puthisali kathaigal
காலசக்கரத்தின் சுழற்ச்சின் கதை பலநூறு-அதை
நான் உன்னக்கு சொல்வேன் பொறுமையாக நீ கேளு.
நான் உன்னக்கு சொல்வேன் பொறுமையாக நீ கேளு.
உயர்ந்தோர் வீழ்வதும் தாழ்ந்தோர் உயர்வதும்
காலசக்கரத்தின் சுழற்ச்சின் நிலைமைகள்.
தனது கதிர்களை பூமி முழுக்க வீச செய்த பிரகாசமான சூரியன்
மாலை நேரத்தில் மறைந்துதான் ஆக வேண்டும்.
மண்ணாதி மன்னர்கள் மண்ணை கவ்வினதும்
வீரர்கள் மண்ணுக்குள் போனதும் வரலாற்றின் கதை
சிறையில் இருந்தவன் ஆளுகை செய்ய வந்ததும்
ஆடு மேய்த்தவன் அரசனாக மாறினதும் அதிசயம்.
செல்வ செழிப்பில் சீமாடியாக வாழ்ந்தவள்
பெருமையாக வாழ்ந்தவள்,மற்றவர்களை அற்பமாக நினைத்தவள்-அவள் வாழ்கை பரிதாபமாக முடிந்தது.
மேன்மையின் ஆபத்து(puthisali kathaigal)
ஏழை ஒருவன் தனது மகளை அதிக படிப்பை படிக்க வைத்தான்.அதன் மூலம் பெருமையை சம்பாதித்தான்.
எல்லாரிடமும் தனது மகளின் படிப்பை குறித்து பெருமையாக பேசுவான்.
காலசக்கரத்தின் சுழற்ச்சின் நிலைமைகளை அவன் அறியாமல் இருந்தான்.
காலசக்கரம் வேகமாக சுற்ற அவள் மகள் திருமணம் வயதை அடைந்தாள்.
அங்கும் இங்கும் ஓடியும் தனது மகளுக்கு வரன் அமைய வில்லை.
வந்த வரன் எல்லாம் சொன்ன வார்த்தை - பொண்ணு
என்னை விட அதிகமாக படித்திருக்கு, அதிக படித்த பெண் கீல்படிய மாட்டாள் என்று.
பின்பு தனது மார்பில் அடித்து கொண்டான். அவன் பெருமையாக பேசின அந்த ஊர் மக்கள்.
பெண்ணை பெருமைக்காக படிக்கச் வைத்து அந்த பெண்ணின் வாழ்கையை சீர்குழைத்து விட்டான் என்று.
அந்த பெண் தினமும் அவன் தகப்பனிடம் ஏன் அப்பா என்னை அதிகம் படிக்க வைத்திங்க என்று கேட்டுக்கொண்டு அழுவாள்.
வீழ்ந்தவர்கள்(puthisali kathaigal)
அழகாள் வீழ்ந்தவர்களும் உண்டு
திறமையால் வீழ்ந்தவர்களும் உண்டு
தனது ஞானத்தினால் வீழ்ந்தவர்களும் உண்டு
செல்வதில் வீழ்ந்தவர்களும் உண்டு
படை பலத்தில் வீழ்ந்தவர்களும் உண்டு
வாலிப பெருமையால் வீழ்ந்தவர்களும் உண்டு
தனது பேச்சினால் வீழ்ந்தவர்களும் உண்டு
http://puthisalikathaikal.blogspot.com/