இந்தியாவில் வாழ்ந்து வந்த பூதம் - PUTHISALI KATHAIGAL
puthisali kathaigal |
முன் ஒரு காலத்தில் நான் பிறவிக்குருடன் அல்லேன். இடையிலே நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் நான் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது.
நான் தற்கால இந்த நாட்டின் ஒரே இளவரசன். நான் கல்வி கேள்விகளில் சிறந்தவன். திருக்குரானை முறைப்படி ஓதிப் பயின்றவன். சகலகலைகளிலும் வல்லவன். என்னுடைய பெரும் சிறப்பை அண்டை நாடுகள் எல்லாம் அறிந்திருந்தன. என் புகழை அறிந்திருந்த இந்திய மன்னர் ஒருவர் என்னைத் தன் நாட்டிற்கு அனுப்பிவைக்கும்படி என் தந்தைக்குத் தூது அனுப்பினார். என் தந்தையாரும் தக்க பரிவாரங்களையும், பரிசுப் பொருள்களையும் ஏழு கப்பல்களில் ஏற்றி என்னை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். சுமார் முப்பது தினங்கள் கப்பலில் பயணம் செய்து இந்தியாவை அடைந்தோம்.
கரை சேர்ந்த நாங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் பரிசுப் பொருள்களையும். கப்பலிலிருந்து இறக்கினோம். ஒட்டகங்களின் மீது பரிசுப். பொருள்களை ஏற்றி நாங்கள் குதிரைகளின் மீது ஏறிக் கொண்டு நில மார்க்கமாக இந்திய அரசனைக் காணச் சென்று கொண்டிருந்தோம். இரண்டு நாள்கள் பயணம். தொடர்ந்தது. மூன்றாம் நாள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது தூரத்தே புழுதிப்படலம் தென் பட்டது. வரவர அதைச் கண்டு பயந்தோம். அது எங்களை நெருங்கிற்று. புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு. வந்தவர்கள் கொள்ளைக்காரர்கள்.
கூரிய ஈட்டிகளோடு வேகமாகக் குதிரையில் வந்தவர்கள். எங்களைத் தாக்கினார்கள்.
புகழ் வாய்ந்த இந்திய மன்னரிடம் நாங்கள் தூதுவராய்ச் செல்கிறோம். எங்களைக் கொள்ளையடிக்க வேண்டாம் என்று கெஞ்சினோம். எனினும் நாங்கள் சொல்வதைக் கேளாது எங்களில் சிலரை ஈட்டியால் குத்திக் கொன்றனர். எங்களில் பலர் உயிர் தப்பினால் போதும் என்று நாலா திக்கிலும் ஓடிச் சென்றோம்.
நானும் பலத்த காயத்தோடு கைப்பொருள் எல்லாம் இழந்து தன்னந்தனியனாய் ஓடினேன். பெரும் செல்வத்தோடு. அரசகுமாரனாக வந்த நான் சில நாழிகை நேரத்தில் ஒன்றுமில்லாத பராரியாய் ஆனேன். விதியை நொந்து கொண்டே மேலும் நடந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு நகரத்தைக் கண்டேன். குளிர்காலம் நீங்கி வசந்தகாலம் ஆரம்பித்த சமயம் அது. எங்கும் மலரும் மணமும் நிறைந்து அந்நகரம் செழிப்போடு இருந்தது. சோர்ந்து போய். வந்திருந்த நான் அந் நகரத்தில் சில நாள் தங்க முடிவு செய்தேன். அருகில் அந் நகரத்தில் ஒரு தையற்காரணாச் சந்தித்தேன். அந்தத் தையற்காரரிடம் என் கதையை ஆதியோடு அந்தமாகக் கூறினேன்.
அந்த வயது முதிர்ந்த தையற்காரன் “ஐயோ மகனே, என்னிடம் கூறியதுபோல். உன்னை யார் என்று இந்த நகரத்தில் யாரிடமும் கூறிவிடாதே. இந்த நகரத்தின் மன்னர் உன் தந்தையின் விரோதி உன்னை யார் என்று கண்டு கொண்டால் உன்னைச் சிரச்சேதம் செய்யாமல் விடமாட்டார்" என்று. கூறி, எனக்குத் ஆறுதல் சொல்லி என்னைத் தன் விட்டிற்கு அழைத்துச் சென்றார்...
மூன்று நாள் தங்கியிருந்தேன். பிறகு ஜீவனத்திற்கு வழிதேட வேண்டும் என்று தையற்காரரிடம் கூறினேன். என்னுடைய தகுதி பற்றியும், கல்லி. கேள்வி வல்லமை. பற்றியும் தையற்காரரிடம் கூறி எனக்கு ஒரு வேலை தேடித் தரும்படி கேட்டேன். தையற்காரர் நகைத்து இந்த நகரவாசிகளுக்குப் பணம் ஒன்றே பிரதானம். உன் சல்லி கேள்விகள் எதுவும் இங்குப் பயன்படாது. ஆகவே நான் சொல்வதுபோல் செய். “நானை முதல் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு வா” என்று கூறி கயிறும் கோடரியும் கொடுத்தார். நானும் என் விதியை நினைத்து கொண்டு காட்டிற்குச் சென்று தினமும் விறகு, வெட்டிக் கொண்டு வந்தேன். அதை விற்று ஜீவனம் நடத்தி வந்தேன். ஒரு வருட காலம் என் வாழ்க்கை இப்படியே நகர்ந்தது. வழக்கம்போல் ஒருநான் விறகு, வெட்டக் கோடரியுடன் காட்டுக்குச் சென்றேன். காட்டின் நடுவே ஒரு பெரிய மரத்தின் அடி வேரைக் பிளந்து கொண்டு இருந்தேன். ஓர் இடத்தில் கோடரியால் வெட்டியபோது கணீர் என்ற சப்தம் கேட்டது. உடனே வெட்டுவதை நிறுத்தி மண்ணை அகழ்ந்து பார்த்தேன். பித்தனையால் ஆன ஒரு பெரிய கதவு தென்பட்டது. அதைக் கோடரியால் நெம்பித் இறந்தேன். கிழே படிக்கட்டுகள் தெரிந்தன. ஆவல் மிகுதியினால் உள்ளே இறங்கினேன். இடையிலே மீண்டும் ஒரு கதவு தென்பட்டது. அந்தக் கதவையும் நெம்பித் திறந்துகொண்டு உள்ளே சென்றேன்.
பூதத்தின் அரண்மனை - puthisali kathaigal
அங்கே ஒரு பெரிய அரண்மனையே இருந்தது. அந்த அரண்மனையின் கூடம் ஒன்றில் ஒரு கட்டில் இருக்கக் கண்டேன். அக்கட்டிலில் பேரழகு மிக்க பெண் ஒருத்தி சாய்த்திருந்தான். நான் வருவதைக் கண்ட அவள் விருட்டென எழுந்து “நீ பூதமா, மனிதனா? என்றான். "நான் பூதம் இல்லை; மனிதன்தான்' என்றேன். “இருபத்து ஐந்து ஆண்டுகளாக மனிதன் முகத்தையே காணாது நான் வாழ்ந்துவரும் இந்தக் குகைக்கு எப்படி நீ. வந்தாய்?” என்று கேட்டாள் . நான் என் வரலாற்றை ஆதியோடந்தமாக அவளிடம் கூறினேன். அவளும் அனுதாபப்பட்டாள். தன் வரலாற்றையும் அவன் என்னிடம் கூறினாள். “நான் இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள கருங்காலி நாட்டு இளவரசி எனக்குத் திருமணமாயிற்று திருமணமான அன்றிரவு நானும் என் கணவரும் தனித்திருந்தோம்; அப்போது ஒரு கொடிய பூதம் தோன்றி சற்றும் ஈவிரக்கமின்றி என் கணவனைக் கொன்று என்னை இப் பாதாள சிறையில் வைத்திருக்கிறது. பூதம் பத்து தினங்களுக்கு ஒரு முறை என்னோடு வந்து தங்கும். பிறகு போய்விடும். பூதம் வந்து நான்கு தினங்களாயின. இன்னும் ஆறு தினங்கள் கழித்தே இங்கு வரும்: இடையில் பூதத்தை அழைக்க வேண்டுமானால் சுவரில் உள்ள மந்திர எழுத்துக்களை விரல்களால் தடவினால் போதும்; பூதம் வந்துவிடும். பூதம் வந்து நான்கு தினங்களே ஆயிற்று ஆதலால் நாம் இன்னும் ஆறு தினங்கள் வரை 'உல்லாசமாய்க் கழிக்கலாம்."
இந்தியாவில் வாழ்ந்து வந்த பூதம் - puthisali kathaigal part 2
puthisali kathaigal |