இந்தியாவில் வாழ்ந்து வந்த பூதம் - puthisali kathaigal part 3
puthisali kathaigal |
முன் கதையின் தொடர்ச்சி முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டில் முகம்மது என்றொரு மகான் இருந்தார். அவர் வீட்டுக்கு அருகில் இருந்து வாழ்ந்த ஒரு பொறாமைக்காரன் எப்போதும். இவரைப் பழி வாங்கவே காத்திருந்தான். அவனுக்கு முகம்மதுவின் மீது ஒரே பொறாமை. அவன் முகம்மதுக்கு. எண்ணிலாக தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தான்.
முகம்மதுவோ மிகவும் மனக் கஷ்டப்பட்டார். தீங்கு செய்பவர்களும் நன்மையே என்ற நீதிநெறியின்படி. அந்தப் பொறாமைக்காரன் மீது அனுதாபம் காட்டி. அன்பாகவே நடந்து கொண்டார். அப் பொறாமைக்காரனோ மேலும்மேலும் முகம்மதுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். இந்தத் தொல்லையைப் பொறுக்க மாட்டாமல். ஒருநாள் அண்டையிலிருந்த காட்டுக்குச் சென்று ஒரு குடிசை அமைத்துக் கொண்டு அங்கே வாழ்ந்து வரலானார். எனினும், நகர மக்கள் மகான் முகம்மதுவைத் தரிசிக்க அவர் வாழ்ந்த, காட்டிற்குச் சென்று வந்தனர். அந்த ஊர் மன்னனுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அவள் மிகுந்த பேரழகி. அவளுக்குத் தீராத வியாதி திடீர் என அவன் அழ ஆரம்பித்தபோது பேய் பிடித்தவள் போல தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அடுவாள்.
மன்னருக்கு மானாத மனவருத்தம். நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வைத்தியர்களும், மந்திர தந்திரசாலிகளும் வரவழைக்கப் பட்டனர். அந்தத் தீராத வியாதி தீரவில்லை. நாளுக்கு நாள் அதிகமாயிற்று. ஒரு நாள் மந்திரி ஒருவர் மன்னரிடம் வந்து, “மா மன்னரே! நமது தலைநகரத்தின் அருகில் ஒரு பெரிய காடு. உள்ளது அல்லவா! அக்காட்டில் முகம்மது மகான் என்ற ஒரு மகான் வாழ்ந்து வருகிறார்.
அவர் அருள்வலி மிக்கவர் பிறருக்கு உதவி செய்வதே தனது கடமை என வாழ்பவர். அந்த மகானிடம் அரசகுமாரியை அழைத்துச் சென்று காட்டினால் என்ன?” என்றான். மன்னனும் “அப்படியே ஆகட்டும்' என்றுமகிழ்ந்தார் . மறுநாள் பெரும்பரிசுகளுடனும், பரிவாரங்களுடனும். அரசகுமாரியை அழைத்துக்கொண்டு மன்னர், மகான் முகம்மதுவைக் காணக் காட்டிற்குப் புறப்பட்டார்.
இந்தச் செய்தியைக் கேட்ட பொறாமைக்காரனுக்கு வயிறெல்லாம் பற்றி எரிந்தது. மன்னரே நேரில் சென்று. முகம்மதுவைச் காணுவது ஆவது? இதற்கு ஏதாவது. செய்து ஆகவேண்டும். என்று முடிவு எடுத்துக் கொண்டான் பொறாமைக்காரன். அதிகாலையிலேயே எழுந்து காட்டுக்கு ஓடினான். பொறாமைக்காரன். முகம்மதுவைக் கண்டான். மகான் முகம்மது அவனை வரவேற்றார்.
அப் பொறாமைக்காரன் ஒரு முக்கியமான செய்தியை ரகசியமாக உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றும் அதற்காகத் தாங்கள் சற்றுத் தனியே வெளியே வரவேண்டும் என்றும் அழைத்தான்.
முகம்மது அவனுடன் வெளியே சென்றார். அருகில் உள்ள பாழும் கிணற்றருக இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப் பொறாமைக்காரன் வஞ்சக எண்ணத்தோடு முகம்மதுவை அக் கிணற்றில் தள்ளிவிட்டு யாரும் அறியாமல் நகரத்திற்கு ஓடிவந்து விட்டான்.
தேவ கன்னியர்கள் - puthisali kathaigal
கிணற்றிலே தள்ளப்பட்ட முகம்மது பொறாமைக்காரன் நினைத்ததைப்போல் சாகவில்லை. தண்ணீர் இல்லாத பாழும் அந்த கிணற்றுக்குள்ளே தேவ கன்னியர் அப்போது இருந்தனர். விண்ணகத்துத் தேவ கன்னியர்கள் அவ்வப்போது
மண்ணகத்திற்கு வந்து ஒரு மறைவிடத்தில் ஆர அமர இருந்து பேசி செல்வது வழக்கம். அவர்கள் தேடிக் கொண்ட மறைவிடம் மிகுந்த ஆழமுடைய அந்த பாழும் கிணறு. முகம்மதுவின் உடல் தலைகிழாகப் பாழும் கிணற்றினுன் விழுவதைக் கண்ட தேவகன்னியர், கிழே பாறையில் விழுந்து மோதுவதற்கு முன்னர் கைகளால் ஏந்திக் கொண்டனர். மயக்க நிலையிலுள்ள முகம்மதுவை மெல்ல, கிழே படுக்க வைத்தனர். தங்களின் ஞான திருஷ்டியால் நடந்த விவரங்கள் அனைத்தையும் அறிந்தனர். இந்த மகானின் புகழைக் கேட்டு மனம் புழுங்கிய பொறாமைக்காரன் செய்த வேலை இது என்று அறிந்தனர். இவரைக் காண மன்னரும் பரிவாரத்தோடு வருவதையும். யூகித்து அறிந்தனர். அரசகுமாரியின் நோயைத் தீர்க்க வல்ல ஒரு அருமந்திரத்தை முகம்மதுவின் காதில் ஓதினர். முகம்மதுவின் உடலைத் தூக்கிக் கொண்டு வானமார்க்கமாய் பறந்து வந்து அவரது குடிசையிலேயே கடத்தினர். மயக்கமடைந்திருந்த முகம்மது சற்று நேரத்திற்குள் எல்லாம் தெளிந்து எழுந்தார்.
சற்று நேரத்திற்குள் எல்லாம் காட்டு வெளியில் பெரும் ஆரவாரம் கேட்டது. முகம்மது எழுந்து வெளியே வந்து பார்த்தார். மன்னர் பரிவாரங்களோடு தம் குடிசையை நோக்கி வருவதை அறிந்தார். குதிரைமீது வந்த மன்னர் முகம்மதுவின் அருலல் வந்து இறங்கினார். முகம்மது முழந்தானிட்டுத் தரையளவு தாழ்ந்து மன்னரை வணங்கினார். "இந்த ஏழையால் என்ன ஆக வேண்டும்?” என்று கேட்டார். அரசகுமாரிக்குப் பிடித்துள்ள நோயைப்பற்றி மன்னர். கூறினார். நீங்களே அதைக் குணப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மயக்கத்தில் இருந்தபோது முகம்மதுவுக்குத் தேவக்கன்னியர்கள் ஒதிய மந்திரம் அப்போது ஞாபகத்திற்கு. வந்தது. இதுவும் தெய்வ அருள்தான் என நினைத்த முகம்மது எல்லாம் வல்ல அல்லாவின் பேரருள் என்று மனம் நெகிழ்ந்தார். அரசகுமாரியை அருகில் அழைத்து வரச்சொன்னார். தம்மிடம் வளரும் ஒரு கருப்புப்பூனையைப் பிடித்துவரச்செய்தார். அந்தப்பூனையின் வாலின் மயிரிலிருந்து மூன்றேமூன்று. மயிரை மட்டும் பிடுங்கி எடுத்தார். பின்னர் கொஞ்சம் நெருப்பு கொண்டுவரச் செய்து அதில் அந்த கறுப்புப் பூனையின் வால் மயிர்கனைப் போட்டார். குபுகுபுவென ஒரு மாயப் புகை கிளம்பியுது. மந்திர உச்சாடனத்துடன். அரசகுமாரியின் முகத்தருகே அந்த புகையைச் காட்டினார். புகையால் இக்கித் திணறிய அரசகுமாரி விருட்டென: எழுந்து சற்று தூரம் ஓடி மயக்கம் அடைந்து கிழே விழுந்தாள். அப்போதும் முகம்மதுவின் வாய் மந்திர உச்சாடனம் செய்து கொண்டே இருந்தது.
அரசகுமாரியைப் பிடித்திருந்த பேய் பறந்தோடிப், போய்விட்டது என்று மன்னனிடம் கூறினார். மனம் மகிழ்ந்த மன்னர் தன் குமாரியை மகான் முகம்மதுவிற்கே மணம் செய்து வைத்தார். அவரை நாட்டுக்கு அழைத்துச் சென்று அவரையே மன்னராக்கினார். மன்னரான முகம்மதுவைப் பொறாமைக்காரன் ஒரு நாள் சந்திக்க நேர்ந்தது. அப்போதும் முகம்மது அவனை முக மலர்ந்து வரவேற்றார். “நண்பனே, உன் பொறாமையால் தான் எனக்கு மன்னர் பதவி கிடைத்தது. அதற்காக உன்னை வாழ்த்துகிறேன்” என்றான். அப் பொறாமைக்காரன் வெட்கத்தால் தலைகுனிந்தான்.
“ஏ! மகாவலிமை பொருந்திய பூதமே! தீங்கு செய்தோரையும் மன்னித்த முகம்மதுவின் கதை. நீயும் என்னை மன்னிக்க வேண்டும்" என்று அழுதேன்.