சனி, 23 மே, 2020

tamil story - அலாவுதீனின்‌ அற்புத சாகசங்கள்‌ -1001 அரேபியன் கதை


அலாவுதீனின்‌ அற்புத சாகசங்கள்‌ -puthisali kathaigal


முன்னொரு காலத்தில்‌ கெய்ரோ நகரத்தில்‌
ஷம்சுத்தீன்‌ என்ற வியாபாரி ஒருவர்‌ இருந்தார்‌. அவருக்கு
நாற்பது வயது கடந்த பின்னரே ஒரு மகன்‌ பிறந்தான்‌. பல
வருஷங்களாகக்‌ குழந்தையின்றித்‌ தற்போது அண்மகன்‌
பிறந்திருப்பதால்‌ ௮க்‌ குழந்தையை யார்‌ கண்ணிலும்‌
படாமல்‌ ஒரு நிலவறை கட்டி அதிலேய வளர்த்து
வந்தான்‌.

வெளிஉலகமே தெரியாத வகையில்‌ பதினேழு
அண்டுகள்‌ அந்த நிலவறையிலேயே வளர்ந்து வந்தான்‌.
அவனுக்கு அலாவுதீன்‌ அபு ஷமத்‌ என்று பெயரிட்‌டி ருந்தனர்‌.
ஒருநாள்‌ நிலவறைக்‌ கதவு திறந்திருக்கும்‌ போது
வெளியே வந்து விட்டான்‌. வெளி உலகத்தையே முதல்‌
முதலாகப்‌ பார்க்கும்‌ அவனுக்கு ஓரே வியப்பாக இருந்தது.
தன்‌ தாயிடம்‌ நேரே சென்றான்‌. “நாளை முதல்‌ நான்‌
தந்தையுடன்‌ கடைக்குச்‌ சென்று நம்‌ வியாபாரத்தைக்‌
கவனிக்கப்‌ போகிறேன்‌” என்று சொன்னான்‌ அலாவுதீன்‌.
தாயும்‌ தந்தையும்‌ எவ்வளவோ தடுத்தும்‌ ஓரே பிடிவாத
மாகக்‌ கடைக்கு வந்தே தீருவேன்‌ என்று சொல்லி
விட்டான்‌.

மறு நாள்‌ வியாபாரி ஷம்சுத்தீன்‌ மகனை நன்கு
அலங்கரித்து கடைக்கு அழைத்துச்‌ சென்றான்‌. மற்ற
வியாபாரிகளிடமும்‌, பொருள்‌ வாங்க வருபவர்களிடமும்‌
எப்படிப்‌ பணிவாகவும்‌ இங்கிதமாகவும்‌ நடந்து கொள்ள
வேண்டும்‌ என்பதையும்‌ மகனுக்குச்‌ சொல்லி தந்தான்‌
ஷம்சுத்தீன்‌.

கடைத்‌ தெருவுக்குப்‌ போகும்போதே வழியில்‌
எல்லா வியாபாரிகளுக்கும்‌ தன்‌ மகனை அறிமுகப்படுத்திக்‌
கொண்டே சென்றான்‌. அலாவுதீனும்‌ எல்லா வியாபாரி
களுக்கும்‌ தலை தாழ்த்தி சலாம்‌ சொன்னான்‌. பின்னார்‌
தங்கள்‌ கடைக்குச்‌ சென்று தந்தையும்‌ மகனும்‌
அமர்ந்தனர்‌.

அந்‌ நகரத்துக்‌ கடைவீதியில்‌ உள்ள வியாபாரிகள்‌,
யாருக்குப்‌ பிள்ளை பிறந்தாலும்‌ மற்ற வியாபாரிகளுக்கு
விருந்தளிப்பது வழக்கம்‌. அகவே, சற்று நேரத்தில்‌
ஷம்சுத்தீன்‌ கடையில்‌ மற்ற வியாபாரிகள்‌ கூடி விருந்தளிக்க
வேண்டும்‌ என்று சொன்னார்கள்‌. மறு நாள்‌ நகரத்‌
தோட்டத்தில்‌ பெரிய விருந்தளிப்பதாக ஷம்சுத்தீன்‌
ஒப்புக்கொண்டார்‌.
மறு நாள்‌ விருந்து கோலாகலமாக ஆரம்பமாயிற்று.
வயதுக்குத்‌ தக்கவாறு வியாபாரிகள்‌ கூட்டம்‌ கூட்டமாக
உட்கார்ந்து பேசிக்கொண்டே விருந்து சாப்பிட்டுக்‌
ெகொண்டும்‌ கேளிக்கைகளில்‌ கலந்து கொண்டும்‌
மகிழ்ந்தனர்‌.

அப்போது ஒரு வாலிப வியாபாரி தான்‌
சென்றுவந்த நாடுகள்‌, நகரங்கள்‌, அங்குக்‌ கண்ட
அதிசயங்கள்‌ அனைத்தையும்‌ சுவைபடக்‌ கூறிக்கொண்டி
ருந்தான்‌. அலாவுதீன்‌ பதினேழாண்டு காலமும்‌
நிலவறையிலேயே வசித்தவனாயிற்றே? இதையெல்லாம்‌
கேட்கக்‌ கேட்கத்‌ தானும்‌ வெளிநாடுகளுக்கெல்லாம்‌
சென்று பார்த்துக்கொண்டும்‌, வியாபாரம்‌ செய்து
கொண்டும்‌ வரவேண்டும்‌ என்ற பேரவா அவன்‌ மனத்தில்‌
தோன்றிற்று.

மறு நாள்‌ தன்‌ தந்தையிடம்‌ தன்‌ அவலைத்‌
தெரிவித்தான்‌. வெளிநாடு சென்று வர்த்தகம்‌ செய்து
வரவேண்டும்‌ என்ற மகனின்‌ அவலைப்‌ பூர்த்தி
செய்வதற்காக ஷம்சுத்தின்‌ ஏராளமான வியாபாரப்‌
பொருள்களைச்‌ சேகரித்தார்‌.

அடுத்து, பாக்தாத்‌ நகரத்துக்குக்‌ கிளம்பும்‌ வியாபாரக்‌
கும்பலோடு அலாவுதீனும்‌ வெளிநாடு புறப்பட்டான்‌.
அலாவுதீனின்‌ வியாபாரப்‌ பொருள்கள்‌ பல ஒட்டகங்களில்‌
ஏற்றப்பட்டி ர௬ந்தன. ஒருநாள்‌ காலையில்‌ பெற்றோர்‌
அசியுடன்‌ வியாபாரக்‌ கும்பலோடு சேர்ந்து”
கிளம்பிவிட்டான்‌. எல்லோரும்‌ பல நாள்கள்‌ பயணம்‌
செய்தனர்‌. நடுவழியில்‌ அரேபிய பாலைவனக்‌
கொள்ளைக்காரர்களால்‌ வியாபாரிகள்‌ மடக்கப்‌ பட்டனர்‌.
கொள்ளையர்கள்‌ கொண்டுபோன வியாபாரச்‌



சரக்குகளைக்‌ கொள்ளையிட்டனர்‌. எதிர்த்த பல வியாபாரிகளைப்‌ படுகொலை செய்தனர்‌. எல்லாம்‌ வல்ல
அல்லாவின்‌ அருளால்‌ அலாவுதீன்‌ உயிர்‌ தப்பினான்‌.
ஒன்றுமில்லாத வறியனாய்‌ மிகுந்த சிரமத்துடன்‌ பாக்தாத்‌
நகரத்தைச்‌ சேர்ந்தான்‌.

நகருக்கருகில்‌ ஒரு மசூதியில்‌ சென்று தங்கினான்‌.
அப்போது அங்கு ஒரு விவாகரத்து நடந்து
கொண்டிருந்தது. ஒரு முதியவனின்‌ மகளை ஒரு வாலிபன்‌
விவாகரத்து செய்தான்‌. அந்தச்‌ சடங்குதான்‌ நடைபெற்றுக்‌
கொண்டி ருந்தது. திடீரென மனம்‌ மாறிய அந்த வாலிபன்‌
மீண்டும்‌ அவளை மணந்து கொள்வதாகவும்‌ விவாகரத்து
வேண்டாமென்றும்‌ கூறினான்‌.

அனால்‌, அம்‌ முதியவன்‌ அதற்கு இணங்க
மறுத்துவிட்டான்‌. இதையெல்லாம்‌ கவனித்துக்‌
கொண்டே சோர்வுடன்‌ ஒரு மூலையில்‌ அலாவுதீன்‌
அமர்ந்திருந்தான்‌.

உடனே அலாவுதீனைப்‌ பார்த்த அக்‌ கிழவன்‌ “நீ
என்‌ மகளை மணம்‌ செய்து கொள்‌. நீ அவளை மணந்து
கொள்வதாயிருந்தால்‌ எனக்குப்‌ பத்தாயிரம்‌ தினார்கள்‌
தரவேண்டும்‌. இல்லாவிடில்‌ இன்றிரவு அவளை மணந்து
கொண்டு நாளை காலையில்‌ அவளை விவாகரத்து
செய்வதானால்‌ உனக்கு நான்‌ ஆயிரம்‌ தினார்கள்‌
பரிசளிக்கிறேன்‌. இந்த இரண்டில்‌ உனக்கு எது சம்மதம்‌”
என்று கேட்டான்‌.

அலாவுதீன்‌ யோசித்தான்‌. கொண்டு வந்த
பொருள்களோ கொள்ளை போயின; தரித்திர நிலையில்‌
அடுத்தவேளை சாப்பாட்டிற்கும்‌ வழியில்லாது தவிப்பதை
விட இன்றிரவு திருமணம்‌ செய்து கொண்டு, காலையில்‌
விவாகரத்து செய்து விட்டு ஆயிரம்‌ தினார்கள்‌ பெற்றுக்‌ கொள்வதே மேல்‌ என்று எண்ணினான்‌. கிழவனிடம்‌
சம்‌ மதத்தைக்‌ தெரிவித்தான்‌.

அன்றிரவு அலாவுதீனுக்கும்‌, கிழவனின்‌ மகள்‌
ஐுபைதாவுக்கும்‌ திருமணம்‌ நடந்தது.

அலாவுதீன்‌ அன்றிரவு தன்‌ துயரக்‌ கதையை ஓர்‌
இரவுக்கு மட்டும்‌ மனைவியாய்‌ இருக்கப்‌ போகும்‌
ஜுபைதாவிடம்‌ கூறினான்‌. அவள்‌ அலாவுகீனின்‌ அழகில்‌
மயங்கினாள்‌. கையில்‌ பொருள்‌ இல்லாத காரணத்தால்‌
காலையில்‌ விவாகரத்து செய்து கொள்ளப்‌ போவதை
அவள்‌ விரும்பவில்லை. ஆகவே அலாவுதீனுக்கும்‌ ஒரு
யோசனை சொல்லிக்‌ கொடுத்தாள்‌.

மறுநாள்‌ விடிந்ததும்‌ ஜுபைதாவின்‌ தந்தையான
வயோதிகரிடம்‌ பத்தாயிரம்‌ தினார்கள்‌ தர பத்துத்‌
தினங்கள்‌ தவணை தருமாறு வேண்டினான்‌, கிழவனும்‌
ஒப்புக்‌ கொண்டான்‌.

புதுத்தம்பதிகள்‌ இருவரும்‌ ஆடிப்பாடி
இன்பமனுவித்து மகிழ்ந்தனர்‌. ஒன்பது நாள்களும்‌
கழிந்துவிட்டன. விடிந்தால்‌ பத்தாம்‌ நாள்‌. தவனை
கேட்டபடி கிழவனுக்குப்‌ பத்தாயிரம்‌ தினார்கள்‌
கொடுத்தாக வேண்டும்‌. ஏது செய்வதெனப்‌ புரியாமல்‌
நடப்பது நடக்கட்டும்‌ என்று தம்பதியர்‌ இருவரும்‌
அன்றிரவு ஆடிப்பாடி. இன்பம்‌ அனுபவித்தனர்‌. நள்ளிரவு
நேரம்‌ ஜுபைதா தன்‌ இனிய குரலால்‌ இன்னிசை
எழுப்பிக்‌ கொண்டிருந்தாள்‌.

பாக்தாத்‌ மன்னர்‌ இரவு நேரங்களில்‌ மாறுவேடம்‌
பூண்டு நகர்க்‌ காவலர்களைச்‌ சோதிக்க வருவார்‌.
தம்பதிகள்‌ இருந்த வீட்டருகே வந்துகொண்டிருந்தார்‌.
ஒரு பெண்ணின்‌ மதுரமான குரலால்‌ சோகப்‌ பாட்டொன்று பாடுவதைக்‌ கேட்டார்‌. நாளை பத்தாம்‌
நாள்‌ ஆனதால்‌ பத்தாயிரம்‌ தினார்கள்‌ தரமுடியாது. தன்‌
கணவனான அலாவுதீன்‌ பிரிந்து போகிறானே என்ற
ஏக்கத்தால்‌, கல்லும்‌ கரையும்‌ வண்ணம்‌ அந்த நள்ளிரவு
நேரத்தில்‌ சோகமாகப்‌ பாடிக்‌ கொண்டிருந்தவள்‌
ஜுபைதாதான்‌.

சோகப்பாட்டைக்‌ கேட்ட மன்னர்‌, வீட்டின்‌ முன்னர்‌
சற்று நேரம்‌ நின்றார்‌. பின்னர்‌ வீட்டின்‌ கதவைத்‌
தட்டினார்‌. அலாவுதீன்‌ கதவைத்‌ திறந்தான்‌. வழிப்‌
போக்கன்‌ போல்‌ உடை தரித்திருந்த மன்னரைப்‌ பார்த்த
அலாவுதீன்‌ “என்ன வேண்டும்‌, ஏன்‌ கதவைத்‌ தட்டினீர்‌”
என்றான்‌.

“எனக்கு சங்கீதம்‌ என்றால்‌ வெகு பிரியம்‌. இந்த
நள்ளிரவில்‌ உன்‌ வீட்டிலிருந்து இனிய பாடல்‌ ஓன்றை
வீதி வழியே சென்ற நான்‌ கேட்டேன்‌. அகவே அந்தப்‌
பாட்டை முழுவதும்‌ கேட்கவேண்டும்‌ என்று அவலில்‌
தான்‌ அகாலமானாலும்‌ பரவாயில்லை என்று கதவைத்‌
தட்டினேன்‌. மன்னித்துக்‌ கொள்ளவேண்டும்‌. மீண்டும்‌
அந்தப்‌ பாட்டைக்‌ கேட்க முடியுமா?'' என்று
வணக்கத்துடன்‌ அலாவுதீனிடம்‌ கேட்டார்‌ மாறு
வேடத்திலிருந்த மன்னர்‌.

அலாவுதீன்‌ அவரை வீட்டிற்குள்‌ அழைத்துச்‌
சென்றான்‌. ஜுபைதா மீண்டும்‌ சோக கீதத்தைத்‌ தன்‌ இனிய
குரலால்‌ பாடினாள்‌.

பாட்டைக்‌ கேட்டு முடிந்ததும்‌ அவர்‌ “உங்களுக்கு
என்ன துக்கம்‌ நேர்ந்தது” என்று கேட்டார்‌.

அலாவுதீன்‌ தன்‌ வரலாறு முழுவதையும்‌
அதியோடந்தமாக கூறினான்‌. “விடிந்ததும்‌ பத்தாயிரம்‌ தினார்கள்‌ கொடுத்தாக வேண்டும்‌. தவறினால்‌ நான்‌
மணந்து கொண்டிருக்கும்‌ இப்போது பாடிய என்‌
மனைவியை இழக்க நேரிடும்‌. நான்‌ என்ன செய்யப்‌
போகிறேன்‌ என்று தெரியவில்லை'' என்று மிக
வருத்தத்துடன்‌ கூறினான்‌.

மாறுவேடத்திலிருந்த மன்னர்‌ இதையெல்லாம்‌
கேட்டதும்‌ மனம்‌ நெகிழ்ந்தார்‌. பின்னார்‌ விடை பெற்றுச்‌
சென்று விட்டார்‌.

விடிந்ததும்‌ பாக்தாத்‌ அரசர்‌ பல ஒட்டகங்களின்‌
மேல்‌ வியாபாரப்‌ பொருள்களை ஏற்றி, தன்‌ சேவகன்‌
ஒருவனை வணிகன் போல்‌ வேடம்‌ அணிய வைத்து
அவனிடம்‌ பதினாயிரம்‌ தினார்கள்‌ கெகொடுத்து
அனுப்பினார்‌. 'கெய்ரோவிலிருந்து வருவதாகவும்‌, உன்‌
தந்தை ஷம்சுத்தீன்‌ நடந்தவற்றையெல்லாம்‌ கேள்விப்பட்டு
வியாபாரப்‌ பொருள்களையும்‌ பதினாயிரம்‌ தினார்‌
பொன்னையும்‌ அனுப்பினார்‌ என்று சொல்லி ஒட்டகப்‌
பொதிகளையும்‌, பொன்னையும்‌ மாறுவேடத்திலிருந்த
சேவகன்‌ ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுக்‌ கொண்டு
கெய்ரோ செல்வதாகக்‌ கூறிச்‌ சென்றுவிட்டான்‌.

தக்க நேரத்தில்‌ அண்டவன்தான்‌ உதவி செய்தார்‌
என நினைத்து அலாவுதீன்‌ எல்லாம்‌ வல்ல
அல்லாவை மனமார வாழ்த்தினான்‌.

மனைவி ஜுபைதாவின்‌ தந்தைக்குப்‌ பதினாயிரம்‌
தினார்களைக்‌ கெொொடுத்துவிட்டான்‌. பாக்தாத்‌
கடைவீதியில்‌ ஒரு கடை ஏற்பாடு செய்து, வந்திருந்த
பொருள்களை விற்பனை செய்ய ஆரம்பித்தான்‌.
நாளடைவில்‌ பாக்தாத்‌ நகரிலேயே ஒரு பெரிய
வணிகனாகத்‌ திகழ்ந்தான்‌. அன்பு மனைவி ஜுபைதாவுடன்‌
அன்போடு வாழ்ந்து வந்தான்‌. நாளடைவில்‌ பாக்தாத்‌ நகரில்‌ அவன்‌ பெயர்‌ எங்கும்‌
பரவிற்று. கேள்வியுற்ற அரசன்‌ அலாவுதீனுக்கு
அரசவையில்‌ ஒரு கெளரவமான உத்தியோகம்‌
கொடுத்தான்‌. அலாவுதீன்‌ தினமும்‌ அரசவைக்குச்‌ சென்று
வந்தான்‌.

அப்படியிருக்கையில்‌ ஜுபைதா ஒரு நாள்‌ கடும்‌
ஜுரம்‌ காரணமாக ஜன்னி கண்டு இறந்து போனாள்‌.
காதல்‌ மனைவி இறந்து போன துக்கம்‌ தாளாது
அலாவுதீன்‌ பல நாட்களாக அரசவைக்குச்‌ செல்ல
மவேயில்லை. மன்னர்‌ சபைக்கு வராத காரணத்தை
விசாரித்தார்‌. மனைவி இறந்து போனதால்தான்‌
வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டார்‌. யாஸ்மின்‌
என்ற அழகிய பெண்ணை மீண்டும்‌ அலாவுகீனுக்கு
மணம்‌ செய்து வைத்தார்‌. ஜுபைதா மறைந்த துக்க
நிகழ்ச்சியைக்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக அலாவுதீன்‌ மறக்க
ஆரம்பித்தான்‌.

புதிதாக அலாவுதீன்‌ மணந்து கொண்ட அழகி
யாஸ்மினை அரசாங்க அதிகாரி ஒருவரின்‌ மகன்‌ மணம்‌
செய்து கொள்ள நினைத்திருந்தான்‌. அவளை அலாதிீவுன்‌
மணந்து கொண்டதும்‌ அவனுக்குப்‌ பொறாமை
அதிகமாயிற்று. எப்படியாவது அலாவுதீனிடமிருந்து
யாஸ்மினை அபகரித்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று
திட்டமிட்டான்‌. அவன்‌ ஒரு திருடனுடைய உதவியை
நாடினான்‌.

அத்‌ திருடன்‌ ஒரு நாள்‌ அரண்மனையில்‌ மன்னரின்‌
விலை மதிக்க முடியாத அபரணம்‌ ஒன்றைக்‌ திருடி,
யாரும்‌ அறியா வண்ணம்‌ அலாவுதீனின்‌ வீட்டில்‌ ஓர்‌
அறையில்‌ புதைத்து விட்டு ஓடி விட்டான்‌. மறு நாள்‌ அரண்மனையில்‌ திருடு போனது
தெரியவந்தது. சேனாவீரர்கள்‌ நகரெங்கும்‌ திருடனைத்‌
தேடத்‌ தொடங்கினார்‌. பொறாமை பிடித்த அதிகாரியின்‌
மகன்‌, அலாவுதீனே திருடன்‌ என்றும்‌, திருடிய நகையைத்‌
தன்வீட்டு அறையில்‌ புதைத்து வைத்திருக்கிறான்‌ என்றும்‌
மன்னருக்குத்‌ தகவல்‌ கொடுத்தான்‌. அலாவுகீனின்‌ வீடு
சோதனையிடப்பட்டது. புதைத்திருந்த நகை மீட்கப்‌
பட்டது.

கோபம்‌ கொண்ட மன்னர்‌ அலாவுதீனைச்‌
சிரச்சேதம்‌ செய்துவிட தண்டனை வழங்கினார்‌. அந்த
நேரத்தில்‌ அலாவுதீனின்‌ மனைவி யாஸ்மின்‌ ஏழுமாத
கர்ப்பிணியாக இருந்தாள்‌.

அலாவுகீனின்‌ நண்பன்‌ ஒருவன்‌ தக்க சமயத்தில்‌ ஒரு
தந்திரம்‌ செய்து, கொலையாளிகளிடமிருந்து மீட்டு,
அவனை அழைத்துக்‌ கொண்டு அலெக்ஸாண்டிரியா
நகருக்கு ஓடிப்‌ போனான்‌. அங்கே சென்று வர்த்தகம்‌
செய்து பிழைத்து வந்தான்‌ அலாவுதீன்‌.

அலாவுதீன்‌ தன்‌ தந்திரத்தால்‌ கொலையண்டான்‌
என்பதை அறிந்த அதிகாரியின்‌ மகன்‌, யாஸ்மினை
அடைய முயற்சித்தான்‌. அவள்‌ மறுக்கவே மனமுடைந்த
அவன்‌ நாளடைவில்‌ வியாதியால்‌ பீடிக்கப்பட்டு இறந்து
போனான்‌.

பத்தாம்‌ மாதம்‌ யாஸ்மின்‌ ஓர்‌ அண்மகனை
பபற்றெடுத்தாள்‌. அலாவுதீனின்‌ வியாபார நண்பன்‌
ஒருவன்‌ அக்குழந்தையை வளர்த்து வந்தான்‌. அக்‌
குழந்தைக்கு அஸ்லான்‌ என்று பெயரிட்டனர்‌.

அஸ்லானுக்கு வயது பதினாறு ஆயிற்று. தன்‌
தகப்பன்‌ மேல்‌ திருட்டுக்‌ குற்றம்‌ சுமத்திய திருடனை ஒரு நாள்‌ அஸ்லான்‌ சந்தித்தான்‌. 'தன்‌ தந்தை திருடன்‌ இல்லை
யயென்பதையும்‌, உண்மைத்‌ திருடன்‌ கண்டுபிடிக்கப்‌
பட்டிருக்கிறான்‌' என்பதையும்‌ பாக்தாத்‌ மன்னரிடம்‌
சொன்னான்‌.

மன்னரும்‌ திருடனை அழைத்து விசாரித்தார்‌.
உண்மை புலனாயிற்று. அவசரத்தால்‌ திருடன்‌ என்று
முடிவு செய்து அலாவுதீனைக்‌ கொன்று விட்டோமே
என்று மன்னர்‌ மனங்‌ கலங்கினார்‌.

அப்போது அஸ்லானை வளர்த்த அலாவுதீனின்‌
நண்பன்‌ மன்னரைப்‌ பார்த்து வணங்கி “மன்னரே! தாங்கள்‌
மன்னிப்பதாக இருந்தால்‌ உயிருடன்‌ அலாவுதீனை நான்‌
உங்கள்‌ முன்னிலையில்‌ கொண்டுவர முடியும்‌” என்று
சொல்லி நடந்த எல்லா விவரங்களையும்‌ கூறினான்‌.

பேராச்சரியமடைந்த மன்னர்‌ தாம்‌ மனதார
மன்னிப்பதாகவும்‌, உடனே அலாவுதீனை அரசவைக்குக்‌
கூட்டி வரவும்‌ உத்தரவிட்டார்‌. அலக்ஸாண்‌
டி ரியாநகரிலிருந்து அலாவுதீன்‌ கூட்டி வரப்பட்டான்‌.
அரசர்‌ அவனை மனதார வாழ்த்தி வரவேற்றார்‌.
அரண்மனையிலேயே அலாவுதீனுக்குப்‌ பெரிய
உத்தியோகம்‌ ஒன்றைக்‌ கொடுத்துத்‌ தன்னுடனேயே
வைத்துக்‌ கொண்டார்‌.




tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing