வியாழன், 27 மே, 2021

சாலமோன் ஞானி இரட்டை தலை - puthisali kathaigal

சாலமோன் ஞானி  இரட்டை தலை


சாலமோன் ஞானி  இரட்டை தலை - puthisali kathaigal
PUTHISALI




சாலமோன் ஞானி ஆட்சி செய்த நாட்களில் அவன் தீர்த்து வைத்த அற்புதமான வழக்கு தான் இரட்டை தலை மனிதனின் பாகம் பிரச்சனை.(tamil story)

இரட்டை தலையும் அவன் சகோதர்களும்-Tamil Story

சாலமோன் ராஜா அவன் சிங்காசனத்தில் அமர்ந்து நீதி செய்துகொண்டு இருந்தான் . அப்பொழுது உள்ள வந்த ஏழு சகோதர்களும் அவர்களின் தந்தையும் அவர்களுக்கு பின்பு இரட்டை தலை மனிதன் வந்தான் . அவனுக்கு ஒரு உடம்பு ஒரு கழுத்து ஆனால் இரு தலைகள்.

அவர்களின் தந்தை சாலமோன் ஞானியை பார்த்து அரசே நீர் என்றும் வாழ்க ஆண்டவர் உம்மக்கு தந்த ஞானத்தால் நீர் நீதியோட ஆட்சி செய்கின்றீர் என் அரசே எங்களுடைய வழக்கையும் தீரும் என்று பரிதாபமாக கேட்டார் . உடனே சாலமோன் ராஜா உன் வழக்கை சொல்லும் அதை நான் நீதியோட உம்மக்கு தீர்த்து வைப்பேன் என்றான்.

இரண்டு தலை இரண்டு பாகம் -Tamil Story

என் அரசே என்னக்கு மொத்தம் எட்டு பிள்ளைகள் எட்டாவது பிறந்த பிள்ளைக்கு இரண்டு தலை இருந்தும் அவர்களை அன்போட நான் வளர்த்தேன் . அவர்களுக்கு உணவு கொடுத்தேன் இந்த இரட்டை தலை இரண்டு உணவயும் இரண்டு வாயில் சாப்பிடுவான் ஏன் என்று கேட்டால் நான் ஒருவன் இல்லை இருவர் என்று பதில் சொல்லுவான் . அப்போ நான் அதை பெருசாக கருதவில்லை .

இப்போ எனது கடைசி நாட்களில் சொத்துக்களை பிரித்து கொடுக்கலாம் என்று ஆரமிக்கையில் இந்த இரட்டை தலை எனக்கு இரண்டு பங்கு பாகம் வேண்டும் ஏன் என்றால் நான் ஒருவன் இல்லை இருவர் என்று சொல்லி வாக்குவாதம் செய்கின்றார்கள் என்று தனது வழக்குகளை சொல்லி முடித்தார்.

சாலமோன் ராஜா அந்த இரண்டு தலை மனிதனை பார்க்கும்போது அவன் ஒரு சட்டை இரண்டு கலர் வண்ணம் போட்டு இருந்தான் . சாலமோன் ராஜா என்ன பதில் சொல்லுவது என்று யோசித்தான் ஒரு உடல் இரண்டு தலை அவன் ஓருவன்தான அல்லது இருவன்தான என்று யோசித்து அந்த இரண்டு தலை அவனிடம் கேட்டான். இரண்டு தலையை உடையவனே நீ என்ன சொல்ல போகின்றாய் என்று கேட்டான்.

அதற்கு இரட்டை தலை என் அரசே நான் ஒருவன் அல்ல இருவர் என் தகப்பனர் எங்களுக்கு உணவு தரும்போது மற்ற எல்லாருக்கும் ஒரு தட்டு என்னக்கு இரு தட்டு தருவார் என்று சொன்னது ஒரு தலை. மற்றொரு தலை சாலமோன் ராஜாவே சீக்கிரம் என்னுடையே சொத்தை பிரித்து கொடு என்னக்கு அதிகம் வேலை உண்டு என்று அதிகாரத்துடன் பேசினது . மற்றறொரு தலை டேய் அமைதியாக இரு ராஜா நல்ல பதிலை தருவார் என்று சொன்னது முதல் தலை. இதை கேட்ட இரண்டாம் தலை நீ அமைதியாக இரு முட்டாள் தலை என்னுடைய சொத்தை எப்படி வாங்குவது என்று என்னக்கு தெரியும் என்று சண்டை பண்ணிக்கொன்டார்கள் சாலமோன் ராஜா மிகவும் யோசித்து நீங்கள் போய் மூன்று நாள் கழித்து வாருங்கள் என்று பதில் சொல்லி அனுப்பி வைத்தான். சாலமோன் ராஜா மிகவும் அவர்களை பற்றி யோசித்தான் என்ன பதில் சொல்லுவது என்று தெரிய வில்லை.

சாலமோன் ராஜாவுக்கு எழும்பின ஒரு கேள்வி " அவர்கள் ஒருவரா அல்லது இருவரா என்று. "


இரட்டை தலையின் வாக்குவாதம் -Tamil story

மிகவும் யோசித்த சாலமோன் ராஜா அவர்களின் முழு விவரத்தையும் விசாரித்து அறிந்து கொண்டான். பின்பு இரட்டை தலை மனிதனோட பிரயாணமாக சென்ற ஒருவனை விசாரித்தான். அவன் சொன்ன பதில் என்னவென்றால் என் அரசே நாங்கள் பிரயாணமாக வெளியூர் சென்றோம் அப்போ ஒரு இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்து மீண்டும் நடந்து சென்றோம் அப்போ இரு பாதை வந்தது அப்போ முதல் தலை என்னக்கு தெரியும் முதல் பாதைதான் நாம் செல்லும் வழி என்று . இரண்டாம் தலை இல்லை இந்த பாதைதான் நாம் செல்லும் வழி என்று இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்தார்கள் கடைசியாக வலப்புறம் இருக்கும் பாதையில் நாங்கள் சென்றோம் என்று சொல்லி முடித்தார் . இவைகளை கேட்ட சாலமோன் ராஜா மிகவும் யோசித்து நடந்து சென்றார்.


மதியம் நேரம் வெயில் சுட்டு எரித்தது அப்போ சாலமோன் ராஜா மழை வந்தால் நல்ல இருக்கும் அந்த மழை நீரில் நனைந்தால் நல்ல இருக்கும் என்று யோசித்த உடன் மழை வந்தது. உடனே சாலமோன் ராஜா மழையில் நனையாமல் அரண்மனைக்குள் ஓடி வந்து விட்டான். சாலமோன் ராஜா அரண்மனையில் வந்து அமர்ந்த உடன் இரட்டை தலையின் இரண்டு பாகம் வழக்கின் தீர்வை கண்டுபிடித்தான்.


சாலமோன் ராஜாவின் தீர்ப்பு- tamil story

Double head in Tamil Story - puthisali kathaigal
puthisali kathaigal


மீண்டும் அரண்மனைக்கு வந்த அந்த இரண்டு தலை சாலமோன் ராஜா அரண்மனையில் இல்லாததை பார்த்த அந்த முதல் தலை ஏ ஏ சாலமோன் ராஜா எங்க சாலமோன் ராஜா எங்க என்று கேட்டது. இரண்டாம் தலை அமைதியாக இரு ராஜா வருவார் என்றது . முதல் தலை உன்னக்கு சொத்து கிடையாது இரண்டும் என்னக்கு தான் என்று மீண்டும் வாக்குவாதம் செய்தது இவையெல்லாம் பிண்ணாடி இருந்து கேட்டுக்கொண்டு இருந்தான் சாலமோன் ராஜா.

சாலமோன் ராஜா வந்து உங்கள் சொத்துகளை உங்களுக்கு தந்து விடுவேன் என்று அதற்கு சிறு பரீட்சை உள்ளது என்று சொல்லி இரண்டு தலைக்கும் கண்ணை கட்டி விட்டான் பின்பு சாலமோன் ராஜா செய்கை காட்டின உடன் குளிர்ந்த நீர் ஒரு பானையில் கொண்டு வர பட்டது அதை சாலமோன் ராஜா வாங்கி ஒரு தலையில் ஊற்றினான் உடனே இரண்டு தலையும் தனது தலையை ஆட்டி சாலமோன் ராஜா போதும் நிறுத்து என்று முதல் தலை சொல்லிற்று. இரண்டாம் தலை கிக் கிச் என்று இரும்பி சாலமோன் ராஜா போதும் என்று சொன்னது .

பின்பு சாலமோன் ராஜா கண்களை திறந்து நீங்கள் இருவர் அல்ல ஒருவர் தான் நான் ஒரு தலையில் தண்ணீர் உற்றினேன் நீங்கள் இருவரும் தலையை அசைத்து போதும் என்று சொல்லினிர்கள் இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இருவர் அல்ல ஒருவர்தான் என்று தனது பதிலை சொன்னான்.

அங்கு கூடி இருந்த அனைவரும் சாலமோன் ராஜாவின் தீர்ப்பை கேட்டு அவனை பாராட்டி அவனை வாழ்த்தினார்கள்.

சாலமோன் ராஜாவின் தீர்வு | tamil story

மனிதனுக்கு பல யோசனைகளை இருந்தும் அவன் செய்வது ஒன்றுதான்.
இரு பாதைகள் இருந்தும் ஒரு பாதையில்தான் சென்றான்.
ராஜா மழையில் நினைய விரும்பி மழை வந்த உடன் நினையாமல் ஓடி வந்து விட்டான்.
அதில் இருந்து பிறந்ததுதான் தீர்வு.


Tamil Story - puthisali kathaigal (puthisalikathaikal.blogspot.com)


tamil story is a best story
tamil story is fantastic story
tamil story is amazing
tamil story is great
popular tamil story in the world
moral tamil story
great tamil story for ever
puthisali tamil story kathaigal
tamil story is amazing