சனி, 23 மே, 2020

Mannar Kathaigal - Arabian night Story in Tamil puthisali kathaigal

போலி மன்ணர்‌ கதை - 1001 அரேபியன் கதை

போலி மன்ணர்‌ கதை - puthisali kathaigal

Mannar Kathaigal - Arabian night Story in Tamil puthisali kathaigal
puthisali kathaigal

முன்னொரு காலத்தில்‌ ஒரு நாள்‌ இரவு கலிபா ஹருண்‌ அல்‌ ரஷித்‌ அவர்கள்‌
நகர்‌ சோதனைக்குப்‌ புறப்பட்டார்‌. தன்‌ மந்திரி
ஜாப்பரையும்‌ உடன்‌ அழைத்துக்‌ கொண்டார்‌.
வியாபாரிகளைப்‌ போல்‌ மாறுவேடம்‌ பூண்ட மன்னரும்‌,
மற்றவர்களும்‌ பல தெருக்களைச்‌ சுற்றிப்‌ பின்னர்‌ டைகரிஸ்‌
நதிக்கரையை அடைந்தனர்‌. ஆற்றங்கரையில்‌ ஒரு கிழவன்‌
ஆற்றின்‌ ஓரமாக இருந்த ஒரு படகில்‌ அமர்ந்திருந்தான்‌.
இருவரும்‌ அந்தக்‌ கிழவனை பார்த்து, 'எங்களைப்‌ படகில்‌ ஏற்றிக்‌ கொண்டு சிறிது தூரம்‌ ஆற்றில்‌ சுற்றிவந்தால்‌
உனக்குப்‌ பணம்‌ தருவோம்‌' என்று கூறினர்‌.

அதைக்கேட்ட படகோட்டி கிழவன்‌ மாறு
வேடத்திலிருந்த கலிபா அவர்களை யார்‌ என்று அறியாமல்‌
“நீ என்ன முட்டாளாய்‌ இருக்கிறாய்‌. அரசனின்‌ படகு
அற்றில்‌ பவனி வரும்‌ நேரம்‌ என்பது கூடத்‌ தெரியாமல்‌
உன்‌ பேச்சைக்‌ கேட்டுப்‌ படகை ஓட்டினால்‌ என்‌ தலை
தப்பாது” என்றான்‌.

கலிபா அவர்களுக்கு ஒன்றும்‌ விளங்கவில்லை.
அரசனாவது படகில்‌ பவனி வருவதாவது! ஒன்றும்‌
புரியாமல்‌ திகைத்து, கிழவனை விவரமாகச்‌ சொல்லும்‌
படி.க்‌ கேட்டார்‌. அந்தக்‌ கிழவன்‌, “ஒவ்வொரு நாள்‌ இரவும்‌
இதே நேரத்தில்‌ அரசர்‌ தம்‌ நண்பர்களுடன்‌ படகில்‌ ஏறி
அற்றில்‌ செல்வது வழக்கம்‌, இம்மாதிரி ஒரு வருட
காலமாக நடைபெறுகிறது. அரசருடைய படகு பவனி
வரும்‌ நேரத்தில்‌ வேறே எந்தப்‌ படகும்‌ அற்றில்‌ செல்லக்‌
கூடாது. மீறிச்‌ சென்றால்‌ கொடிய தண்டனை கிடைக்கும்‌”
என்றான்‌. இதைக்‌ கேட்ட கலிபா வியப்படைந்தார்‌.
எனினும்‌ இந்த நிகழ்ச்சியை நேரிலேயே பார்க்கவேண்டும்‌
என்று நினைத்தார்‌. உடனே படகோட்டிக்‌ கிழவனைப்‌
பார்த்து, “உன்னுடைய படகில்‌ எங்களை ஏற்றிக்கொண்டு
அற்றின்‌ ஓரமாகச்‌ சென்று கொண்டிருந்தால்‌ போதும்‌,
அரசன்‌ பவனி வரும்‌ படகைப்‌ பார்க்க அவலாக
இருக்கிறது. உனக்கும்‌ நிறையப்‌ பணம்‌ தருவோம்‌” என்றார்‌.
பணம்‌ தருகிறேன்‌ என்று சொல்லியதைக்‌ கேட்ட
படகோட்டி சம்மதித்தான்‌. முன்னதாகவே பணத்தைப்‌
பெற்றுக்கொண்டு அவர்களைப்‌ படகில்‌ ஏற்றிக்‌ கொண்டு
நதி ஓரமே சென்று கொண்டு இருந்தான்‌.
எதிரே மன்னரின்‌ அலங்காரப்படகு வந்துகொண்டு
இருந்தது. அதைக்‌ கண்டதும்‌ படகோட்டிக்‌ கிழவன்‌ ஒரு
படுதாவினால்‌ படகிலிருந்த இருவரையும்‌ மூடி விட்டான்‌.
போர்த்திய போர்வையின்‌ பொத்தல்‌ வழியாக மன்னர்‌
கலிபாவும்‌, மந்திரியும்‌ எதிரில்‌ வந்த படகைப்‌ பார்த்துக்‌
கொண்டு இருந்தனர்‌.

அந்த அலங்காரப்‌ படகில்‌ பொன்னிற சிம்மா
சனத்தில்‌ ஒருவன்‌ உட்கார்ந்து இருந்தான்‌. அரச
உடைகளையே அணிந்திருந்தான்‌ . அவனைச்‌ சுற்றி அண்‌
பபெண்‌ அடிமைகள்‌ நின்று இருந்தனர்‌. மற்ற எல்லா
அடம்பர அலங்காரத்துடன்‌ படகு ஒளி வீசியது.
அலங்காரப்படகு தங்களைக்‌ கடந்து சென்றதும்‌ படகைக்‌
கரைக்கு ஓட்டும்படி. சொன்னார்‌. கிழவரைப்‌ பார்த்து,
“நாளை இரவு வருகிறோம்‌, இதைப்‌ போல்‌ எங்களை
ஏற்றிச்‌ சென்றால்‌ நிறைய பணம்‌ அளிப்போம்‌” என்றார்‌
மன்னர்‌. கிழவனும்‌ ஒப்புக்‌ கொண்டான்‌. மன்னரும்‌,
மந்திரியும்‌ அரண்மனையை அடைந்தனர்‌.

மறுநாள்‌ இரவு கலீபா அவர்களும்‌ ஜாபரும்‌
மாறுவேடம்‌ பூண்டு ஆற்றங்கரையில்‌ அந்தக்‌ கிழவனைக்‌
கண்டனர்‌. கிழவனுடையப்‌ படகில்‌ ஏறி ஆற்றின்‌ ஓரமாகச்‌
சென்று கொண்டிருந்தனர்‌. அதே நேரத்தில்‌ அரசனின்‌
அலங்காரப்‌ படகு வந்து கொண்டி ர௬ுப்பதைக்‌ கண்டனர்‌.
அந்தப்படகு தங்களைக்‌ கடந்தும்‌, அதன்பின்‌ தொடர்ந்து
செல்லுமாறு கிழவனைக்‌ கேட்டனர்‌. கிழவன்‌ பயத்தால்‌
நடுநடுங்கிப்‌ பின்‌ தொடர மறுத்தான்‌. உடனே கலீபா
அவன்‌ கையில்‌ 10 பொற்காசுகளைத்‌ திணித்தார்‌. கிழவன்‌
அரசன்‌ படகை யாரும்‌ அறியாமல்‌ பின்‌ தொடர்ந்தான்‌.
போலி அரசன்‌ பவனி வந்த படகு ஓர்‌ இடத்தில்‌
நிறுத்தப்பட்டது. அதில்‌ இருந்த எல்லோரும்‌ கரை
இறங்கினார்கள்‌. அதைக்‌ கண்ட கலீபா அதற்கருகிலேயே
தாங்கள்‌ ஏறி வந்த படகை நிறுத்தச்‌ சொன்னார்‌.
கலீபா அவர்கள்‌ மந்திரியையும்‌ உடன்‌ அழைத்துக்‌
கொண்டு கரையை அடைந்தார்‌. முன்னால்‌ சென்ற படகில்‌
இருந்த காவலாளிகள்‌ இவர்கள்‌ இருவரையும்‌ கைது
செய்து போலி அரசனின்‌ முன்‌ கொண்டு போய்‌
நிறுத்தினர்‌. “எங்கு வந்தீர்கள்‌, ஏன்‌ வந்தீர்கள்‌” என்று
அந்தப்‌ போலி அரசன்‌ மாறுவேடத்தில்‌ இருந்த கலீபா
அல்‌ அருண்‌ ரஷித்‌ அவார்களை விசாரித்தான்‌. “நாங்கள்‌
வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம்‌. வியாபார நிமித்தமாக
இங்கு வந்தோம்‌. வழி தவறி இங்கு வந்தோம்‌” என்று
கூறினார்‌.

அதைக்‌ கேட்ட போலி அரசன்‌ “நீங்கள்‌ வெளியூர்‌
என்பதால்‌ தண்டிக்காமல்‌ விடுகிறோம்‌. பாக்தாத்‌ நகர்‌
என்று சொல்லியிருந்தால்‌ இந்நேரம்‌ உங்கள்‌ தலைக்‌
கொய்யப்பட்டி ருக்கும்‌” என்றார்‌. பிறகு அந்தப்‌ போலி
மன்னன்‌ தன்‌ மந்திரியைப்‌ பார்த்து இன்று 'இரவு நம்‌
விருந்தினராக இருக்கட்டும்‌. உடனே அழைத்துச்‌ சென்று
அவர்கள்‌ விருந்து உண்ண ஏற்பாடு செய்‌' என்று உத்தரவு
இட்டார்‌.

வானளாவிக்‌ கம்பீரமாக நின்ற ஓர்‌ அரண்மனைக்கு
அனைவரும்‌ சென்றனர்‌. அரண்மனை எங்கும்‌ லஸ்தார்‌
விளக்குகளால்‌ அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தங்கத்‌
தகடுகளால்‌ அழகு பெற்று இருந்த கதவுகளைப்‌
பார்த்தவாறே அவர்கள்‌ உள்ளே சென்றனர்‌. ஒரு பெரிய
மண்டபம்‌ இருந்தது. மண்டபத்தில்‌ பச்சை நிறக்‌
கம்பளங்கள்‌ விரிக்கப்பட்டு இருந்தன. மண்டபம்‌ எங்கும்‌
திரைச்சீலைகளும்‌, படுதாக்களும்‌ தொங்கின. அந்த
விருந்து மண்டபம்‌ தேவலோகம்‌ போல்‌ எங்கும்‌ லஸ்தர்‌
விளக்குகளால்‌ அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்‌
கொண்டு இருந்தது. போலி மன்னன்‌ அந்த இருவரையும்‌ அழைத்துக்‌ கொண்டு அந்த மண்டபத்துக்குள்‌ சென்றார்‌.
இரத்தினத்தை இழைத்த தங்க சிம்மாசனம்‌ ஒன்று அங்கே
இருந்தது. கம்பீரமாக நடந்து சென்ற போலி அரசன்‌ அதில்‌
அமர்ந்து கொண்டான்‌. அவனுடைய அள்களும்‌
அசனங்களில்‌ அமர்ந்து கொண்டனர்‌. அவனுடைய
அடிமைப்‌ பெண்கள்‌ பலவிதமான உணவுப்‌ பண்டங்களை
அனைவருக்கும்‌ அளித்தனர்‌. பொற்கிண்ணங்களில்‌ மது
வழங்கப்பட்டது. அனால்‌ மாறுவேடத்தில்‌ இருந்த கலீபா
அல்‌ அருண்‌ ரஷித்‌ அவர்கள்‌ மது அருந்த மறுத்து
விட்டார்கள்‌. அதைக்‌ கவனித்த போலி மன்னன்‌ 'அவருக்கு
அது பிடிக்கவில்லை என்றால்‌ பழரசம்‌ கொடுங்கள்‌' என்று
உத்தரவு இட்டார்‌. அப்படியே வழங்கப்பட்டது.
அனைவரும்‌ விருந்து உண்டு, மதுவருந்தி ஆனந்தத்துடன்‌
நேரத்தைக்‌ கழித்தனர்‌. இசையும்‌, நடனமும்‌ தொடர்ந்தன.
அழகும்‌ வசீகரமும்‌ மிக்க இளம்‌ நங்கையர்‌ ஓடியாடி

அனைவரையும்‌ உபசரித்தனர்‌.

ஓர்‌ இளம்‌ அடிமைப்பெண்‌ அதி அற்புதமான சோக
$தம்‌ இசைத்துக்கொண்டு இருந்தாள்‌. பாட்டின்‌ இறுதியில்‌
போலி மன்னன்‌ சோகம்‌ தாளாது கதறினான்‌. தன்‌
உடைகளைக்‌ தானே கிழித்து எறிந்தான்‌, தலைமயிரை
பிய்த்துக்‌ கொண்டான்‌.

இவ்வளவு இனிய சுபாவமுடைய போலிமன்னனின்‌
உடல்‌ எல்லாம்‌ கசையடியால்‌ ஏற்பட்ட தழும்புகள்‌
இருப்பதை கலீபா அவர்கள்‌ கண்டு, மந்திரி ஜாபரிடம்‌
ஜாடையாகச்‌ சொல்லிக்கொண்டு இருந்தார்‌. அதைக்‌
கண்ட போலி மன்னன்‌ 'நீங்கள்‌ என்ன ரகசியம்‌
பேசுகிறீர்கள்‌' என்று கேட்டான்‌. மாறு வேடத்திலிருந்த
மந்திரி ஜாபர்‌ உடனே எழுந்து போலி மன்னனைத்‌
தரையளவு தாழ்ந்துவணங்கி, எங்களை மன்னிக்க
வேண்டும்‌, மன்னரே! தாங்கள்‌ மன்னராய்‌ இருந்தும்‌ தங்கள்‌ உடம்பில்‌ சவுக்கடித்‌ தழும்புக்கள்‌ இருப்பதைக்‌
கண்டோம்‌. அதன்‌ காரணம்‌ யாதாயிருக்கும்‌ என்று
பேசிக்கொண்டோம்‌” என்று சொன்னார்‌.

“அருமை நண்பர்களே! நான்‌ உண்மையில்‌ அரசன்‌
அல்லேன்‌. நான்‌ ஒரு நகை வியாபாரி. ஒரு நாள்‌ கடையில்‌
அமர்ந்து இருக்கும்‌ பொழுது பேரழகு வாய்ந்த பெண்‌
ஒருத்தி உள்ளே வந்தாள்‌. என்‌ கடையிலிருந்த நகைகளை
எல்லாம்‌ பார்த்தாள்‌, இறுதியாக ஒரு வைரமாலையைத்‌
தேர்ந்தெடுத்து அதன்‌ விலையைக்‌ கேட்டாள்‌; நான்‌
இலட்சம்‌ தினார்கள்‌ என்று சொன்னேன்‌. உடனே அவள்‌
இந்த வைர மாலையைத்‌ தன்‌ வீட்டுக்கு அனுப்பித்‌
தொகையைப்‌ பெற்றுக்‌ கொள்ளச்‌ சொன்னாள்‌; நான்‌ அந்த
மாலையை எடுத்துக்‌ கொண்டு அவள்‌ ஒீட்டிற்குச்‌
சென்றேன்‌, அவள்‌ வீட்டின்‌ வெளித்‌ திண்ணையில்‌
உட்கார்ந்திருந்தேன்‌. சற்று நேரத்தில்‌ ஒரு அடிமைப்‌ பெண்‌
வெளியே வந்தாள்‌, என்னை உள்ளே வந்து அமரும்படி
தன்‌ எஜமானி கூறினாள்‌. நானும்‌ உள்ளே சென்று ஓர்‌
இருக்கையில்‌ அமர்ந்திருந்தேன்‌.

சிறிது நேரத்தில்‌ அந்தப்‌ பேரழகி வந்தாள்‌. என்னைப்‌
பார்த்து மோகனப்‌ புன்முறுவல்‌ பூத்தாள்‌. அந்த மோககச்‌
சிரிப்பில்‌ நான்‌ கட்டுண்டு மயங்கிப்போனேன்‌. இருவரும்‌
சற்று நேரம்‌ பேசிக்கொண்டு இருந்தோம்‌. முடிவில்‌ தன்னை
மணந்துகொள்ள சம்மதமா என்று கேட்டாள்‌.
பெருமகிழ்ச்சியோடு நானும்‌ ஒப்புக்கொண்டேன்‌. உடனே
திருமணப்‌ பதிவாளர்‌ வரவமைக்கப்பட்டார்‌. அதே
இடத்தில்‌ எனக்கும்‌ அவளுக்கும்‌ திருமணம்‌ நடந்தேறியது.
நான்‌ கடையை மறந்து அவள்‌ மோகத்திலே மூழ்கி ஒரு
மாதம்‌ வரை வெளியே எங்கும்‌ செல்லாமல்‌ அவள்‌
வீட்டிலேயே தங்கிவிட்டேன்‌. 
ஒரு நாள்‌ அவள்‌ என்னிடம்‌ வந்து “நான்‌ வெளியே
சென்று வரவேண்டும்‌ . நான்‌ திரும்பி வரும்‌ வரையில்‌
இப்போது நீங்கள்‌ உட்கார்ந்திருக்கும்‌ இடத்தை விட்டு
நகரவே கூடாது.” என்று உத்தரவு இட்டாள்‌. அவளுடைய
விசித்திர நிபந்தனையைக்‌ கேட்டு நான்‌ சிரித்தேன்‌. நான்‌
இருந்த இடத்தை விட்டு நகருவதில்லை என்று
அல்லாவின்மீது ஆணை இடும்படி சொல்லி என்னிடம்‌
சத்தியம்‌ வாங்கினாள்‌. நானும்‌ எல்லாம்‌ வல்ல
பேரருளாளன்‌ மீது சத்தியம்‌ செய்து “இந்த இடத்தை
விட்டு நகர மாட்டேன்‌.” என்று கூறினேன்‌. அவள்‌
வெளியே சென்றாள்‌.

நான்‌ அங்கேயே அசையாமல்‌ அமர்ந்திருந்தேன்‌.
சற்று நேரத்தில்‌ அங்கே ஒரு கிழவி வந்தாள்‌. ராணியார்‌
என்னை அழைத்து வருமாறு சொன்னதாகச்‌ சொன்னாள்‌.
நான்‌ இனிமையாகப்‌ பாடவும்‌ செய்வேன்‌. நான்‌
ராணியாருக்காக பாடவேண்டும்‌ என்றே என்னை
அழைத்து வருமாறு சொன்னதாகக்‌ கூறினாள்‌. நான்‌ என்‌
மனைவிக்குக்‌ கொடுத்திருக்கும்‌ வாக்கைச்‌ சொல்லி இந்த
இடத்தைவிட்டு எழுந்து வருவதற்கில்லை என்று
சொன்னேன்‌. அனால்‌ அந்தக்‌ கிழவியோ நான்‌ வந்தே
ஆகவேண்டும்‌ என்று பிடிவாதம்‌ பிடித்தாள்‌. மறுத்தால்‌
ராணியாரின்‌ கோபத்திற்கு அளாகிக்‌ கடும்‌ தண்டனைக்கு
உள்ளாவேன்‌ என்றும்‌ பயமுறுத்தினாள்‌. நானும்‌
தயங்கியவாறே வெளியே சென்றிருக்கும்‌ மனைவி திரும்பி
வருவதற்குள்‌ வந்துவிடலாம்‌ என்றெண்ணிக்‌ கிழவியோடு
சென்றேன்‌. கிழவி ராணியிடம்‌ அழைத்துச்‌ சென்றாள்‌.
அரசி என்னைப்‌ பாடச்‌ சொன்னார்கள்‌. என்‌ இனிய
குரலால்‌ வெகு நேரம்‌ பாடினேன்‌. அரசியார்‌ மகிழ்ந்து
பல பரிசுகள்‌ கொடுத்து அனுப்பினார்கள்‌.
நான்‌ மீண்டும்‌ வீட்டிற்குத்‌ திரும்பினேன்‌. எனக்கு
முன்‌ என்‌ மனைவி வந்து விட்டி ரக்கிறாள்‌. ஒரு கட்டிலில்‌
கோபாவேசத்தோடு அவள்‌ படுத்திருப்பதைக்‌ கண்டேன்‌.
நான்‌ அவள்‌ கால்மாட்டில்‌ உட்கார்ந்தேன்‌. உடனே
என்னைக்‌ காலால்‌ எட்டி உதைத்துத்‌ தள்ளினாள்‌. பிறகு
தன்‌ அடிமைப்‌ பெண்களை அழைத்து, “இந்தப்‌ பாவியின்‌
சரத்தை அறுத்து எறியுங்கள்‌” என்று உத்தரவிட்டாள்‌.
நான்‌ அழுது புலம்பினேன்‌; கெஞ்சிக்‌ கூத்தாடினேன்‌.
அவள்‌ மனம்‌ இரங்கவில்லை. என்னுடைய பரிதாப
நிலைமையைக்‌ கண்ட அடிமைப்‌ பெண்கள்‌
தண்டனையைச்‌ சிறிது குறைக்குமாறு தன்‌ எஜமானியை
வேண்டினர்‌.

அதன்‌ பிறகு, அவள்‌ மனம்‌ இரங்கி என்னைச்‌
சாட்டையால்‌ அடித்து வெளியே துரத்தும்படி உத்தரவு
இட்டாள்‌. அதன்படியே நான்‌ கதறக்கதற அடித்து
வெளியே துரத்தப்பட்டேன்‌. மயக்கம்‌ தெளிந்த நான்‌
தள்ளாடியபடியே வீடுபோய்ச்‌ சேர்ந்தேன்‌. அப்போது
நான்‌ பட்ட சவுக்கடியின்‌ தழும்புகளையே நீங்கள்‌
இப்போது காண்கிறீர்கள்‌. நான்‌ இவ்வளவு செல்வம்‌
படைத்திருந்தும்‌ என்‌ மனைவியால்‌ இகழப்பட்டவன்‌.
அதனால்‌ தான்‌ அதை மறக்க எண்ணி இரவு வேளைகளில்‌
அரசனைப்‌ போல்‌, விருந்து வைபோகங்களிலும்‌,
கேளிக்கைகளிலும்‌ என்‌ அழியாத செல்வத்தை
செலவழித்துக்‌ கொண்டு இருக்கிறேன்‌. இவ்வாறு அந்தப்‌
போலி மன்னன்‌ வரலாற்றைக்‌ கூறினான்‌. பின்னர்‌ விடைப்‌
பெற்றுக்‌ கொண்டு அரண்மனை அடைந்தனர்‌. ஒரு
மன்னருக்குரிய அளவில்‌ செல்வமும்‌, மாளிகையும்‌
பெற்றிருந்ததும்‌, அவன்‌ இரவு வேளைகளில்‌ போலி
மன்னனாக நடித்து வீணே செலவழிப்பதைக்‌ கண்டு
மன்னரும்‌, மந்திரியும்‌ வியந்தனர்‌. மறு நாள்‌ கலீபா அல்‌ ஹரூன்‌ ரஷித்தின்‌ அரசவை
கூடிற்று. மாமன்னர்‌ காம்பீர்யமாக அரியாசனத்தில்‌
அமர்ந்திருந்தார்‌. அவர்‌ உத்தரவுப்படி, நகை வியாபாரியான
போலி மன்னனை அரசவைக்குக்‌ காவலர்‌ கொண்டு
வந்தனர்‌. அவன்‌ மனைவியும்‌ அழைத்து வரப்பட்டாள்‌.
நகை வியாபாரியாகிய போலி மன்னனிடம்‌, தாமும்‌ தம்‌
மந்திரி ஜாப்பரும்‌ இரவு நடந்த உன்‌ விருந்தில்‌ கலந்து
கொண்டோம்‌ என்றார்‌. பின்னர்‌ அவன்‌ மனைவியை
அழைத்து வந்து சமாதானம்‌ கூறினார்‌ கலீபா. மீண்டும்‌
கலீபா அவர்கள்‌ முன்னிலையிலேயே இருவருக்கும்‌
திருமணம்‌ நடை பெற்றது. மன்னர்‌ பல பரிசுகளை வழங்கி
அவார்களை ஒற்றுமையாக வாழும்படி புத்திமதி கூறி
அனுப்பி வைத்தார்‌.

இதுவே போலி மன்னனின்  கதை .

Story Title : Mannar Kathaigal - Arabian night Story in Tamil
Category    : Arabian night Story
Site              : puthisali kathaigal

காதல் கதைகள் - puthisali kathaigal


Mannar Kathaigal - Arabian night Story in Tamil puthisali kathaigal
puthisali kathaigal

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing