வண் கண்ணன்(puthisali kathaigal)
puthisali kathaigal |
ஒரு அருமையான கிராமத்தில் வண் கண்ணன் இருந்தான் அவன் பெயருக்கு ஏற்றார் போல் அவன் பார்ப்பது எல்லாம் பாழாகிவிடும் . அவன் வந்தாலே அவனை கண்டு அந்த கிராமம் பயப்படும். ஏன் என்றால் ஒரு அழகான குழந்தைய அவன் பார்த்தால் அந்த குழந்தை வியாதில் அவலட்சணமாக மாறி மறித்து விடும் ஒரு வீட்டை பார்த்தல் அந்த வீடு இடி இடித்து தரை மட்டும் ஆகி விடும் . அப்படி மோசமானவன்.-(puthisali kathaigal)
வண் கண்ணன்னின் வருத்தம்(puthisali kathaigal)
வண் கண்ணன் எப்பொழுதும் துக்கமாக இருப்பான் ஏன் என்றால் எல்லாரும் அவனை கண்டு பயப்படுகின்றார்கள். சில நேரத்தில் கல்லை அவன் மேல் ஏறிவதும் உண்டு . அவன் தனக்குள் யோசித்து இனி என்னால் இந்த கிராமத்திற்கு பாதிப்பு வரக்கூடாதினி ஒரு தனிமையான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.
செல்வந்தனின் சந்திப்பு(puthisali kathaigal)
மிகவும் செல்வந்தனாகிய செல்வன். வண் கண்ணன்னை பார்க்க அவன் இருக்கும் இடம் வந்து அவனுக்கு சாப்பிட உணவு தந்து அவனோட அன்பாக பேசினார் . பின்பு செல்வந்தர் அவனை தன்னுடைய கிராமத்திற்கு வரும் படி அவனை அழைத்தார் . ஆனால் வண் கண்ணன் போக மறுத்து விட்டான். ஆனால் வலு கட்டையமாக செல்வந்தர் அவனை கூப்பிட்டர். வண் கண்ணன் தனக்குள் யோசித்து முதல் முறை தனக்கு ஒருவன் உணவு தந்து என்னை அலைகின்றான் என்று அவனோட போக சம்மதம் தெரிவித்தான்.
வண் கண்ணன்னை காட்டிலும் மிக பெரிய வண் கண்
வண் கண்ணன் செல்வந்தரின் வீட்டுக்கு வந்தஉடன் செல்வந்தன் அவனை மேல் மாடிக்கு அழைத்து பக்கத்தில் தெரியும் ஒரு வீட்டை காண்பித்து அந்த வீடு என் வீடை காட்டிலும் பெரிதாக இருக்குது உன் வன் கண்ணில் அதை பார்த்து இடித்து விடும் படி செல்வந்தன் கேட்டார்.
அதற்கு வண் கண்ணன் அமைதியாக இருந்தான். செல்வந்தர் மகிழ்ச்சியுடன் தனது வயலில் பக்கத்துக்கு வயல் செழிப்பாக இருகின்றது அதை உன் கண்ணில் பார்த்து எரித்து விடும் படி அவனை வேண்டிக்கொண்டான்.
மீண்டும் செல்வந்தன் அவனை பார்த்து அவனை வெளிய அழைத்துக்கொண்டு போய் ஒரு அழகான பெண்ணை காண்பித்து இந்த பெண் என் மகளை காட்டிலும் அழகாக இறுகின்றால் உன் பார்வையில் அவளை பார்த்து அவலட்சணமாக மாற்றிவிடும்படி வேண்டினான்.
வண் கண்ணன் செல்வந்தனை பார்த்து "நானே ஒரு வண் கண்" என்னை காட்டிலும் "மோசமான வண் கண் நீ தான் "என்று அங்கு இருந்து சென்று விட்டான்.