பெருந்தகையாளர் ஒருவரின் கதை - tamil story
முன்னொரு காலத்தில் கலீபா அரூன்ரஷீத் அவர்களுக்கும் பார்மகி வம்சத்தினருக்கும் பகைமை: ஏற்பட்டிருந்தது. ஒருநாள் கலிபா அவர்கள் தன் அந்தரங்கச் சேவகனை அழைத்து, “நீ நம் ஆட்சிக்குட்பட்ட ஜாகர்தார் மன்சூர் என்பவனிடம் செல், நமக்குச் செலுத்த வேண்டிய பத்து லட்சம் இனார்களை இன்றைய சூரிய அஸ்தமனத்: துக்குள்ளாக வசூலித்துக்கொண்டு வரவேண்டும். அப்படி. அவன் கொடுக்கத் தவறினால் அவன் தலையைக்கொய்துகொண்டு வந்து என் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். இது என் உத்தரவு. உடனே நிறைவேற்று” என்று உத்தரவிட்டார்.
சேவகன் நேரே மன்சூர் என்பவனிடம் சென்று: கலீபா அவர்களின் உத்தரவைத் தெரிவித்தான். மன்சூர் கதிகலங்கிப் போனான். தன் சொத்து முழுவதையும் விற்றாலும் ஐந்து லக்ஷம் தினார்கள் தேராது. அப்படியிருக்கப் பத்து லக்ஷம் தினார்களை பொழுது: சாய்வதற்குள்ளாக எப்படித் திரட்ட முடியும்? மரணமடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று மனம் நொந்தான். சேதியறிந்த அவன் குடும்பத்தாரும், உறவினர்களும் செய்வதறியாது புலம்பினர். மனமிரங்கிய கலிபாவின் சேவகன் மன்சூருக்கு ஒரு. யோசனை தெரிவித்தான். “மன்சூர் அவர்களே! பெருந்தன்மைக்கும், உதார குணத்துக்கும் பெயர்பெற்ற பார்மகிவம்சத்துத் தலைவர் அயாத் அவர்களின் புதல்வர்: காலித் அவர்களிடம் சென்று முறையிடுங்கள்.
அவர். எப்படியும் உங்களைக் காப்பாற்றுவார்.” மன்சூர் இது நல்ல யோசனைதான் என்றெண்ணி ஓட்டமும் நடையுமாகச் சென்று காலித் அவர்களைக் கண்டு தன் பரிதாப நிலையைச் சொல்லி முறையிட்டான். சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காலித் அவர்கள் கொஞ்ச நேரம் கண்களை மூடி, தலைகுனிந்து மெளனமாய் இருந்தார்கள். பின்னர் தன் பொக்கிஷதாரரை அழைத்தார். இருப்பு ரொக்கம் முழுவதையும் கொண்டுவர உத்தரவிட்டார். மொத்தமே ஐயாயிரம் தினார்களே பொக்கிஷதாரர். கொண்டு வந்தார்.
பின்னர், தன் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் கடிதமெழுதினார். கையிருப்பு ரொக்கம் முழுவதையும். உடனே கொடுத்தனுப்புமாறு காலிப் அவர்கள் எழுதிய கடிதத்தைக் கண்டதும் சில நாழிகை நேரத்தில் ஏராளமான. பணம் வந்து சேர்ந்துவிட்டது. பார்மகி வம்சத்தார். அனைவரும் தங்களிடம் இருந்த ரொக்கம் அனைத்தையும் காலித் அவர்களின் வேண்டுகோள்படி கொண்டுவந்து குவித்துவிட்டனர். பத்து லக்ஷம் தினார்கள் அப்போதும் சேரவில்லை.
எல்லாம் சேர்ந்தே ஒன்பது லக்ஷம் இனார்களே ஆயிற்று. சூரியன் அஸ்தமிக்க இன்னும் சில நாழிகைப் பொழுதே இருந்தது. மன்சூர், தனக்கு மரணம் நேரப்போவது உறுதி என்று நினைத்து அழுதான். செய்வதறியாது திகைத்த புகழ்மிக்க பார்மகி வம்சத்து காலித் மனம் புழுங்கினார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே தன் ஆசை நாயகியை அழைத்து வரச் சொன்னார். காலித் அவர்களின் முன்னே வந்து வணங்கி. நின்றாள் அவள். “அன்பே, நீ கழுத்தில் அணிந்திருக்கும் நவரத்தின மாலை, முன்னொரு சமயம் கலிபா ரக்ஷ்த் அவர்கள் உனக்கு. அன்பளிப்பாகக் கொடுத்தது அல்லவா?” என்று கேட்டார். காலித். “ஆம்” என்றாள் அந்த அடிமைப் பெண். "அப்படியானால் அதைக் கழட்டிக் கொடு.
ஓர் உயிரைக் காப்பாற்றியாகவேண்டும். அந்த நவரத்தின மாலை இருபது லக்ஷம் தினார்கள் மதிப்புடையது” என்றார் காலித்.
மறுபேச்சுப் பேசாமல் அந்த அடிமைப் பெண் நவரத்தின மாலையைக் கழட்டிக் காலித் அவர்களின். காலடியில் வைத்தான். “அல்லா உன்னை ஆசர்வதிப்பார் பெண்ணே!” என்று வாழ்த்தி அந்த நவரத்தின மாலையை எடுத்த காலித் அவர்கள் அதை அப்படியே மன்சூரிடம் கொடுத்தார்.
“மன்சூர் அவர்களே! அபயம் என்று வந்தவர்களைத் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றும் புகழ் மிக்க பார்மகி வம்சத்தில் உதித்தவன் நான். அபயம் என்று வந்த உங்களை நான் காப்பாற்றியே தருவேன். இந்த நவரத்தின மாலையையும், சேர்ந்த ரொக்கம் 90 லட்சம் தினார்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
இந்த நவரத்தின மாலை மட்டும் இருபது லக்ஷம் இனார்கள் மதிப்புடையது. ரொக்கத்தையும், மாலையையும் நீங்களே நேரில் சென்று. கலிபா ரக்ஷ$த் அவர்களிடம் சேர்த்துவிட்டு உயிர் பிச்சைப். பெற்று வாருங்கள்” என்றார் காவித். நன்றிப் பெருக்கால் கண்ணீர் உகுத்த மன்சூர் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் கலீபா அல் ரக்ஷ்த் அவர்களின் அவையை அடைந்தான். குரிய அஸ்தமனம் ஆக சில நாழிகைப் பொழுதே இருந்தது. கலிபா அவர்களின் முன் சென்று முழந் தாளிட்டு மூன்று முறை வணங்கி, எல்லாம் வல்ல.
அல்லாவின் திருநாமங்களை மனத்திற்குள் ஜெபித்துக் கொண்டே நடுங்கியவாறு தான் கொண்டு வந்திருந்த ஒன்பது லக்ஷம் தினார்களையும். ஜொலிக்கும் நவரத்தின. மாலையையும் அவர் காலடியில் சமர்ப்பித்துத் தனக்கு உயிர் பிச்சையளிக்குமாறு வேண்டினான் மன்சூர்.
குட்டிக் கலகங்கள் செய்யும் மன்சூரை ஒழித்துக் கட்டவே கலிபா அவர்கள் இப்படி ஒரு தந்திரம் செய்தார்கள். சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக இவனால் பத்து லக்ஷம் தினார்கள் திரட்டமுடியாது: ஆகவே நம் உத்தரவுப்படி இவன் தலையை இழப்பான்' என்று கலிபா அவர்கள் நினைத்தார்கள். இவனால் ஒரு நாள் அவகாசத்தில் எப்படி இவ்வளவு பணத்தைச் சேகரித்திருக்க முடியும் என்று: வியந்த கலிபா, 'ஏ, மன்சூர் உன்னால் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையைச் சேகரிக்க முடிந்தது” என்று கேட்டார். “மண்ணும் விண்ணும் உவந்தேத்தும் வேந்தே! கேளுங்கள்.
உயிருக்கு அபாயம் என்று வந்தவர்களுக்குத் தன்னுயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் புகழ் மிக்க பார்மகி வம்சத் தலைவரே இவ்வளவு பணத்தையும் கொடுத்தார். மொத்தத்தில் குறைந்த ஒரு லக்ஷம் தினார்களுக்கு ஈடாக இருபது லக்ஷம் தினார்கள். மதிப்புடைய நவரத்தினமாலை ஒன்றினையும் தன்: அடிமைப் பெண்ணிடமிருந்து வாங்கித் தந்திருக்கிறார்கள். பார்மகி வம்சத்துப் பெருந்தகையாளர் காலித் அவர்கள். அவர்களின் பெருங்கருணையால்தான் இவ்வளவையும். சேகரிக்க முடிந்தது” என்றான் மன்சூர்.
தன் காலடியில் கிடந்த நவரத்தினமாலையைக் கையில் எடுத்துப் பார்த்தார் கலிபா. அந்த மாலையில் தன். அரச முத்திரை பதிப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு ஞாபகம் வந்தது. முன்னொரு சமயம் தான் ஒரு அடிமைப் பெண் வெகு உருக்கமாய் இன்னிசை இசைத்ததற்காகத் தன்னால் பரிசளிக்கப்பட்டது கவனத்திற்கு வந்தது. மனதிற்குள்ளாகவே பார்மகி வம்சத்துப் பெருந்தன்மையை வியந்தார். நவரத்தின. மாலையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு தலைநிமிர்ந்தார்.
கலிபா அல் அருண் ரக்ஷ்த் அவர்கள் உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தன் மந்திரியிடம் உத்தரவிட்டார். தங்கத்தாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட சேணங்கள் அணிவிக்கப்பட்டு ஒரு வெண்புரவி தயாராக கம்பீரமாக நின்றிருந்தது. கலிபா ரக்ஷத் வெள்ளைக் குதிரை: மீது அமர்ந்ததும் மற்றவர்களையும் குதிரைகள் மேலேறித் தன்னைத் தொடருமாறு ஆணையிட்டார். மன்சூர் முதல் மற்ற மந்திரிப் பிரதானிகள் அனைவரும் கலிபா அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
கலிபாவின் உத்தரவுப்படி. ரொக்கமாக இருந்த ஒன்பது: லக்ஷம் தினார்களும் ஒரு வண்டியில் ஏற்றப்பட்டு பின் தொடர்ந்தது. இரண்டு நாழிகைப் பொழுதிற்குள் முன்னிரவில் கலிபா அவர்கள் பார்மகி வம்சத்தார் குடியிருக்கும். பகுதியை அடைந்தார்கள். கலிபா அவர்களே, நேரில் வருவதைக் கண்ட அந்த வம்சத்துத் தலைவர் காலித் அவர்கள், தன் பந்து மித்திரர்களோடு எதிர்கொண்டு அழைத்தார். கலிபா: அவர்களை முறைப்படி வணங்கி வரவேற்று மிகக் கோலாகலமாய்த் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.
மாளிகை முழுவதும் நொடிப் பொழுதில் அலங்கரிக்கப்பட்டது. எங்கும் லஸ்தர் விளக்குகள். ஏற்றப்பட்டன. பெரும் விருந்துக்குத் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்றன. கலிபா அவர்களை வரவேற்ற காலித் அவர்கள். பட்டுக்கம்பளம் விரித்து, பக்கங்களில் தலையணைகளை அடுக்கிச் செளகரியமாக அமரவேண்டினார்.
அமர்ந்த கலிபா அவர்களுக்குப் பக்கத்திலிருந்து: அடிமைப் பெண்கள் மயில் விசிறியினால் வீசிக் கொண்டிருந்தனர். கைகட்டிச் சிரம்தாழ்த்தி நின்றிருந்த காலித் அவர்களை நோக்கி கலிபா ரக்ஷ்த் அவர்கள் கேட்டார்கள். “புகழ் மிக்க பார்மகி வம்சத்துத் தலைவரே! உம் உதார குணத்தைக் கண்டேன். இன்று பகல் பொழுதிற்குள்.
எப்படி இவ்வளவு பெரிய தொகையை உங்களால் சேர்க்க முடிந்தது. மேலும், இந்த நவரத்தினமாலை யாருடையது. உங்கள் அடிமைப் பெண்ணுடையது என்று மன்சூர் சொன்னான். எனக்கு எல்லாம் விவரமாகச் சொல்ல. வேண்டும்? உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் துளிர்த்தவாறே, “பேரருளாளரே, இஸ்லாமியர்களின் பெருந்தலைவரே!' கேளுங்கள். இந்தப் பணம் முழுவதும் என் உற்றார். உறவினரிடமிருந்து திரட்டப்பட்டது.
உயிருக்கு ஆபத்து: என்றதுமே என் வம்சத்தார் அனைவரும் தங்களிடமிருந்த ரொக்கம் அனைத்தையும் மறுபேச்சில்லாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள். எனினும் என்: துரதிருஷ்டம் ஒன்பது லக்ஷம் தினார்களே சேர்க்க முடிந்தது. அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. முன்னொரு சமயம் தாங்கள் என் மாளிகைக்கு வந்திருந்தபோது விருந்தில் மிக நன்றாகப். பாடியதற்காக என் அடிமைப்பெண் ஒருத்திக்கு விலைமதிப்புயர்ந்த நவரத்தினமாலை ஒன்றினை அளித்தீர்கள். அந்த அடிமைப் பெண்ணை அழைத்து: நிலைமையைச் சொன்னதும் மறு பேச்சில்லாமல் நவரத்தினமாலையைக் கொடுத்து விட்டாள்” என்று கூறினார் காலித்.
கலிபாவிற்கு எல்லாம் கவனத்திற்கு வந்தது. உடனே அந்த அடிமைப்பெண்ணை தன்னெதிரே கொண்டு வருமாறு பணித்தார்.
அந்த அடிமைப் பெண் கொண்டு வரப்பட்டதும், அவளுடைய உதார குணத்தைப் பலவாறு மெச்சினார். நவரத்தினமாலையை அவளிடமே திருப்பிக் கொடுத்தார். பின்னர் தான் அணிந்திருந்த இலங்கையிலிருந்து 'வரவழைத்திருந்த முத்துமாலையைக் கழட்டி, அதையும் அந்தப் பெண்ணுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். பின்னர், ஒன்பது லக்ஷம் தினார்களையும் யார்: யாரிடமிருந்து சேகரிக்கப்பட்டதோ அவர்களை யெல்லாம் அழைத்துவரப்பணித்தார் கலிபா. அனைவரும். ஒன்று சேர்ந்து வந்ததும் அவரவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார் கலிபா. காலித் உட்பட அனைவரும் அந்தப் பணத்தை ஏற்க மறுத்தனர்.
'பார்மகி வம்சத்தார் எப்போதும் தானமாகக் கொடுத்த பொருளைத் திரும்பப் பெறமாட்டார்கள்' என்று கலிபா அவர்களிடம் மிக விநயமாக எடுத்துச் சொன்னார்கள். தாங்கள். விரும்பினால் ஏழை எளியவர்களுக்கு இந்தப் பொருள் அனைத்தையும் தானமாகக் கொடுத்து விடுங்கள் என்றனர். கலிபா அவர்கள் மிகவும் வியந்தார்கள். பார்மகி: வம்சத்தாரின் உதார குணத்துக்கு மெச்சினார். அவ்வளவு பெரிய தொகையையும் அன்றிரவே ஏழை எளியவர்களுக்குத் தானமாக வாரி வழங்கினார்கள். பார்மகி வம்சத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து கலிபா ரக்ஷ்த் அவர்களுக்குக் கோலாகலமான விருந்து: செய்தனர்.
அந்த விருந்தில் முத்து மாலையைப் பரிசாகப்: பெற்ற அடிமைப் பெண் தன் தேனினுமினிய குரலால் தேவகானம் பாடினாள். பொழுது விடியும் நேரத்தில் விருந்து முடிந்தது. அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, மன்சூரையும் மன்னித்து கலிபா அல்அருண் ர்ஷத் அவர்கள் புறப்பட்டு. விட்டார்கள். பெரும் அளவில் கூடியிருந்த பார்மகி வம்சத்தார் கலிபா அவர்களை வாழ்த்தி வழியனுப்பி னார்கள். அதற்கு மறுநாள் ஆயிரம் ஒட்டகங்களும், ஆயிரம். குதிரைகளும் பார்மகி வம்சத்தார் வாழ்ந்த பிரதேசத்துக்கு வந்து அணிவகுத்து நின்றன.
அவற்றைத் தலைமை தாங்கி. நடத்தி வந்த அரசாங்கச் சேவகன் பார்மகி வம்சத் தலைவர்: காலித் அவர்களைக் கண்டு வணங்கி, வந்திருக்கும் ஒட்டகங்களையும், குதிரைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டினான். அவை யாவும் மாமன்னர் கலிபா: அல் அருண் ரக்ஷ்த் அவர்களால் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டவை என்றும் சொன்னான். அண்டியவர்களைக் காப்பாற்றும் பார்மகி வம்சம். புகழ்மிக்கது. அதன் புகழ் மேலும் இந்த நிகழ்ச்சியால். வளர்ந்து பரந்தது. கலிபா அவர்கள் அனுப்பிய பரிசில்களை ஏற்றுக்கொண்டு வந்திருந்தவர்களுக்கு மூன்று: நாள் வரை விருந்து வைபவம் செய்து உபசரித்து அனுப்பிவைத்தார் காவித் அவர்கள்.
பொழுது விடியும் நேரம் நெருங்கிற்று. பொற்கோழி ௯விற்று. இதுவரை பார்மகி வம்சத்தாரது உதாரகுணத்தை மெச்சிக் கதை சொல்லி முடித்த பேரழகி ஷகர்ஜாத் . 'நாளை: முதல் ஆச்சரியமும், திகிலும் நிறைந்த ஏழு முறை கடற்பயணங்கள் செய்த சிந்துபாத்தின் வரலாற்றைக் கூறப் போகிறேன்" என்றாள். சிந்துபாத்தின் கடற்பயணக் கதைகளைக் கேட்கப் போகும் ஆவலில் மாமன்னர் ஷாரியர், அழகி. ஷகர்ஜாத்துக்கு அன்பு முத்தம் கொடுத்து விடை பெற்று: அரண்மனை சென்றார்.