ஞானத்தின் மகன் - puthisali kathaigal
puthisali kathaigal
puthisali kathaigal |
ஒரு ஐம்பது வயது நிறைந்த ஒருவன் தன் வாழ்க்கையை வெறுத்து கால்போன போக்கில் நடந்து சென்றான். அவன் போகும் இடம் என்னதென்றும் அறியாமல் சென்றான்.அவனுடையை பெயர் மாறி.
மாறியும் வயதானவரும்(kathaigal)
ஒரு காட்டு பாதையில் சென்றான் அப்போ ஒரு வயதானவன் மாறியை சந்தித்து. அவன் ஒய் எல்லா கவலையும் உன் முகத்தில் தெரிகின்றது. நீ எங்க போறாய் என்று கேட்டான். அதற்கு மாறி ஞானத்தை தேடி போகின்றேன் என்று சொன்னான். அதற்கு அந்த வயதானவர் இன்னும் சற்று தொலைவில் தான் ஞானத்தின் மகன் இருகின்றான். நீ போய் அவனை பார் என்று சொல்லி வயதானவர் அங்கு இருந்து போய்விட்டார் .
மாறியும் நடந்து சென்றான் அங்கு ஞானத்தின் மகன்னை பார்த்து ஒரு நிமிடம் மெய் மறந்து போய்விட்டான் கரணம் அவன் ஒரு இளம் வாலிபன். மாறி தனக்குள் யோசித்து எப்படி ஒரு இளம் வாலிபன் ஞானதை பெறமுடியும் என்று யோசித்தான். பின்பு அங்கு மறைந்து ஞானத்தின் மகன்னை கண்காணித்து கொண்டு இருந்தான்.
இளம் தம்பத்தின் வழக்கு(kathaigal)
அங்கு இருந்து பார்த்துகொண்டு இருந்த மாறி ஒரு ஐந்து பேர் சன்ட்டை பண்ணிக்கொண்டு அந்த ஞானத்தின் மகன்னிடம் வந்து . ஐயா ஞானத்தின் மகன்னே எங்கள் வழக்கை தீரும் என்று சத்தம் போட்டார்கள் அதற்கு ஞானத்தின் மகன் உங்கள் வழக்கு என்ன என்று கேட்டான். எங்களுக்கு திருமணன் ஆகி அயிந்து மாதங்கள் ஆகி விட்டது என் மனைவி அவள் அம்மாவுடன் இருகின்றாள் நான் அவளை அழைத்தும் என்னுடன் வர மறுத்து நான் என் அம்மாவுடன்தான் இருபேன் உன்னக்கு நான் வேண்டும் என்றால் இங்கையை வீட்டோட மாப்பிளையாக இரு என்றால். அதனால் இவளை தள்ளி வேற பெண்ணை திருமணம் பண்ணிக்கொள்ள விரும்புகின்றேன். அதுமட்டும் இல்லாமல் இவள் என் அம்மாவை என்னிடம் இருந்து பிரிக்க நினைகின்றால் ஆகையால் ஒரு நல் ஆலோசனை தாரும் என்று கேட்டார்கள்.
உடனே ஞானத்தின் மகன் உங்களுக்கு வானத்தையும் பூமியும் உன்னையும் என்னையும் படைத்த இறைவனின் கட்டளை என்னதென்று உன்னக்கு தெரியாத இறைவன் ஓன்று சேர்த்த கணவன் மனைவி இருவரையும் பிரிக்க கூடாது என்பதுதான் அந்த கட்டளை ஆகையால் நான் சொல்லுகின்றேன் இறைவனின் கட்டளை படி நிங்கள் ஒன்ராய் இருங்கள் மீண்டும் இறைவன் தன் தகப்பனையும் தன் தாயையும் மறந்து கணவனுடன் வாழ்ந்து இருப்பளாக என்றும் கட்டளை உண்டு. இறைவனின் கட்டளை படி உன் தாயை விட்டு பிரிந்து உன் கணவனுடன் மகிழ்ந்து இரு என்றான். பின்பு எல்லாரும் மகிழ்ச்சியுடம் திரும்பி போய்விட்டார்கள்.
இதை கேட்ட மாறி உண்மையில் இவர் ஞானத்தை பெற்ற ஒரு ஞானிதான் என்று அவரோட பேச வந்தான்.
மாறின் கேள்வியும் ஞானத்தின் மகன் பதிலும்
மாறி கிட்ட வந்தஉடன் ஞானத்தின் மகன் அவரை பார்த்து எல்லா கவலையும் உன் முகத்தில் தெரிகின்றது உன் பெயர் என்ன என்றான். அதற்கு அவன் மாறி என்றான். உடனே மாறி ஐயா சில கேள்வி உம்மை கேட்கட்டுமா என்று கேட்டான் .
அதற்கு ஞானத்தின் மகன் ஆம் கேளும் என்றான்.
மாறி :உம்மை ஏன் எல்லாரும் ஞானத்தின் மகன் என்று சொல்லுகின்றர்கள்
ஞானத்தின் மகன்: இளம் வயதில் ஞானம் பெற்றதினால் அப்படி அலைகின்றார்கள்
மாறி : ஏன் துன்பமும் மகிழ்ச்சியும் வருகின்றது?
ஞானத்தின் மகன்: மகிழ்ச்சின் நாட்களில் நீ யார் என்று உன்னக்கு தெரியாது, துன்பத்தின் நாட்களில் நீ யார் என்று உன்னக்கு தெரியும். என்னதான் சூரியன் பகலில் பிரகாசமாக இருந்தாலும் இரவில் மறைந்துதான் ஆக வேண்டும்.
மாறி : ஞானத்தை பெற என்ன செய்ய வேண்டும் ?
ஞானத்தின் மகன்: ஞானத்தை நேசிக்க வேண்டும்.
மாறி : ஞானத்தை நேசிப்பது என்றால் என்ன?.
ஞானத்தின் மகன்: வானத்தையும் பூமியும் படைத்த இறைவனின் கட்டளைக்கு கிழ்படிந்து நடக்க வேண்டும்.
மாறி : அப்படி என்னதான் இறைவனின் கட்டளை உள்ளது?
ஞானத்தின் மகன்:தீமையை விட்டு விலகுவதும்,பிறரை நேசிப்பதுமே அந்த கட்டளை.
மாறி : ஏன் ஞானத்தை எல்லாராலும் பெறமுடியவில்லை.
ஞானத்தின் மகன்: எல்லாரும் ஞானத்தை நேசிப்பது இல்லை.
மாறி : ஏன் ஞானத்தை நேசிக்க மருகின்றார்கள்?
ஞானத்தின் மகன்: அது முதலில் கசப்பாகவும் பின்பு சுவையாகவும் உள்ளது . அதற்கு அடையாளமாக வாயுக்கு கசப்பாக உள்ள பாவற்காய் பின்பு உடலுக்கு அது ஆரோக்கியம் தரும்.
மாறி : நீ உம்மகென்று சிறிது பணம் சேர்த்து வைத்திருகின்றிறா.
ஞானத்தின் மகன்: இல்லை
மாறி : ஏன் ?
ஞானத்தின் மகன்: இறைவனை நம்பி வாழ்கின்றேன்.
மாறி : இறைவன் உம்மக்கு உணவு தருகின்றார
ஞானத்தின் மகன்: ஆம்
மாறி : இன்று இரவு இங்கு படுத்து கொள்ளட்டுமா
ஞானத்தின் மகன்: ஆம் படுத்துகொல்லுங்கள்.