puthisali புத்திசாலி-tamil short story
ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் சிறுபிள்ளைகள் ஒன்றாக கூடி விஸ் என்கின்ற தாத்தாவிடம் கதை கேட்பது வழக்கம் அதுபோல சிறுபிள்ளைகள் ஒன்றாக கூடி கதைகேட்க அவர் ஒரு மந்திர புத்தகத்தை திறந்து கதை சொன்னார்.(puthisali புத்திசாலி)
தங்க பெல் (tamil short story)
புத்திசாலி - puthisali |
ஒரு நாட்டின் அரசன் தன் மக்களின் வழக்கை நீதியோட விசாரிக்க விரும்பி தனக்கு ஒரு அற்புதமான பரிசு தேவதூதர்கள் வானத்தில் இருந்து என்னக்கு தந்தால் நல்லா இருக்கும் என்று விரும்பி நாற்பது நாட்கள் சாப்பிடாமல் வேண்டுதல் செய்தான் அந்த வேண்டுதலின் பலனாக வானத்தில் இருந்து தேவதூதன் வந்து உன் வேண்டுதல் கேட்கபட்டது இதோ இந்த தங்க பெல் மற்றும் இந்த இரும்பு கோலை எடுத்துக்கோ என்று சொன்னான்.அதற்கு அவன் என் ஆண்டவனே இதை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டான்.அதற்கு தேவ தூதன் இந்த தங்க பெல்லை நீ நியாயம் விசாரிக்கும் இடத்தில் மாட்டிவிடு வழக்கு கொண்டு வருபவர்களின் கையில் இரும்பு கோலை கொடுத்துவிடு அவர்கள் பொய் சொன்னால் இந்த பெல் அடிக்க ஆரமித்துவிடும் என்று சொல்லி உடனே மறைந்து போனான் இதை கேட்ட அவன் மிகவும் சந்தோஷம் அடைந்து தன் அரண்மனைக்கு சென்று அந்த தங்க பெல்லை மாட்டிவிட்டான் இந்த தங்க பெல் விஷயம் எல்லாருக்கும் சென்றது மறுநாள் காலையில் இருவர் வந்து ராஜாவே என்னக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னார்கள் அவனும் உங்க வழக்கு என்ன என்று விசாரிக்க ஆரமித்தான்.அப்போ அவன் அந்த இரும்பு கோலை முதல் நபரிடம் கொடுத்து இந்த பெல் நீ பொய் சொன்ன உடன் ரின்க் ரின்க் ரின்க் ரின்க் என்று சத்தம் போடஆரமித்துவிடும் என்று சொல்லி அவனிடம் இரும்பு கோலை தந்தான்.முதல் நபர் ராஜாவே நான் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் செல்லும்போது என் நண்பனிடம் விலைஏறப்பட்ட முத்துகளை தந்து நான் திரும்பி வரும்பொழுது தந்துவிடு என்று சொல்லி தந்தேன் அவனும் சரி என்று ஒப்புகொண்டான். இப்பொழுது தர மறுகின்றான்.
தங்க பெல் அமைதியாக இருந்தது பின்பு ராஜா இரும்பு கோலை எடுத்து இரண்டாம் நபரிடம் தந்து அவனிடம் விசாரிக்க என் அரசே நான் இவன் விலைஏறப்பட்ட முத்துகளை திரும்பி தந்துவிடேன் என்று சொன்னான். இப்போ தங்கபெல் அமைதியாக இருந்தது. ராஜா குழம்பி போய் இரண்டு பேரும் சொல்வது உண்மையா அல்லது இந்த தங்க
பெல் வேலை செய்யாத தேவ தூதன் என்னை ஏமாத்தி விட்டானே என்று குழம்பி என்ன செய்வது என்று தெரியாமல் மறுபடியும் இரும்பு கோலை முதல் நபரிடம் கொடுத்து விசாரித்தான் மீண்டும் அவன் நான் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் செல்லும்போது என் நண்பனிடம் விலைஏறபட்ட முத்துகளை தந்து நான் திரும்பி வரும்பொழுது தந்துவிடு என்று சொல்லி தந்தேன் அவனும் சரி என்று ஒப்புகொண்டான். இப்பொழுது தர மறுகின்றான்.இரண்டாம் நபர் சொல்லும்போதும் தங்கபெல் அமைதியாக இருந்தது. ராஜா குழம்பி போய்விட்டான்.
புத்திசாலி மந்திரி (tamil short story)
இதை எல்லாம் கவனித்த புத்திசாலி மந்திரி ராஜாவின் காதில் ஒன்றை சொல்லி கொண்டு அமைதியாக போய்அமர்ந்தார். அப்பொழுது ராஜா இரும்பு கோலை இரண்டாம் நபரிடம் கொடுத்து விசாரிக்க அவன் நான் இவன் விலைஏறப்பட்ட முத்துகளை திரும்பி தந்துவிட்டேன் என்று சொன்னான். அப்பொழுது ராஜா யாரிடம் தந்தாய் என்று கேட்க அவன் இதோ இங்க நிற்கின்றானே அவனிடம் என்று சொல்ல உடனே தங்கபெல் ரின்க் ரின்க் ரின்க்ரின்க் ரின்க் ரின்க்ரின்க் ரின்க் ரின்க் என்று மணியடிக்க ஆரமித்தது. என்ன செய்வது என்று தெரியாத அவன் உண்மையை ஒத்துகிட்டான். பின்பு ராஜா புத்திசாலி மந்திரியிடம் கேட்க என் அரசே முதலில் இருவரும் சொன்ன வார்த்தை உண்மைதான் அதனால் பெல் அமைதியாக இருந்தது இரண்டாம்முறை அவன் யாரிடம் தந்தாய் என்று கேட்க அவனும் பொய்சொன்னான் உடனே பெல் ரின்க் ரின்க் என்று மணியடிக்க ஆரமித்தது.ராஜா மிகவும் பிரமித்து இது என்னக்கு கிடைக்க பெற்ற அற்புதமான பரிசு என்று மிகவும் சந்தோசப்பட்டு இரவு படுத்து உறங்கி விட்டான் நடு இரவில் தேவ தூதன் மீண்டும் வந்து அவனிடம் நான் உன்னக்கு தந்த தங்க பெல் மற்றும் இரும்பு கோலை தா என்று கேட்டான் அதற்கு அவன் ஏன் வாங்குகின்றிர் என்று கேட்டான். அதற்கு தேவ தூதன் நீ இந்த அற்புதமான சக்தியை சந்தேகம்பட்டுவிட்டாய் உடனே அவன் நான் சில நிமிடங்கள் தானே சந்தேகம்பட்டேன். உண்மைதான் அரசே நீ அற்புதமான பரிசு கிடைக்க வேண்டும் என்று நீ விசுவாசித்தாய் அதனால் உன்னக்கு கிடைத்தது ஆனால் நீ இப்போ சந்தேகம்பட்டுவிட்டாய் அதனால் நான் எடுத்துகொள்கின்றேன். என்று சொல்லி அங்கு இருந்து மறைந்து போய்விட்டான். அப்பொழுது அரசன் சொன்னது
" யார் ஒருவன் விசுவாசிகின்றனோ
அவனுக்கு அற்புதம் நடக்கும் என்றும்
யார் சந்தேகம்படுகின்றார்களோ
அவனுக்கு உள்ளதும் எடுத்து கொள்ளப்படும் என்று சொன்னான்."