இலவசத்தால் வந்த நஷ்ட்டம் - puthisali kathaigal
puthisali kathaigal |
puthisali kathaigal --- ஒரு ஏழை தாயார் மளிகை கடை வைத்து நடத்திக்கொண்டு இருந்தார்கள். அந்த கடையில் மாலை நேரத்தில் முப்பது பால் பாக்கட் மட்டும் வியாபாரம் ஆகும் . ஏன் என்றால் அங்குள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறைவு .
பால் போடும் வியாபாரி அங்கு வந்து முப்பது பாக்கட் தந்து எக்ஸ்ட்ரா மூன்று பாக்கட் தந்தான் . அந்த கடைக்காரி ஏம்பா எக்ஸ்ட்ரா மூணு பாக்கட் தர என்று கேட்க . அந்த வியாபாரி பத்து பாக்கட் வாங்கின ஒரு பாக்கட் இலவசம் இந்த ஆபர் இன்னிக்கி மட்டும் தான் வேணும் என்றால் இன்னும் வாங்கிக்கோ என்று சொல்ல .
உடனே யோசித்த அந்த கடைக்காரி எக்ஸ்ட்ரா இருப்பது பாக்கட் வாங்கி கொண்டால். எப்போவும் போல முப்பது பாக்கட் மட்டும் வியாபாரம் ஆனது .
இருப்பது பாக்கட் ஓடவே இல்லை . மிகவும் கவலை பட்ட அந்த கடைக்காரி மறுநாள் அந்த பால் பாக்கட் விற்க முடியாமல் தூக்கி குப்பையில் போட்டால் . ஏனென்றால் பால் பாக்கட் எல்லாம் கேட்டு போய்விட்டது.
நஷ்ட்டம் அடைந்த அந்த கடைக்காரி நல்ல ஒரு பாடத்தையும் கற்று கொண்டாள் .
நீதி கருத்து - puthisali kathaigal
எந்த ஒரு பொருளை வாங்கும் முன்னும் அது தேவைக்கா அல்லது ஆசைக்கா என்று யோசிக்கவும் .