puthisali kathaigal - முட்டாள்களின் தலைவன்-4
பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களின் நகைசுவை. பத்து முட்டாள்களின் ஒருவனுடைய பெயர் முந்திரி. அவன் எதற்கு எடுத்தாலும் முந்திரி கொட்டை மாதிரி முந்தி வம்புள்ள மாட்டிகொல்வான்.
காதல் ஜோடியின் திர்ப்பு(puthisali kathaigal)
இளம் வயது காதல் ஜோடி காதலித்து பெற்றோர்களால் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் திருமணம் ஆன ஐந்தாவது மாதம் குழந்தை பிறந்தது. அது இரு குடும்பத்திற்கும் வெக்க கேடக இருந்தது. இரு குடும்பம் ஓன்று சேர்ந்து இளம் வயது காதல் ஜோடியை கொல்ல வந்தார்கள்.
அப்போ பாஸ் வந்து அவர்களை தடுத்து கல்யாணம் ஆகி ஐந்து மாதத்தில் குழந்தை பிறந்தது தப்பு அல்ல. ஐந்து மாதம் பெற்றோர்கள் தாமதமாக கல்யாணம் செய்தது தப்பு என்று சொன்னான். இந்த சங்கதி எல்லா இடத்திலும் பரவ எல்லாம் காதல் ஜோடியும் அவர்களை மதித்தார்கள்.
பாஸும் முட்டாள் முந்திரியும்(puthisali kathaigal)
பாஸும் முட்டாள் முந்திரி இருவரும் ஒன்றாக ஊரை சுற்றிக்கொண்டு போனார்கள். அப்போ மரத்தடியில் அமர்ந்துகொண்டு அங்க மேய்ந்து கொண்டு இருந்த கோழியை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அப்போ ஒருவன் வந்து கோழியை பிடித்து அதை கொன்று போட்டன்.
இதை பார்த்த பாஸும் முட்டாள் முந்திரியும் ஒய் என்று கூப்பிட்டு என்னதுக்கு கோழியை கொன்றாய் என்று கேட்க அதற்கு அவன் கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல கொல்லுவதற்கு என்று பதில் சொல்லி போய்விட்டான்.
இன்னொருவன் ஆட்டை கழுத்தை அறுத்தான் இதை பார்த்த முந்திரி ஒய் என்று கூப்பிட்டு ஏன் ஆட்டை அறுத்தாய் என்று கேட்டான். அதற்கு அவன் ஆடு வளர்ப்பது அழகு பார்பதற்கு அல்ல அறுக்கத்தான் என்று பதில் தந்தான்.
பின்பு பாஸும் முட்டாள் முந்திரியும் அங்கு இருந்து போய் விட்டார்கள்.
பாஸின் திர்ப்பு (puthisali kathaigal)
கணவனால் அடிப்பட்டு கண்ணிரோட வந்த மணைவி தனக்கு நல் தீர்ப்பு கிடைக்காத என்று எண்ணி பாஸ்சும் அவனது பத்து முட்டாள்களிடம் வந்து தன் கணவன் துன்புறுத்தி தினமும் கொடுமை படுத்தி தன்னை அடிகின்ற்றான் நீர் நல் தீர்ப்பை வழங்கும் என்று கேட்டால்.
உடனே முந்திரி பாஸிடம் தலைவா நான் சொல்வதை கேளும்
"கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல,
கொள்ளுவதற்கு தான்.
ஆடு வளர்ப்பது அழகு பார்பதற்கு அல்ல
அதை அறுக்கத்தான்.-அதைபோல்
மனைவி சமைக்க மட்டும் அல்ல சாவடி வாங்க தான் என்று சொன்னான். "
இந்த வார்த்தைகளை கேட்ட பாஸ் யோசிக்கமா முந்திரி சொன்ன வார்த்தைகளை சொல்லிவிட்டான். ஆத்திரம் அடைந்த அந்த பெண்மணி தனது காலனியை கழட்டி பாஸும் முட்டாள் முந்திரியும் ஓட ஓட விரட்டினால் .
முட்டாள்களின் தலைவன் -4