அயிக்கர்ரின் கதை - puthisali kathaigal
puthisali kathaigal |
முன்னொரு காலத்தில் அயிக்கர் என்னும் ஒரு நேர்மையான மனிதன் வாழ்ந்து வந்தான். அவர் ரொம்ப புத்திசாலி அறிவாளி மற்றும் விடுகதைக்கு அற்புதமான விளக்கத்தை தருவார் எல்லாரும் அவருடைய ஞானத்தை பார்த்து ஆச்சரியம்படுவார்கள் .
அவர் சனகெரிப் ராஜா அரண்மனையில் மிகப்பெரிய பதவில் இருந்தார். சனகெரிப் அசிரிய நினைவே நாட்டின் அரசன் . அயிக்கர் ஆலோசனை படித்தான் ராஜா கேட்டு நடப்பார். ராஜாவுக்கு அஹிக்கரின் அறிவு திறமை மிகவும் பிடித்துபோய் எப்பொழுதும் தன்னோட கூட வைத்துக்கொண்டார்.
அயிக்கர்ரின் கவலை (tamil tale story)
அயிக்கருக்கு அறுபது மனைவிகள் ஒவ்வரு மனைவிக்கும் ஒரு அரண்மனை கட்டிதந்தார். அயிக்கர் மிகவும் செல்வந்தர். அஹிக்கருக்கு அறுபது மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தை கூட இல்லை. அதனால் மனம் உடைந்து தினமும் துக்கப்பட்டு கண்ணிரோட இருந்தார்.
ஒருநாள் அயிக்கர் குறிசொல்பவர்கள் , தோசியம் பார்பவர்கள், காலத்தை கணிபவர்கள் எல்லாரையும் அழைத்து தனக்கு பிள்ளளை வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுடன் கலந்து ஆலோசனை பண்ணினார். அதற்கு குறிசொல்பவர்கள் , தோசியம் பார்பவர்கள், காலத்தை கணிபவர்கள் எல்லாரும் நீர் விக்கிரக தேவர்களுக்கு பலி செலுத்தி பிள்ளை வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் தேவர்கள் உம்மக்கு பிள்ளை தருவார் என்று சொன்னார்கள்.
உடனே அயிக்கர் விக்கிரகத்துக்கு பலி செலுத்தி பிள்ளை வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். ஆனாலும் ஒரு பயனும் இல்லை. அயிக்கர்ருக்கு பிள்ளை இல்லை தேவர்களிடம் இருந்து ஒரு சத்தமும் இல்லை. அயிக்கர்ரின் துக்கம் எல்லை கடந்தது.
உன்னத தேவனிடம் பிரார்த்தனை(tamil tale story)
மனம் உடைந்த அயிக்கர் கவலை பட்டு கண்ணிற்வடித்து பின்பு வானத்தையும் பூமியும் படைத்த உன்னத தேவனிடம் வந்து இவ்வாறு பிரார்த்தனை செய்தார்.
" என் இறைவா என் தேவா,
வானத்தையும் பூமியும் படைத்த உன்னதமான தேவா
சகலத்தையும் படைத்த கர்த்தா
என்னகொரு மகனை தாரும்
என்னுடைய கடைசி நாளில் என் கண்களை அவன் மூடுவான்
என்னை கல்லரயில் வைத்து அடக்கம் செய்வான்."
என்று மனம் நொந்து பிரார்த்தனை செய்து முடிக்கையில் ஒரு அசிரிய சத்தம் உண்டாகி அயிக்கர்ரே நீ பிரதானமான வானத்தையும் பூமியும் படைத்த உண்ணத் இறைவனிடம் வரும் முன்ன விக்கிரக தேவர்களுக்கு நீ பலியிட்டு உன் தேவனை பின்னே தள்ளிவிட்டாய் ஆகையால் இந்த ஒரு காரியத்திற்காக உன்னக்கு பிள்ளை பிறக்காது. நீ மனம் நொந்து கவலை படவேண்டாம் உன் மகனாக உன் சகோதரி மகனை உன் மகனாக வளர்த்துகொள். என்று சத்தம் கேட்டது.
சகோதரி மகன் நாடான்(puthisali kathaigal)
puthisali kathaigal |
அயிக்கர் மிகவும் சந்தோசப்பட்டு என்னுடைய வேண்டுதலை உன்னத இறைவன் கேட்டு என்னக்கு பதில் தந்தார் என்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார் பின்பு அவர் துக்கமாக இருந்தது இல்லை.
வீட்டிற்கு வந்த அயிக்கர் தனது சகோதரிக்கு பிறந்த சிறு குழந்தையை வாங்கி தனது குழந்தை போல் வளர்க வீட்டுக்கு கொண்டுவந்தார். அந்த சிறு குழந்தையின் பெயர் நாடான்.
அயிக்கர் அந்த குழந்தையை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தார். அந்த குழந்தையை ஒரு இளவரசனை போல் செல்வ செழிப்பில் நடத்தினார். அயிக்கர் தனது ஞானத்தை அந்த குழந்தைக்கு சொல்லி தந்தார். தினமும் சாப்பிடும் உணவை காட்டிலும் குடிக்கும் தண்ணீரை காட்டிலும் அதிகமான ஞானதை அந்த பிள்ளைக்கு போதித்தார் அயிக்கர். அந்த பிள்ளையும் வளர்ந்து அறிவில் தேறி அயிக்கர்ரை போல் ஞானம் உள்ளவனாக மாறினான்.
அயிக்கர்ரின் ஓய்வு(tamil tale story)
ராஜா மிகவும் யோசனையுடன் முகத்தில் கவலை சூழ்ந்து ஏதோ யோசித்த வண்ணம் இருந்தார். அங்கு வந்த அயிக்கர் ராஜாவின் முகத்தை பார்த்து என் அரசே நீர் என்றும் வாழ்க ஏன் உம்முடைய முகத்தில் கவலை தெரிகின்றது என்று கேட்டான்.
அதற்கு அரசர் அயிக்கர் நீ என்னுடைய ஆலோசனைகாரன் உன்னுடைய ஞானம் இந்த நாட்டுக்கு மிகவும் பயன்பட்டது. இப்பொழுது உன்னக்கு வயதாகிவிட்டது. உன்னக்கு ஓய்வு தேவை உன்னக்கு அடுத்தது அந்த இடத்தில் யாரை வைப்பது என்று மிகவும் கலங்குகின்றேன் நீயே சொல் யாரை வேலையில் வைக்கலாம் என்று .
அதற்கு அயிக்கர் என் அரசே நீர் என்றும் வாழ்க என்னுடைய சகோதரி மகன் நாடான் அவனை என் மகனை போல் வளர்த்தேன் என்னுடைய ஞானத்தை அவனுக்கு போதித்தேன் அவனை என்னக்கு பின் அமர்த்தும் படி வேண்டுகின்றேன் என்று பணிவோட சொன்னான். அதற்கு ராஜா நீ அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா நான் அவனை சோதித்தபிறகு அவன் தகுதிடையவன் என்று நான் அறிந்து அவனை உன் இடத்தில் அவனை வைபேன் என்று சொன்னார். அதற்கு அயிக்கர் என் அரசே அவன் ஏதாவது தவறு செய்தால் அவனை மன்னிக்கும்படி உம்மை வேண்டுகின்றேன் என்று சொல்லி அங்கு இருந்து தனது வீட்டுக்கு போய்விட்டார் .
நாடனின் பதவியேற்பு(tamil tale story)
அன்று இரவு அயிக்கர் நாடனுக்கு தனது ஞானத்தையும் தனது ராஜரிக்க ஆலோசனையும் மற்றும் ஞான வரத்தையும் சொன்னான் (அயிக்கர் வார்த்தை மற்றொரு பதிவில் எழுதப்படும் ). மறுநாள் காலையில் அயிக்கர் மற்றும் நாடான் இருவரும் ராஜா அரண்மனைக்கு வந்தார்கள். ராஜா அயிக்கர்ரின் சிபாரிசு படி நாடனை விசிர் என்கின்ற உயர்ந்த பதவியை தந்தான். அயிக்கர் ராஜாவிடம் விடை பெற்று தனது வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான்.
நாடான் தனக்கு கிடைத்த வேலையில் மகிழ்ச்சியுடன் சந்தோசமாக புத்திசாலிதனமாக நடந்துகொண்டான். அயிக்கர்ரும் தனது ஓய்வில் மகிழ்ந்து கொண்டு தேவனை புகழ்ந்து கொண்டு சந்தோசமாக இருந்தான். என்னதான் பகலில் சூரியன் பிரகாசமாக இருந்தாலும் இரவில் அது மறைந்துதான் ஆகவேண்டும். அதுபோல் அயிக்கர்ரின் மகிழ்ச்சி போய் துன்பநாட்கள் ஆரம்பமானது.
நாடனின் சூழ்ச்சி(tamil story)
நாடான் ஒரு நாள் தனது வளர்ப்பு தந்தையின் ஆஸ்தி அந்தஸ்து மற்றும் அவனுக்கு உண்டான திரள் ஆடு மாடுகளை பார்த்து இவை எல்லாம் என்னக்குத்தான். என்று தனது மனதில் நினைத்து அயிக்கர்ருக்கு சொந்தமான ஆடுகளை வலுகட்டையமாக எடுத்துகொள்ளுவான் அதை தடுக்க வந்த அயிக்கர்ரின் வேலைகாரர்களை அடித்து மிகவும் துன்புறுத்துவான். இவை எல்லாம் ஒரு நாள் அயிக்கர் பார்த்துவிட்டான். நாடனின் அக்கிரமத்தை பார்த்து கோபம் கொண்ட அயிக்கர் ராஜாவிடம் சென்று நாடனின் துற்குணத்தை சொல்லி அவன்மீது புகார் அழித்தான். அதுமட்டும் இல்லமல் அயிக்கர் நாடனின் தம்பியை தனது சொத்து முழுவதுக்கும் அதிகாரியாக மாற்றிவிட்டான்.
ராஜா நாடானை அழைத்து ஒருவனும் அயிக்கர்ருக்கு தீங்கு செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் பார்த்து நடந்துக்கோ என்று ராஜா அவனை எச்சரித்து வெளிய அனுபிவிட்டான். கோபமாக வெளிய வந்த நாடான் உடனே ஒரு செய்தி அவனுக்கு வந்தது அது என்ன வென்றால். உன் வளர்ப்பு தந்தை அயிக்கர் தனது சொத்து முழுவதுக்கும் வாரிசாக உம் தம்பியை ஏற்படுத்திவிட்டார் என்று. இதைகேட்ட நாடானின் கோபம் எல்லை கடந்து அன்று அவனை தூங்க விடாமல் கலங்க பண்ணிற்று.
பின்பு நாடான் நான் ஏன் இன்னும் தாமதம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும் அதிகாரம் முழுவதும் என் கையில் இருகின்றது நாளை இந்த நாடனின் அறிவும் சூழ்ச்சி என்ன வென்று முட்டாள் அயிக்கர்ருக்கு பாடம் சொல்லிதரபடும் என்று படுத்து உறங்கிவிட்டான்.
பெர்சிய நாட்டின் மன்னன் அசீஸ்சுக்கு எழுதின கடிதம்
நாடான் காலையில் எழும்பி தனது தீய சூழ்ச்சியை ஆரமித்தான். எப்படி என்றால் அவன் அயிக்கர்போல பெர்சிய நாட்டின் மன்னன் அசீஸ்சுக்கு கடிதம் ஒன்றை எழுதினான் அவை:
சமாதானமும் மகிழ்ச்சியும் உம்மக்கும் என்னக்கும் உண்டாக்கடும்.
நான் தான் அயிக்கர் அசிரிய நினைவே நாட்டின் மன்னனின் விசிர், மிகவும் பலம் பொருந்திய என் அரசே இந்த கடிதம் உம்மக்கு கிடைத்த உடன் நீர் தாமதிக்காமல் எழுந்து அசிரிய மற்றும் நினைவே தேசத்தில் உள்ள வனாந்தர இடமாகிய நிசிரின்இடத்துக்கு வந்து விடும். நான் சண்டையும் போரும் ரத்தம் சிந்துதலும் இல்லாமல் முழு ராச்சியத்தையும் உம்மக்கு தருகின்றேன் என்று எழுதினான்.
பின்பு நாடான் மற்றறொரு கடிதம் எழுதினான் தன் வளர்ப்பு தந்தை அயிக்கர் எழுதுவதுபோல் எகிப்து நாட்டின் மன்னன் பார்வோனுக்கு பின்வருமாறு எழுதினான்.
சமாதானமும் மகிழ்ச்சியும் உம்மக்கும் என்னக்கும் உண்டாக்கடும்.
நான் தான் அயிக்கர் அசிரிய நினைவே நாட்டின் மன்னனின் விசிர், மிகவும் பலம் பொருந்திய என் அரசே இந்த கடிதம் உம்மக்கு கிடைத்த உடன் நீர் தாமதிக்காமல் எழுந்து அசிரிய மற்றும் நினைவே தேசத்தில் உள்ள வனாந்தர இடமாகிய நிசிரின்இடத்துக்கு வந்து விடும். நான் சண்டையும் போரும் ரத்தம் சிந்துதலும் இல்லாமல் முழு ராச்சியத்தையும் உம்மக்கு தருகின்றேன் என்று எழுதினான்.
மேல எழுதின இரு கடிதமும் அயிக்கர் பேரில் எழுதி முத்திர பண்ணி அனுப்பபட்டது. இதை ஒருவரும் அறியவில்லை.
பின்பு நாடான் சனகெரிப் அரசனை போல ஒரு கடிதம் அயிக்கர்ருக்கு எழுதினான் அது என்னவென்றால். என் அருமையான விசிர் அயிக்கர் நீ உடனே உன் போர் வீரர்களை அழைத்துக்கொண்டு ஐந்தாம் நாளில் அசிரிய மற்றும் நினைவே தேசத்தில் உள்ள வனாந்தர இடமாகிய நிசிரின் இடத்துக்கு வந்து விடும். நம் எதிரிகள் நம்மை தாக்க வருகின்றார்கள் என்று எழுதி ராஜா சேவகர்களின் ஒருவனிடம் தந்து அதை எடுத்துக்கொண்டு அயிக்கர்ரிடம் அரசர் தந்தார் என்று கொடுத்துவிடு என்று கட்டளை கொடுத்தான்.
இந்த கடிதத்தை படித்த அயிக்கர் உடனே தனது இராணுவ வீரர்களை அழைத்து குறிக்க பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தான். நடக்க இருப்பதை ஒன்றும் அறியாத அயிக்கர்.
அயிக்கர்ரின் மரணம்
அயிக்கர்ரை போல எழுதின இரு கடிதத்தை ராஜாவிற்கு காட்டப்பட்டது. இதை வாசித்த அரசர் மிகவும் கலங்கி நான் நம்பின அயிக்கர் என்னக்கு துரோகம் பண்ணிவிட்டான் என்று மிகவும் கோபமடைந்து இவை எல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்று கேட்டான். அங்கு வந்த நாடான் என் அரசே ஏன் நீர் கலங்குகின்ரீர் ஒரு வேலைகாரனை அனுப்பி இவை எல்லாம் உண்மையா இல்லையா என்று பாரும் என்று சொன்னான். வேலைக்காரன் போய் அந்த கடிதத்தில் எழுதி இருப்பது உண்மையே அங்கு அயிக்கர் தனது படைகளுடன் இருகின்றான் என்று சொன்னான். உடனே நாடான் தனது மனதில் ஆ ஆ நான் எனது ஞானத்தை நிருபித்து விட்டேன் என்று கூறி மிகவும் மகிழ்ந்தான்.
உடனே நாடான் அரசே நீர் கலங்க தேவை இல்லை நமது வீரர்களை அழைத்து அயிக்கர்ரையும் அவனது படைவீரர்கலையும் முடிக்கி விடும். அயிக்கர்ரை சங்கிலிகளால் கட்டி இங்க உம்மிடம் விசாரிக்க அழைத்துக்கொண்டு நான் வருகின்றேன் என்று சொல்லி ராஜாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு அங்கு இருந்து கிளம்பிவிட்டான்.
ராஜாவின் படைவீரர்கள் அயிக்கர்ரை சங்கிலிகளால் கட்டி ராஜாவிடம் அழைத்து வரப்பட்டான். உடனே ராஜா அயிக்கர்ரை பார்த்து என்னக்கு மிகவும் ஆலோசனை காரனாக இருந்த அயிக்கர் ஏன் என்னக்கு தீமை செய்தாய் நான் உன்னக்கு ஒரு பொல்லாப்பும் செய்யவில்லையே என்று கேட்டான். அதற்கு அயிக்கர் என் அரசே நான் எந்த தப்பும் செய்யவில்லையே என்று சொன்னான் பின்பு அரசர் அவனுக்கு கடிதத்தை காட்டினான். அந்த கடிதத்தை பார்த்த அயிக்கர் இது என்னைப்போல நாடான் எழுதினது என்று அறிந்து கொண்டான். கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை பின்பு அயிக்கர் மிகவும் கலங்கி ராஜா அரண்மனையில் தனது மாரில் அடித்துக்கொண்டு அழுதான் இதை பார்த்த அரசர் அவன் உண்மையில் தவறு செய்தான் அவனை தேசத்திற்குவெளிய கொன்று விடுங்கள் என்று தனது படைவீரன் அபு ச்மின்க் இடம் சொன்னான் .
இதை கேட்ட அயிக்கர் ராஜாவிடம் முழங்கால் படியிட்டு மிகவும் அழுந்து என் அரசே உம் விருப்பம் படி ஆகட்டும் நான் தவறு ஏதும் செய்ய வில்லை. ஆகிலும் நான் சாகுவது மாற்றமுடியாது உம்மிடம் ஒரு மன்றாட்டை வைக்கின்றேன்.
நம் நட்புக்காக அதை என்னக்கு நிறை வேற்றும் என்று கேட்டான் அதற்கு அரசர் என்ன சொல் என்றார். உடனே அயிக்கர் நான் மறித்த உடன் என் சரீரத்தை என் அடிமையிடம் தந்து எனது வீட்டில் அடக்கம் பண்ணிவிட கட்டளைகொடும் என்று வேண்டினான் அரசரும் அப்படியே கட்டளை கொடுத்தான்.
அயிக்கர்ரின் மனைவியின் செயல்
அயிக்கர் கொலை செய்ய தேசத்திற்கு வெளிய அழைத்து செல்லப்பட்டான் என்று அறிந்த அயிக்கர்ரின் புத்திசாலி மனைவி எழுந்து ராஜரிக உணவை எடுத்து கொண்டு அயிக்கர்ரை சந்திக்க புறப்பட்டால். அவள் அயிக்கர்ரையும்
அவனை கொல்ல வந்த சேவகர்களையும் பார்த்து என்கணவருக்கு சிரிது உணவை தர அனுமதியுங்கள் என்று வேண்டினால் அவர்களும் அனுமதித்தார்கள் அந்த சேவகர்களுக்கும் உணவு கொடுக்கப்பட்டது. அவள் மிகவும் பழமை வாய்ந்த திராச்சரசத்தை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் மிகவும் குடித்து போதை ஆகினார்கள். உடனே அயிக்கர் அபு ச்மின்க்யிடம் பேசி என்னக்கு பதில் என் வேலைக்காரனை கொன்று விடு நான் எந்த தவறும் செய்ய வில்லை நீ என் வீட்டின் ரகசிய இடத்தில் என்னை மறைத்து வைத்துவிடு என்று சொன்னான். சேவர்கள் வந்து போதையில் அவன் வேலைக்காரனை வெட்டி விட்டார்கள் அவர்கள் அயிக்கர்ரை தான் கொன்றோம் என்று நினைத்து ராஜாவிடம் போய் அயிக்கர்ரை உம் கட்டளை படி கொன்றுவிட்டோம் அரசே என்று போய் சொன்னார்கள்.
பின்பு அபு ச்மின்க் அஹிக்கரை அவன் வீட்டின் இரகசிய இடத்தில் வைத்து மறைத்துவிட்டான். அதை ஒருவரும் அறிய வில்லை தேசத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் செய்தி தெரிந்தது அயிக்கர் மறித்து விட்டான் என்று மக்கள் எல்லாரும் அவனுக்காக துக்க பட்டு துக்க நாள் அனுசரித்தார்கள். எகிப்து மன்னன் பார்வோன் கேட்டு அவனும் துக்கபட்டான். அயிக்கர் இரகசிய அறையில் எப்பொழுதும் தேவனை துதித்து கொண்டும் தேவனை புகழ்ந்து கொண்டும் இருந்தான்.