வஞ்சக ஓநாயின் கதை - puthisali kathaigal
முன்னொரு காலத்தில் ஒரு குகையில் ஓர் ஓநாயும் நரியும். ஒன்றாக வாழ்ந்து வந்தன. எனினும் குள்ளநரியை ஓநாய். கொடுமைப் படுத்திக்கொண்டே இருந்தது. ஒருநாள் குள்ளநரிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. 'ஓநாயே நீர் என்னை மிகவும் கொடுமைப் படுத்துகிறீர்கள். ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படியே செய்து கொண்டிருந்தால் ஆண்டவன் மனித குமாரனை: அனுப்பி உங்களைத் தண்டிப்பான்” என்றது குள்ளநரி,
ஓநாய் தன் வாழ்நாளில் மனிதனையே பார்த்த இல்லை. “என்ன குள்ளநரியாரே! என்னை மிரட்டுகிறீரா?' மனித குமாரன் என்னைவிட வலிமை மிக்கவனா?” என்று கேட்டது. குள்ளநரி கூறிற்று. மனித குமாரன் கடவுளுக்கு அடுத்தவன் ஆவான். வானத்தில் பறக்கும் பறவைகளையும் அம்பால் அடித்து வீழ்த்திவிடுவான். நீரில் வாழும் மீன்களையும் வலைவீசிப் பிடித்துத் தின்றுவிடுவான். நிலத்தில் வாழும் மிருகங்களில் மிகப் பெரிய யானையையும் மண்ணில் குழிதோண்டிப் பிடித்து அடக்கி விடுகிறான். அவ்வளவு பெரிய மிருகமான யானை பின்னர்.
மனித குமாரனுக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி அவன் இட்ட பணியைச் செய்து கொண்டு கிடக்கிறது. அத்தனை வலிமை மிக்கவன் மனிதன். எனவே, ஓநாய் அவர்களே! மனிதகுமாரனைப் பகைத்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியாது” ஓநாய் திகைத்தது. மனித குமாரனுக்கு மட்டும் ஆண்டவன் ஏன் அத்தனை சக்தியைக் கொடுத்திருக் கிறான் என்று சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியும் ஒருநாள். மனித குமாரனைப் பார்த்து, அவனைக் கடித்துக் குதறிப். போட்டுவிட வேண்டும் என்று இர்மானித்துக் கொண்டது.
ஆத்திரம் மேலிட குள்ளநரியை ஓர் அறை அறைந்தது. “எனக்குப் புத்திமதி கூறுகிறாயா? மனித குமாரனைக் காட்டி பயமுறுத்துகிறாயா?” என்று கூறிக் கொண்டே ஓடிப்போயிற்று. அறை வாங்கிய குள்ளநரி மயக்கமாய் விழுந்து: விட்டது. சற்றுநேரம் கழித்து, மயக்கம் தெளிந்ததும் குள்ளநரி எழுந்து ஓடி ஓநாயின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டது. ஓநாய் பெருந்தன்மையுடன் குன்ளநரியை மன்னித்து. “ஏய், குள்ளநரியே, உனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசாதே. மீறிப் பேசினால், இப்போது: வாங்கிய மாதிரி அறை வாங்குவாய்” என்று புத்திமதியும் கூறிற்று. குள்ளநரி உள்ளம் குமுறியது. எப்படியும் இந்த ஓநாயை மனிதகுமாரனைக் கொண்டே தண்டிக்க வேண்டும் என்று திர்மானித்துக்கொண்டது.
நாள்கள் பல கடந்தன. குள்ளநரி ஒரு நாள் வெகு தூரத்தில் ஒரு திராட்சை தோட்டத்தைக் கண்டது. அந்தத் திராட்சைத் தோட்டத்தைச் சுற்றி மதிற்சுவர்: எழுப்பப்பட்டிருந்தது. குள்ளநரி சுற்றுச் சுவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஓரிடத்தில் ஒரு பெரிய வெடிப்பு இருந்தது. குள்ள நரியோ. ஓதாயோ தாராளமாக அந்த வெடிப்பின் வழியே தோட்டத்திற்குள் சென்று விடமுடியும். தந்திர மிக்கக் குள்ளநரி அந்த வெடிப்பை நன்றாக ஆராய்ந்து பார்த்தது, மிருகங்கள் வெடிப்பின் வழியே உள்ளே புகுந்து திராட்சைத் தோட்டத்தை அழித்துவிடக் கூடுமென்று தோட்டக்காரன், வெடிப்புக்கு அருகே தோட்டத்தினுள் பெரிய பள்ளம் தோண்டி வைத்திருந்தான்.
தப்பித்தவறி ஏதாவது மிருகம் இராட்சைக்கு ஆசைப்பட்டு சுவர் வெடிப்பின் வழியே உள்ளே புக யத்தனித்தால் புகுந்த உடனே பள்ளத்தில் விழுந்து மடியவேண்டியதுதான். பள்ளம் என்று தெரியாமல் இருக்க பள்ளத்தின் மீது மெல்லிய கொம்புகளைப் பரப்பி அதன் மேல் செடி கொடிகளைப் பரப்பி வைத்திருந்தான். புத்தி கூர்மைமிக்க குள்ளநரி ஆத்திரப்படாமல் சுவர். வெடிப்பை ஆராய்ந்தது. சுவருக்கருகிலேயே பெரிய பள்ளம் இருப்பதையும் கண்டுபிடித்துவிட்டது குள்ளநரியின் மனத்தில் ஓநாயைப் பழிவாங்க இந்த இடமே சிறந்தது என்று முடிவு செய்து கொண்டது. குகைக்கு ஓடிச் சென்று ஓநாயைக் கண்டது குள்ளநரி. ஓநாயை மண்டியிட்டு வணங்கிற்று.
“வல்லமை மிக்க ஓநாயாரே, இங்கிருந்து வெகுதூரத்துக்கப்பால் ஒரு. பெரிய திராட்சைத் தோட்டத்தைக் கண்டேன். திராட்சைக் கொடிகளில் ஏராளமாய்க் குலை குலையாய்த் திராட்சை பழுத்துத் தொங்குகின்றன. உங்களுக்காகவே ஆண்டவன் அந்தத் தோட்டத்தை ஏற்படுத்தியிருப்பானோ என்றே நான் நினைக்கிறேன்" என்று மிகத் தந்திரமாகக் குள்ளநரி. கூறிற்று. திராட்சைப் பழங்கள் என்றதும் ஓநாய்க்கும் நாவில் நீர் ஊறிற்று.
“சரி, அப்படியானால் அந்தத் திராட்சைத் தோட்டத்தை எனக்குக் காட்டு” என்று கூறிக் கொண்டே ஓநாய் ஆவலுடன் எழுந்தது. குள்ளநரி உள்ளூர மகிழ்ந்து இன்றொடு ஓநாய் ஒழிந்தது என்று முடிவு செய்து கொண்டது. உடனே குள்ளநரியும் கிளம்பிவிட்டது.
ஓநாய் பின் தொடர்ந்தது. வெகு நேரத்திற்குப் பிறகு இரண்டும் திராட்சைத் தோட்டத்தை அடைந்தது. ஓநாய்க்குச் சுவரின் வெடிப்பைக் காட்டி “இதன் வழியாகத்தான் தோட்டத்தின் உள்ளே நுழைய வேண்டும்" என்றது குள்ளநரி. சுவரின் வெடிப்பின் வழியாக, ஓநாய் தோட்டத்தைப் பார்த்தது. பளபளப்பாக ஏராளமான இராட்சைக் குலைகள் தொங்குவதைப் பார்த்தது. நாவில் நீர் ஊற, “குள்ளநரியாரே, நாம் தோட்டத்திற்குள்.
போகலாமா” என்றது ஓநாய். “அன்புடையவரே! பெரியவர்களாகிய நீங்கள் முதலில் உள்ளே நுழையுங்கள். பின்னர் உங்களைத் தொடர்ந்து நான் வருகிறேன்" என்றது குள்ளநரி. ஓநாய் ஒரே பாய்ச்சலாகத் தோட்டத்தினுள் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் 'தடால்' என்ற சத்தத்தோடு. பள்ளத்தில் விழுந்தது. குள்ளநரிக்கு ஆனந்தம் தாங்கமுடியாமல் சுற்றிச் சுற்றி வந்து ஊளளையிட்டது.
பின்னர் குள்ளநரி குழியினுள் எட்டிப் பார்த்தது. ஓநாய் குழியினுள் சிக்கிக் கொண்டது. மேலே வரத் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது. “ஐயோ, நண்பனே, குழியினுள் விழுந்து மேலே வர முடியாமல் சிக்கிக் கொண்டாயே! உன்னை நான் எப்படிக் காப்பாற்றுவேன்” என்று கூறி போலிக் கண்ணீர் உகுத்து.
ஓநாய், குள்ளநரி உண்மையாகத்தான் வருத்தப்படுவ தாக எண்ணிக் கொண்டது. “ஏ, குள்ளநரியே, வேகமாக ஓடிப்போய் என்: தாயாரிடம் நான் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாகக் கூறு. என் தாயார் உடனே வந்து என்னைக் காப்பாற்றுவார்கள்” என்று கூறிற்று ஓநாய். “மூட ஓநாயே, நீ எனக்கு எவ்வளவு கெடுதல்கள். செய்தாய். என்னை ஓட ஓட விரட்டிக் கடித்திருக்கிறாய். உன்னை ஒழிக்க வேண்டுமென்றேதான் தெரிந்தும் இந்தப் படுகுழியில் விழவைத்தேன். உன் கொடும் செயலுக்கு அஞ்சியே இது நாள் வரை வாழ்ந்து வந்தேன் இன்றிலிருந்து எனக்கு விடுதலைதான் என்று கூறி குள்ளநரி ஆனந்தக் கூத்தாடிற்று.
ஓநாய் மரண பயத்தால் கெஞ்சிக் கூத்தாடிற்று. தன்னை எப்பாடுபட்டேனும் கரையேற்றி விட்டால் ஆயுள். உள்ளளவும் குள்ளநரிக்கு ஒரு கெடுதலும் செய்வதில்லை என்று ஆயிரம் சத்தியம் செய்தது. குள்ளநரிக்கு ஓநாயின் மரண ஓலமும், கெஞ்சலும் மனத்தை நெகிழ்வித்தது. குள்ளநரி திரும்பி உட்கார்ந்து கொண்டு முன்னங் கால்களால் ஒரு புதரை இறுகப்பற்றிக்கொண்டு குழிக்குள் தன் வாலை விட்டது. “சரி, தொங்கும் என்: வாலைத் தாவிப் பிடித்துக்கொண்டு கரை ஏறி வா” என்று. ஓநாயிடம் சொல்லிற்று. குழியினுள் இருந்த ஓநாய் தாவித் தன் வலிய கால்களால் குன்ளநரியின் வாலைப் பிடித்து இழுத்து: குழியினுள் தள்ளிற்று.
உடலெல்லாம் சிராய்ப்புக் காயங்களோடு குள்ளநரி குழியில் விழுந்தது. குழியினுள் விழுந்த குள்ளநரியை அறைந்து கொல்ல. ஓநாய் தன் வலிமை மிக்க கால்களைத் தூக்கிற்று. தன்னையும் வஞ்சகமாய்க் குழியினுள் இழுத்துத் தள்ளிய ஓநாயின் கொடிய புத்தியை எண்ணி வருந்திற்று: குள்ளநரி. பிறகு இந்த நயவஞ்சகப் புத்தியுள்ள ஓநாயைத் தந்திரத்தால் தான் வெல்ல வேண்டும் என்று உடனே இர்மானித்தது.. கொல்லவரும் ஓநாயைத் தடுத்து நிறுத்தி, “மூட ஓநாயே, இப்போது நீ என்னைத் தாராளமாகக் கொல்ல முடியும். கொன்ற பிறகு நீமட்டும் உயிர் வாழப்: போகிறாயா? கொஞ்ச நேரத்தில் மனிதர்கள் வந்து உன்னையும் அடித்துக் கொல்ல போகிறார்கள்.
நான் சொல்கிறபடி கேட்டால் இரண்டு பேரும் தப்பிக்க வழியிருக்கிறது. கேட்பாயா?” என்று கேட்டது குள்ளநரி. “என்ன உபாயம் இருக்கின்றது” என்று சீற்றத்துடன். கேட்டது ஓநாய். “அன்பரே, நான் உன் முதுகின் மேல் ஏறிக் கொள்கிறேன். நீ பின்னங் கால்கனை ஊன்றி முன்னங் கால்களைப் பள்ளத்தின் மேல் சுவற்றில் ஊன்றி எழுந்து நில், நான் உடனே உன் தலை மீது கால் வைத்துத் தாவி கரைக்குத் தாவிடுவேன். பின் ஓடோடிச் சென்று உன். இனத்தாரையும், உன் தாயாரையும் அழைத்து வருகிறேன். அவர்கள் உன்னை வந்து காப்பார்கள்” என்றது குள்ளநரி.
ஓநாய்க்கு நப்பாசைத் தட்டிற்று. குள்ளநரி சொன்னபடியே பள்ளத்தின் கரையில் முன்னங்கால்களை. ஊன்றி எழுந்து நின்றது. கணநேரத்தில் குள்ளநரி ஓநாயின் முதுகின் மீதேறி தலையின் மீது கால் வைத்து ஒரே தாவாகத் தாவிக் கரை மேல் ஏறிவிட்டது.
குழியினுள் இருந்த ஓநாய் குள்ளநரியைப் பார்த்து: “நண்பனே, ஓடிச் சென்று எங்கள் இனத்தார்களைக் கூட்டிவந்து என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சியது. “மூட ஓநாயே!/ நீ என் வாலைப் பிடித்துத் தாவி ஏறிப் பள்ளத்திலிருந்து மீள்வாய் என்ற நல்லெண்ணத் தோடு என் வாலைக் குழியினுள் விட்டேன். ஆபத்தில். சிக்கி இருக்கும்போதும் உன் நயவஞ்சகப் புத்தி உன்னைவிட்டுப் போகவில்லை. என்னை வேண்டுமென்றே. குழியினுள் இழுத்துப் போட்டாய். நீ சாவது இல்லாது. என்னையும் சாகடிக்கத் துணிந்தாய். பாம்புக்கு மனிதன். செய்த உதவி போல்தான் இது இருக்கிறது” என்றது குள்ளநரி, “பாம்புக்கு மனிதன் என்ன உதவி செய்தான்.
அந்தக் கதையைக் கூறு” என்றது ஓநாய். குள்ளநரி பாம்பின் கதையைக் கூற ஆரம்பித்தது. முன்னொரு காலத்தில் ஒரு பாம்புப் பிடாரன்: இருந்தான். அவன் ஒரு கொடிய விஷமுள்ள கருநாகத்தைப் பிடித்துத் தன் கூடையில் அடைத்து வைத்திருந்தான். ஆங்காங்கே கூடையிலிருந்து பாம்பை வெளியே எடுத்துப் போட்டு மக்களுக்கு வேடிக்கைக் காட்டி, மக்கள் தரும் பிச்சையை வாங்கி உண்டு உயிர். வாழ்ந்து வந்தான். பாம்புக்குச் சரியாகத் தனி கொடுப்பதில்லை.
பசியால் பெரும் சிற்றத்தோடிருந்த கருநாகம் ஒருநாள். பாம்புப்பிடாரன் அயர்ந்திருக்கும்போது கூடையைத் திறந்துகொண்டு தப்பி ஓட ஆரம்பித்தது. பாம்பு தப்பி ஓடுவதைக் கண்ட பாம்புப்பிடரான் அதை மீண்டும் பிடிக்க அதைத் துரத்திக்கொண்டு வந்தான்.
உயிர் தப்ப ஓடிய பாம்பு வழியில் ஒரு மனிதனைக் கண்டது. “என்னைத் துரத்திவரும் பாம்புப் பிடாரனிட மிருந்து தப்புவித்தால் உனக்கு விலை மதிப்புமிக்க மாணிக்கத்தைப் பரிசாகத் தருவேன்" என்று ஆசை காட்டிற்று. மூடமனிதன் பாம்பின் நயவஞ்சக வார்த்தை களாலும், தனக்குக் கிடைக்கப்போகும் பெருமதிப்புமிக்க. மாணிக்கத்தாலும் மதிமயங்கிப் போனான். உடனே அந்தப் பாம்பினைப் பிடித்துத் தன் நீண்ட அங்கியில் ஜேபியில் போட்டுக் கொண்டான்.
அவ்வழியே பாம்பினைத் தேடிவந்த பிடாரன் வழிப்போக்கனைக் கண்டு 'இந்த வழியில் ஒரு கருநாகம் ஓடிவந்ததைப் பார்த்தாயா” என்றான். வேறொரு திக்கினைக் காட்டி 'இந்த வழியாகத்தான். கருநாகம் ஓடுவதைக் கண்டேன்' என்றான்.
வழிபோக்கன் காட்டிய திசையில் பாம்பினைத் தேடி. பிடாரன் ஓடினான். பாம்புப் பிடாரன் வெகுதூரம் சென்ற பிறகு வழிபோக்கன் தன் அங்கியிலிருந்து கருநாகத்தை வெளியே எடுத்து விட்டான். வெளியே விடப்பட்ட கருநாகம் சீறிப் பாய்ந்து படமெடுத்துப் பயங்கரமாக ஆடியது.
“எனக்குப் பரிசளிப்பதாய்ச் சொன்ன மாணிக்கத்தைக் கொடு. நான் வெகு தூரம் போகவேண்டும்" என்றான். மனிதன். “உனக்கு மாணிக்கமா வேண்டும்! மானிடப் பதரே! இதோ என் பரிசைப் பெற்றுக்கொள்" என்று கூறிக் கருநாகம் சீறிப் பாய்ந்து மனிதனை கடித்துவிட்டு, புதரில். ஒடி மறைந்தது.
விஷம் தலைக்கேறிய மனிதன் அங்கேயே விழுந்து இறந்துபோனான். “இதுதான் பாம்புக்குதவிய மனிதனின் கதை” என்று குள்ளநரி ஓநாய்க்குக் கூறியது. “பாம்பு எப்படித் தன்னைக் காப்பாற்றியவனையே கொன்றதோ, அதேபோல் உன்னை காப்பாற்ற நினைத்த என்னையும் அல்லவா குழியினுள் தள்ளிக் கொல்லப். பார்த்தாய்” என்றது குள்ளநரி. பின்னர், குள்ளநரி குழிக்கருகில் ஒரு மேட்டின்மீது. ஏறி நின்று ஊளையிட ஆரம்பித்தது.
திராட்சைத் தோட்டத்தில் குள்ளநரி புகுந்து அழிக்கிறது என்றெண்ணிய மனிதர்கள் கையில் தடியுடன். ஓடி வந்தனர். வந்த மனிதர்கள் குழியில் ஒரு ஓநாய் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிய பெரிய பாராங்கற்களைக் குழியினுள் வீசி ஓநாயைக் கொன்றனர்.
அவலக் குரலெழுப்பியவாறு வஞ்சக ஓநாய் இறந்து போயிற்று. தந்திரமிக்கக் குள்ளநரி, இனி யாதொரு பயமும். போட்டியுமின்றி திராட்சைத் தோட்டத்தில் புகுந்து. ஆசைதீர இனிய திராட்சைப் பழங்களைத் தின்று வாழ்ந்து வந்தது.