திங்கள், 3 ஆகஸ்ட், 2020

suriyanin makal in Tamil Story - puthisali kathaigal


சூரியனின் மகள் - puthisali kathaikal

tamil story

suriyanin makal in Tamil Story - puthisali kathaigal
puthisali kathaigal


ஒருநாள்‌ ஒரு மனிதன்‌ பனிச்சறுக்கு வண்டியில்‌ சென்று
கொண்டிருந்தான்‌. அந்த வண்டியை வண்ணப்‌ புள்ளிகளுடைய ஒரு மான்‌ இழுத்துச்‌ சென்றது. அவன்‌, மலையின்‌
மீது மற்றொரு மனிதன்‌ அமர்ந்திருப்பகைப்‌- பார்த்தான்‌.

அவன்‌ எதுவும்‌ போர்த்திக்கொள்ளாமல்‌, -குளிரைப்‌

பொருட்படுத்தாதவன்‌ போலக்‌ காணப்ப்ட்டான்‌.

நீ எங்கே போகிறாய்‌?” என்று மலையிலிருந்த மனிதன்‌
வண்டியிலிருக்கும்‌ மனிதனைப்‌ பார்த்துக்‌ கேட்டான்‌.

“சூரியனின்‌ மகளை அழைக்து வருவதற்காகப்‌ போகிறேன்‌.
நான்‌ அவளைத்‌ திருமணம்‌ செய்து கொள்ள விரும்புகிறேன்‌.

நீ யார்‌? ஏன்‌ இங்கே உட்கார்ந்திருக்கிறாய்‌?” என்று
வண்டியிலிருந்தவன்‌ கேட்டான்‌.

“என்னுடைய பெயர்‌ எல்லாவற்றையும்‌ பார்ப்பவன்‌.
என்னால்‌ எல்லாவற்றையும்‌ பார்க்கவும்‌ கேட்கவும்‌ முடியும்‌!”

“அப்படியானால்‌ நீயும்‌ என்னுடன்‌ வா. எனக்கு
உன்னுடைய உதவி தேவையப்படும்‌.”

எல்லாவற்றையும்‌ பார்ப்பவன்‌ வண்டியில்‌ ஏறினான்‌.
இருவரும்‌ சென்றார்கள்‌. இன்னொரு மலையை
அடைந்தார்கள்‌. அங்கே மற்றொரு மனிதன்‌ அமர்ந்திருந்தான்‌.
அவனுடைய கைகளில்‌ வில்லும்‌ இரண்டு அம்புகளும்‌
இருந்தன.

“யார்‌ நீ்‌ என்று வண்டியிலிருந்தவர்கள்‌ அவனிடம்‌
கேட்டார்கள்‌.

“என்னுடைய  பெயர் அம்பு விடுபவன்‌. என்னுடைய அம்பால் பார்வையில படும்‌ எதையும்‌ என்னால தாக்க முடியும்‌.


நீ ஏன்‌ எங்களுடன்‌ வரக்கூடாது? நாங்கள்‌ சூரியனின்‌
மகளைப்‌ பார்ப்பதற்காகச்‌ செல்கிறோம்‌. நான்‌ அவளை
மணமகளாக தேர்ந்தெடுத்திருக்கிறேன்‌. அவளைப்‌ பார்ப்பது
எளிதானது அல்ல. எங்களுக்கு உன்னுடைய  உதவி
தேவைப்படலாம்‌!

அம்பு விடுபவனும்‌ அவர்களுடன்‌ இணைந்து
கொண்டான்‌. அவர்கள்‌ ஒரு சமவெளியின்‌ வழியாகச்‌ சென்று
கொண்டிருந்தார்கள்‌. அதன்‌ எல்லைக்கு. வந்தபோது ஒரு
மனிதன்‌. பரபரப்பாக அசைந்து கொண்டிருந்ததைப்‌
பார்த்தார்கள்‌.
்‌ யார்‌ நீ ? என்று கேட்டபடி. அவனருகே நெருங்கினார்கள்‌.

“சத்தமாகப்‌ பேசாதீர்கள்‌!” என்று மென்மையான குரலில்‌
சொன்னான்‌ அந்த மனிதன்‌. “என்‌ பெயர்‌ வேகமாகச்‌ செயல்‌
படுபவன்‌! அதோ அந்தப்‌ பெண்‌ முயலின்‌ கால்களைப்‌
பிடிக்கத்‌. தருணம்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறேன்‌.”

இதைக்‌ கேட்டதும்‌ அவர்கள்‌ வியந்தார்கள்‌. “அப்படியா?
மின்னல்போலதக்‌ துள்ளி ஓடும்‌ முயலின்‌ கால்களைப்‌ பிடித்து
விடக்கூடியவனா நீ? அந்த பெண்‌ முயலைப்‌ பிடி: அதன்பிறகு
நீ சொன்னது உண்மைதானா என்று நாங்கள்‌ தெரிந்து
கொள்கிறோம்‌!” என்று சொன்னார்கள்‌. மூவரும்‌.

வேகமாகச்‌ செயல்படுபவன்‌. அதிவிரைவாக தன்‌ கையை
நீட்டினான்‌. அவனுக்கு முன்பாகத்‌ தாவிக்‌ குதித்த முயலின்‌
காலைப்‌ பற்றினான்‌. எல்லாம்‌ ஒரு நொடிக்குள்‌ நடந்து
முடிந்துவிட்டது.

“உண்மையிலேயே நீ விரைவாகத்தான்‌: செயல்படுகிறாய்‌!”
என்று சொன்னார்கள்‌ வண்டியிலிருந்த- மனிதர்கள்‌. “நீ ஏன்‌
எங்களுடன்‌ வரக்கூடாது? நாங்கள்‌ சூரியனின்‌ மகளைப்‌
பார்க்கச்‌ சென்று கொண்டிருக்கிறோம்‌. எளிதில்‌ அவளைச்‌
சந்திக்க முடியாது. உன்னுடைய உதவி எங்களுக்குத்‌
தேவைப்படும்‌”
“சரி
ஆகையால்‌ இப்போது அவர்கள்‌ நான்கு பேர்‌ ஆகிவிட்டார்கள்‌.
நால்வரும்‌ வண்டியில்‌ பயணித்துக்‌
கொண்டிருந்தார்கள்‌. உச்சியில்‌ பனிபடர்ந்த இரண்டு குன்று
களின்‌ வழியாக வந்தார்கள்‌. அந்த குன்றுகளுக்கு இடையே
ஒரு மனிதன்‌ அமர்ந்திருந்தான்‌. அவனது மூக்கின்‌ நுனியில்‌
பனிக்கட்டி இருந்தது.

“யார்‌ நீ ? உன்னுடைய மூக்கின்‌ நுனியில்‌ ஏன்‌ பனிக்கட்டி
-இருக்றறெது?' என்று. நால்வரும்‌ கேட்டார்கள்‌.

“என்னுடைய பெயர்‌ உறுதியான மனிதன்  நான்‌
மிகவும்‌ வலிமையானவன்‌. இந்த இரண்டு குன்றுகளையும்‌
என்னுடைய மூக்கின்‌ நுனியில்‌ வைப்பதற்கு முயற்சி
செய்கிறேன்‌. அனால்‌ அவை மோதிக்கொண்டு கீமே விழுந்து
விடுகின்றன”

“உண்மையாகவா சொல்கிறாய்‌? நம்ப முடியவில்லையே!
அது எப்படி முடியும்‌ என்று எங்களிடம்‌ செய்து காட்டு!”

உறுதியான வலிமையுடையவன்‌ இரண்டு குன்றுகளையும்‌
பிடுங்கி தனது மேக்கின்மீது வைத்தான்‌. ஆனால்‌ அவை
வழுக்கிக்கொண்டு கீமே விழுந்தன.

“நீ ஏன்‌ எங்களுடன்‌ வரக்கூடாது? நாங்கள்‌ சூரியனின்‌
மகளைப்‌ பார்க்கச்‌ சென்று கொண்டிருக்கிறோம்‌. எளிதில்‌
அவளைச்‌ சந்திக்க முடியாது. உன்னுடைய உதவி எங்களுக்கு
கேவைப்படும்‌”

“சரி, வருகிறேன்‌!”

இப்போது ஐந்து பேரும்‌ சென்று கொண்டிருந்தார்கள்‌.
வழியில்‌ ஒரு பெரிய மலை இருந்தது. அதன்‌ உச்சியில்‌ ஒரு
மனிதன்‌ அமர்ந்திருந்தான்‌. அவன்‌ தொப்பி அணிந்திருக்க
வில்லை. ஆனால்‌ அவனது ன்‌ மேலே பனி எ இருந்த து.
“இது பார்ப்பதற்கு உண்மையிலேயே வினோதமான
காட்சிதான்‌!” என்று சொல்லிக்‌ கொண்டார்கள்‌ அனைவரும்‌.
“என்னுடைய பெயர்‌ பனிப்புயலை ஏற்படுத்துபவன்‌.
என்னுடைய தலையைக்‌ குலுக்கினால்‌ போதும்‌, உடனே
கடுமையான பனிப்புயல்‌ வீசத்‌ தொடங்கிவிடும்‌.”
அவன்‌ தன்னுடைய தலையைக்‌ குலுக்கினான்‌. உடனே
கடுமையான பனிப்புயல்‌ வீசியது. எல்லா இடங்களிலும்‌ பனி
கொட்ட... ஆரம்பித்தது.

“நிறுத்து! நிறுத்து! நாங்கள்‌ பனிப்புயலில்‌ சாவதற்கு
முன்பாக நிறுத்து!” என்று அவர்கள்‌ கத்தினார்கள்‌.

அவன்‌ தலை குலுக்குவதை நிறுத்தினான்‌. பனிப்புயலும்‌
நின்றது.

“நீ ஏன்‌ எங்களுடன்‌ வரக்கூடாது? நாங்கள்‌ சூரியனின்‌
மகளைப்‌ பார்க்கச்‌ சென்று கொண்டிருக்கிறோம்‌. எளிதில்‌
அவளைச்‌ சந்திக்க முடியாது. உன்னுடைய உதவி
எங்களுக்குத்‌ தேவைப்படும்‌”

“ச

இப்போது அவர்கள்‌ ஆறு பேராகிவிட்டார்கள்‌.
பனிபடர்ந்த சமவெளிக்கு வந்தார்கள்‌. அதன்‌ நடுவில்‌ ஒரு
சிறிய வட்டமான தண்ணீர்‌ பள்ளம்‌ இருந்தது. ஒரு மனிதன்‌
தன்‌ உதடுகளை அதை நோக்கிக்‌ குவித்திருந்தான்‌.

“யார்‌ நீ?”

“என்னுடைய பெயர்‌ பெரிய தொண்டையுடையவன்‌.
இந்தப்‌ பள்ளத்தில்‌ இருக்கும்‌ எல்லாத்‌ தண்ணீரையும்‌ நான்‌
குடித்துவிடுவேன்‌. அதே. நேரத்தில்‌ அதில்‌ நீந்திக்‌
கொண்டிருக்கும்‌ இரண்டு மீன்களையும்‌ விமுங்குவேன்‌.”

“என்ன அதிசயம்‌! இவ்வளவு தண்ணீரையும்‌ நீ ஒருவனே
குடித்துவிடுவாயா? உண்மையாகவா? செய்துகாட்டு
பார்க்கலாம்‌!
நீ ஏன்‌ எங்களுடன்‌ வரக்கூடாது? நாங்கள்‌ சூரியனின்‌
மகளைப்‌ பார்க்கச்‌ சென்று கொண்டிருக்கிறோம்‌. எளிதில்‌
அவளைச்‌ சந்திக்க முடியாது. உன்னுடைய உதவி
எங்களுக்குத்‌ கேவைப்படும்‌”

“சரி! வருகிறேன்‌!”
அவர்கள்‌ ஏழு பேரும்‌ பனிச்சறுக்கு வண்டியில்‌

இருந்தது. அகைச்‌ சுற்றி நடந்தார்கள்‌. ஆனால்‌ எல்லாக்‌.

கதவுகளும்‌ பூட்டப்பட்‌ டிருந்தன. அவர்களால்‌ உள்ளே செல்ல
முடியவில்லை.

“இது: கண்டிப்பாக சூரியப்‌ பெண்ணின்‌ வீடாகத்தூன்‌

இருக்கும்‌. எல்லாவற்றையும்‌ பார்க்கக்கூடி யவனே! இங்கே வா,
உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்துச்‌ சொல்‌.”

. எல்லாவற்றையும்‌ பார்ப்பவன்‌ வீட்டிற்குள்‌ பார்த்தான்‌.
“ஒரு பெண்‌ இருக்கிறாள்‌.” |

“அம்பு விடுபவனே! இந்தக்‌ ககவின்மீது உடனே அம்பு
விடு!” அவர்கள்‌ கத்தினார்கள்‌.

அவன்‌ கதவின்‌ மீது இரண்டு அம்புகளை எய்தான்‌. கதவு

திறந்துவிட்டது. ஏழு பேரும்‌ உள்ளே சென்றார்கள்‌.

தங்கத்தாலும்‌ முத்துக்களாலும்‌ ஆன படுக்கையில்‌ ஒரு பெண்‌
படுத்திருந்தாள்‌. மிக அழகாக: இருந்தாள்‌. விலையுயர்ந்த
ஆபரணங்களை அணிந்திருந்தாள்‌. அவளது ஆடைகள்‌
செப்புத்‌ துண்டுகளால்‌ அலங்கரிக்கப்பட்டி ௬ந்தன.

“ஓ, மனிதர்களே! யார்‌ நீங்கள்‌, எங்கிருந்து வருகிறீர்கள்‌?”
என்று அவள்‌ கேட்டாள்‌.

“நாங்கள்‌ சூரியனின்‌ மகளைப்‌ பாூர்ர்க்க வந்திருக்கிறோம்‌.
அவள்‌ எங்கே இருக்கிறாள்‌, என்று- சொன்னால்‌ நாங்கள்‌
மிகவும்‌ நன்றியுள்ளவர்களாக இருப்போம்‌. அவள்‌ மிகவும்‌
தைரியமானவள்‌ என்று நாங்கள்‌ கேள்விப்பட்டிருக்கிறோம்‌”
“அவள்‌ எங்கேயிருக்கிறாள்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌.
அவளிடம்‌ நான்‌ உங்களை அழைத்‌ துச்‌ செல்கிறேன்‌. முதலில்‌

நீங்கள்‌ உணவருந்துங்கள்‌”
அவள்‌ அந்த வீட்டைவிட்டுச்‌ சென்றாள்‌. கைநிறைய மரக்‌
கட்டைகளை எடுத்து வந்தாள்‌. அவற்றைக்‌ தீமே வைத்தாள்‌.
பிறகு மீண்டும்‌ வெளியே சென்றாள்‌. மூன்று கற்களை
எடுத்துவந்து அடுப்பாக அமைத்தாள்‌. அந்த அடுப்பில்‌ தீ மூட்டினாள்‌.
அப்போது எமுந்க புகை மிகவும்‌ அடர்த்தியாக
இருந்தது. வீடு முழுவதும்‌ இருள்‌ குழ்ந்தது. அவளும்‌
ம்றைந்துவிட்டாள்‌. அதன்‌ பிறகு. அவள்‌ எங்கேயும்‌ காணப்‌
படவில்லை. ஆனால்‌ எங்கோ தொலைவிலிருந்‌ து அவளது
கேலியான குரல்‌ மட்டும்‌ கேட்ட து

“அற்ப மனிதர்களே! சூரியனின்‌ மகளையா எடுத்துச்‌ செல்ல
நினைக்கிறீர்கள்‌! P

அடுப்புத்‌ தீ கிடீரென்‌ ற மூண்டெரந்த து. அனைவரின்‌
உடையிலும்‌ தீப்ப்ற்றியது.

அம்புவிடுபவன்‌ ஐயை நோக்கி அம்பவிட்டான்‌. ஆனால்‌
த டுின்னும்‌ அதிகமானது.

வேகமாகச்‌ செயல்படுபவன்‌ கைகளை அசைத்தான்‌.
புகையும்‌ தீயும்‌ இன்னும்‌ அதிகரித்தன.

பனிப்புயல்‌ ஏற்படுத்‌ துபவன்‌ பனிப்புயல்‌ வீசச்‌ செய்தான்‌.
ஆனால்‌ புகை சிதறி எங்கும்‌ பரவியது...

-கடை சியில்‌ பெரிய தொண்டையை உடையவன்‌
தன்னுடைய வாயிலிருந்து தண்ணீரைத்‌ துப்பினான்‌. உடனே
தீ அணைந்தது.

ஆனால்‌ கதவு பூட்டப்பட்‌ டிருந்தது. அதைத்‌ திறக்க முடிய
வில்லை. அம்புவிடுபவன்‌ பூட்டை நோக்கி அம்பு விட்டான்‌.
ஆனால்‌ அம்புகள்‌ முனை வளைந்து அம்புகள்‌ தீமே
விழுந்தன.

“எல்லாவற்மையம்‌ பார்ப்பவனே! அவள்‌ எங்கே
இருக்கிறாள்‌ என்று பார்த்துச்‌ சொல்‌” என்று நண்பர்கள்‌
கத்தினார்கள்‌.

“அவள்‌ வெகு தொலைவில்‌ நம்மைப்‌ பார்த்து சிரித்துக்‌
கொண்டு இருக்கிறாள்‌!”

“வேகமாகச்‌ செயல்படுபவனே! அவளைப்‌ பிடித்துவா!”
என்றார்கள்‌.

உடனே அவன்‌ வேகமாகப்‌ புறப்பட்டுச்‌ சென்று

வடதிசை மக்களின்‌ தேவதைக்‌ கதைகள்‌ 13

பார்வையிலிருந்து மறைந்தான்‌.

“எல்லாவற்றையும்‌ பார்ப்பவனே! வேகமாகச்‌

செயல்படுபவன்‌ எங்கே சென்றிருக்கிறான்‌ என்று பார்‌?”

“அந்கப்‌ பெண்‌ இருக்குமிடத்தில்‌ இருக்கிறான்‌. அந்தப்‌
பெண்‌ அவனுடைய கால்களுக்கு விலங்கிட்டிருக்கிறாள்‌. அது
இல்லாமல்‌ இருந்தால்‌ அவன்‌ அவளைப்‌ பிடித்துவிடக்கூடும்‌”

“அம்புவிடுபவனே! அவன்‌ கால்விலங்கைத்‌ தகர்த்து விடு!”

வேகமாகச்‌ செயல்படுபவனின்‌ கால்களைச்‌ சுற்றியிருந்த

விலங்கை அ௮ம்புவிட்டு உடைத்தான்‌ அம்பு விடுபவன்‌.

“எல்லாவற்றையும்‌ பார்ப்பவனே! இப்போது அவனுக்கு

என்ன ஆயிற்று என்று பார்‌!”

“அவன்‌ விலங்கு உடைந்துவிட்டது. அனால்‌ அவளை
அவனால்‌ பிடிக்க முடியவில்லை. அவனைவிடவும்‌ அவள்‌
விரைவாகச்‌ செயல்படுகிறாள்‌. இப்போது ஒரு ஏரியைக்‌

கடக்கப்‌ போகிறாள்‌.”

பெரிய தொண்டையை உடையவனால்‌ இந்த நேரத்தில்‌

உதவமுடியும்‌ என்று அறிந்து கொண்டான்‌ முதலாமவன்‌.

அவனுக்கு ஒரு தங்க வாகனத்தையும்‌, அதகை இழுத்துச்‌
செல்வதற்கு அவனது மானையும்‌ கொடுத்தான்‌. பெரிய
தொண்டையை உடையவன்‌ அகில்‌ அதிவேகமாகப்‌

பயணித்து ஏரியை அடைந்தான்‌.
அநத ஏா௱ய்ல இருநத தணணா முழுவதையும மனனல
வேகத்தில்‌ குடித்துவிட்டான்‌ அவன்‌. இதற்காகவே காத்திருந்த
வேகமாகச்‌ செயல்படுபவன்‌ சூரியனின்‌ மகளை உடனே
பிடி த்துவிட்டான்‌. அவர்களனைவரும்‌ ஒன்று கூடினார்கள்‌.
சூரியனின்‌ மகளையும்‌ அழைத்துக்‌ கொண்டு ஏழுபேரும்‌
அவரவர்களின்‌ வச௫ிப்பிடத்திந்குத்‌ திரும்பிச்‌ சென்றார்கள்‌.

முதலில்‌ பெரிய .. தொண்டையை உடையவனின்‌ வீடு
வந்தது. முதலாமவன்‌ சொன்னான்‌:

“உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி. நீ தண்ணீரின்‌
எஜமானனாக இங்கேயே இர. மக்கள்‌ சாப்பிடுவதற்கு
மீன்களைப்‌ பிடித்துக்‌ கொடு.”

அடுத்து பனிப்புயல்‌ ஏற்படுத்துபவனின்‌ வீடு வந்தது.

“உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி. பனிக்கட்டி களின்‌
எஜமானனாக இங்கேயே இரு” என்றான்‌ முதலாமவன்‌.

ம்தமுள்ளவர்கள்‌ பயணத்தைத்‌ தொடரர்ந்தார்கள்‌. அடுத்து
உறுதியான வலிமையுடையவனின்‌ இருப்பிடம்‌ வந்தது.

“உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி. நீ மலைகளின்‌
எஜமானனாக இங்கேயே இரு. இங்கே நிறைய மலைகள்‌
இருக்கின்றன. இங்கே இருக்கும்‌ விலங்குகள்‌ எல்லாம்‌ உனக்கு
கீழ்ப்படிந்து சேவை செய்யும்‌. அவற்றின்‌ உழைப்பை மக்களின்‌
நன்மைக்காக நீ உபயோகிக்கவேண்டும்‌”

உறுதியான வலிமையுடையவன்‌ அங்கேயே தங்கிக்‌
கொண்டான்‌. மீதமிருந்தவர்கள்‌ பயணத்தைத்‌ கொடரர்ந்தனர்‌.
வேகமாகச்‌ செயல்படுபவனின்‌ வீடு வரும்வரை அவர்கள்‌
நிற்கவேயில்லை.

“உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி. மான்களின்‌
எஜமானனாக இங்கேயே இரு. இங்கே நிறைய மான்கள்‌
இருக்கின்றன. மனிதர்களால்‌ மான்களுக்குத்‌ தொல்லை
எதுவும்‌ ஏற்படாமல்‌ பாதுகாத்துக்கொள்‌.”

அவன்‌ அங்கேயே கங்கிக்கொண்டான்‌. பின்னரும்‌ அவர்கள்‌ நிறுத்தாமல்‌ பயணம்‌ செய்தார்கள்‌. அம்பு
விடுபவனின்‌ வீட்டை அடைந்தார்கள்‌.

“உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி. வேட்டையாடும்‌
நிலங்களின்‌ எஜமானனாக நீ இங்கேயே இரு. இங்கே அதிக
அளவு வேட்டைநிலங்கள்‌ இருக்கின்றன. வேட்டைக்காரர்‌
களுக்கு வேட்டையாடுவதில்‌ உதவி செய்‌

இறுதியாக எல்லாவற்றையும்‌ பார்ப்பவனின்‌ வீட்டை
நோக்கிச்‌ சென்றார்கள்‌.

“உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி. சமவெளிகளின்‌

வடதிசை மக்களின்‌ தேவதைக்‌ கதைகள்‌ 15

எஜமான்னாக நீ இங்கேயே இரு.. இங்கே நிறைய
சமவெளிகள்‌ உள்ளன. அகில்‌ நிறைய - குழந்தைகள்‌ -கடந்து
செல்வார்கள்‌. அவர்களை கவனமாகப்‌ பார்த்துக்‌ கொள்‌”

என்‌ ற விடை கொடுத்தான்‌ முதலாமவன்‌.

எல்லோரையும்‌ அவரவர்களின்‌ வீட்டில்‌. விட்டபின்‌ அந்த
மனிதனும்‌ சூரியனின்‌ மகளும்‌ தொடர்ந்து சென்றார்கள்‌.
வீட்டிற்கு வந்து திருமணம்‌ செய்‌ துகொண்டார்கள்‌. தன்‌
மகளுக்குத்‌ திருமணமான அன்றிலிருந்துதான்‌ சூரியன்‌ மிக

மகிழ்ச்சியுடன்‌ பிரகாசிக்கத்‌. தொடங்கினான்‌.

tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing