முட்டாள்களின் தலைவன்-6 puthisali kathaigal
பணத்தை சேர்த்து வைப்பது(puthisali kathaigal)
கஞ்சன் மிகவும் ஏழையானவன் அவனுக்கு வரும் சிறு வருமானத்தில் ஒரு நாளைக்கு ஒரு நாள் சாப்பிட்டு மீதமுள்ள பணத்தை சேர்த்து வைப்பான். அவன் சேர்த்து வைப்பது அவனது மனைவிக்கு தெரியாது. ஒரு பழைய கிழிந்து போன பையில் போட்டு வைப்பான். அப்போதான் அவன் மனைவி அந்த பழைய பையை திரும்பிககூட பார்க்க மாட்டாள்.
கஞ்சன் தினமும் காலையில் எழும்பி தனது கடைமைகளை கட்டாயமாக செய்து. மாலையில் தனது தலைவன் பாஸுடன் சேர்ந்து முன்னேற எதாவது யோசித்து பேசுவார்கள். மிக பெரிய மீட்டிங் அந்த மாலை பொழுது நடக்கும். அதில் கட்டாயமாக பாஸும் பத்து முட்டாள்களும் ஓன்று கூடுவார்கள்.
குப்பை வண்டி
கஞ்சன் வீட்டில் குப்பை அதிகமாக சேர்ந்தது. அவனது மணைவி குப்பைகளை சேர்த்து இதை போய் குப்பை தொட்டில் போட்டுட்டு வாங்க என்று தினமும் சொல்லுவாள். ஆனால் கஞ்சன் ஒரு போதும் குப்பைகளை கொட்ட மாட்டன். அவனது எண்ணம் இந்த குப்பைகளை சேர்த்து விற்று விடலாம் என்று அது அவன் மணைவிக்கு பிடிக்காது.
கஞ்சன் வீட்டைவிட்டு வெளிய போன உடன் குப்பை வண்டி வந்தது. கஞ்சன் மணைவி இதுதான்நேரம் என்று வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்து குப்பை வண்டில்ல கொட்டினால். அதுமட்டும் இல்லாமல் பழைய கிழிந்த வஸ்திரம் மற்றும் பையை குப்பை வண்டில கொட்டி விட்டால். அதில் கஞ்சன் சேர்த்து வைத்த பணமும் போனது .
கஞ்சன்னின் தவிப்பு(puthisali kathaigal)
கஞ்சன் வீடு வந்து பணத்தை பையில் போடா சென்றபோது அதிர்ச்சி காத்துகொண்டு இருந்தது. அதில் அவனது பணம் இல்லை பையும் இல்லை. மணைவியிடம் கேட்க அவள் குப்பை வண்டில போட்டுவிட்டேன் என்று சொன்னால். இதை கேட்ட கஞ்சன் மிகவும் துக்கப்பட்டு புலம்பி அழுதான். சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் குப்பைக்கு போனது என்று புலம்பி அழுதான்.
----- முட்டாள்களின் தலைவன்னின் நகைசுவை 7 -------