tamil stories | பேரழகியும் உண்மை பேசும் கிளி
tamil stories |
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நகரத்தில்: வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருஞ்செல்வந்தன். அவன் மனைவியோ பேரழகி. வணிகன் தன் மனைவிமேல் பேரன்பு கொண்டிருந்தான். தன் மனைவியின் அழகைப் பிறர் கண்டால் பொறாமைப்படுவார்கள் என நினைத்து அவளுக்குப் பலத்த கட்டுக் காவல் போட்டு வைத்திருந்தான்.(tamil stories)
கணவனது சந்தேக புத்தியையும் பொறாமைக் குணத்தையும் அவன் மனைவி வெறுத்தாள். வியாபார விஷயமாக அவன் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. சந்தேக மனம் கொண்ட வணிகன் தன் மனைவியைத் தனியே விட்டுச் செல்ல அஞ்சினான். அதற்கொரு உபாயம் செய்ய வேண்டுமென எண்ணினான். கடைவீதியில் ஒருவன் அழகான பெரிய கிளி ஒன்றை விலை கூறிக்கொண்டிருந்தான். அந்தக் கிளி மனிதரைப் போலவே வெகு அழகாகப் பேசிற்று. கேட்ட கேள்விகளுக்கும் அழகாகப் பதில் சொல்லிற்று, அந்தக் கிளியைப் பெருவிலை கொடுத்து வாங்கினான். அதையே தன் மனைவிக்குக் காவலாக வைத்து விட்டுச் செல்லத் தீர்மானித்தான்.
கிளியை மனைவிக்குக் காவலாக வைத்துவிட்டு வெளியூர் சென்றான் வணிகன். சில வாரங்கள் கழித்துத் திரும்பி வந்தான். கிளியைத் தனியே எடுத்துக் கொண்டு சென்று பாலும் பழமும் கொடுத்தான். “கிளியே! நான் இல்லாதபோது என் மனைவி. எப்படி இருந்தாள். அவன் அறையில் ஏதேனும் ஆண் குரல் கேட்டதா?” என்றான். கிளி “ஆஹா தினமும் இரவு, வேளைகளில் உன் மனைவின் அறையில் ஆண்குரல் கேட்கும். அவனும் அவளும் ஆடிப்பாடி மகிழ்ந்துயிருந்தனர்" என்றது. ஆத்திரம் மீறிட்ட வணிகன் தன் மனைவியைப்: பிடித்து நையப் புடைத்தான். “நான் இல்லாதபோது. எனக்குத் துரோகமா செய்தாய்" என்று பேசி மேலும். அடித்தான். அவன் மனைவிக்கோ ஆத்திரம் தாளவில்லை. தன் சேடிகளில் யாரோ ஒருத்திதான்கோள் சொல்லியிருப் பாள். என்று எண்ணினாள். ஒவ்வொருத்தியாகக் கூப்பிட்டுத் தனிமையில் விசாரித்தாள் . யாரும் கோள் சொல்லியதாகத் தெரியவில்லை. கடைசியில் ஒருத்தி, “அம்மா! இது கிளி செய்த வேலைதான். எஜமான் கிளியை விசாரிக்கும் போது. நான் மறைந்திருந்து கேட்டேன்" என்றான். அவளுக்குக் கிளியின் மேல் படு ஆத்திரம். அந்த வணிகன் இது நடந்த இரண்டாம் நாளே. மீண்டும் வெளியூர் செல்ல வேண்டிவந்தது. சந்தேகப். பிராணியான வணிகன் ' மனைவியைக் கூப்பிட்டு எச்சரித்துவிட்டு மேலும் பலத்த காவல் வைத்துவிட்டுச் சென்றான். வணிகன் சென்றதும் அவன் மனைவி ஓர் அபூர்வமான யோசனை செய்து, சேடியை அழைத்து ஓர் உருளை மற்றும் உழுக்கை கொண்டுவரச்சொன்னாள்
tamil stories | பேரழகியும் உண்மை பேசும் கிளி
வீட்டுக் கூடத்தில் உரலைப்போட்டு உலக்கையால்: இடிக்கச் சொன்னாள். பின்னர் ஒரு சேடியை ஒரு பானைத். தண்ணீரைக் கொண்டு வரச் சொல்லி இடைவிடாமல்: கிளியின் மேல் தெளித்துக் கொண்டே இருக்கச் சொன்னாள். மற்றொரு சேடியை அழைத்து ஒரு கண்ணாடியைக் கொண்டு வரச் செய்து விளக்கின் ஒளியைக் கிளியின் முகத்தில் பிரதிபலிக்குமாறு இடையிடையே காட்டிக் கொண்டிருக்கச் செய்தாள். மூவரும் மாறி மாறி அப்படியே செய்து கொண்டி ருந்தனர். உரலில் இடிப்பது இடி இடிக்கிற தென்றும், தண்ணீரைத் தெளிப்பது மழை பெய்கிறது என்றும், கண்ணாடி. வீசும்ஒளி மின்னலென்றும் அக் கிளி நினைத்துக் கொண்டது. பகல் முடிந்து இரவானதும் பழையபடி. தன் கள்ளக் காதலனை வரவழைத்தான். கிளியின் எதிரிலேயே அவனை: உபசரித்து, ஆலிங்கனம் செய்து கொண்டு இன்பத்தில், ஆழ்ந்திருந்தனர். கிளி இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. மறுநாள் வெளியூர் சென்றிருந்த வணிகன் வந்தான். கிளியைத் தனியே எடுத்துச் சென்று விசாரித்தான். “நேற்றிரவு என்ன நடந்தது” என்று கேட்டான். “நேற்று, பகலும் இரவும் இடி மின்னலுடன் மழைபெய்தது. உன் மனைவி அவள் காதலனுடன் என்ன. பேசிக் கொண்டாள் என்றே கேட்கவில்லை. என்: உடம்பெல்லாம் மழையில் நனைந்துவிட்டது" என்றது. அந்த நகரத்திலேயே மழை பெய்து ஒரு வருடமாயிற்று. மழை இல்லாது ஒரே வரட்சி! பகலும் இரவும் விடாமல் மழை பெய்ததாக இந்தக் கிளி கூறுவது: வணிகனுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் உண்டாக்கிற்று.-tamil stories
கிளி பொய் சொல்கிறது என்று எண்ணி ஆத்திரத்தினால் கிளியைப் பிடித்துத் தரையில் அறைந்து: கொன்றுவிட்டான். பின்னர், தன் மனைவியிடம் சென்று கிளியின். பேச்சைக் கேட்டுத் தான் சந்தேகப்பட்டு அடித்துவிட்ட தற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவன் மனைவியோ தன் தந்திரம் பலித்ததற்காக மகிழ்ந்தான். நாள்கள் பல கடந்தன. ஒரு நாள் ஓர் அடிமைப் பெண் மூலம் நடந்த மோசடியைத் தெரிந்து கொண்டான் வணிகன். மீண்டும். ஒரு நாள். வணிகன் வெளியூர் செல்வதாகவும் வர பல நாள்கள் ஆகுமென்றும் மனைவிலிடம் கூறிவிட்டுச் சென்றான். இரில் யாரும் அறியாமல் வீட்டுக்கு வந்து மனைவியையும் அவள். கன்னக் காதலனையும் கையும் சுளவுமாய்ப் பிடித்து விட்டான். இருவரையும் வெட்டி. வீழ்த்தினான். தன். அறியாமையால் உண்மை பேசிய கிளியைக் கொன்று. விட்டோமே என மனம் வருந்தினான். -tamil stories