இந்தியாவில் வாழ்ந்து வந்த பூதம் - puthisali kathaigal part 2
puthisali kathaigal |
முன் கதையின் தொடர்ச்சி இதைக் கேட்ட நான் மகழ்ந்தென். பேரழகுமிக்க தெய்வமகள் போன்றிருந்த அவளை ஆரத் தழுவிக் கொண்டேன். அவளும் தாபத்தால் என்னை இறுகப்பற்றி அணைத்துக் கொண்டாள். இருவரும் இப்படியே ஆறு நாள்களும் இன்பம் அனுபவித்தோம் . பத்தாவது நாள் . அன்றுதான் பூதம் வரும் நாள் . நானும் மோகத்தால் அறிவிழந்தேன். “பெண்ணே! இனி உன்னை பூதம் தொட அனுமதிக்க மாட்டேன். பூதம் வந்தால் அதைக் கொன்று போடப் போகிறேன்” என்றேன்,
அவள் நகைத்து "உங்களுக்குத்தான் இருபத்தேழு நாள்கள் இருக்கின்றனவே. பூதம் மாதத்தில் மூன்று. நாள்கள் அனுபலித்துப் போகட்டுமே" என்றாள். மோகத்தால் அறிவிழந்த நான் பூதத்தை அழைக்கும். மத்திரங்களடங்கிய சுவரை விரலால் தடவினேன். பயங்கரக் கூச்சலுடன் பூதம் வருவது கேட்டது. பயத்தால் நடுங்கிய பெண் என்னை ஓடித் தப்பிப் பிழையுங்கள் என்று நெட்டித் தள்ளினாள். நானும் பயத்தால் நடுங்கி என் செருப்பையும், கோடரியையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி நகரையடைந்தேன். குகைக்குள் சென்ற பூதம் பெண்ணைப் பார்த்து “ஏன்: அழைத்தாய்! என்றது. கைத் தவறுதலாக உன்னை அழைக்கும் மந்திரத்தைத் தொட்டு விட்டேன் என்று. மழுப்பினாள். பூதம் நம்பாமல், “இங்கே மனித வாடை: வீசுகிறதே, யாராகிலும் மனிதர்கள் வந்தார்களா? பொய் சொல்லாமல் கூறு” என்றது. அவள் யாரும் வரவில்லை என்று மறுத்துக் கூறினாள். பூதம் நம்பாமல் அறையை நாள் நோட்டம் விட்டது.
ஒரு மூலையில் இருந்த செருப்பையும், கோடரியையும் கண்டது. உடனே அவற்றை எடுத்துக் கொண்டு, “உன்னை வந்து கவனிக்கிறேன்! என்று: கர்ஜித்துவிட்டு வெளியே சென்றது. பூதம் மனித உருவெடுத்துக் கொண்டு நகரத்துக்கு வந்தது. என் செருப்பையும், கோடரியையும் மற்ற விறகு வெட்டி களிடம் காட்டி என்னை யாரென்று கண்டுபிடித்து விட்டது. தான் அப்போது தையற்காரர் கடையில் உட்கார்த்திருந்தேன். நேரே அம் மனிதன் கடைக்கு வந்து “நண்பரே! இந்த செருப்பும், கோடரியும் உம்முடையதுதானே" என்றான். நான் பயத்தால் நடுங்கி வந்திருப்பவன் மனிதனல்லன்) பூதம் தான் என்பதை அறிந்தேன்.
அழகிக்கு வந்த சோதனை - puthisali kathaigal
பொய் சொல்லி ஒன்றும் ஆவதில்லை என்று திடப்படுத்திக் கொண்டு 'ஆம் அவை: என்னுடையதுதான்' ஏன்று கூறினேன். உடனே, மனித ரூபத்தில் வந்தபூதம் சுயரூபம். கொண்டு என்னை வானமார்க்கமாய்த் தூக்கிக்கொண்டு. குகைக்குச் சென்றது. குகையில் அப் பெண் எதிரில் விட்டு“இவனை உனக்குத் தெரியுமா?” என்றது. எனக்குத் தெரியாது என்று பொய் கூறினால் . என் கையில் ஒரு வாளைக் கொடுத்து, “அப்படியானால் இந்த வாலால் அவளைக் கொல்' என்றது. ஒன்றும் அறியாத அவளை நான் கொல்லமாட்டேன்' என்றேன். அவ்வாறே அவள் கையில் வலை கொடுத்து என்னைக் கொல்லச் சொன்னது பூதம். அவளும் என்னைக் கொல்ல முடியாது. என்று மறுத்து விட்டாள். 'இவன்மேல் உள்ள காதலால் தான் இவனை நீ கொல்ல மறுக்கின்றாய் ' என்து கூறிக்கொண்டே வாளால் அவளைக் கண்ட துண்டமாய் வெட்டிப் போட்டது.
பூதம் என் பக்கம் திரும்பி உன்னையும். தண்டிக்காமல் விடப்போவதில்லை' என்று உறுமிற்து.
“பூதமே! கெட்டவர்களுக்கும் நன்மை செய்தோரைப் பற்றி நீ கேள் விப்பட்டதில்லையா? என்னை வதைக்காமல் மன்னிக்க வேண்டும்" என்றேன்.
“கெட்டவர்களுக்கும் நன்மை செய்தவன் யாரடா: மானிடப் பதரே!” என்று கர்ஜித்தது பூதம்.
உடனே நான் பாரசீக நாட்டில் முகம்மது மகான் அவர்களின் கதையை சொல்ல ஆரமித்தேன் .