மந்திரவாதி கதைகள் -manthira kathaigal
puthisali kathaigal |
பிறந்த உடன் தகப்பனை இழந்து வளர்ந்தவன் தான் மந்திமகி. மந்திமகிக்கு மிகப்பெரிய மந்திரவாதியாக மாற விருப்பம் ஆனால் அந்த ஆசை அவனுக்கு நிறைவேற முடியல காரணம் அவன் குடும்பம் ஏழையான குடும்பம். இருபது வயதை அடைந்த மந்திமகி அவனது தாயார் இறந்துவிட்டார் . அவன் தாயர் அவனுக்கு சொன்னது மகனே நீ உன் மாமன் மகளை திருமணம் செய்துகொள் என்று சொல்லி மறித்து விட்டாள்.
அடிமையாக மாறின மந்திமகி
தன் தகப்பனையும் தாயும் இழந்த மந்திமகி மாமன் வீட்டுக்கு போய் அங்க தங்கினான். தாயும் இல்ல தகப்பனும் இல்ல அனாதை பையன் என்று அவனை அடிமைபோல் கொடுமையாக நடத்தினார்கள் அவனது மாமனும் அவனது அத்தையும். மந்திமகி மாமன் மகளை திருமணம் செய்ய ஆசை கொண்டு பொறுமையாக சகித்து கொண்டு இருந்தான். மந்திமகியின் வேலை ஆடு மேய்ப்பது.
மந்திமகியின் வயது இருபத்தி ஐந்து, அப்படா ஐந்து ஆண்டுகள் அடிமையாகவே வாழ்ந்துவிட்டான்.
மாமன் மகளின் திருமணம் - puthisali kathaigal
ஆடு மேய்த்து மாலை நேரம் வீடு திரும்பின உடன் அவன் மாமன் வீடு ஜொலித்தது என்னவென்று விசாரிக்கும்போது மாமன் மகளின் திருமணம் இன்னொரு பையனுடன் நாளை நடக்க இருப்பதை அறிந்து மனம் நொந்து அழுதான். மந்திமகிக்கு உதவி செய்ய யாரும் இல்லை அவன் தாயின் கடைசி ஆசை தன்னால் நிறைவேற இல்லை என்று மனம் நொந்து கண்ணீர் விட்டு அழுதான்.
அடுத்த நாள் வந்தது திருமணம் நடக்க எல்லாரும் மண்டபதிற்கு சென்றார்கள். மந்திமகி மட்டும் ஆடுகளை ஒட்டி கொண்டு அவைகளை மேய்க்க காட்டுக்குள் சென்றான். அங்க சிறுது நேரம் தங்கி ஓய்வு எடுத்தான்.
மழையில் வஸ்திரம்-magic story in tamil
திடீர் என்று மழை பெய்தது அங்கு ஒதுங்க இடம் கூட இல்லை. தன் வஸ்திரம் நினையாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த மந்திமகிக்கு யோசனை வந்தது.
அவன் கொண்டு வந்த பாத்திரத்தில் உள்ள பழைய உணவை உண்டு தன் வஸ்திரத்தை கழட்டி பாத்திரத்தில் வைத்து மழையில் நனைந்து கொண்டு இருந்தான். மழையும் நின்றது. மந்திமகி பார்க்கும் போது தூரத்தில் ஒரு மந்திரவாதி மழையில் நனைந்துகொண்டு நடந்து வந்துகொண்டு இருந்தான்.
இதை பார்த்த மந்திமகி தன் வஸ்திரத்தை திரும்ப போட்டுகொண்டு வழியில் இருந்தான். மந்திரவாதி மந்திமகியை பார்த்து ஆட்சரியம் பட்டு இந்த மழையில் வஸ்திரம் நினையாமல் இருக்கும் இவன் மிக பெரிய மந்திரவதியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அவனிடம் போய் பேசினான்.
தம் சிம் ஒட்டிக்கோ
மந்திரவாதி மந்திமகியை பார்த்து ஐயா நான் மிக பெரிய மந்திரவாதி என்னக்கு தெரியாத மந்திரம் இல்லை அப்படி இருந்தும் நான் மழையில் நனைந்தேன் நீங்கள் எப்படி வஸ்திரம் நனையாமல் இருந்திங்க என்று கேட்டான்.
அதற்கு மந்திமகி அதை நான் உன்னக்கு சொல்ல வேண்டும் என்றால் நீர் உம்மக்கு தெரிந்த ஒரு மந்திரத்தை என்னக்கு சொல்லி தா என்று கேட்டான். அவனும் ஒப்புக்கொண்டு ஒரு மந்திரத்தை அவனுக்கு சொல்லி தர ஆரமித்தான்.
ஒரு கை மற்றொரு கையுடன் இணைத்து
தம் சிம் ஒட்டிக்கோ- என்று உச்சரிக்கையில்
இரு கைகள் ஒட்டிகொண்டது .
மீண்டும் தம் சிம் ஒட்டிக்காத- என்று உச்சரிக்கையில்
இரு கைகள் விடுதலை பெற்றது .
மந்த்திரத்தை கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில்
மந்திமகி மண்டபத்தை நோக்கி வேகமாக நடந்தான்.
பூசாரி தாலியை எடுக்கும்போது
தம் சிம் ஒட்டிக்கோ- என்று உச்சரிக்கையில்
பூசாரி கைகள் தாலியோட ஒட்டிகொண்டது .
இதை பார்த்த பெற்றோர் பூசாரி
கையை தொட -தம் சிம் ஒட்டிக்கோ- என்று உச்சரிக்கையில்
பெற்றோர் கைகள் ஒட்டிகொண்டது .
அப்படியே எல்லார் கையும்
ஒட்டிக்கொண்டது- மந்திரவாதி ஒருவன் மந்திர எலும்பை எடுத்துகொண்டு வந்தான்.
தம் சிம் ஒட்டிக்கோ- என்று உச்சரிக்கையில் எழும்பும் மந்திரவாதி கையும் ஒட்டிகொண்டது.
நாய் எலும்பை கவ்வ மந்திரவாதி அலறடித்து ஓட
மந்திமகி நினைத்தபடி எல்லாம் நடக்க
அவன் மாமன் வந்து மந்திமகி காலில் -விழுந்து
எங்களை கையை விடுவி
என் மகளை நீ திருமணம் செய்துகொள் என்று சொன்னான்.
மந்திமகி தம் சிம் ஒட்டிக்காத- என்று உச்சரிக்கையில்
எல்லார் கைகள் விடுதலை பெற்றது .
பின்பு மந்திமகியின் திருமணம் நல்ல படியாக
நடந்து அவன் வாழ்கை இனிதே முடிந்தது.