புத்திசாலி மரண தூதன்-puthisali angel
கதை சொல்லு கூகுள்-- kathai sollu google |
மரணத்தூதனே ஏன் என்னை பார்த்து கோபப்டுகின்றாய் என்று கேட்க அவன் நான் உன் உயிரை எடுக்க போகின்றேன் உன் பெயர் என்னுடைய லிஸ்ட்ல இருக்கு என்று அவன் கிட்ட வந்தான். (கதை சொல்லு கூகுள்)
உயிருக்கு பயந்த ஆசாரியன் தேவாலயத்துக்குள் ஓடினான் அங்கும் மரண தூதன் வந்தான். மீண்டும் தன் வீட்டின் அறையில் போய் ஒளிந்துகொண்டான் அங்கும் மரண தூதன் வந்தான். தெருவில் ஓடினான் அங்கும் மரண தூதன் வந்தான். எங்கு ஓடினாலும் அங்கும் மரண தூதன் வந்தான். பின்பு ஓடிக்கொண்டு போகும்போது லூஸ் என்கின்ற பட்டணம் உள்ளது.
அங்கு போனால் மரணதூதன் வரமுடியாது தன் உயிரை காப்பற்ற அதுதான் வழி என்று நினைத்தவன் அங்கு உள்ள ராஜாவிடம் போய் அழுதான். நான் மரணத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரே வழி லூஸ் பட்டணம் என்னை அங்கேயே போய் விட்டுவிடுங்கள் ராஜா என்று அழுதான்..
இதை கேட்ட ராஜா எப்படியாவது ஒருவனை மரணத்தில் இருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து தனது பறக்கும் வாகனத்தின் மூலம் பறந்து லூஸ் பட்டணத்தில் ராஜாவும் ஆசாரியன் வந்து சேர்த்தார்கள்
மரண துதனின் தவறு - கதை சொல்லு கூகுள்
மரண தூதன் என்ன என்னவோ முயற்சி செய்தும் லூஸ் பட்டணத்துக்குள் செல்ல முடியவில்லை. அப்போதான் தனது லிஸ்ட் எடுத்து பார்கையில் அது அந்த ஆசாரியன் பெயர் இல்லை வேறொருவனின் பெயர் இருந்தது.
இதை பார்த்த தூதன் தன் தலைமேல் கொட்டிகொண்டது. இதை பார்த்த ஆசாரியன் நீ என்ன செய்கின்றாய் என்று கேட்க நான் தவறு செய்துவிட்டேன் உன் பெயர் இல்லை உன்கூட வேலை செய்கின்றவன் உயிரை எடுக்க வேண்டும் என்று சொன்னது .
இதை கேட்ட ஆசாரியன் மிகவும் கோபப்பட்டு அட முட்டாள் மரணதூதனே என்னை மூச்சு தெனற ஒடவைத்தையே என்று திட்டி கொண்டு லூஸ் பட்டணத்தை விட்டு வெளிய வந்தான் அப்போ ராஜா அழுகின்ற சத்தத்தை கேட்டான். என்ன வென்று திரும்பி பார்க்கும்போது அவன் உடம்பு தரையில் கிடந்தது.
அப்பொழுது மரண தூதன் அட முட்டாளே நீ லூஸ் பட்டணத்தை தாண்டின உடனே உன் உயிரை எடுத்து விட்டேன் என்று சிரித்து என்னிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று பாட்டுபாடிகொண்டு அவன் உயிரை எடுத்துக்கொண்டு சென்றது.
மரண தூதனின் செய்தி-puthisali angel
அந்நாட்டின் அரசன் வயதாகி படுத்துக்கொண்டு இருந்தான். அப்போ அவன் தன் கண்களை திறந்து பார்க்கும்போது சன்னல் வழியாக மரண தூதன் வந்தான். இதை பார்த்த அரசன் ஒரு நிமிடம் தடுமாறி மரண தூதனே ஏன் என்னிடம் வந்தாய் என்று கேட்டான். அதற்கு மரண தூதன் உன் பெயர் என்னுடைய லிஸ்ட்ல இருக்கு உன் உயிரை எடுக்க போகிண்ட்றேன் என்று பதில் சொன்னது. இதைகேட்ட அரசன் ஏய் மரண தூதனே நான் இன் நாட்டின் அரசன் நீ என்னக்கு முன் கூட்டிய செய்தி அனுப்பிஇருக்க வேண்ட்டும் அதனால் நீ போய்விடு என்று பதில் தந்தான் அரசன். இதைகேட்ட மரண தூதன் இன் நாட்டின் அரசனே நான் உம்மக்கு முன் கூட்டி செய்தி அனுப்பிவிட்டேன் என்று பதில் தந்தது. அதற்கு அரசன் எந்த செய்தியும் என்னக்கு வரவில்லை நீ யாரிடம் அனுப்பினாய் என்று அரசன் கேட்டான்.
மரண தூதன் : நான் செய்தியை உன் தகப்னிடம் அனுபினேன்.
அரசன் : என் தகப்பன் பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
மரண தூதன் : நான் உன் மகனிடமும் செய்தி அனுபினேன்.
அரசன் : என் மகன் யுத்தத்தில் இறந்துவிட்டார்.
மரண தூதன் : அப்போ நான் உன் ஆசாரியன் கிட்ட செய்தி அனுபினேன்.
அரசன் : என் ஆசாரியனும் இறந்துவிட்டார். எந்த செய்தியும் என்னக்கு வர வில்லை.
மரண தூதன் : அட முட்டாள் அரசே அவர்களுக்கு எல்லாம் மரணம் வரும்போது உன்னக்கு மரணம் வரும் என்று தெரியாத உன்னக்கு தனியாக செய்தி அனுப்ப வேண்டுமா என்று தன் கைய நீட்டி அவன் நெற்றியை தொட்டு அவன் உயிரை எடுத்து கொண்டது .
மரண தூதனின் பாடல் - puthisali angel
என்னிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது
அரசன் என்றாலும் அடிமை என்றாலும் என் பார்வைக்கு ஒன்றுதான்
பணக்காரன் என்றாலும் ஏழை என்றாலும் என் பார்வைக்கு ஒன்றுதான்
உயரந்தவன் என்றாலும் தாழ்ந்தவன் என்றாலும் என் பார்வைக்கு ஒன்றுதான்
என்ன என்ன பெயர் மனிதற்கு இருந்தாலும் நான் அவர்களை அழைப்பது பிணம்தான் என்று.
இப்படி பாடிக்கொண்டு தன் வேலை செய்ய மகிழ்ச்சியுடன் புறப்பட்டது.
------------------ மரண தூதனின் செய்தி உன்னகும் என்னகும் வந்தது -----------
கதை சொல்லு கூகுள் - kathai sollu google |