நேசகுமாரனின் ஏக்கம்(மெய் காதல்)
நேசகுமாரன் தன் காதலியை நினைத்து மிகவும் சோர்ந்து போனான்(மெய் காதல்) தனக்குள் யாரும் அறியாமல் கண்ணிர்விட்டு அழுதான்.சாப்பிடாமல் தன் சரிரம் மெலிந்து போனது.அப்பொழுது அவன் புறாவை அழைத்து என் காதலிக்கு தூது எடுத்து செல்லும் என் புறவே நான் என் காதலியை பார்க்காமல் சோர்ந்துவிட்டேன்.
"என் காதலியை பார்க்காமல் இருக்க முடியவில்லை
அவளை நினைத்து என் உள்ளம் தினமும் துடிக்கின்றது
அவள் முகத்தை பார்க்க என் விழிகள் ஏக்கம் கொள்கின்றது.
காலையில் உதிக்கும் சூரியன் என்னக்கு இருளாக மாறினது .
இரவில் உதிக்கும் நிலவே இருண்டு போனதே.
திரச்சரசம் மதுபானம் என் கவலைய மாற்ற முடியவில்லை.
சங்கிதகாரர்களின் பாட்டும் என்னை தேற்றமுடியல.
அழகான மங்கையரின் நடனம் என்னை மகிழ்விக்க முடியல.
என் வெற்றி என்னக்கு மகிழ்ச் சி தரவில்லை என் அரியணை இப்போ கசப்பாக மாறினது.
என் வாழ்கை முழுவதும் இருண்டு போனது. "
என்று தன் காதலியை நினைத்து புலம்பி பாடினான்.
நேசகுமாரனின் தகப்பன் தன் மகனை பற்றி நேசகுமாரனின் தோழனிடம் கேட்டார்.அதற்கு நேசகுமாரனின் தோழன் உம் மகன் லீலி என்னும் அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்து விட்டான்.நேசகுமாரன் லீலி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றார்கள்.லீலி இப்போ சிறையாக கொண்டுசெல்லபட்டால்.அதை நினைத்து உம் மகன் தினமுன் துக்க படுகின்றார் என்று சொன்னான்.நேசகுமாரன் தன் தகப்பனிடம் விடை பெற்று லீலிய காப்பாற்ற தனியாக சென்றான்.
அடிமையின் நட்பு (மெய் காதல்)
"என் அன்பே என் உயிரே.
உன்னை மீட்க என் உயிரையும் தருவேன்.
என் மேன்மையை இழந்தேன் உன்னை நான் நேசித்தேன்.
நீ இல்லாத அரண்மனை வேண்டாம்.நீ மட்டும் என்னக்கு போதும்."
என்று பாட்டு பாடிக்கொண்டு தன் காதலியை மீட்க சென்றான்.வழியில் ஒருவன் மயங்கி விழுந்தவன் எழும்பவே இல்லை அந்த வழியில் வந்த நேசகுமாரன் அந்த மயங்கி விழுந்தவரை பார்த்து பரிதாபம் கொண்டு.அவரை தூக்கி தம்மீது சாய்த்து தண்ணிர் குடிக்க கொடுத்து தனது திராச்சரசத்தை அவனுக்கு தந்து அத்திபழம் அவனுக்கு சாப்பிட கொடுத்தான் .இவைகளை உண்ட அவன் உயிர் அவனுக்கு திரும்ப வந்தது.அவன் கண்ணை திறந்து நேசகுமாரனை பார்த்தான்.நேசகுமாரன் உடனே வாலிபனே உன் பெயர் என்ன நீ எப்படி இங்க வந்தாய் என்று கேட்க.அந்த வாலிபன் பதில் இப்படி உரைத்தான்.ஐயா நான் ஒரு அடிமை இந்த இருள் இராட்சியத்தில் அடிமையாக நான் வாழ்கின்றேன் மூன்று நாட்களுக்கு முன் தென்பகுதியை கொள்ளைஅடித்து அங்கு உள்ளவர்களை சிறைபிடித்து சென்றுகொண்டு இருந்தோம் அப்பொழுது நான் நோய்வாய் பட்டு கிடந்தேன் என் ஆண்டவன் நான் பிழைக்க மாட்டேன் என்று இந்த இடத்தில் என்னை தூக்கிவீசி விட்டார் என்று சொன்னான். அதற்கு நேசகுமாரன் தென்பகுதின் இளவரசன் நான்.என் காதலியை சிறைபிடித்து சென்று விட்டார்கள் அவளை மீட்க செல்கின்றான் போகும் பாதைய காட்டு நான் உன்னக்கு நல்ல சன்மானத்தை தருவேன் நான் உன்னை ஒரு அடிமைபோல நடத்த மாட்டேன் என் தோழனாக உன்னை காண்கின்றேன் என்று சொல்லி இருவரும் நடந்து சென்றார்கள்.மாலை நேரம் வந்தது இருவரும் ஒரு சத்திரத்தில் தங்கினார்கள்.அந்த அடிமை நேசகுமாரனை பார்த்து இளவரசே உம் நாட்டில் எத்தனையோ அழகான பெண் இருக்க உம் காதலி மட்டும் சிறப்பு வாய்ந்தவள் என்று நீர் எப்படி நினைகின்றிர் என்று கேட்க நேசகுமாரன் பாடல் பாட தொடக்கினான் .
"என் காதலி ஒருத்திதான் அவளை காணமல் நான் இல்லையே.
என் புறாவே ஒருத்தி அவள் உத்தமியே.
அவள் கண்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரம்.
அவள் பேசும் வார்த்தை தேனை போல உள்ளதே.
நான் அவளை பார்க்க என்னை கவற என்ன என்னவோ செய்வாள்.
நான் அவளை பார்க்கும்போது என்னை பார்க்காமல் நடிப்பால்.
நான் அவளோட பேச அவள் என்னைபார்த்து வெட்கப்பட்டு முகத்தை மூட
அதை கண்டு சூரியன் வெளிச்சம் இருளாக
என் காதலியின் முகம் பிரகாசமாக மாற
நான் அதை கண்டு மகிழ என்ன வென்று சொல்ல அந்த அழகே.
அவள் முகம் காணமல் நான் இல்லை
என் காதலியே என் அன்பே என் மணவாட்டியே என் லீலியே உன்னை மீட்க
வருவேன் என் உயிரையும் உன்னக்கு தருவேன் என்று பாடினான்."
இந்த பாடலை கேட்ட அடிமை மெய்மறந்து போனான்.பின்பு இருவரும் படுத்து உறங்கிவிட்டார்கள்.மறுநாள் காலையில் இருவரும் எழுந்து பிரயாணமாக நடந்து சென்றார்கள்.அப்பொழுது அடிமை என் இளவரசே உம்மக்கு ஒரு கதை சொல்லுகின்றேன் கேளுங்கள் உம் மனம் வருதபடாமல் இருக்கட்டும். ஒரு விறகு வெட்டுபவனின் காதல் கதையை சொல்லுகின்றேன் கேளு.
விறகு வெட்டுபவனின் காதல்(மெய் காதல்)
True love in tamil-part-2 |