சனி, 23 மே, 2020

tamil story - ஒரு நாள்‌ ராஜா கதை - 1001 அரேபியன் கதை


ஒரு நாள்‌ ராஜா கதை - puthisali kathaigal


கலிபா ஹரூன்‌அல்‌ முஷ்த்‌ பாக்தாத்‌ நகரை அண்ட காலத்தில்‌
அபுல்ஹாசன்‌ என்பவன்‌ இருந்தான்‌. அவன்‌ தந்தை
இறக்கும்போது ஏராளமான அஸ்தியை அவனுக்கு விட்டுச்‌
சென்றார்‌. அபல்ஹாசன்‌ தன்‌ தந்தையின்‌ வியாபாரத்தைச்‌
சரியாகக்‌ கவனிக்காமல்‌, விருந்துகளிலும்‌, கேளிக்கை
விளையாட்டுகளிலும்‌ காலத்தைக்‌ கழித்தான்‌. பாதி சொத்து
கரையும்‌ வரை ஒன்றும்‌ தெரியாமல்‌ செலவழித்தவன்‌
பின்னர்‌ விழித்துக்கொண்டான்‌.

ஆகவே அன்றிலிருந்து ஒரு சபதம்‌ எடுத்துக்‌
கொண்டான்‌. “பழைய நண்பர்கள்‌ யாருடனும்‌ சேருவ
தில்லை; புதிய நண்பன்‌ யாராக இருந்தாலும்‌ ஓர்‌ இரவுக்கு
மேல்‌ அவர்களோடு பழகுவதில்லை” என்பதுதான்‌ அந்தச்‌
சபதம்‌ அந்தச்‌ சங்கற்பப்படி யே நடந்துவந்தான்‌.

அன்று முதல்‌ பழைய நண்பர்களைச்‌ சந்தித்தால்‌
முகத்தைத்‌ திருப்பிக்கொண்டு பாராத மாதிரி சென்று
விடுவான்‌. மூன்‌ பின்‌ அறியாத யாரையாவது வருந்தி தன்‌
வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வருவான்‌. பொழுது
புலருவதற்கு முன்னரே அவரை அனுப்பி வைத்து விடுவான்‌.
மீண்டும்‌ என்றாவது அவர்களை வழியில்‌ சந்தித்தாலும்‌
ஒன்றும்‌ பேசாமலும்‌, முன்‌ பின்‌ தெரியாதது போலும்‌
பாவனை செய்து கொண்டே போய்விடுவான்‌. இப்படியே



காலத்தைக்‌ கழித்து கொண்டு வந்தான்‌.
ஒரு நாள்‌ இரவு அரசர்‌ மாறு வேடத்தில்‌ நகர்ச்‌
சோதனைசக்காகக்‌ கடைவீதி வழியே வந்து கொண்டி ருந்தார்‌.
புதியவராகக்‌ காணப்படவே அபுல்‌ ஹாசன்‌ அவரை நிறுத்தி
“அன்பரே! நீங்கள்‌ இன்றிரவு என்னுடன்‌ விருந்துண்ண
வரவேண்டும்‌” என்று அன்புடன்‌ கூறினான்‌. விசித்திரமாக
இருக்கவே மன்னரும்‌ ஒப்புக்‌ கொண்டு அபுல்‌ ஹாஸனோடு
விருந்துக்குச்‌ சென்றார்‌.

முன்பின்‌ தெரியாத தன்னை அழைத்துச்‌ சென்று
பரிவுடன்‌ விருந்திட்ட அபுல்ஹாசனைப்‌ பற்றி அச்சரியப்‌
பட்டு அவன்‌ வரலாற்றைக்‌ கேட்டார்‌ மாறுவேடத்தில்‌ இருந்த
மன்னார்‌.

அபுல்ஹாசன்‌ விருந்தினரிடம்‌ தன்‌ பழைய கதைகளைக்‌
கூறினான்‌. “பொருள்‌ இருக்கும்‌ வரையில்‌, விருந்து வைபவங்கள்‌
செய்யும்வரைதான்‌ நண்பர்கள்‌ இருப்பார்கள்‌, விருந்து
கொடுப்பதையும்‌, கேளிக்கைகளை நிறுத்தினாலும்‌ நண்பார்கள்‌
எனப்படுபவர்கள்‌ பறந்தோடிப்‌ போவார்கள்‌. இதை
நிதரிசனமாக என்‌ வாழ்க்கையில்‌ கண்டேன்‌. அது முதல்‌
நான்‌ பழைய விசுவாசமற்ற நண்பர்களை விருந்துக்கு
அழைப்பதில்லை; தினம்‌ ஒரு புதியவரை அழைத்து வந்து
விருந்து கொடுப்பதை வழக்கமாகக்‌ கொண்டிருக்கிறேன்‌.
இன்று நீங்கள்‌ கிடைத்தீர்கள்‌, நாம்‌ விருந்து சாப்பிட்டு,
பின்னர்‌ மதுவுண்டு மகிழலாம்‌” என்றான்‌.

அபுல்ஹசானின்‌ விசித்திர வழக்கம்‌ மன்னருக்கு
ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று. 'அண்டவன்‌ உனக்கு
அருள்‌ புரியட்டும்‌' என்று வாழ்த்தினார்‌.

பிறகு அபுல்ஹாசனுக்குத்‌ தெரியாமல்‌ அவன்‌
அருந்தும்‌ மதுவில்‌ மயக்க மருந்தைக்‌ கலந்துவிட்டார்‌. அந்த
மதுவைக்‌ குடித்ததும்‌ மயங்கி விழுந்துவிட்டான்‌
அபல்ஹாசன்‌.
அரசன்‌ உடனே மாளிகையின்‌ வெளியே வந்து
தனக்குக்‌ காவலாக வந்த மெய்க்காப்பாளர்களைக்‌
கொண்டு, மயங்கிக்‌ கிடந்த அபுல்ஹாசனை அரண்‌
மனைக்குக்‌ கொண்டு போகச்‌ சொன்னார்‌. அவர்கள்‌
அவனைத்‌ தூக்கிச்‌ சென்று அரண்மனையில்‌ கிடத்தினர்‌.

மன்னர்‌: “மயங்கிக்‌ கிடப்பவன்‌ விழித்தெழுந்ததும்‌
அவனை எல்லோரும்‌ 'மகாராஜ்‌' என்று அழைக்க
வேண்டும்‌, ராஜமரியாதைகள்‌ செய்யவேண்டும்‌, அவர்‌
அணைப்படியே எல்லோரும்‌ நடந்து கொள்ள வேண்டும்‌”
என்று அணையிட்டார்‌.

மறுநாள்‌ காலைப்பொழுதில்‌ விழித்தெழுந்தான்‌
அபுல்ஹாசன்‌. அவனெதிரில்‌ அனைவரும்‌ கைகட்டி நின்று
“மன்னாதி மன்னரே! நீங்கள்‌ வாழ்க” என்று முழந்தாளிட்டு
வணங்கி வாழ்த்தினர்‌.

அபுல்ஹாசன்‌ ஒன்றும்‌ புரியாமல்‌ விழித்தான்‌. தான்‌
இருப்பதோ அரண்மனையாய்‌ இருக்கிறது. அனைவரும்‌
தன்னை மாமன்னர்‌ என்றே அமைக்கின்றனர்‌; மரியாதை
செய்கின்றனர்‌. இது கனவா நனவா என்று நினைத்துக்‌
கலங்கினான்‌. முன்னாளிரவு தன்னுடன்‌ விருந்துண்டவன்‌
ஒரு மந்திரவாதியாய்‌ இருப்பான்‌ போலும்‌. இந்த
மாற்றங்களுக்கெல்லாம்‌ அவனேதான்‌ காரணமாக
இருக்கவேண்டும்‌ என்றும்‌ எண்ணினான்‌.

பின்னர்‌ அபுல்ஹாசன்‌ பலரை அழைத்தான்‌.
அரண்மனையிலிருந்த அனைவரும்‌ அவனை 'மாமன்னரே'
என்று அழைத்து, தரையளவு தாழ்ந்து வணங்கி மரியாதை
செய்தனர்‌. அலங்காரமாக உடையணிந்திருந்த அடிமைப்‌
பெண்கள்‌ அவனுக்கு அரசமரியாதையுடன்‌ பணிவிடை



செய்ய அரம்பித்தனர்‌.உடனே ஓர்‌ அரசாங்க அதிகாரியை அழைத்தான்‌.
“நீ சென்று அபுல்ஹாசன்‌ என்பவனின்‌ தாயாரிடம்‌ நூறு
தினார்கள்‌ கொடுத்துவிட்டு வரவேண்டும்‌. பின்னர்‌
அபுல்ஹாசனின்‌ அண்டை வீட்டுக்காரனுக்கு நூறு
கசையடிகள்‌ கொடுத்துவிட்டு வரவேண்டும்‌ என்று
அணையிட்டு, அபுல்ஹாசன்‌ வீட்டு முகவரியையும்‌
கொடுத்தான்‌. அபுல்ஹாசன்‌ இரவில்‌ நன்றாகக்‌
குடித்துவிட்டுக்‌ காட்டுக்‌ கூச்சலாய்‌ பாட்டுப்பாட
ஆரம்பித்துவிடுவான்‌. இது பொறுக்காத அண்டை
வீட்டுக்காரன்‌ அவனுடன்‌ அடிக்கடி சண்டைபிடிப்பான்‌.
அதற்காக வஞ்சம்‌ தீர்க்கவே தன்‌ அண்டை எீட்டுக்‌
காரனுக்கு நூறு கசையடிகள்‌ தர அணையிட்டான்‌.
அதன்படியே அணை நிறைவேற்றப்பட்டது.
ஒளிந்திருந்து அபுல்ஹாசன்‌ செய்யும்‌ அட்டகாசங்களை
யெல்லாம்‌ ரசித்தார்‌ கலீபா.

கலீபா அவர்கள்‌ யாருக்கும்‌ தெரியாமல்‌ மீண்டும்‌
மயக்க மருந்தை மதுவில்‌ கலந்து அபுல்ஹாசனுக்குக்‌
கொடுத்துவிட்டார்‌. சற்றுநேரத்தில்‌ மயக்கமடைந்து
விழுந்தான்‌. அவன்‌ அணிந்திருந்த மன்னருக்குடைய
உடைகளைக்களையச்‌ செய்தார்‌. “இவனைத்‌ தூக்கிச்‌
சென்று அவன்‌ வீட்டில்‌ கிடத்திவிட்டு வாருங்கள்‌”
என்று சேவகர்களுக்கு அணையிட்டார்‌ கலீபா.
அதன்படியே அபுல்ஹாசனை அவன்‌ வீட்டில்‌ கொண்டு
போய்க்‌ கிடத்திவிட்டு வந்தனர்‌.

மறுநாள்‌ மதியம்‌ வரை தூங்கிக்கொண்டு
கிடந்தான்‌. அதன்‌ பின்னரே மயக்கம்‌ தெளிந்து
எழுந்தான்‌. உடனே அதிகாரக்‌ குரலில்‌, “ஏய்‌! அடிமை
நாய்களே, எங்கே போனீர்கள்‌. பசிக்கிறது, தங்கத்தட்டில்‌
ரொட்டிகளும்‌, பழங்களும்‌ கொண்டு வாருங்கள்‌” என்று
கூவினான்‌.
உடனே அபுல்ஹாசனின்‌ தாயார்‌ ஓடிவந்து “ மகனே,
உனக்கென்ன வந்தது? ஏதாவது கனவு கண்டாயா?
என்றாள்‌.

“திழவியே, மரியாதையாகப்‌ பேசு. நான்‌ யார்‌
தெரியுமா? கலீபா ஹரூன்‌ அல்ரஷ்த்‌ அவர்களுடன்‌ நீ
பேசுகிறாய்‌. ஓடிப்போய்‌, அடிமைப்‌ பெண்களைக்‌
கூப்பிட்டுச்‌ சாப்பாடு கொண்டு வரச்‌ சொல்‌” என்றான்‌.

அவன்‌ தாயாருக்கு ஒன்றுமே புரியவில்லை.
மகனுக்குப்‌ பைத்தியம்‌ பிடித்துவிட்டது என்றே
கருதினாள்‌. கூச்சலிட்டு அக்கம்‌ பக்கத்தவார்களைக்‌
கூப்பிட்டாள்‌. எல்லோரும்‌ வந்து அனைவரும்‌ அவன்‌
செய்கைகளைக்‌ கண்டு பைத்தியம்‌ என்றே முடிவுசெய்து
அவன்‌ தலையில்‌ தண்ணீரைக்‌ கொட்டினர்‌. பின்னர்‌
கொஞ்சம்‌ தண்ணீரையும்‌ குடிக்கக்‌ கொடுத்தனர்‌. அவன்‌
மயக்கம்‌ தீர்ந்தது. தான்‌ அனுபவித்ததெல்லாம்‌ கனவில்‌
தான்‌ என்று முடிவுகட்டிக்‌ கொண்டான்‌. பின்னர்‌
யோசித்ததில்‌ தான்‌ முன்னாள்‌ இரவில்‌ ஒருவனுக்கு
விருந்தளித்தோமே அவன்‌ ஓரு மந்திரவாதிபோலும்‌;
அவனால்தான்‌ இத்தனை அவமானங்களும்‌ நேர்ந்தது
என்று எண்ணிக்கொண்டான்‌.

நாட்கள்‌ ஓடின, மீண்டும்‌ ஒருநாள்‌ கலீபா அவர்கள்‌
மாறு வேடத்தில்‌ அபுல்ஹாசனைச்‌ சந்தித்தார்‌. தனக்கு
விருந்தளிக்குமாறு கேட்டார்‌.அபுல்ஹாஸன்‌ அடையாளம்‌ கண்டு கொண்டான்‌.
இவரோடு ஓர்‌ இரவு விருந்துண்டு தான்‌ பைத்தியம்‌
அனதை நினைத்துக்கொண்டான்‌. உடனே, “ஐயா! நீங்கள்‌
பெரிய மந்திரவாதியாய்‌ இருப்பீர்‌ போலும்‌. நான்‌
உங்களோடு விருந்துண்டதும்‌ மயங்கி, என்னைக்‌ கலீபாவாகவே நினைத்துக்‌ கொண்டு, அட்டகாசங்கள்‌
செய்தேன்‌. அக்கம்‌ பக்கத்தவர்கள்‌ எல்லாம்‌ கூடி என்னைப்‌
பைத்தியம்‌ என்றே முடிவு செய்து, தலையில்‌ தண்ணீர்‌
கொட்டி அவமானப்‌ படுத்தினர்‌. அந்த அவமானமே
போதும்‌. இனிமேல்‌ உம்முடன்‌ நான்‌ விருந்துண்ணவும்‌
மாட்டேன்‌; பைத்தியமாகவும்‌ மாட்டேன்‌, தயவு செய்து
போய்‌ வாருங்கள்‌” என்றான்‌.

கலீபா அவர்கள்‌ (இரக்கங்‌ கொண்டு, தன்‌ மாறு
வேஷத்தைக்‌ கலைத்து, தானே வந்து விருந்தில்‌ மயக்க
மருந்து கொடுத்து, அரண்மனைக்குத்‌ தூக்கிச்‌ செல்லச்‌
செய்து, 'ஒரு நாள்‌ கலீபாவாக' உம்மை இருக்க வைத்து,
வேடிக்கைப்‌ பார்த்தேன்‌" என்றார்‌.

கலீபா அல்ரஷ்த்‌ அவர்கள்‌, நிற்பதைக்‌ கண்ட அபுல்‌
ஹாசன்‌ அவர்‌ காலில்‌ வீழ்ந்து வணங்கி, தன்னை
மன்னிக்குமாறு வேண்டினான்‌.

மாமன்னர்‌ கலீபா அவர்கள்‌, மறுநாள்‌ அபுல்‌
ஹாசனை அரண்மனைக்கு வரவழைத்தார்‌ ஓர்‌ அழகிய
அடிமைப்‌ பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்துப்‌
பத்தாயிரம்‌ தினார்‌ பரிசளித்து அனுப்பி வைத்தார்‌.

மணப்பெண்ணோடும்‌ பரிசுப்‌ பொருள்களுடனும்‌,
பத்தாயிரம்‌ தினார்களுடனும்‌ வீட்டுக்கு வந்து
அபுல்ஹாசனுக்குத்‌ தலைகால்‌ புரியவில்லை. மீண்டும்‌
கோலாகல வாழ்வைத்‌ தொடங்கி விட்டான்‌. பழைய
நண்பர்கள்‌ சேர்ந்தனர்‌. கொஞ்ச நாட்களில்‌ பணம்‌
எல்லாம்‌ கேளிக்கை விளையாட்டுக்களிலும்‌, குடியிலு
மாகத்‌ தீர்ந்தது. நண்பர்களும்‌ பணமில்லாத அபுல்‌
ஹாசனை மதிக்காமல்‌ போயினர்‌. மீண்டும்‌ பழைய
நிலைக்கே வந்துவிட்டான்‌.

மனைவியுடன்‌, பணமில்லாது தவித்தான்‌. அவன்‌
மனைவி அரண்மனையில்‌ இருக்கும்போது ராணி
ஜுபேடா அவர்களுக்கு அடிமையாய்‌ இருந்தவள்‌ அகவே
மனைவியை ராணியிடம்‌ சென்று உதவி கேட்டுப்‌ பணம்‌
வாங்கலாம்‌ என்று முடிவு செய்து ஒரு தந்திரம்‌ செய்தான்‌.

மறுநாள்‌ அபுல்ஹாசன்‌ தன்‌ மனைவியை அழைத்து.
“அன்பே! நீ அரண்மனைக்குத்‌ தலைவிரி கோலமாய்‌,
கண்ணீரும்‌ கம்பலையுமாகச்‌ சென்று ராணியை சந்திக்க
வேண்டும்‌, என்‌ கணவன்‌ இறந்துவிட்டான்‌; நல்லடக்கம்‌
செய்யக்‌ கூட பணம்‌ இல்லை என்று கதறி அழவேண்டும்‌.
ராணி இரக்கப்பட்டு உன்னிடம்‌ பணம்‌ கொடுத்‌
தனுப்புவாள்‌, நான்‌ சொன்னது போலவே நடித்துப்‌ பணம்‌
வாங்கிக்கொண்டுவா நாம்‌ சந்தோஷமாய்‌ இருக்கலாம்‌
என்று யோசனை சொல்லிக்‌ கொடுத்தான்‌.

அவள்‌ கணவன்‌ சொல்லிக்‌ கொடுத்தபடியே அழகாக
நடித்தாள்‌. ராணியின்‌ முன்‌ அழுது கதறினாள்‌. தன்னிடம்‌
முன்னர்‌ அடிமையாய்‌ இருந்தவளின்‌ கணவன்‌ இறந்து
விட்டானே என்று மனமிரங்கி, நல்லடக்கம்‌ செய்ய
ஆயிரம்‌ தினார்கள்‌ கொடுத்தனுப்பினாள்‌ ராணி.
கணவரிடம்‌ கொண்டு வந்து பணத்தைக்கொடுத்தாள்‌.

பின்னர்‌ அபுல்ஹாசன்‌, மனைவியிடம்‌, “தற்போது நீ
இறந்து போனதாக அழுது நடித்து மன்னரிடம்‌ நான்‌
பணம்‌ வாங்கிவருகிறேன்‌ பார்‌!” என்றான்‌. அவ்வாறே
கலீபா அவர்களிடம்‌ சென்று அழுது புலம்பி தன்‌ மனைவி
இறந்து போனதாகக்‌ கூறி, நல்லடக்கம்‌ செய்யவேண்டும்‌
என்று பொய்‌ சொல்லி அவனும்‌ ஆயிரம்‌ தினார்கள்‌



வாங்கிக்கொண்டு வந்துவிட்டான்‌.மதிய உணவின்‌ போது கலீபா அவர்களும்‌ ராணி
ஜுபேடா அவர்களும்‌ சந்தித்தனர்‌.

கலீபா அவர்கள்‌ ராணியிடம்‌ “ஐயோ பாவம்‌ நான்‌
திருமணம்‌ செய்து வைத்த அபுல்ஹாசனின்‌ மனைவி
இறந்து போய்‌ விட்டாளாம்‌. அவன்‌ அழுது புலம்பியது
பரிதாபமாக இருந்தது. நான்‌ இறந்துபோன அவன்‌
மனைவியை நல்லடக்கம்‌ செய்ய ஆயிரம்‌ தினார்கள்‌
கொடுத்தனுப்பினேன்‌” என்றார்‌.

திடுக்கிட்ட ராணி, “இல்லவே இல்லை, அபுல்‌
ஹாசன்தான்‌ இறந்து போனான்‌ என்று அவன்‌ மனைவி
என்னிடம்‌ வந்து அழுதாளே! நானும்‌ அவனை
நல்லடக்கம்‌ செய்ய ஆயிரம்‌ தினார்கள்‌
கொடுத்தனுப்பினேன்‌” என்றாள்‌.

முடிவில்‌ தந்திரமாக அபுல்ஹாசன்‌ தங்களை
ஏமாற்றிப்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டான்‌ என்று தெரிந்து
கொண்டனர்‌ அரச தம்பதிகள்‌.

எனவே, ராணியவர்கள்‌ ஓர்‌ அடிமைப்‌ பெண்ணை
அபுல்ஹாசனின்‌ வீட்டிற்குச்‌ சென்று பார்த்து வர
ஏவினாள்‌. அந்த அடிமைப்‌ பெண்‌ அங்குப்‌ பார்க்கப்‌
போனாள்‌. ராணிதான்‌ வேவு பார்க்க அடிமைப்‌
பெண்ணை அனுப்பியிருக்கிறாள்‌ என்று யூகித்த அபுல்‌
ஹாசனின்‌ மனைவி, வந்தவளைக்‌ கட்டிக்கொண்டு
கோவென அழுதாள்‌. அதற்குள்‌ வெள்ளைத்‌ துணியால்‌
கால்‌ முதல்‌ தலைவரை மூடிக்கொண்டு பிணம்‌ போல்‌
அசையாமல்‌ அடுத்த அறையில்‌ படுத்துக்கொண்டான்‌
அபுல்ஹாசன்‌. ராணியால்‌ அனுப்பப்பட்டவள்‌, அந்த
அறையில்‌ நுழைந்து பார்த்தாள்‌. வெள்ளைத்துணியால்‌ மூடப்பட்ட பிணத்தைத்‌ கண்டு, இறந்தது அபுல்ஹாசன்‌
தான்‌ என்று நினைத்து, ஓடோடி, அரண்மனை சென்று
தான்‌ கண்டதை ராணியிடம்‌ கூறினாள்‌.

சற்று நேரம்‌, கழித்து அரசன்‌ ஓர்‌ அண்‌ அடிமையை
அபுல்ஹாசன்‌ வீட்டிற்கு அனுப்பி 'இறந்தது யார்‌' என
அறிந்து வரும்படி. ஏவினான்‌. அந்த அடிமை தூரத்தே
வருவதை அறிந்த அபுல்ஹாசன்‌ தன்‌ மனைவியை
அறையில்‌ படுக்கவைத்து, வெள்ளைத்‌ துணியால்‌
மூடி வைத்துவிட்டு வெளியே வந்து வாயிலும்‌, வயிற்றிலும்‌
அறைந்துக்கொண்டு ஓவெனக்‌ கதறிக்கொண்டு இருந்தான்‌.
அதைக்‌ கண்ட அந்த அடிமை நேரே மன்னரிடம்‌ சென்று
இறந்தது அபுல்ஹாசனின்‌ மனைவியேதான்‌ என்று
சொன்னான்‌.

அரசனும்‌ அரசியும்‌ இதில்‌ ஏதோ சூது இருக்கிறது
என்று எண்ணி இருவரும்‌ ஹாசன்‌ வீட்டிற்குப்‌ போய்‌
நேரிலேயே பார்த்து சந்தேகத்தைத்‌ தீர்த்துக்கொள்ள
எண்ணினர்‌.

முன்பு இங்குபோய்ச்‌ செய்தி அறிந்து வந்த
அடிமைகளை அழைத்துக்‌ கொண்டு, நால்வாரும்‌ அபுல்‌
ஹாசன்‌ வீட்டிற்குச்‌ சென்றனர்‌. இதை அறிந்த அபுல்‌
ஹாசன்‌ அபத்தில்‌ மாட்டிக்‌ கொண்டோம்‌ என்று கூறி,
இருவருமாக அறையினுள்‌ ஓடிச்சென்று பிணம்போல்‌
நீட்டிப்படுத்துக்‌ கொண்டு வெள்ளைத்‌ துணியால்‌
மூடி ப்படுத்துக்‌ கொண்டனர்‌.

வீட்டினுள்‌ நுழைந்த அரசனும்‌, அரசியும்‌, 'இது
என்ன விந்தை இருவரும்‌ இறந்து கிடக்கின்றனரே' என்று
வியந்தனர்‌. இதில்‌ ஏதோ சூது இருக்கிறது என்று எண்ணிய மன்னர்‌ பிணம்‌ போல்‌ நீட்டிப்‌ படுத்திருக்‌
கின்றவார்களின்‌ தலைமாட்டில்‌ போய்‌ அமர்ந்தார்‌.

பின்னர்‌, “உங்கள்‌ இருவரில்‌ யார்‌ முதலில்‌ இறந்தது
என்று சொன்னால்‌ ஆயிரம்‌ தினார்கள்‌ பரிசு அளிப்பேன்‌"
என்று சொன்னார்‌. அரசன்‌ கூறியதைக்‌ கேட்ட அபுல்‌
ஹாசன்‌ உடனே துள்ளி எழுந்து “நான்தான்‌ முதலில்‌
இறந்தேன்‌!” என்று கூறி, அயிரம்‌ தினார்கள்‌ எனக்கே பரிசு
அளிக்கே வேண்டும்‌ என்றும்‌ கூவினான்‌.

திடீரென அபுல்‌ ஹாசனின்‌ மனைவி எழுந்து “நான்‌
தான்‌ முதலில்‌ இறந்தது. அவர்‌ பொய்‌ சொல்கிறார்‌,” என்று
கூறினாள்‌.

அதைக்‌ கேட்ட அரசன்‌ அவர்கள்‌ இருவரும்‌ பொய்‌
சொல்லி ஏமாற்றியதற்காகக்‌ கடி.ந்துக்‌ கொண்டார்‌.

அபுல்‌ ஹாசனைப்‌ பார்த்து, “எதற்காக இப்படிப்‌
பொய்‌ சொல்லி ஏமாற்றினாய்‌” என்று கேட்டார்‌.

அபுல்‌ ஹாசன்‌ மன்னனின்‌ காலில்‌ விழுந்து வணங்கி
“மாமன்னரே! மன்னிக்க வேண்டும்‌. எங்களிடம்‌
இருந்தபொருள்‌ அனைத்தும்‌ செலவு அகிவிட்டது. வாழ
வழியில்லை. அகவேதான்‌ நான்‌ இறந்ததாக என்‌
மனைவியும்‌, மனைவி இறந்ததாக நானும்‌ தங்களிட
மிருந்தும்‌ அரசியிடம்‌ இருந்தும்‌ ஏமாற்றி பணம்‌ வாங்கி

வந்தோம்‌” என்றான்‌.

“பின்னர்‌, இப்போது நீங்கள்‌ தருவதாக வாக்களித்த
ஆயிரம்‌ தினார்களையும்‌ கொடுங்கள்‌” என்றான்‌ அபுல்‌
ஹாசன்‌. அவன்‌ சொன்னதைக்‌ கேட்ட அரசன்‌ வாய்விட்டுச்‌
சிரித்தார்‌. சொன்னபடியே ஆயிரம்‌ தினார்களைக்‌
கொடுத்தார்‌. பின்னர்‌ இனி இம்மாதிரி ஏமாற்றாதே என்று
கூறி அவனுக்குத்‌ தக்க ஒரு நிரந்தர வருமானத்திற்காக ஒரு
உத்தியோகத்தை அளித்தார்‌.




tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing