அதிபராக்கிரமமிக்க பூதத்தின் கதை | மாயாஜால கதைகள் | manthira kathaigal | magic story in tamil
manthira kathaigal | magic story in tamil |
முன்னொரு காலத்தில் ஓர் ஊரில். வயது முதிர்ந்த செம்படவன் ஒருவன் இருந்தான். அவன் பரம ஏழை. பெரிய குடும்பஸ்தன். மூன்று பிள்ளைகளும். மனைவியும் இருந்தனர். மீன் பிடித்துக் கொண்டுவந்து, அதை விற்றே ஜீவனம் செய்து வந்தான். வறுமையால் வாடிய போதிலும் அவன் ஒரு நியதியைக்கடைப்பிடித்துவந்தான். ஒரு நாளைக்கு நான்கு, தடவைகளுக்குமேல் வலை வீசமாட்டான்.
அப்படி நியமத்துடன் வாழ்ந்த அவன், ஒருநாள். கடலில் மீன் பிடிக்கச் சென்றான். முதல் முறை அல்லாவைத் தொழுது கொண்டு. வலையை வீசினான். வலை வெகுவாகக் கனத்தது. மெதுவாகச் சிரமப்பட்டு இழுத்தான். இன்று நல்ல கொழுத்த மீன் முதல் வீச்சிலேயே கிடைக்க அல்லா அருள் செய்திருக்கிறார் என்று எண்ணினான், மிகுந்த சிரமத்தின். பேரில் வலையைக் கரையில் இழுத்துப் போட்டான். ஐயோ பாவம்! வலையில் அழுகிப்போன ஒருகழுதையின் பிரேதம் இருக்கக் கண்டு ஏமாந்தான். பின்னர் இரண்டாம் முறையாக வலையை வீசினான். கரைக்கு இழுத்துப் பார்த்ததில் அதில் ஓர் உடைந்த ஜாடி தான் இருந்தது. ஏமாற்றத்தால் கிழவன் ஜாடியைத் தூக்கி எறிந்தான். “அல்லா இதென்ன சோதனை! என்று: முணுமுணுத்துக் கொண்டான். மூன்றாம் முறையாக வலையை வீசினான். இந்தத் தடவையும் ஏமாற்றமே ஏற்பட்டது: “எல்லாம் வல்ல அல்லாவே! நான் என்ன பாவம். செய்தேன். என்னையும், என் குடும்பத்தையும் பட்டினி போட வேண்டும் என்பது உன் சித்தமானால் அப்படியே ஆகட்டும்” என்று மனம் புழுங்கனான். எனினும் நான்காம், முறையாக ஆண்டவனைத் தியானித்துக் கொண்டே கடலில் வலையை வீசினான். இதுவே கடைசி முறை. வலையை இழுத்தான்; சற்று. கனமாக இருந்தது. இந்த முறை வலையில் என்ன இருக்கிறதோ என்று விரக்தியுடன் வலையைக் கரைக்குக் கொண்டு வந்தான்.
இந்த முறையும் வலையில் ஒரு மீனும் சிக்கவில்லை. ஆனால் சுழுத்து நீண்ட ஒரு வெண்கலச் செம்பு ஒன்று இருந்தது. அந்தச் செம்பின் வாய் மூடப்பட்டு போதகர் சுலைமான் மன்னரின் முத்திரை: பதித்திருந்தது. இந்தச் செம்பைக் கண்டெடுத்ததில் கிழவனுக்கு மிக. மகிழ்ச்சி. மூடியைத் திறந்து உள்ளிருப்பவற்றை: எடுத்துக்கொண்டு வெண்கலச் செம்பை விற்று விடலாம். செம்பே பத்து தினார்கள் விலை போகும். மீன்கள். கடைப்பதற்குப் பதிலாக இந்த வெண்கலச் செம்பே பரவாயில்லை' என்று கருதினான், கிழச்செம்படவன்.
இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து செம்பின். மூடியைநோக்கி திறந்தான். மூடியும் திறந்து கொண்டது. நீண்ட கழுத்துடைய செம்பாகையால் உள்ளே இருப்பது ஒன்றும் தெரியவில்லை. ஆகவே செம்பைத் தலைகீழாகக். கவிழ்த்து உலுக்கினான். செம்பினுள்ளிருந்து மெல்லிய புகை கிளம்பியது. அந்தப் புகை சிறுகச் சிறுசு வெளிவந்து, பின்னர். நிமிஷத்திற்கு நிமிஷம் புகை பெருகிக் கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் அந்தப் புகை வானமெங்கும். பரவியது. செம்படக் கிழவனுக்கு இப்போதுதான் அச்சம். ஏற்பட்டு நடுங்கினான். வான மண்டலமெங்கும் பரவிய: புகை திடீரெனச் சுருங்கியது. அந்தப் புகைத் திரளிலிருந்து: ஒரு பூதம் வெளிப்பட்டது. “ஏ, கிழவா! இன்றோடு நீ செத்தாய்” என்று பூதம். கர்ஜித்துக்கொண்டு கிழவனை நோக்கி வந்தது.
நடு நடுங்கிய கிழவன் அல்லாவின் இருநாமத்தை: உச்சரித்துக் கொண்டே “பூதமே நீ யார்? ஏன் என்னைக் கொல்லப் போகிறாய்?” என்றான். “நான் யாராயிருந்தால் உனக்கென்ன? உன் விதி. இன்றோடு முடிந்தது. உன்னைக் கொல்லத்தான். போகிறேன்" என்றது பூதம். “பூத ராஜனே! உன்னை ஜாடியிலிருந்து: விடுவித்தேனே அதற்கு இதுதான் பலனா?” என்று கிழவன் கூறியமுதான். “அட மானிடப்பதரே! நீ எல்வளவு கதறினாலும். உன்னை விடப் போவதில்லை. நீ எந்த விதமான. மரணத்தை விரும்புகிறாய்? சீக்கிரம் சொல்” என்றது பூதம். பயந்த கிழவன், “பூதத்தரசனே! செம்பின் மூடியில்: இருந்தது சுலைமான் மன்னரின் முத்திரையல்லவா? அவர்: காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறதே! நீ இத்தனை: நீண்ட காலமும் அடைபட்டுக் கிடந்த உன்னை நானல்லவா மிட்டேன். நீ நன்றியில்லாமல் என்னைக் கொல்லப் போவதாய்க் கூறுகிறாயே! இது நீதியா? என்றான். “செம்படவக் கிழவனே! நீதியாவது, நேர்மையாவது; நீ என் கதையைக் கேட்டால் இப்படியெல்லாம் கூறு மாட்டாய்” என்றது பூதம். * “நீ சொல்லும் உன் வரலாற்றைச் சிக்கிரம் சொல்லி முடித்துவிடு. இல்லாவிட்டால் பயத்தால் தடுங்கியே நான். செத்துப் போவேன் போலிருக்கிறது" என்றான் கிழவன். பூதம் தன் வரலாற்றைக் கூற ஆரம்பித்தது:
பூதத்தின் வரலாறு manthira kathaigal | magic story in tamil
manthira kathaigal | magic story in tamil |
“நான். அதிபராக்கிரமமிக்க பூதகணத்தைச் சேர்ந்தவன். தாவூத் பேரரசரின் மகனான சுலைமானுக்கு நான் தொல்லைகள் கொடுத்துவந்தேன். என், தொல்லையைப் பொறுக்க மாட்டாத சுலைமான் மன்னர். என்னைப் பிடித்துவர ஆணையிட்டார். சுலைமான் அவர்களின் மந்திரி பார்க்கியாவின் மகன் ஆசய் என்று பராக்கிரமசாலி என்னைக் கைது செய்து சுலைமான் மன்னர் முன்னிலையில் நிறுத்தினான். எனக்குப் புத்திமதிகள் கூறி தொல்லை செய்யாமல் இருப்பாயா: என்று மன்னர் கேட்க, நான், இமிராக எதிர்வாதம். செய்தேன். வெகுண்ட மன்னர் என்னை, நீ கண்டெடுத்த வெண்கலச் செம்பில் போட்டு இறுகமூடி, அம் மூடியின்மேல் தன் முத்திரையையும் பதித்துக் கடலில்: எறிந்துவிட்டார். “நூறு ஆண்டுகள் வரை செய்வதறியாது அழுது புலம்பிக் கொண்டிருந்தேன். என்னை யாராவது: விடுவித்துக் காப்பாற்றினால் அவர்களுக்கு அளவற்ற செல்வத்தைத் தருவேன் என்று சபதம் செய்து கொண்டேன். என்னை யாரும் விடுவிக்கவில்லை. “மேலும் நானுறு ஆண்டுகள் கழிந்தன. என்னை யார் விடுவித்தாலும் அவர்களுக்கு செல்வத்தோடு அல்லாமல்: பல வரங்களையும் தருவேன் என்று சபதம் செய்து. கொண்டேன். அப்படியும் நான் யாராலும் காப்பாற்றப்படவேயில்லை" “எனக்கு வெறுப்பினால் ஆத்திரமேற்பட்டது. என்னை யாராவது காப்பாற்றினால் அவர்களை அக்கணமே கொன்று போடுவேன் என்று சபதமிட்டுக் கொண்டேன்”.
“ஆயிரம் ஆண்டுகள் சுழித்து இப்போது நீ என்னை விடுவித்திருக்கிறாய். ஆகவே என் சபதப்படி உன்னைக்: கொல்லத்தான் போகிறேன்" என்றது பூதம். பூதத்தினால் தனக்கு மரணம் நிச்சயம் என்று: நினைத்துவிட்டான். பூதமோ, நீ எந்தவிதமான மரணத்தை: விரும்புகிறாய்? சக்ரம் சொல், நேரமாகிறது" என்று: விரட்டியது. மனிதனுக்குள்ள பகுத்தறிவு பூதங்களுக்குக் கிடையாது என்பதைக் கிழவன் கேள்விப்பட்டிருக்கிறான். “நீ எப்படியும் என்னைக் கொல்லத்தான் போகிறாய். ஆனால், நீ கூறும் இந்த வரலாற்றை நம்பவே முடியவில்லையே. கன் சுண்டுவிரல் கூட நுழைய முடியாத இந்தச் செம்பில், இவ்வளவு பெரிய ஆகிருதியுடன் எப்படி. ஆயிரம் ஆண்டுகள் அடைப்பட்டுக். கிடந்தாய். அதைத்தான் நான் நம்பவில்லை. நீ என்னிடம் பொய்க்: கதைகளைக் கூறுகிறாய்" என்றான் கிழவன். செம்படவக் கிழவன் இதைக் கூறக்கேட்ட பூதத்துக்கு. ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. “மனிதப் பதரே! நான் கூறுவதா பொய். பூதங்கள் எப்போதும் பொய் பேசாது என்பதை நீயறியமாட்டாய். இதோ பார். நான் செம்பினுள் நுழைந்து காட்டுகிறேன்” என்று கூறியது. உடனே பூதம் கரும்புகையாக மாறி, மிசுவும் மெல்லியதாய்ச் சுருங்கி வெண்கலச் செம்பினுள். நுழைந்த்தது.
செம்படவக் கிழவனுக்குத் தந்திரம் பலித்ததற்காக மகிழ்ந்து அருகில் இருந்த செம்பின் மூடியை எடுத்து மூடியை மூடிவிட்டான்.மூடப்பட்ட பூதம் மீண்டும். செம்பினுள் சிறையாகியது. மகிழ்ச்சியால் துள்ளிய கிழவன், “ஏ, நன்றி கெட்ட பூதமே! இப்போது என்னை நீ என்ன செய்ய முடியும். உன்னைச் செம்போடு மீண்டும் கடலில் எறியப் போகிறேன். என் வாழ்நாள் மட்டும். இந்தக் கடற்கரையிலேயே குடிசைப் போட்டு கொண்டிருந்து கொண்டு, செம்பில் அடைப்பட்ட பூதம் ஒன்று இக் கடலில்கிடக்கிறது . அருகில் வராதீர்கள்" என்று எச்சரித்துக் கொண்டே இருப்பேன். நீ இன்னும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இந்த செம்பிலேயே. அடைபட்டுக் கிடக்கப் போகிறாய்! என்றுகூறி செம்பை: கடலில் வீசச்சென்றான்.