காதல் கதைகள் - puthisali kathaigal
puthisali kathaigal |
ஒரு மாலை பொழுது தெரு வீதியில் ஒரு வாலிபன். அவன் உடம்பெல்லாம் ரத்த காயங்கள். அவன் திரும்பி சோகமாக பார்கின்றான். அவன் பார்க்கும் திசையில் ஒரு மாபெரும் மாளிகை அதின்மேல் ஒரு அழகான பெண். அவளும் அவனையே பார்க்கின்றால்.
அந்த வாலிபன் நடந்து சென்றுகொண்டு இருகின்றான். அவன் செவிகளில் எதோ சத்தம் கேட்கின்றது. உடனே அவன் திரும்பி பார்க்கின்றான். அந்த அழகான பெண் அவனை பார்க்க ஓடி வருகின்றாள்.
அவள் அவனை பார்த்து - puthisali kathaigal.
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து. அவள் அவனை பார்த்து. உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்ல அப்படி இருக்க உன்னை பிரிந்து எப்படி இருக்க முடியும் என்று சொல்லி ஒருவரை ஒருவர் அனைத்துகொன்டார்கள்.
இவை எல்லாம் பார்த்துகொண்டு இருந்த மேகம் ஆனந்த கண்ணீரால் பூமியை நினைத்தது. காதலர் இருவரும் மழைக்கு ஓரமாக மரத்தடியில் வந்து நின்றார்கள். இளம் ஜோடிகளை வரவேற்ற மரம். மரத்தின் மேல் உள்ள குயில் இனிமையாக பாட ஆரமித்தது. இளம் காதல் ஜோடிகளை பார்க்க சூரியன் ஆசைக்கொன்ட்டு தன் கண்களை திறந்து பார்த்தது. மழையும் நின்றது.
அந்த காதல் ஜோடிகள் அடுத்தது என்ன பண்ணுவது எங்க தங்குவது என்ன சாபிடுவது என்று ஒன்னும் தெரியல. ஆனால் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
கால் போன போக்கில் சென்றார்கள் வேலை தேடியும் கிடைக்கவில்லை சாப்பிட உணவும் இல்ல பல நாட்கள் நடந்து சென்ற அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் ஒரு மரத்தடியின் நிழலில் வந்து அமர்ந்து கண்களை மூடி தூன்கினார்கள். அந்த இளம் காதல் ஜோடிகள் கண்களை மூடினார்கள்
மீண்டும் திறக்கவே இல்லை.
ஆம் அவர்கள் மறித்துவிட்டார்கள்!! இல்லை இல்லை அவர்கள் சொர்க்க சோலையில் மகிழ்சியாக உள்ளார்கள்