துரதிஷ்டமான கதை | puthisali kathaigal
துரதிஷ்டமான கதை | puthisali kathaigal |
பேரன்புமிக்க சகோதரிகளே! என் கதையைக் கேளுங்கள். நான் ஓர் அரசகுமாரன். நான் பிறந்த அதே இனத்தன்று பக்கத்து நாட்டு அரசரான என் சிற்றப்பாவிற்கும் ஒரு மகன் பிறந்தான். நாங்கள் இருவரும். வளர்ந்து வந்தோம். நான் வாலிபப் பருவத்தை அடைந்ததும் என் தந்தை என்னை அழைத்து “மகனே! உன் சிற்றப்பாவையும் சகோதரனையும் பார்த்துவிட்டு வா” என்று கூறி ஏராளமான பரிசுப் பொருள்களுடன் அனுப்பி வைத்தார்.
நானும் என் சிறிய தந்தையின் வீட்டுக்குப் போனேன். என் சகோதரனையும் கண்டேன். எனக்குக் கோலாகலமாக விருந்து வைத்தனர். நானும் அவர்கள் அன்புப் பிடியில். சிக்கிப் பல மாதங்கள் அங்கேயே தங்கிவிட்டேன். ஒருநாள் என் சிற்றப்பாவின் மகன் என்னிடம் வந்து “அன்புமிக்க சகோதரா, “நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்” என்றான். நானும் “அன்புமிக்க சகோதரரே! உமக்காக இந்தப் பூ உலகில் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன், அல்லாவின் திருநாமத்தின் மீது ஆணை”. என்று கூறினேன். என் சிற்றப்பாவின் மகனும் பேரானந்தம் கொண்டான்.
பிறகு எங்கேயோ சென்றுவிட்டுப்பின் திரும்பி வந்தான். பகட்டான ஆடைகளும் ஏராளமான நகைநட்டுகளும் அணிந்த ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தான். “அன்புமிக்க சகோதரரே! எனக்காக நான் குறிப்பிடும் ஒரு கல்லறைக்கு இவளை அழைத்துச் சென்று எனக்காக அங்கே காத்திருங்கள்" என்றான்.
நான் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவன் குறிப்பிட்ட கல்லறைக்கு அவளை அழைத்துச் சென்றேன். சிறிது நேரம் பொறுத்து என் சகோதரனும் அங்கு வந்து சேர்ந்தான். கல்லறைக்கு அருகே இருந்த ஒரு பெரிய பாறையை தட்டித் தன்ளினான்.
அந்தப் பாறை நகர்ந்ததும் கீழே பல படிகள் செல்வது தெரிந்தது. அது ஒரு சுரங்கம் போலும் என நினைத்தேன். உடனே என் சகோதரனும் உடன் வந்த பெண்ணும் அச்சுரங்க வழியில் இறங்கினர். சகோதரன் என்னைப் பார்த்து "அன்புமிக்க சகோதரரே! பாறையை நகர்த்திச் சுரங்க வாயிலை.மூடுங்கள். கற்பலகையைச் சுற்றி. மண்ணைக் கொட்டி மூடுங்கள்" என்றான்.
நான் செய்வது அறியாது. திகைத்தேன். என் சகோதரன் “நீங்கள் அல்லாவின் இருநாமத்தின்பீது ஆணை இட்டு இருக்கிறீர்கள். ஆகவே ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதீர்கள்" என்று. கூறிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் அப் பெண்ணுடன் சுரங்கத்தினுன் சென்று மறைந்தான். நானும் பாறையை: இழுத்து மூடிச் சுற்றிலும் மண்ணால் மூடிவிட்டேன். மறுநாள் என் சிற்றப்பாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு என் நாடு திரும்பினேன். என் நாட்டின். தலைநகரை அடைந்தேன். அரண்மனை வாயிலை நெருங்கும்போது ஐந்தாறு காவல் வீரர்கள் ஓடிவந்து. என்னைக் கட்டிப்பிடித்து விலங்கிட்டனர்.
நான் என் சிற்றப்பாவின் நாட்டிற்குச் சென்றிருந்தபோது இங்கே என் தந்தையின் சேனாதிபதியில் ஒருவன் என் தந்தையைக் கொலை செய்துவிட்டு நாட்டைக் கைப்பற்றி இருந்ததை அறிந்தேன். அந்த சேனாதிபதியே தன்னை நாட்டின் பேரரசன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு விட்டான். இதைக் கேட்டதும் நடுநடுங்கிப் போனேன்.
ஏனெனில், அந்தச் சேனாதிபதி எனக்குப் பரமவிரோதி. நான் சிறுவயதில் வில்வித்தை பழகும்போது ஓர் அம்பு தவறுதலாக அவரது இடது கண்ணில் பாய்ந்து இடது. கண்ணைக் குருடாக்கியது. அப்போது நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். நான் இளவரசனாதலால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கபடமாய்ச் சிரித்துக் கொண்டார். இப்போது அந்தச் சேனாதிபதியே மன்னனாகி' யிருக்கிறான். என்னைப் பழிவாங்காமல் விடமாட்டான் என்று அஞ்சினேன்.
என்னை விலங்குடன் அவன்முன். கொண்டு நிறுத்தினர். என்னைக் கண்டதும் குரூரமாய்ச் சரித்து தன் உடைவாளை உருவிச் சரேல் என எனது: இடது கண்ணைக் குத்தி விழியைப் பெயர்த்துவிட்டான். பின்னர். மேலும் பயங்கரமாசச்சிரித்து என்னைச். சிரைச்சேதம் செய்யும்படிக் காவலர்களிடம் உத்தர விட்டான். காவலர்கள் நகருக்கு வெளியே இருந்த கொலைக்களத்திற்கு என்னை இழுத்துச் சென்றனர். என்னை இழுத்துச் சென்ற காவலர்கள் என்: தந்தையிடம் விசுவாசமாகப் பணிபுரிந்தவர்கள்: ஆகவே. அவர்கள் என் மேல் இரக்கம் கொண்டு ஓடித் தப்பிப். பிழைத்துப் போ என்று அனுப்பி விட்டனர். நான் வன - வான௱ந்திரங்களை எல்லாம் கடந்து என் சிற்றப்பாவின். நாட்டை அடைந்தேன். என் அவல நிலையை என் சற்றப்பாவிடம் எடுத்துக் கூறினேன்
அவரோ தன் மகனைக் காணாது வருந்தி துக்க மேலிட்டால் நலிந்து நடைப் பிணமாய் கடந்தார். என்னைக் கண்டதும் “மகனே! உன் சகோதரனைக் காணவில்லையே" என்று கட்டிப் பிடித்துக் கொண்டு. அழுதார். நான் மனம் தாளாது முன்னர் நடந்த எல்லா விவரங்களையும் கூறினன், இடுகாட்டில் ஒரு கல்லறையின் கீழே இருந்த சுரங்கத்தில் ஒரு பெண்ணுடன் சென்று மறைந்ததையும் சுரங்க வாயிலை நானே அடைத்து. மூடியதையும் கூறினேன். என் சிற்றப்பாவை அழைத்துக். கொண்டு கல்லறை இருக்கும் இடத்திற்குச் சென்று.
காட்டினேன். சேவகர்கள் கல்லறையைத் தோண்டினர். நான். காட்டிய பாறையை தகர்த்தினர். சுரங்கப்படிகள் தெரிந்தன. காவலர்கள் திவட்டிகளைக் கொண்டு வந்தனர். திவட்டியின்வெளிச்சத்துடன் சுரங்கத்தில் இறங்கினோம். சுமார் இருபத்து ஐந்து படிகளைக் கடந்தோம். ஓர் அறை: தென்பட்டது. அந்த அறையிலே பெரிய கட்டில், அந்தக். கட்டிலில் என் சகோதரனும் அவனுடன் வந்த பெண்ணும். படுத்திருக்கக் கண்டோம். இருவரும் இறந்து போய். வெற்றுச் சடலங்களாகக் கிடந்தனர். அந்தச் சடலங்களைக். கண்டதும் என் சிற்றப்பா அவற்றின் மீது காரி உமிழ்ந்தார். பேர் அருள் மிக்க அல்லாதான் இவர்களுக்கு தக்க தண்டனை வழங்கியிருக்கிறார்” என்று சொல்லி மேலும். காரித் துப்பினார்.
நான் வியப்பால் என்ன காரியம் செய்தீர்கள் சிற்றப்பா! என்றேன். “மகனே கேள்! இவனும் இவளும் உறவு முறையில். சகோதர சகோதரி மாதிரி. இந்தப் பெண் எனக்கு மகள்: அவாள்; ஓர் அடிமைப் பெண்மூலம் நான் இவளைப்பெற்றேன். இந்த இரசுசியம் யாருக்கும் தெரியாது; இவர்கள் காதலிப்பதை அறிந்து அதைத் தடுத்தேன்; இவர்கள் காதலில் தோல்வியுற்றதனால் சுரங்கத்தில் புகுந்து. தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு உன்னைக் கருவியாய். பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சரி! இனி நாம் கவலைப்படுவதில் அர்த்தமில்லை வா, நீதான் இனி எனக்கு மகன்” என்றார்.
அனைவரும். வெளியே வந்தோம். வெளியே வந்தும் எண் துரதிஷ்டம். என்னைத் தொடர்ந்தது. என் தந்தையைக் கொன்று, என்: கண்ணைக் குத்திக் குருடாக்கிய நயவஞ்சக சேனாதிபதி, என் சிற்றப்பா நாட்டின் மீதும் படை எடுத்து வந்திருந்தான். நடந்த கடும் போரில் என் சிற்றப்பா உயிர் இழந்தார். தானும் என் தலைமுடியையும் தாடியையும். சிரைத்துக் கொண்டு மாறுவேடம் பூண்டு பாக்தாத் நகருக்கு ஓடிவந்தேன். என் அவல நிலையை பாக்தாத் மன்னர் ஹரூன் அவர்களிடம் தெரிவித்து உதவி கேட்க வந்தேன் வந்த இடத்தில் எங்கத் தங்குவது எனத் தெரியாது தவிக்கும் போது என்னைப் போன்ற ஒரு கண்ணிழந்த இருவரையும் சந்தித்தேன். மூவருமாக உங்கள். வீட்டில் இரவைக் சுழிக்குமாறு எண்ணி வந்து சேர்ந்தோம். இதுதான் என் துரதிஷ்டமான கதை." என்று. கூறிமுடித்தான் முதலாம் குருடன். இவன் கதையைக். கேட்ட அனைவரும் துயரத்தால் கண்ணீர் உகுத்தனர். சகோதரிகளில் மூத்தவளும் "உன் துயரக்கதை என் மனதை உருக்கிவிட்டது