மாயாஜால கதைகள் | manthira kathaigal | magic story in tamil
என் மனைவி ஒரு மான் - magic story in tamil
magic story | manthira kathaigal |
முன்னொரு காலத்தில் இந்த மான்குட்டி என் மனைவியாயிருந்தது. அவளோடு நான் முப்பது வருடகாலம் இல்லறம் நடத்தினேன். எனினும் எங்களுக்குப் புத்திரப் பேறு ஏற்படவேயில்லை.(magic story | manthira kathaigal)
எனவே நான் ஓர் அடிமைப் பெண்ணை என் ஆசை நாயகியாக்கிக் கொண்டேன். அவள் மூலம் எனக்கு ஓர்: ஆண் மகன் பிறந்தான். அவனுக்குப் பதினாறு பிராயம். நடக்கும் போது தொழில் காரணமாக நான் வெளியூர். செல்லவேண்டி. வந்தது. நான் அப்படி வெளியூர் சென்றிருந்தபோது என்: மனைவி தனக்குத் தெரிந்த பில்லிகுனிய மந்திரவித்தையால். என் ஆசைநாயகியை ஒரு பசுவாக மாற்றிவிட்டான். என்: மகனைக் கன்றாக மாற்றி, இருவரையும் ஓர் இடையனிடம். ஒப்படைத்து விட்டாள். நான் இரும்பி வந்ததும் ஆசை நாயகியும், மகனும், காணாதது பற்றி மனைவியிடம் கேட்டேன். அவளோ ஆசை நாயகி இறந்து விட்டதாகவும், மகன் சொல்லாமல், கொள்ளாமல் எங்கோ வீட்டை விட்டு ஓடிப்போய். விட்டதாகவும் கூறிவிட்டாள். நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஓராண்டுகாலம் துக்கம் அனுஷ் டித்தேன். பலிகொடுக்கும் பண்டிகை நான் வந்தது. அன்றைய. இனம் இறைவனுக்குப் பலி கொடுக்க ஒரு நல்ல பசுவைக். கொண்டு வருமாறு என் ஆட்களுக்கு ஆணையிட்டேன். அவர்களும் என் மாட்டு மந்தையிலிருந்து ஒரு கொழுத்த அழகான பசுவைப் பலிக்காக ஓட்டி வந்து என் எதிரே நிறுத்தினர். என்னைக் கண்டதும் அப்பசு கண்ணீர்விட்டு அழுது என்னைச் சுற்றி வந்து என் காலடியில் வீழ்ந்தது. பலியிடக் கத்தியுடன் நின்றிருந்த நான் அப்பசுவை வெட்டாமல் ஆட்களைவிட்டு வெட்டச்சொல்லி, தோலையுரித்துக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டுச் சென்றுவிட்டேன்.
ஆட்கள் வந்து பசுவை இழுத்துக்கொண்டு. போனார்கள் அதை வெட்டித் தோலை உரித்தனர். உள்ளே. இறைச்சியோ எலும்போ எதுவுமே இல்லாதது கண்டு பயந்து ஓடிவந்து என்னிடம் சொல்லினர். நானும், மந்தையிலிருந்து ஒரு கன்றைப் பிடித்து வந்து வெட்டுமாறு பணித்தேன். ஒரு கொழுத்த சன்று. கொண்டு வரப்பட்டது. அக்கன்றும் என்னைச் கண்டதும். அன்னி ஓடு வந்து என் காலடியில் வீழ்ந்து சுதறியமுதது! எனக்கே மிகப் பரிதாபமாக இருக்கவே, இக்கன்றை விட்டுவிட்டு வேறொரு பசுவைக் கொண்டு வந்து வெட்டச் சொன்னேன்.
மகனின் திருமணம் - manthira kathaigal | magic story in tamil
துள்ளிக் குதித்து என் காலருகே மண்டியிட்டுக். சுதறிய கன்றை விட்டு விட்டு வேறொரு பசுவை வெட்டச் சென்ற போது என் மனைவி வந்து இந்தக் கொழுத்த சுன்றையே வெட்டினால் நிறைய கொழுப்பும், மாமிசமும் கிடைக்கும் என்றான். நான் சம்மதிக்கவில்லை. வேறொரு பசுவே பின்னர் வெட்டப்பட்டது. “மறுநாள் நான் தனித்திருக்கும்போது அந்த இடையன் என்னருகே வந்துநின்றான். ஒரு முக்கியமான. ரகசியத்தைக் கூறவேண்டும் என்றான். நானும் ரகசியத்தை அறியும் ஆவலில் உடனே சொல்” என்றேன். “நேற்று வெட்டாது, திரும்ப மந்தைக்கு ஓட்டிச் செல்லச் சொன்ன அந்த கன்றுடன் நான் என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டிலிருந்த என் மகன் அந்தக் கன்றுக் குட்டியைப் பார்த்ததும், நாணப்பட்டு தன் முகத்திரையை: இழுத்து மூடிக்கொண்டாள். பிறகு ஓவென அழுதாள் “என்னிடம் முன்னறிவிப்பு இல்லாமல் இப்படி ஓர் இளைஞரை முன் கொண்டு வருகிறீர்களே” என்றாள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. வியப்பால் சுற்று. முற்றும் பார்த்தேன். கன்றையும், என்னையும் தவிர வேறு: யாருமே இல்லை. “மகனே, வேறு யாருமே இங்கில்லாதபோது இளைஞரைக் கூட்டி. வந்ததாகச் சொல்கிறாயே! இதென்ன விந்தை" என்றேன்.
என் மகள் , “அப்பா உங்களுடன் இருக்கும் கன்றுக்குட்டி யார் தெரியுமா? அது. நம் எஜமானரின் மகன், நம் மூத்த எஜமானி தானறிந்த மந்திர சக்தியால் இளையவளைப் பசுவாகவும், அவள். மகனைக் கன்றாகவும் மாற்றிவிட்டான். பசு உருவில் இருந்த இவன் தாயாரை நீங்கள் வெட்டிவிட்டீர்களே, தோலையுரித்ததும் கொழுப்போ, மாமிசமோ இல்லாததைக் கண்டிருப்பீர்களே; அதற்காகவே நான். அழுதேன்" என்றாள். இதைக்கேட்ட நான் எஜமானராகிய தங்களிடம் கூற ஓடோடி. வந்தேன் என்றான் இடையன். இடையனுடைய மகளும் மந்திர வித்தைகளில்: தேர்ச்சி பெற்றவன். அகவே இதையெல்லாம் அவளால். உணர முடிந்தது. நானும் இடையனை அழைத்துக்கொண்டு அவன். மகனைச் சந்திக்கச். சென்றேன். அவளைச் சந்தித்துக் கேட்டதில் வெட்டப்பட்ட பசு இளைய மனைவி என்றும், இந்தக் கன்று என் மகன் தானென்றும் தெரியவந்தது. உன்னால் என் மகனை பழையபடி உருமாற்றித் தர இயலுமா என்று இடையன் மகனைக் கேட்டேன். அவன். இரண்டு நிபந்தனைகளுக்குட்பட்டால் உர மாற்றுவதாகக். கூறினாள். “உங்கள் மகன் பழைய உருவெடுத்ததும் நான் அவரை மணக்க அனுமதிக்கவேண்டும். இப்படி உருமாற்றிய உங்கள் முதல் மனைவியை என் இஷ்டப்படி. வேறு உருமாற்ற அனுமதிக்க வேண்டும். அப்படியில்லை: வென்றால் உங்கள் முதல் மனைவி என்னைத் தொந்திரவுக்குள்ளாக்குவான்". என்றாள்.(magic story | manthira kathaigal)
நானும் இரண்டு நிபந்தனைகளுக்கும் சம்மதித்தேன். பிறகு அவள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர். கொண்டுவரச் சொல்லி நீண்ட நேரம் மந்திரித்தான். அந்த மந்திர நீரைக் சன்றுக்குட்டியின் மேல் தெளித்தாள். உடனே கன்றுக்குட்டி உருமாறி தன் சுய ரூபத்துடன் என்: மகனாக ஆயிற்று. வியப்பாலும், துயரத்தாலும் துடித்த நான் மகனைச் சேர்த்தணைத்து உச்சி முகர்ந்தேன். என் மகன் நடந்த வரலாறுகள் அனைத்தையும் சொன்னான். இடையனின் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். என் ஆசைநாயகியான இரண்டாவது. மனைவியையும், என் மகனையும் உருமாற்றிய என் மூத்த மனைவியை மந்திர நீர் தெளித்து, ஒரு மானாக இடைப்பெண் மாற்றிவிட்டாள். நான் வாக்களித்தபடி என் மகனுக்கும், இடைப் பெண்ணுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடத்தி வைத்தேன்.