True love in Tamil story - puthisali kathaigal
நேசம் என்கின்ற நாட்டில் நீதி என்கின்ற ராஜா வாழ்ந்து வந்தான் . அவன் பெயருக்கு ஏற்றார்போல் நீதியோட ஆட்சி செய்து வந்தான் . அவனுக்கு
ஒரே ஒரு மகன் இருந்தான் .அவன் பெயா் நேசகுமாரன் .நேசகுமாரன் ஒருமுறை மாலை நேரத்தில் உலா வந்தான் அவன் உலா வரும்போது நான் ராஜகுமாரன் என்று தெரியாவண்ணம் ஏழைபோல மாறுவேடம் போட்டுகொண்டு சென்றான்.
நேசகுமாரன் ஆடுகள் மேய்கின்ற இடத்தில் வந்தான்.தான் சற்று நேரம் ஓய்வு எடுத்தான்.அப்பொழுது ஒரு அழகான பெண்
ஆடுகளை மெய்துகொண்டு வந்தால் .அவள் ஆடுகளுக்கு தண்ணிர் காட்ட கிணற்றின் அருகில் வந்தால் அந்த கிணறு பெரிய
கல்லினால் மூடப்பட்டு இருந்தது.அவள் எவ்வளவோ முயன்றும் அந்த கல்லை நகர்த்த முடியவில்லை. இதை பார்த்த நேசகுமாரன் அந்த பெண்ணுக்கு உதவி செய்ய அந்த கிணறின் அருகில் சென்று அந்த பெண்ணிடம் நான் உன்னக்கு உதவி செய்யடுமா என்று கேட்டான்.உடனே அந்த பெண் ஆம் உதவி செய்யுங்கள் என்று சொன்னால்.உடனே நேசகுமாரன் கல்லை தூக்கி போட்டான் ஆடுகளுக்கு தண்ணிர் குடிக்க கொடுத்தான் .நேச குமாரன் அந்த பெண்ணை பார்கும் பொழுது அவள் கண்கள் பிரகாசமாக இருந்தனே அவள் கண்களை பார்த்தும் அவள் அழகை கண்டதும் தன் மனதை பறிகொடுத்தான் (மெய் காதல்) மலர்ந்தது .நேசகுமாரன் அவளது பெயர் என்ன என்று கேட்க .அவள் என்னுடைய பெயர் லீலி என்று சொன்னால்.
உடனே லீலி உன் பெயர் என்ன என்று கேட்டால் .அதற்கு நேசகுமாரன் என்று சொன்னான் இரண்டு பேரும் ஒருவர் மீது
ஒருவர் காதல் கொண்டனர்.
தூது செல்லும் புறா(மெய் காதல்)
True love in Tamil story |
நேசகுமாரன் மயிலின் சிறகை எடுத்து லீலிகு கடிதம் ஒன்றை எழுதினான்.
"என் அன்பே என் நேசமே
என் இருதயத்தை கவர்ந்த என் லீலி புஸ்பமே.
உன் கண்கள் என் இருதையத்தை வென்றது.
உன் பார்வை என் கண்களை கவர்ந்தது.
என் கண்களை மூடும்போதும் உன் முகமே.
உன் அன்பிற்காய் நான் ஏங்குகின்றேன்.
உனக்காய் எதையும் செய்ய விரும்புகின்றேன்.
வானத்தில் மின்னும் நட்சத்திரத்தை பிடித்து உனக்கு பொற்கிரிடம் செய்வேன்.
வானவில்லை உனக்கு வஸ்திரமாக அணிவேன்.
நீ சொன்னால் அந்த வானத்தையே வில்லா வலைபேன் உனக்கு."
என்று கடிதம் எழுதி அதை புறாவிடம் கொடுத்து அனுப்பினான்.
லீலின் பதில் கடிதம் (மெய் காதல்)
True love in Tamil story |
"என் நேசமே உம் அன்பில் நான் விழுந்து விட்டேன்.
உம் ஒருவறுகாய் காத்துகொண்டு இருகின்றேன்.
உம் மேல் நான் கொண்ட காதல் அதை கடிதத்தினால் சொல்ல முடியாதே.
உம்மை பார்க்க நான் விரும்புகின்றேன்.
என் நேசமே என் மணவாளனே உம்மகாய் நான் ஏங்குகின்றேன்.
மழை காலம் முடிந்தது,பறவைகள் பாடும் சத்தம் கேட்கின்றது.
வாரும் வயல் வெளிக்கு போவோம் அங்க
என் நேசத்தின் கனிகளை உம்மக்கு சாப்பிட தருவேன்.
தெளிந்த திராட்ச ரசத்தை உம்மக்கு தருவேன்."
என்று பதில் கடிதம் அனுபினால்.
வயல் வெளியில் சந்திப்பு
True love in Tamil story |
நீண்ட நாட்களுக்கு பிறகு நேசகுமாரனும் லீலியும் வயல் வெளியில் சந்தித்து முத்தம் கொடுத்து தங்கள் நலனை விசாரித்தார்கள்.லீலி போதும் என் நேசரே என்னை உம்மோட அழைத்து செல்லும். இன்னும் சில நாள் நான் உம்மை பிரிந்து இருந்தால் நிச்சயம் நான் நேசத்தால் சோர்ந்து போவேன் .நேசம் மரணத்தை விட வலிது என்று சொன்னால். உடனே புறா பறந்து வந்து ஒரு கடிதத்தை நேசகுமாரிடம் கொடுத்தது. அந்த கடிதத்தில் நம் எதிர் நாடு திடீர் என்று நம் மீது போர் எடுத்தனர் உடனே நீர் தலைமை பொறுப்பேற்று யுத்தம் பன்னுவீராக என்று எழுதி இருந்தது.உடனே லீலிடம் விடை பெற்று நேசகுமாரன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.
யுத்தத்தில் நேசகுமாரன் (மெய் காதல்)
எதிர் நாட்டின் திடீர் தாக்குதலினால் தடுமாறின வீரர்கள் நேசகுமாரன் வந்தவுடன் உற்சாகம் அடைந்து போரில் தொடர்ந்து போரிடர்கால் .நேசகுமாரன் தான் போகும் இடமெல்லாம் எதிரிகள் விழ்ந்துகொண்டு இருந்தார்கள்.நேசகுமாரன் வெற்றிய பெற்று கொண்டு இருந்தான்.நேசகுமாரனின் தாக்குதலுக்கு பயந்து ஒரு மதில் சூழ்ந்த பட்டணத்தில் தங்கினார்கள். நேசகுமாரனின் படைகள் அந்த பட்டணத்தை பிடிக்க கிட்ட வரும்போது மதில் மேல் நின்று கொண்டு தாக்கினார்கள்.இதில் சில வீரர்கள் மறித்தனர்.மீண்டும் சில வீரர்கள் மதிலை இடித்து விடலாம் என்று கிட்ட செல்லும்போது வில்வீரர்கள் தாக்குதலின் சில வீரர்கள் மறித்தனர்.நேசகுமாரனின் படை எண்ணிக்கை குறைந்தது வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நேசகுமாரனின் கட்டளைக்கு எதிர் பார்த்து கொண்டு இருந்தார்கள் . நேச குமாரன் தன் வீரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து பேச ஆரமித்தான் .
"நம் எதிரிகள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர் அதனால் உங்களால் அவர்களை ஜெயக்கமுடியலே ."
உண்மையில் அவர்கள் வலப்புறம் இடப்புறம் தப்பிக்க முடியா இடத்தில் மாட்டிகொண்டு உள்ளனர்.
சில வீரர்கள் வலபுறம் யுத்தம் பண்ணுங்கள் அப்பொழுது அவர்கள் உங்களை தாக்கும் போது அவர்களுக்கு முன்பாக தொற்று போய் ஓடுங்கள் அவர்கள் எல்லாரும் உங்களை தொடரும் போது நானும் நம் படைகளும் மதிலை எரித்து எறித்து விடுவோம் .நாங்கள் பின்புறம் தாக்க அவர்களுக்கு முன்பக்கம் ஓடின நிங்கள் உடனே திரும்பி தாக்குங்கள் என்று சொன்னான்.இந்த ஆலோசனை படி எல்லாரும் செய்து வெற்றி பெற்று தங்கள் எதிர் நாட்டின் செல்வதை தங்கள் நாட்டுக்கு மகிழ்ச்சிடன் வந்தார்கள்.
லீலி சிறைபிடிக்க படுதல்
வெற்றியோட வந்த நேசகுமரனுக்கு ஒரு செய்தி வந்தது அது தான் "நேசகுமரனே நீர் யுத்தம் பண்ண போனவுடன் இருள்
நாட்டின் அரசன் நம் நாட்டின் தென்பகுதியை சிறை பிடித்து விட்டனர் என்று."
எதற்கும் தடுமாறாத நேசகுமாரன் இதைகேட்ட உடன் தடுமாறி விட்டான்.தென்பகுதில் லீலி உள்ளால் .தன் காதலியும் சிறையாக போய்விட்டாளே என்று சோர்ந்து போனான்.