தேவலோக பேரழகி - puthisali kathaigal
முன்னொரு காலத்தில் பாக்தாத் நகருக்கடுத்த மலையைச் சார்ந்த ஒரு கிராமத்தில் இடையன் ஒருவன் வசித்து வந்தான். ஆடுகள் மேய்ப்பதும், ஆட்டு ரோமத்தால் கம்பளிகள் நெய்வதுமே அவன் தொழில். அவன் நல்ல. பக்திமான். எந்நேரமும் ஆண்டவனின் திருநாமங்களை: உச்சரித்தவாறே இருப்பான்.
சீலமிக்க வாழ்க்கை நடத்தி வந்தான். இவனுடைய அறிவாற்றலையும், சிறந்த பக்தியையும் ஆண்டவன் பரிசோதிக்க எண்ணினார். (puthisali kathaigal)
சீலமிக்க வாழ்க்கை நடத்தி வந்தான். இவனுடைய அறிவாற்றலையும், சிறந்த பக்தியையும் ஆண்டவன் பரிசோதிக்க எண்ணினார். (puthisali kathaigal)
பேரழகி வர்ணிக்க வார்த்தை இல்லை -puthisali kathaigal
தேவலோகப் பெண்ணொருத்தியைப் பூவுலகத்திற்கு அனுப்பினார். ஒருநாள் உடம்பு சரியில்லாமல் இடையன் தன். குடிசையிலேயே படுத்துக்கொண்டு கிடந்தான். அப்போது தான் மனித உடலுடன் தேவகன்னிகை அக்குடிசையினுள். நுழைந்தாள். அப்போது இடையன் ஆண்டவனைத் துதித்தும், அவன் புகழ்பாடியும் கண்களை மூடிக்கொண்டிருந்தான். திடீரென அவன் குடிசை முழுவதும் நறுமணம் கமழ்ந்து. நறுமணத்தை நுகர்ந்த இடையன் 'இதென்ன அதிசயம்' என்றெண்ணிக் கண்களைத் திறந்து பார்த்தான்.
பேரெழில். மிக்க இளம் நங்கை ஒருத்தி எதிரே நிற்கக்கண்டான். “பெண்ணேநீ யார்? ஏன் இங்கு வந்தாய்” என்று: கேட்டான் இடையன். உடனே அத் தேவகன்னியை இடையனின் அருகில் உட்கார்ந்து கொண்டாள். தன் மெல்லிய பஞ்சுபோன்ற. கையால் அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். உடனே. சிலிர்த்து எழுந்து உட்கார்ந்து கொண்டான் இடையன். “பெண்ணே. என்னைத் தொடாதே. என் வாழ்நாளில் இதுவரை நான் எந்தப்பெண்ணையும் தொட்டதில்லை. யாரையும் தொடவும் அனுமதித்ததில்லை. மாயப் பெண்களால்தான் உலகத்தில் பாவங்கள் மலிகின்றன. நீ உடனே இங்கிருந்து போய்விடு. என்னை அமைதியாய். இருக்கவிடு” என்றான்.
பேரெழில். மிக்க இளம் நங்கை ஒருத்தி எதிரே நிற்கக்கண்டான். “பெண்ணேநீ யார்? ஏன் இங்கு வந்தாய்” என்று: கேட்டான் இடையன். உடனே அத் தேவகன்னியை இடையனின் அருகில் உட்கார்ந்து கொண்டாள். தன் மெல்லிய பஞ்சுபோன்ற. கையால் அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். உடனே. சிலிர்த்து எழுந்து உட்கார்ந்து கொண்டான் இடையன். “பெண்ணே. என்னைத் தொடாதே. என் வாழ்நாளில் இதுவரை நான் எந்தப்பெண்ணையும் தொட்டதில்லை. யாரையும் தொடவும் அனுமதித்ததில்லை. மாயப் பெண்களால்தான் உலகத்தில் பாவங்கள் மலிகின்றன. நீ உடனே இங்கிருந்து போய்விடு. என்னை அமைதியாய். இருக்கவிடு” என்றான்.
அதைக் கேட்ட அப்பெண், 'ஐயா, நான் கன்னிகழியாத இளம்பெண். என் உடலைப் பாருங்கள். எவ்வளவு அழகாக இளமையாக இருக்கிறது. எனது யெளவனத்தை உங்களுக்குக் காணிக்கையாக்கவே நான். இங்கு வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு என்: விரகதாபத்தைத் தீர்க்க வேண்டும்” என்று கெஞ்சினாள்.
பயத்தால் துடிதுடித்துப்போன இடையன், “பெண்ணே எனக்கு நரகத்திற்குப் போக வழி காட்டுகிறாய். இது நாள் வரை தூய வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். இறைவனை துதிப்பது அல்லாது எனக்கு வேறு வேலை கிடையாது: நானோ வயோதிகன்; உனக்குத் தகுதி யானவனை நீ தேடிக்கொண்டு என்னை அமைதியாய் விட்டுவிடு” என்று கெஞ்சினான். அந்தப்பெண் எதையும் காதில்போட்டுக்கொள்ள வில்லை தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாய்க் கழட்டி எறிந்தாள்.
நிர்வாணமாக இடையன் எதிரில் நின்றாள்.
அவள் கண்களில் காமவொளி மின்னி ஜொலித்தது. உடலெங்கும் இளமை எழில் பூரித்துப் பொங்கி வழிந்தது. உடனே இடையன் தன்னிரு கண்களையும் மூடிக் கொண்டான். “அல்லாவே, என்னைக் காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினான். அப்போது அப் பெண் சும்மாயிருக்கவில்லை. "ஐயா: என் அழகைக் கண்ணெடுத்துப் பாருங்கள் என் மார்பைப்: பாருங்கள்! அவை பூரித்து நின்று உங்களை அணையத் துடிக்கின்றன. tamil story
எனது மெல்லிய நீண்ட கூந்தலைப் பாருங்கள். அது உங்கள் ஆட்டுக் குட்டிகளின் ரோமத்தைவிட மென்மையானது. எனது மெல்லிய இடையைப் பாருங்கள். எனது நீண்டகால்களைப் பாருங்கள். உலகத்திலேயே கிடைத்தற்கரிய பேரழகியான என்னை அணைத்து இன்பம் பெறுங்கள். இதைவிட இன்பம் நீர் சொர்க்கத்திலும் அனுபவிக்க முடியாது. எனது. சிவந்த உதடுகளைப் பாருங்கள். சிவந்த என் உதடுகள். உங்களை முத்தமிடத் துடிக்கின்றன” இவ்வாறு பலவாறு: பேச ஆரம்பித்தாள். நிர்வாணக் கோலத்தைக் காணச் சகியாது, கண்களை: மூடிக்கொண்ட கிழவன், மேலும் ஒரு துணியை எடுத்து: கண்களை இறுகக் கட்டிக் கொண்டான்.
“ஏ சைத்தானே. இங்கிருந்து போய்விடு! என்னை அமைதியாய் இருக்கவிடு. நீ இங்கிருந்து போகாவிட்டால் ஆடு மேய்க்க எடுத்துச் செல்லும் கொம்பால் உன்னை அடித்து நொருக்கி விடுவேன். என்னிடம் அடிபடாமல் இருக்க வேண்டுமானால் உடனே இங்கிருந்து ஓடிப் போய்விடு” இடையன் இவ்வாறு கூறலானான். “மூடக் கிழவனே, என் அழகை ரசிக்க உன்னால் முடிய வில்லையே! பெண்மை எழிலைப் பற்றி எத்தனையோ கவிஞர்கள் காவியங்களே பாடியிருக்கிறார்கள். சிறந்த அறிவாளிகளும் எங்கள் எழிலைக் காதலித்திருக்கிறார்கள்.
பெண்மை அழகு அவர்களை வெறிகொள்ளச் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் பெண்மை அழகைப் போற்றி ஆராதனை செய்தருக்கிறார்கள்” .. இதைக் கேட்ட கிழ இடையன் தன் முகத்தை: சுவர்ப்புறமாகத் திருப்பிக் கொண்டான். “உயர் நெறியில் வாழ்ந்தவர்களையும், உத்தம சலர்களையும் கெடுத்தழித்த வர்கள் பெண்களே. உங்களால்தான் உலகத்தில் பாவமே பரவுகிறது. உலகம் முழுவதும் சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்படுவது பெண்களால்தான். இங்கிருந்து:
தொலைந்து போ. தியானத்தாலும், தொழுகையாலும் ஏற்படும் தெய்வீக அமைதி ஒன்றுமட்டுமே எனக்குப் போதும்" என்று கூறிக் கதறினான். திடீரென்று ஒரு பேரொளி எழுந்தது. துணிகளால்: கண்களைக் கட்டிக் கொண்டிருந்த கிழவனால்கூட அந்தப் பேரொளியை உணர முடிந்தது. அழகிமறைந்தாள், அசரீரியாய் வார்த்தைகள். கேட்டன.
“அன்புமிக்க தியாகக் கிழவரே! உங்களின் தூய வாழ்க்கையைப் பரிசோதிக்கவே ஆண்டவனால் அனுப்பப்: பட்டவள் நான். நீங்கள்தான் பரிசோதனையில் வெற்றி. பெற்றீர். நீங்கள் எப்போதும்போல ஆண்டவனின் புகழைப் பாடிக் கொண்டும், துதித்துக் கொண்டும் காலத்தை இனிதே சழியுங்கள்" தெய்வீகப் பேரொளி சிறிது சிறிதாக மறைந்தது.
இறைவனது திருவுள்ளப் பாங்கினை எண்ணி இடையன் வியந்தான். மேலும் மேலும் அவன் வாய் எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. கண்களுக்குக் கட்டியிருந்த துணியை அவிழ்த்துக் கண் விழித்துப் பார்த்தான். எதிரே யாரும் இல்லை. எல்லாம் மாயை என்று உணர்ந்தான். குடிசைக்கு வெளியே வந்தான்! கிழவனின் காலடியில் வனத்தினுள்ள விலங்குகள் எல்லாம் ஓடிவந்து வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றன. அந்தப் பிராந்தியத்துச் சகல ஜீவராசிகளும் இடையனை ஒரு தெய்விக புருஷனாகவே மதித்து நடந்து வந்தன.
அழகிய இளம் அடிமைப் பெண் |