருந்தது. என்‌ தாய்‌ மிகவும்‌ வற்புறுத்தவே முனகிக்‌ கொண்டே போய்‌ முஸாபர்‌ அவர்களிடம்‌ சென்று விஷயத்தைக்‌ கூறி வெள்ளிக்‌ காசுகளைக்‌ கொடுத்தேன்‌. அவரும்‌ ஊர்  திரும்பும்போது ஏதாவது வாங்கி வருவதாகக்‌ கூறித்‌ தூரப்‌ பயணத்திற்காகப்‌ புறப்பட்டு விட்டார்‌.

 ஷேக்‌ அபுல்‌ முஸாபர்‌ அவர்கள்‌ வெளிநாடு சென்ற பின்னரும்‌ நான்‌ சோம்பேறித்தனமாகவேதிரிந்தும்‌ தூங்கியும்‌ காலத்தைக்‌ கழித்துக்‌ கொண்டிருந்தேன்‌. ஷேக்‌ அபுல்‌ முஸாபர்‌ அவர்கள்‌ மற்ற வியாபாரி களுடன்‌ சேர்ந்து சீன தேசம்‌ போய்ச்‌ சேர்ந்தார்‌. அங்கு கொண்டுபோன பொருள்களை ஒன்றுக்குப்‌ பத்தாக விற்ற பணத்திற்குச்‌ சனத்துப்‌ பட்டு வகைகளை வாங்கி ஒரு கப்பல்‌ நிறைய ஏற்றிக்கொண்டு நாடு திரும்பினர்‌. 

கப்பல்‌ கடலில்‌ மூன்று நாட்கள்‌ சென்றது. அப்போதுதான்‌ சோம்பேறி அபூ அகமது கொடுத்தனுப்பிய பணத்துக்கு வியாபாரப்‌ பண்டம்‌ வாங்காதது முஸாபருக்கு ஞாபகம்‌ வந்தது. உடனே, “கப்பலைத்‌ திருப்புங்கள்‌, சோம்பேறி அபூ, அகமதுக்கு வியாபாரப்‌ பண்டம்‌ வாங்க மறந்து போனேன்‌. அவனும்‌, அவன்‌ தாயாரும்‌ மகா ஏழைகள்‌, நான்‌ திரும்பி வருவதை ஆவலாக எதிர்பார்த்துக்‌ காத்திருப்பார்கள்‌. அகவே அவன்‌ கொடுத்த பணத்துக்கு ஏதாவது வாங்க வேண்டும்‌' என்றார்‌. மற்ற வியாபாரிகள்‌, “அல்லா மீது ஆணையாகக்‌ கூறுகிறோம்‌. கப்பலைத்‌ திருப்பாதீர்கள்‌. 

நாமோ இன்னும்‌ வெகு தூரம்‌ போக வேண்டியிருக்கிறது. இப்போதே நாம்‌ புறப்பட்டு வெகு நாட்களாகிவிட்டன. எனவே கப்பலை மேலே போக விடுங்கள்‌” என்று மன்றாடினர்‌. மேலும்‌ சோம்பேறி அபூ அகமதுவின்‌ பணத்துக்குத்‌ தகுந்த லாபத்தை இப்போதே கொடுத்து விடுகிறோம்‌ என்று சொல்லி எல்லோருமாக ஆளுக்குக்‌ கொஞ்சம்‌ பணம்‌ போட்டு அதை முஸாபரிடம்‌ கொடுத்தார்கள்‌. பயணம்‌ தடையின்றி தொடர்ந்தது.
(இரண்டாம்‌ பாகம்‌) 35 பல நாட்கள்‌ கப்பல்‌ கடலில்‌ நீந்தி ஒரு நாள்‌ தீவு ஒன்றை அடைந்தது. அனைவரும்‌ கரையிரங்கினர்‌. கடற்‌ கரைக்கருகில்‌ இருந்த நன்னீர்‌ ஊற்றுகளில்‌ நீராடினர்‌. 

கப்பல்‌ தலைவன்‌ மாலுமிகளைக்‌ கொண்டு வேண்டிய அளவு குடிநீர்‌ கப்பலில்‌ நிரம்பிக்‌ கொண்டான்‌. அனைவரும்‌ மீண்டும்‌ கப்பலுக்குத்‌ திரும்பினர்‌. அப்போது முஸாபர்‌ அவர்கள்‌ சோம்பேறி அபு அகமது கொடுத்த பணத்துக்கு அங்கு ஒரு மனிதக்‌ குரங்கை வாங்கினார்‌. மீண்டும்‌ பயணம்‌ தொடர்ந்து. அதன்‌ பிறகு கப்பல்‌ வேறொரு தீவையடைந்தது. அனைவரும்‌ கரையிரங்கினர்‌. அந்தத்‌ தீவிலிருந்த மக்கள்‌ மனிதர்‌ களையே பிடித்துத்‌ தின்பவர்கள்‌. கப்பலிலிருந்து வியாபாரிகள்‌ இறங்கியதும்‌ அத்‌ தீவுமக்கள்‌ தங்களுக்கு நல்ல விருந்து கிடைத்ததென்று மகிழ்ந்தனர்‌. அனை வரையும்‌ மடக்கி அருகிலிருந்த மரங்களில்‌ கட்டிப்‌ போட்டுவிட்டு தங்கள்‌ தலைவனை அழைத்து வர ஓடினர்‌. 

அவர்கள்‌ மனிதக்‌ குரங்கை மட்டும்‌ கட்டிப்‌ போட முடியவில்லை. அது சுற்றிச்‌ சுற்றி ஓடி அவர்களுக்குப்‌ பிடிபடாமல்‌ தப்பிற்று. தீவின்‌ காட்டு மக்கள்‌ சென்றவுடன்‌ சிறிதும்‌ தாமதியாமல்‌ மனிதக்‌ குரங்கு அனைவரின்‌ கட்டுகளையும்‌ அவிழ்த்து விடுவித்தது. அனைவரும்‌ ஓடி கப்பலைச்‌ செலுத்திக்‌ கொண்டு சென்று தப்பினர்‌. மீண்டும்‌ நீண்ட பயணத்திற்குப்‌ பிறகு ஒரு தீவைக்‌ கண்டு கறையிறங்கினர்‌. அப்போது மனிதக்‌ குரங்கு கடலில்‌ குதித்து மூழ்கி ஏராளமான முத்துச்‌ சிப்பிகளை சேகரித்து முஸாபரிடம்‌ கொடுத்தது. சிப்பிகளிலிருந்து விலையுயர்ந்த முத்துக்கள்‌ கிடைத்தன அவற்றை முஸாபர்‌ மூட்டையாகக்‌ கட்டிவைத்துக்‌ கொண்டார்‌.

 இரவுகள்‌ மேலும்‌ ஏழுநாள்‌ பயணத்திற்குப்‌ பிறகு பாஸ்ரா நகரை அடைந்தனர்‌. முஸாபர்‌ அவர்கள்‌ அந்த மனிதக்‌ குரங்கை என்னிடம்‌ ஒப்பித்தார்கள்‌. அதனுடன்‌ மற்ற வியாபாரிகள்‌ எனக்காக அவரிடம்‌ கொடுத்த பணத்தையும்‌, மனிதக்‌ குரங்கு கடலில்‌ மூழ்கி எடுத்த முத்துக்களையும்‌ ஒப்படைத்தார்‌. முஸாபர்‌ அவர்கள்‌ கொடுத்த பணத்தைக்‌ கொண்டு வியாபாரம்‌ தொடங்கினேன்‌. அந்த மனிதக்‌ குரங்கும்‌ என்னுடன்‌ கடையில்‌ அமர்ந்திருக்கும்‌. அந்த மனிதக்‌ குரங்கு காலையில்‌ எங்கோ வெளியே போகும்‌. மாலையில்தான்‌ வரும்‌. திரும்பி வரும்போது தினமும்‌ ஆயிரம்‌ தினார்கள்‌ கொண்டு வரும்‌. இதனால்‌ என்னிடம்‌ பெரும்‌ பொருள்‌ சேர்ந்தது. நானும்‌ மிகப்‌ பெரிய பணக்காரனானேன்‌. 

ஒருநாள்‌ யாரும்‌ இல்லாதபோது மனிதக்‌ குரங்கு என்னிடம்‌ பேச அரம்பித்தது. மனிதத்‌ குரங்கு பேசுவதைக்‌ கண்டுவியப்படைந்தேன்‌. எனினும்‌ பயமாக இருந்தது. மனிதக்‌ குரங்கு என்னைப்‌ பார்த்து, “நண்பனே! பயப்படாதே! நான்‌ உண்மையில்‌ ஒரு பூதம்‌. உன்‌ நலத்துக்‌ காகவேதான்‌ மனிதக்‌ குரங்காய்‌ இருக்கிறேன்‌. உனக்கும்‌ ஏராளமானப்‌ பொன்னைச்‌ செர்த்துக்‌ கொடுத்து விட்டேன்‌. இனியும்‌ தாமதியாமல்‌ நீ திருமணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. நாளை பொழுது புலர்ந்ததும்‌ நீ கடைத்தெருவுக்குச்‌ சென்று ஷெரீப்‌ என்பவரின்‌ மகளை உனக்கு விவாகம்‌ செய்து கொடுங்கள்‌ என்று கேள்‌. அதற்காக அவர்கள்‌ கேட்கும்‌ பணத்தைத்‌ தயங்காமல்‌ கொடு” என்று சொல்லிற்று. மறுநாள்‌ காலையில்‌ ஷெரீப்‌ அவர்களைச்‌ சந்தித்து அவர்‌ மகளை எனக்குத்‌ திருமணம்‌ செய்து வைக்கக்‌கேட்டேன்‌. அவர்‌ மூவாயிரம்‌ தினார்‌ பொன்‌ கேட்டார்‌. அவர்‌ கேட்டபடியே மூவாயிரம்‌ தினார்கள்‌ கொடுத்தேன்‌. ஒரு நன்னாளில்‌ எனக்கும்‌ ஷெரிபின்‌ மகளுக்கும்‌ விமரிசையாகத்‌ திருமணம்‌ நடந்தேறியது. 

பத்துத்‌ தினங்கள்‌ கழித்து மனைவியை அழைத்துச்‌ செல்லுமாறு ஷெரீப்‌ அவர்கள்‌ சொல்லவே நானும்‌ வீடு திரும்பினேன்‌. நடந்த விஷயங்கள்‌ அத்தனையும்‌ மனிதக்‌ குரங்கினிடம்‌ கூறினேன்‌. நான்‌ கூறியதைக்‌ கேட்ட மனிதக்‌ குரங்கு என்னைப்‌ பார்த்து, “பத்தாவது நாள்‌ உன்‌ மனைவியை அழைத்து வரும்போது நான்‌ சொல்கிறபடி செய்ய வேண்டும்‌. நீ உன்‌ மாமனார்‌ வீட்டில்‌ மேற்பக்கம்‌ கடைசியில்‌ ஓர்‌ அறையிருக்கும்‌. வீட்டினுள்‌ நுழைந்ததும்‌ நேரே அங்கே போ. அந்த அறையின்‌ கதவு பூட்டப்பட்டிருக்கும்‌. ஆனால்‌ பூட்டின்‌ சாவி அங்கேயே வாயிற்‌ படியில்‌ ஓர்‌ ஆணியில்‌ மாட்டி வைத்திருக்கும்‌. சாவியை எடுத்து பூட்டைத்‌ திறந்து அறையினுள்‌ நுழைய வேண்டும்‌. உள்ளே ஒரு பெரிய இரும்புப்‌ பெட்டியிருக்கும்‌. அப்பெட்டியின்‌ நாற்புறமும்‌ மந்திரக்‌ கொடிகள்‌ நாட்டப்பட்டிருக்கும்‌. மேலும்‌ அப்பெட்டிக்குக்‌ காவலாகப்‌ பதினோரு கொடிய விஷமுள்ள கருநாகங்களும்‌ ஒரு வெள்ளைச்‌ சேவலும்‌ இருக்கும்‌. அறையின்‌ கழண்டை மூலையில்‌ ஒரு பெரிய கத்தி சுவரில்‌ சாய்ந்து வைத்திருக்கும்‌. நீ சற்றும்‌ தாமதியாமல்‌ அக்‌ கத்தியை எடுத்து பதினோரு கருநாகங்களையும்‌, வெள்ளைச்‌ சேவலையும்‌ கொன்று விடவேண்டும்‌. 

கொன்ற உடனே, இரும்புப்‌ பெட்டியின்‌ நாற்புறமும்‌ நாட்டப்‌ பட்டிருக்கும்‌ மந்திரக்‌ கொடிகளையும்‌ கிழித்தெறிய வேண்டும்‌. அதன்‌ பின்னர்தான்‌ நீ உன்‌ மனைவி இருக்கும்‌ அறைக்குச்‌ செல்ல வேண்டும்‌” என்று கூறியது. நான்‌ என்‌ மனைவியை அழைத்துவர வெரிப்‌ அவர்களின்‌ வீட்டிற்குச்‌ சென்றேன்‌. மனிதக்‌ குரங்கு சொல்லியபடியே மேல்புற அறையில்‌ நுழைந்து வெள்ளைச்‌ சேவலையும்‌, பதினோரு கருநாகங்களையும்‌ கொன்று, மந்திரக்‌ கொடிகளையும்‌ கிழித்தெறிந்தேன்‌. அப்போது என்‌ மனைவி, “ஐயோ! இப்படிக்‌ செய்து விட்டீர்களே, பூதம்‌ என்னைத்‌ தூக்கிச்‌ சென்று விடுமே” என்று அலறினாள்‌. அப்படி அவள்‌ கதறி வாய்‌ மூடு முன்‌ அந்த அறையில்‌ ஒரு பேரோளி பளீர்ரென வீசியது. பலத்த கர்ஜனையோடு ஒரு கரும்பூதம்‌ வெளிப்பட்டு என்‌ மனைவியைத்‌ தூக்கிக்‌ கொண்டு வானமார்க்கமாய்ப்‌ போய்விட்டது. நான்‌ செய்வதறியாது திகைத்து நின்றேன்‌. இதைப்‌ பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஷெரீப்‌ அவர்கள்‌, “அடப்பாவி, நீ செவலையும்‌, பாம்புகளையும்‌ கொன்றதனால்தான்‌ பூதம்‌ என்‌ மகளைத்‌ தூக்கிக்‌ கொண்டு போயிற்று. 

துரதிருஷ்டம்‌ பிடித்த நாயே, இங்கே நில்லாதே, ஓடிப்போ” என்று என்னை வாயாரத்‌ திட்டி வீட்டை விட்டும்‌ துரத்தினார்‌. மனம்‌ வெதும்பிய நான்‌ பாஸ்ரா நகரில்‌ இருக்கவே விரும்பாது உடனே கால்போன போக்கில்‌ சென்று கொண்டிருந்தேன்‌. ஊண்‌ உறக்கமின்றி பல நாள்கள்‌ திக்கு திசை தெரியாமல்‌ நடந்தேன்‌. இறுதியில்‌ ஒரு பாலைவனத்தை அடைந்தேன்‌. மாலைப்‌ பொழுதாயிற்று. சோர்வடைந்த நான்‌ ஓரிடத்தில்‌ உட்கார்ந்தேன்‌ என்‌ பொல்லாத விதியை நினைத்து அமுது கொண்டிருந்தேன்‌. அப்போது அங்கே ஒரு பழுப்பு நிறமான பாம்பு, ஒரு வெள்ளைப்‌ பாம்பைக்‌ கொல்ல துரத்திக்‌ கொண்டு வந்ததைக்‌ கண்டேன்‌, என்னருகில்‌ இருந்த ஒரு கல்லால்‌ துரத்தி வந்த பமுப்புநிறப்‌ பாம்பை அடித்துக்‌ கொன்றேன்‌. வெள்ளைநிறப்‌ பாம்பு ஓடிப்‌ போயிற்று. சற்று நேரம்‌ கழிந்தது. தப்பியோடிய வெள்ளைப்பாம்பு மேலும்‌ பத்துப்‌ பாம்புகளுடன்‌ அவ்விடம்‌ வந்தது. கல்லால்‌ அடித்து நான்‌ கொன்ற பழுப்பு நிறப்பாம்பை அவையனைத்துமாகச்‌ சேர்ந்து கடித்துக்‌ கொத்தி உருத்தெரியாமல்‌ சின்னா பின்னப்‌ படுத்திவிட்டு ஓடிப்‌ போயின. 

இதை அச்சரியத்‌ துடன்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தேன்‌. சற்று நேரத்தில்‌ நான்‌ பசியாலும்‌, அசதியாலும்‌ சோர்ந்து அவ்விடத்திலேயே படுத்துத்‌ தூங்கிவிட்டேன்‌. திடீரென இடியோசையென ஒரு மனிதக்‌ குரல்‌ கேட்டது. என்னெதிரிலே ஒரு புகை மண்டலம்‌ தோன்றிற்று. அப்புகைமண்டலத்தினிடையே ஒரு பெரிய மனித உருவம்‌ தோன்றி வெளியே வந்தது. அந்த உருவம்‌ என்னை நோக்கி அதே பயங்கரக்குரவில்‌, “நண்பனே! பயப்படாதே. நீ காப்பாற்றிய வெள்ளைப்‌ பாம்பு என்‌ மூத்த சகோதரன்‌. நாங்கள்‌ ஐந்து பேர்‌ சகோதரர்கள்‌, உன்‌ மனைவியை தூக்கிக்‌ கொண்டு வந்தவன்‌ என்‌ மூத்த சகோதரனே, நீ அவனைக்‌ கொல்லாமல்‌ காப்பாற்றியதால்‌ நாங்கள்‌ உனக்கு ஓர்‌ உதவியைச்‌ செய்கிறோம்‌. உன்‌ மனைவி இருக்கும்‌ இடம்‌ எங்களுக்கு தெரியும்‌. என்னுடைய இளைய சகோதரனை உன்னுடன்‌ அனுப்புகிறோம்‌. உன்‌ மனைவியிடம்‌ அவன்‌ அழைத்துச்‌ செல்வான்‌. 

ஆனால்‌ நீ அவனுடன்‌ போகும்‌ போது எக்காரணத்தை முன்னிட்டும்‌ ஆண்டவனின்‌ பெயரை மட்டும்‌ சொல்லாதே; அப்படித்‌ தப்பித்‌ தவறிச்‌ சொன்னால்‌ உனக்குப்‌ பேராபத்து உண்டாகும்‌” என்றது. பின்னர்‌ சற்று நேரத்தில்‌, மனித உருவில்‌ வந்து சொல்லிய பூதம்‌, புகையாய்‌ மாறி மறைந்தது. அப்பூதம்‌ சொல்லியவாறே சற்று நேரத்தில்‌ மீண்டும்‌ ஒரு பூதம்‌ வந்து முன்‌ வந்து சொல்லிய பூதத்தின்‌ கடைசி தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக்‌ கொண்டது. என்னை என்‌ மனைவியிருக்குமிடம்‌ அழைத்துச்‌ செல்வதாகக்‌ கூறி, என்னைத்‌ தூக்கிக்‌ கொண்டு வானவெளி வீதியில்‌ பறந்து கொண்டிருந்த போது, வான வெளியில்‌ எங்கள்‌ எதிரே தீப்பொறி பறக்கும்‌ ஓர்‌ ஈட்டியுடன்‌ பச்சை நிற உடையுடன்‌ ஒரு பூதம்‌ தோன்றிற்று. “எல்லாம்‌ ஆண்டவனின்‌ செயல்‌, ஆண்டவன்‌ சக்திக்கு மிஞ்சி உலகில்‌ வேறு சக்தி கிடையாது என்று கூறு. சொல்லாவிட்டால்‌ இந்த தீப்பொறி பறக்கும்‌ ஈட்டியால்‌ உன்‌ மார்பைப்‌ பிளப்பேன்‌” என்று கர்ஜித்தது. நான்‌ பயந்தவாறே பச்சைபூதம்‌ சொல்லியவாறே ஆண்டவனின்‌ திரு நாமத்தை உச்சரித்தேன்‌. ஆண்டவனின்‌ திருநாமத்தை உச்சரித்ததும்‌ என்னைத்‌ தூக்கிக்‌ கொண்டு பறந்த அந்த பூதம்‌ அவ்விடத்திலேயே என்னைக்‌ கீழே வீசியெறிந்தது. பூதம்‌ வீசியெறிந்த இடம்‌ கடலாய்‌ இருக்கவே நான்‌ உயிர்‌ தப்பினேன்‌. 

கடலில்‌ நீந்திக்‌ கொண்டேயிருந்தேன்‌. உயிருக்காகப்‌ போராடிக்‌ கொண்டிருந்தேன்‌. சிறிது நேரத்தில்‌ அவ்வழியாக வந்த ஒரு கப்பலில்‌ இருந்தவர்கள்‌ என்னைக்‌ கண்டு, கப்பலில்‌ ஏற்றிக்‌ கொண்டார்கள்‌. உயிர்‌ பிழைத்தேன்‌. அவர்கள்‌ எனக்குத்‌ தெரியாத ஏதோ ஒரு மொழியில்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. பல நாள்‌ பயணத்திற்குப்‌ பிறகு கப்பல்‌ ஒரு நகரையடைந்தது. கப்பலில்‌ வந்தவர்கள்‌ என்னையும்‌ கரையிலிறக்கினர்‌. பின்னர்‌ அந்நகர மன்னரிடம்‌ என்னை அழைத்துச்‌ சென்றனர்‌. அம்மன்னருக்கு அரபி மொழி தெரியவே, என்‌ கதையைக்‌ கூறி அமுதேன்‌. அவர்‌ என்னைத்‌ தன்‌ மெய்க்‌ காப்பாளனாக நியமித்துக்‌ கொண்டார்‌. பல மாதங்கள்‌ கடந்தன. ஒரு நாள்‌ மாலையில்‌ கடற்கறையில்‌ உட்கார்ந்‌ திருந்தேன்‌. ஒரு குதிரை வீரன்‌ என்னை நோக்கி வந்தான்‌. வந்தவன்‌ “நீர்தான்‌ சோம்பேறி அபூ அகமது என்பவரா?” என்றான்‌.

நான்‌ 'ஆஅம்‌' என்றேன்‌. “அப்படியானால்‌ என்னுடன்‌ புறப்பட்டு வாருங்கள்‌, உங்கள்‌ மனைவி சிறை வைக்கப்பட்டிருக்கும்‌ இடம்‌ எனக்குத்‌ தெரியும்‌; காட்டுகிறேன்‌” என்னிடம்‌ ஒரு மந்திர வாளைக்‌ கொடுத்தான்‌ அக்‌ குதிரை வீரன்‌, “ஐயா, இந்த மந்திரவாளை நீங்கள்‌ கையில்‌ வைத்திருக்கும்‌ வரை யார்‌ கண்ணிலும்‌ படமாட்டீர்கள்‌. உடனே புறப்படுங்கள்‌” என்றான்‌. குதிரை வீரன்‌ காட்டிய திசையில்‌ மந்திர வாளோடு சென்றேன்‌. இறுதியில்‌ ஒரு பெரிய கோட்டையைக்‌ கண்டேன்‌. அக்‌ கோட்டை மதில்‌ முழுவதும்‌ பித்தளைத்‌ தகடு வேயப்பட்டிருந்தது. வாயில்‌ எங்கெயிருக்கிறது என்றே புலப்படவேயில்லை. நான்‌ திகைத்து நின்றேன்‌. அப்போது மீண்டும்‌ அக்‌ குதிரை வீரன்‌ அவ்விடம்‌ வந்தான்‌. 


“இக்‌ கோட்டையினுள்்‌ தான்‌ உன்‌ மனைவி யிருக்கிறாள்‌” என்றான்‌ குதிரை வீரன்‌. பித்தளைச்‌ சுவராலான இக்‌ கோட்டைக்குள்‌ எப்படி நுழைய முடியும்‌ என்று குதிரை வீரனைக்‌ கேட்டேன்‌. அக்‌ குதிரை வீரன்‌ கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு நீரூற்றைக்‌ காட்டினான்‌. அந்த நீரூற்றில்‌ குதித்து, தண்ணீரின்‌ ஓட்டத்துடன்‌ சென்றால்‌ கோட்டையினுள்‌ போய்ச்‌ சேரலாம்‌ என்றான்‌. நான்‌ நீரூற்றில்‌ துணிந்து குதித்தேன்‌. இறுதியில்‌ கோட்டைக்குள்‌ சென்று விட்டேன்‌ உள்ளே சென்று பார்த்ததில்‌ ஒரு பெரிய கூடத்தில்‌ பொற்சிங்காதனத்தில்‌ என்‌ மனைவி அமர்ந்திருக்கக்‌ கண்டேன்‌. என்னைக்‌ கண்டதும்‌ ஓடோடி வந்து அணைத்துக்‌ கொண்டு அழுதாள்‌. தன்னைப்‌ பூதம்‌ சிறையெடுத்து இந்தப்‌ பித்தளைக்‌ கோட்டையில்‌ வைத்திருப்பதாகச்‌ சொன்னாள்‌. பின்னர்‌ அந்தப்‌ பூதத்திடமிருந்து தன்னை மீட்கும்‌ வழியையும்‌ சொன்னாள்‌ அவள்‌ சொல்லிக்‌ கொடுத்தபடியே அங்கிருந்த ஒரு பித்தளைக்‌ கமுகைக்‌ பிடித்துக்‌ கொண்டேன்‌. பித்தளைக்‌ கமுகின்‌ கழுத்தைப்‌ பிடித்து இறுக்கினேன்‌. 

அதைக்‌ கண்டதும்‌ அங்குக்‌ காவலாய்‌ இருந்த பூதங்கள்‌ அனைத்தும்‌ என்னிடம்‌ ஓடிவந்து காலில்‌ வீழ்ந்து சரணடைந்தன. உடனே ஒரு பெரிய பித்தளை ஜாடி கொண்டுவர பூதங்களிடம்‌ சொன்னேன்‌. அவைகளும்‌ நொடிப்‌ பொழுதில்‌ ஒரு பித்தளை ஜாடியைக்‌ கொண்டு வந்தன. உடனே கைப்பற்றியிருந்த பித்தளைக்‌ கழுகை அச்‌ ஜாடியினுள்‌ போட்டு மூடி, சங்கிலியைக்‌ கொண்டு அச்‌ ஜாடியைச்‌ சுற்றி இறுகக்‌ கட்டினேன்‌. பித்தளைக்‌ கமுகாய்‌ இருந்ததுதான்‌ என்‌ மனைவியைத்‌ தூக்கி வந்த தலைமைப்‌ பூதம்‌. சிறைபிடிக்கப்பட்ட பூதங்களைக்‌ கொண்டு ஜாடியைத்‌ தூக்கிக்‌ கொள்ளச்‌ சொன்னேன்‌. என்‌ மனைவியை அழைத்துக்‌ கொண்டு பாஸ்ரா நகரம்‌ வந்தடைந்தேன்‌. பூதம்‌ அடைக்கப்பட்டுச்‌ சங்கிலிகளால்‌ பிணைக்கப்பட்ட ஜாடி இப்போதும்‌ என்னிடம்தான்‌ இருக்கிறது. துணைக்கு வந்த பூதங்களைத்‌ திருப்பி அனுப்பி விட்டேன்‌. நான்‌ எப்போது கூப்பிட்டாலும்‌ அவை ஓடோடி வரும்‌. “மன்னாதி மன்னரே! இதுவே என்கதை” என்று கூறினான்‌ சோம்பேறி அபூ அகமது. 

அவன்‌ கதையைக்‌ கேட்ட கலீபா அல்‌ ஹரூன்‌ ரஷீத்‌ அவர்கள்‌ மனமகிழ்ந்தார்கள்‌.
சோம்பேறி அபூ அகமது மும்முறை தரையளவு தலைதாழ கலீபா அவர்கள்‌ வணங்கி “பேரரசே நான்‌ கொண்டு வந்திருக்கும்‌ ரத்தினங்கள்‌ உங்களுக்காகச்‌ செய்யும்‌ மணி முடிக்கு ஏற்றவைகளானால்‌ தாங்கள்‌ என்‌ காணிக்கையாக ஏற்றுக்கொண்டு இந்த ஏழையைக்‌ கெளரவிக்க வேண்டும்‌. இந்த ரத்தினங்கள்‌ பிடிக்கா விட்டால்‌ சொல்லுங்கள்‌. நொடியில்‌ பூதங்களை அழைத்து இப்பூமண்டலம்‌ எங்கும்‌ தேடி, அரிய ரத்தினத்தைக்‌ கொண்டு வரச்‌ செய்கிறேன்‌” என்றான்‌. மகிழ்ந்த கலிபா அல்‌ ஹரூன்‌ ரஷீத்‌ அவர்கள்‌ சோம்பேறி அபூ அகமது கொடுத்த ரத்தினங்களை ஏற்றுக்‌ கொண்டு, அதுவே போதுமென்று சொல்லி அவனுக்கு ஏராளமான பரிசுகள்‌ கொடுத்துத்‌ தக்க விருந்து உபசாரங்கள்‌ செய்து ஊர்‌ அனுப்பி வைத்தார்‌.

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing