மெய் காதல் 3
அடிமை நேசகுமாரனை பார்த்து என் இளவரசே காதலுக்கும் (காமம்)காமத்துக்கும் என்ன வித்தியாசம் உள்ளது இரண்டும் ஒன்றுதான் என்று அவன் கேட்டான்.அதற்கு நேசகுமாரன் காதல் தூய்மையானது ஆனால் காதல் இல்லாமல் காமத்தினால் இச்சை கொள்வது தீமையானது . காதல் திராட்சரசம் மாதிரி பல நாட்கள் ஆகஆக அதன் ருசி அதிகம்மாகும். காமம் பழம் மாதிரி பல நாட்கள் ஆகஆக அழுகிபோய்விடும். காமஇச்சை ஒருவனை தவறான பாதையில் நடத்தும் உறவுமுறையை அசிங்கபடுத்தும். முன் ஒரு காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை சொல்லுகின்றேன் கேள்.
தங்கை மீது காமம்(காமம் காதல்)
Lust and love in Tamil story - puthisali kathaigal |
ஒரு நாட்டின் அரசன் நீதியோட ஆட்சி செய்து வந்தான் அவனுக்கு ஏழு மனைவிகள். அதில் ஒரு மனைவின் வயிற்றில் பிறந்தவன் அம்னோன். மற்றொரு மனைவின் வயிற்றில் பிறந்தவள் தான் தாமார். இருவரும் அண்ணா தங்கை முறை.
இருவரும் வாலிபர்கள் ஆனார்கள். தாமார் மிகவும் அழகுள்ளவள் ஆனால் அவளது அழகும் அவளது நற்பண்புகளும் பாற்போரை கவர்ந்தது. அம்னோன் தன் தங்கை தாமார் மீது காமம் கொண்டு அவளை காமஇச்சையோட தினமும் பார்ப்பான். அவளை அடையவேண்டும் என்று மிகவும் துடிப்பான் . அவளுக்கு பல முறை பரிசு பொருட்களை தந்து அவளது அழகை வர்ணிப்பான் . அவளோ அண்ணன் தான் பரிசு தருகின்றார் என்று தவறாக நினைக்க மாட்டாள் . அவனோ தவறான கண்னோட்மாக பார்ப்பான் பல முறை நெருங்கி பழக போகும் போது தடையாக மாறினது.
யோனத்தான் ஆலோசனை (காமம் காதல்)
அம்னோன் அவள் மீது ஏக்கம் கொண்டு சாப்பிடாமல் மிகவும் மெலிந்து போனான். யோனத்தான் என்பவன் மிகவும் தந்திரவாதி அவன் அம்னோன் இடம் போய் ராஜகுமாரனே ஏன் தினமும் மெலிந்து போகின்றாய் உன்னக்கு வேதி இல்லையே என்ன மனக்கவலை என்னிடம் சொல்லு என்று தன் தந்திர வார்த்தையால் கேட்க அவனும் நான் என் தங்கை தாமரை அடைய விரும்புகின்றேன் என்று சொன்னான் . உடனே தந்திரக்காரன் . உன்னக்கு உடம்பு சரி இல்லை என்று படுத்துகொள். உன் தந்தை அரசர் உன்னை பார்க்க வரும்போது என் தங்கை என்னக்கு சிறிது அப்பம் சுட்டு தர கேள் என்று தனது ஆலோசனையை சொன்னான்.
நினைத்தபடி எல்லாம் நடந்தது
ஒன்றும் அறியாத தாமார் தன் அண்ணனுக்கு உடம்பு சரி இல்லை என்று அவனை பார்க்க வந்து அவனுக்கு முன்பாக அப்பம் சுட்டால். இதை பார்த்து கொண்டு இருந்த அவனுக்கு காமஎண்ணங்கள் மேல் எழும்ப அவள் தன் தங்கை என்கின்ற உறவு முறையை மறந்தது. அவள் அப்பம் சுட்டு அவனுக்கு முன் வைக்கையில் அவன் தாமார் நீ என்னக்கு ஊட்டி விடு என்று சொன்னான். அவளும் அப்பத்தை எடுத்து அவன் வாயுக்கு ஊட்டி விட்டால் அவனோ சாப்பிட மறுத்து விட்டான் . ஏன் அண்ணா சாப்பிடமாட்டேன் என்று சொல்லுகின்றிகள் என்று கேட்க
அவன் எல்லாரையும் வெளிய போக சொலிட்டு இப்போ என்னக்கு ஊட்டு விடு என்று சொன்னான். அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டால் மீண்டும் அவனுக்கு ஊட்டிவிடும்போது அவளது கரத்தை பிடித்து முத்தம் கொடுத்தான் . தடுமாறிப்போன தாமார் அண்ணாதான் கரத்தில் முத்தம் இட்டான் என்று யோசித்து அங்கு இருந்து போய்விடலாம் என்று தீர்மானித்தால் அப்பொழுது அம்னோன்மீண்டும் ஊட்டிவிடு என்று கேட்க அவளும் ஊட்டிவிட்டால் அப்போ அவன் அவளை பிடித்து கட்டிபிடித்தான்.
அண்ணா என்ன செய்கின்றீர் என்று கேட்க அவன் நான் உன்னை காதலிகின்றேன் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னான் அவளோ நீ என்னக்கு அண்ணா அப்படி செய்யகூடாது என்று சொன்னால். அவனோ அவளது வார்த்தைக்கு செவிகொடுக்காமல் அவளை கற்பழித்தான். அவள் அழுதுகொண்டு தன் அறைக்கு சென்று விட்டால். பின்பு அவள் யோசிக்கும் போது தன் அண்ணன் தன்னை மிகவும் நேசிக்கிறார். அதனால் அப்படி என்னோட நடந்து விட்டார். என்று தன்னை தேற்றி ஆறுதல் அடைந்தால் பின்பு அவன் மறுநாள் காலையில் தனியாக அழைத்து அவளோட சேர்ந்தான். நாட்கள் கடந்தது அவள் தன் அண்ணனிடம் அண்ணா போதும் என்னை திருமணம் செய்துகொள் என்று சொல்ல அவன் நான் உன்னை திருமணன் செய்ய மாட்டேன் உன்னை பார்த்தாலே என்னக்கு பிடிக்கவில்லை இங்கு இருந்து போய்விடு என்று கோபமாக சொன்னான். இதைகேட்ட அவள் மிகவும் அதிர்ந்து போனாள்.
அவள் அவனை பார்த்து முன்பு என்னக்கு செய்த தீமை காட்டிலும் என்ன வெளிய போகசொல்லுகின்ற தீமை பெரியது
நேசகுமாரன் மீண்டும் ஒரு மெய் காதல் கதை சொல்லுகின்றேன் கேள் என்று சொல்லி தன் கதையை சொல்ல ஆரமித்தான்.
ஆடு மேய்பவனின் மெய்காதல்
யாக்கோபு என்பவன் தன் தகப்பன் வீட்டை விட்டு தன் மாமன் வீட்டுக்கு வந்து தங்கினான் . தன் மாமனுக்கு இரு மகள்கள் உள்ளனர்கள் முத்தவள் அவள் அழகு குறைவு. இளையவள் மிகவும் அழகுள்ளவள் . இந்த யாக்கோபு தன் இளைய பென்னை காதலித்தான். தன் மாமன் ஆடுகளை மெய்துகொண்டு இருந்தான் அவன் தன் மாமனிடம் போய் மாமா என்னக்கு
திருமணம்
யாக்கோபு தன் ஏழு வருடம் முடிந்த உடன் அவன்போய் தன் மாமனை பார்த்து சீக்கிரம் திருமணம் செய்துவை ஏழு வருடம் போய்விட்டது என்றான். அவன் மிகவும் மகிழ்ந்து நீ என் மகளை உண்மையாகவே காதலிக்கின்ராய். நான் திருமணம் ஏற்பாடு செய்கின்றேன் என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டான். பின்பு அவன் யோசித்து பார்க்கும்போது தன் மூத்த குமாரத்தி அழகுள்ளவள் அல்ல ஆகையால் அவளை இந்த முட்டாளுக்கு திருமணம் செய்துவிடவேண்டியது தான் என்று தன் மனதில் யோசித்து அதன் படி வேகமாக காரியத்தை செய்தான். திருமணம் காரியம் வேகமாக முடிந்தது. யாக்கோபு மிகவும் மகிழ்ந்தான் ஊறார் அனைவரும் விருந்து பரிமாறப்பட்டது. பின்பு முதல் இரவில் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் . யாக்கோபு அவள் தன் காதலி என்று நினைத்து இரவில் ஒன்று சேர்ந்தான்.
இருட்டில் அவனுக்கு யார் என்று தெரிய வில்லை. காலையில் அவன் அவளை பார்த்து கோபம் கொண்டு தன் மாமனிடம் சென்று சண்டை போட்டான் . நீ என்னை ஏம்மாற்றி விட்டாய். அதற்கு அவனோ நான் என் இளைய குமாரத்தியை சத்தியமாக உன்னக்கு தருவேன் நீ மீண்டும் ஏழு வருடம் என்னக்கு அடிமையாக வேலை செய் பின்பு உன் காதலியை உன்னக்கு திருமணம் பண்ணிவைக்கின்றேன் என்று சொன்னான்.
தான் ஏம்மற்றபட்டதை நினைத்து மிகவும் சோர்ந்து போய் மீண்டும் தன் காதலிக்காக ஏழு வருடம் அடிமையாக வேலை செய்தான். அவன் அவள் மேல் வைத்த காதலினால் ஏழு வருடம் ஏழுநாள் போல் இருந்தது . அந்த ஏழு நாட்கள் முடிந்து அவன் தன் காதலியை திருமணம் செய்து கொண்டு இரு மனைவியோடும் மகிழுந்து இருந்தான்.
காதல் புனிதமானது அது பிறரை அடைய தவறான பாதையில் நடத்தாது. காதல் பொறுமையானது ஏழு அல்லது எழுபது வருடம் வரை காத்திருக்கும் சக்தி படைத்தது. என்று நேசகுமாரன் தன் கதையை முடித்தான்.
அதற்கு அடிமை என் இளவரசே காமம் ஒருவனுக்கு உண்டானால் விபச்சாரவிடுதி உண்டு அதில் அழகான மங்கையர் உண்டு அங்க போய் தன்
காமத்தை தீர்த்துகொள்ளலாமே. என்று தன் மனதில் தோன்றினதை சொன்னனான். உடனே நேசகுமாரன் அடிமையே விபசாரஸ்திரி சாவிலும் மிகவும் கசபானவள். அவளை சேர்கின்ற ஒருவனும் மெய்பாதையை அடைவது இல்லை. அவள் மிகவும் பலசாலியானஅனேகரை கொன்று இருகின்றாய்.